நகரங்களும் அவற்றிற்கு கிடைத்த சிறப்புப் பெயர்களும



"மல்லிகை மாநகரம்"

தமிழ்நாட்டில் மல்லிகை பெரும்பாலும் மதுரை மாவட்டத்தில் பயிராகிறது. உள்ளூர்த் தேவைகளுக்காகவும் அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்காகவும் இது மும்பை வரை கொண்டு செல்லப்படுகிறது. மதுரை நகரம் "மல்லிகை மாநகரம்" என்றே அழைக்கப்படுகிறது.

 

 ''தூங்கா நகரம்''

தமிழகத்தின் தொன்மையான நகரங்களில் ஒன்று மதுரை. தமிழும், கலையும் தழைத்தோங்கிய நகரமான மதுரைக்கு ஆதிகாலம் தொட்டு இக்காலம் வரை அழியாமல் இருக்கும் அடையாளம், எனவே மதுரை ''தூங்கா நகரம்'' எனவும் அழைக்கபப்டுகிறது .

 

''இரும்பு நகரம்''

துர்காபூர் (Durgapur) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் மேற்கு வர்த்தமான் மாவட்டத்தில் அமைந்த நகரம் ஆகும்.இங்குள்ள மலையில் சுமார் 45 கோடி டன் எடையுள்ள இரும்புத் தாது உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. சேர்வராயன் மலைப் பகுதியில் அலுமினியம் தயாரிப்பதற்கு அவசியமான பாக்சைட் என்ற தாது அதிக அளவில் கிடைக்கின்றது. இதனால் இது ''இரும்பு நகரம்'' என அழைக்கப்படுகிறது.

 

"இளஞ்சிவப்பு நகரம்"

இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரத்தை "இளஞ்சிவப்பு நகரம்" என்கிறார்கள். அந்த மண்ணின் புவியியல் அமைப்பின்படி, அங்குள்ள பாறைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன. அங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் தங்கள் வீடுகளை இந்த பாறைகளைக் கொண்டே அமைத்துள்ளனர்.

 

''கறுப்பர் நகரம்'

ஜார்ஜ் டவுன் (George Town) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் நகர்ப்புறப் பகுதியாகும். புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டபிறகு இங்கு குடியேற்றம் நிகழ்ந்தது; இதுவே சென்னையில் அமைந்த முதல் குடியிருப்புப் பகுதியாகும். குடிமைப்பட்ட காலத்தில் இது ''கறுப்பர் நகரம்'' என அழைக்கப்பட்டு வந்தது. 1911ஆம் ஆண்டில் பிரித்தானிய மன்னர் ஜார்ஜ் V இந்தியாவின் பேரரசராக முடி சூடியபோது இப்பகுதிக்கு ஜார்ஜ் டவுன் என பெயர் மாற்றப்பட்டது.

 

 

''மஞ்சள் நகரம்''

 ஈரோட்டில் மஞ்சள் அதிகளவில் பயிரிடப்பட்டு, வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய அளவில் நிஜாமுதீனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மஞ்சள் மார்க்கெட் ஈரோட்டில் தான் உள்ளது. இதனால் ஈரோடு ''மஞ்சள் மாநகரம்'' என்று அழைக்கப்படுகிறது. கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கும் புகழ் பெற்றது இந்நகரம். எனவே இது ''ஜவுளி நகரம்'' என்றும் அழைக்கப்படுகிறது.

 

''மலைகளின் ராணி''

நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருங்கி ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. ஊட்டியைச் சுற்றிலும் அமைந்துள்ள 'புளூ மவுண்டைன்' எனப்படும் நீலகிரி மலையே ஊட்டிக்கு அழகு சேர்க்கிறது. எனவே ஊட்டி 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது.

 

''குட்டி ஜப்பான்''

பட்டாசு என்றாலே, சிவகாசி தான், நினைவுக்கு வரும்; இதை, 'குட்டி ஜப்பான்...' என்பர். இந்த பெயரில் முதலில் அழைத்தவர் ஜவஹர்லால் நேரு தான். கிழக்காசியாவில் உள்ள ஜப்பானியர்கள் போல, இங்குள்ள மக்கள் சுறுசுறுப்பாக இயங்குவதே இதற்கு காரணம். அச்சுத்தொழில் வளர்ச்சியில், இதை, 'குட்டி ஜெர்மனி' என்பர். நம் நாட்டில், அச்சு சம்பந்தமான, 60 சதவீத பணிகள், இங்கு தான் செய்யப்படுகிறது.

 

''கோழிகள் நகரம்''

நாட்டின் பெறும்பாலான பகுதிகளுக்கு அனுப்பப்படும் முட்டைகள் நாமக்கல் பகுதியில் உற்பத்தி செய்யப்படுவதால் , நாமக்கல் ' கோழிகள் நகரம்' என்றும், 'முட்டை நகரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

 

"ஆக்ஸ்போர்ட்”

கல்விக்கு பெயர் போன  மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் ஏராளம் அமைந்துள்ளதாலும் மற்றும் தமிழ்நாட்டில் முதல் முறையாக பார்வையற்றவர் மற்றும் காதுகேளாதோர் பள்ளி துவங்கப்பட்டதால் இது தமிழகத்தின் "ஆக்ஸ்போர்ட்” என்று பாளையங்கோட்டை பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

 

''நெற்களஞ்சியம்''

தஞ்சாவூா் மாவட்டம் தமிழகத்தின் கிழக்கு கடற்கரையோரம் அமைந்துள்ளது. புவியின் 9.50 முதல் 11.25 வரையிலான கடகரேகை மற்றும் 78.43. ... காவேரி நதி நீா் பாய்ந்து வளம் சோ்த்தாலும், விவசாயம் முதன்மைத் தொழிலாக இருப்பதால் தஞ்சாவூா் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது.

 

மாங்கனி நகரம்”

சேலம் மல்கோவா வகை, மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை “மாங்கனி நகரம்” என்றும் அழைப்பார்கள்.

தொகுப்பு:செமனுவேந்தன்

0 comments:

Post a Comment