மரம் தாவும் மந்திகள்- சிறுகதை

 [Tamil Story]


1980 -இல் யேர்மனி நோக்கி ´வெர்லின்´ வந்து குவிந்த, ஈழத்து தமிழ் ஏதிலிகளின் கூட்டத்தில் மகானும் ஒருவன்.´ஏரோ புளட் - மாஸ்கோ´ விமானத்தில் எக்கச்சக்கமாய் தமிழர்கள் வந்து குவிந்தனர். கடமையாற்றிய ஆசிரியர் பணியை கைவிட்டுஏதோ ஒரு நப்பாசையில், பெரும் எதிர்பார்ப்பில்கேள்விக் குறியுடன் புலம் பெயர்ந்தவன்.

 

மிகவும் குறுகிய நாட்களிலேயே தனது செயல்முட்டாள் தரமானதென என உணரத் தலைப்பட்டான். ´´வெர்ளின்´´வந்து இறங்கியதுக்கு இரெண்டொரு நாட்களின் முன்னர் தான்புதுச் சட்டம் நடைமுறைக்கு வந்திருந்தது. அகதிகளாக யேர்மனி வந்தவர்கள்ஒரு ஆண்டுகாலத்துக்கு எதுவித வேலைகளும் செய்யமுடியாதுசமூக உதவியை மட்டுமே பெறமுடியும். ஆடு மாடுகள் போல அடைக்கப்பட்ட, அகதிகளின் வதிவிடத்தில் தங்க இடம் கிடைத்தது. சாப்பட்டுக்கு சிறிதளவு பணமும் கிடைத்தது. கூட்டாகச் சேர்ந்து சமைத்துக் கொண்டனர். வேறு சிலருக்கோ சாப்பாட்டுடன் சேர்ந்த தங்குமிடம் கிடைத் ததுஉப்புச்சப்பில்லாத ஐரோப்பிய உணவுகள் வழங்கபட்டன. அப்படியான இடம் கிடைத் தவர்கள் வெறுத்துப் போயினர்ஏன் வந்தோமென புலம்பினர்.

 

மாதா மாதம் அகதிகள் சம்பந்தப்பட்ட வெளிவிவகார´ பொலிஸ்´பிரிவுக்குப் போய், வதிவிட அனுமதியைப் புதுப்பிக்கவேண்டும். விடியற் காலையிலேயே போனால்தான் காரியமாகும். தள்ளு முள்ளுப்பட்டே ´நம்பர்´கிடைக்கும். அதுவும்அறபிதுருக்கிபாகிஸ்தான்ஆப்கானிஸ்தான் நாட்டுக்காரர்கள். முறட்டுத்தனமாக இடித்துத் தள்ளிக்கொண்டு, முன்னே வந்து எம்மைப் பின்னே தள்ளுவார்கள். இங்கும் எம்மவர்கள் அடங்கி ஒதுங்கி மௌனியாகிவிடுவர். விதியை நோவதைத்தவிர வேறு வழி...?

 

உணவு விடுதிகளிலும்சிறு வணிக நிலையங்களிலும் களவாக வேலை தேடிச் செய் யலாம்என வதந்தி உலவியது. மகானும்நண்பர்களுடன் சேர்ந்து நப்பாசையுடன் கடை கடையாக அலைந்து அவலப்பட்டனர். பொதுவாகஎம்மவர்களைக் கண்டால்பாக்கி... ..பாக்கி..´ என்றே கேலியாகக் அசிங்கப் படுத்துவர். பாகிஸ்தானியரை அவ்வாறுதான் அழைப்பார்கள்.

 

நட்புப் பாராடிய ஒரு பாகிஸ்தானியர் உதவியால்செய்திப் பத்திரிகை வீடு வீடாக விநியோகிக்கும்களவு வேலை வாய்த்தது. அதிகாலையில்விநியோகிக்க வேண்டும். ஊர் விழிக்க முன்வேலை முடிந்துவிடுவதால்சிக்கல் ஏதுமில்லை. இப்படியான வேலைகளுக்கு யேர்மனியர்கள் கிடைப்பதில்லை. தாங்க முடியாத குளிரில்வேலை செய்வதை அவர்கள் விரும்புவதில்லை. விதியை நொந்துகொண்டு வேலையைத் தொடர்ந்தான் மகான். அவனை, முகாமையாளருக்கு நன்கு பிடித்துக் கொண்டது. அதன்மூலம் மகான்இன்னும் சிலரையும் வேலைக்குச் சேர்த்தும்விட்டான்.

 

வீடு வீடாகச் சென்று பெட்டிகளியும்கதவுத் துவாரங்களூடாகவும் தினசரியைத் திணிக்கவேண்டும்சில வயோதிபர்களுக்குபடிகள் ஏறி வாசலில் போடவேண்டும்.

 

மேலேறிப் போடுவதை முகாமையாளர் மிகவும் பாராட்டுவார். கிழடுகளுக்கு அது மிகவும் மகிழ்ச்சி. அதனால் அன்பளிப்புகளை காசாக உறையிலிட்டுநன்றியும் சொல்லி கதவில் ஒட்டி வைத்திருப்பார்கள்.

 

ஒருசில வீடுகளில்மின் தூக்கி இல்லாவிட்டாலும்படிக்கட்டுகளில் ஏறிப்போய் போடுவதால் நாரி கழன்றுவிடும். இயலாமையில் சிலவேளைகளில்படிக்கட்டில் இளைப்பாறி இருந்துசுயவிரக்கம் கொண்டு அழுவதுமுண்டு. பனி கொட்டும் காலமான ´வின்ரர்´குளிர் காலத்தில்வீதி எங்கும் முழங்கால் புதையுமளவுக்கு தேங்காய் பூ துரு வல் போன்றவெண்பனிப் படலம் படர்ந்து கிடக்கும். பார்ப்பதற்குப் பரவசமாகத் தோன் தோன்றினாலும்,ஊசி குத்துவது போன்றிருக்கும் குளிர்; மிகக் கொடுமையானது.

 

வாழ்க்கையில்முதலனுபவம்கால்கைகளெல்லாம் விறைத்து மரக்கட்டை போல் உணர்வற்றுப் போய் விடும். தொடர்ந்து வழியும் மூக்கைச் சிந்தவோ, துடைக்கவோ முடியாத அவலம்உழைக்க வேண்டும் என்ற வெறி அவலங்களை அசட்டை செய்து விடும். அவை, இரண்டாம் பட்சமே. நத்தார் பண்டிகை காலங்களில்கை நிறையக் காசுகளும்பரிசுப் பொருட்களும் இனாமாகக் கிடைக்கும்.

 

சில நண்பர்களின் அனுசரனையில்உணவு விடுதிகளில் சமையல் உதவிக்கு ஆள் தேவைப் பட்டபோதும்மாச்சல் பாராது ஓய்வைப் பொருட்படுத்தாது அவற்றையும் செய்தான். சிறு துளி பெரு வெள்ளம் போல்பணமும் கை நிறையச் சேர்ந்தது. நண்பர் களுக்கு கைமாறாகக் கொடுக்குமளவுக்கு பணம் புழங்கியது. ஊரிலுள்ள உடன் பிறப்பு களுக்கும்நண்பர்களுக்கும் இடையிடையே தானாகவே முன் வந்துபண உதவி செய் தான். அது அவனது பிறப்புக் குணம். தாய் -தகப்பன் மூலம் வழி வந்தது.ஒரு பகுதியைச் சேமித்துக் கொண்டான். அரசியல் மோதல்களால்தமிழகத்துக்கு புலம் பெயர்ந்திருந்த, மனைவி-பிள்ளைகளை அழைத்துக் கொள்ளத் தேவைப்படலாம் என்பதே அவனது நோக்க மாயிருந்தது. அதற்காக, கடுமையாக மாடாய் உழைத்தான்.

 

உழைப்பு......உழைப்பு...பணம்....பணம்..... அதுவே அவனது தாரக மந்திரம்.

 😩

நாட்களின் நகர்வில்,சில ஆண்டுகள் முன் நோக்கி விரைவாய் நகர்ந்தன. அவனது வதிவிட-வேலை அனுமதிகளும் நிரந்தரமாக்கப்பட்டன. காசும் போதியளவு சேர்ந்தது. நல்லதொரு வழக்கறிஞரை ஏற்படுத்தினான். அவரின் திறமையால், குடும்பத்துடன் இணைவது சட்ட வரையறை என்ற காரணத்தை முன் வைத்துநுழைவு அனுமதியும் கிடைத்தது. அவர்களும் வந்து சேர்ந்தனர். நாட்களின் நகர்வில்பிள்ளைகளுக்கு பொருத்தமான படசாலைகளும் கிடைத்து, யேர்மன் மொழியில் கற்கத்தொடங்கினர்.

 

கல்வி, இந்த நாட்டில் கட்டாயம். தமிழ் குடும் பங்களை,அவனது சுற்றாடலில் விரல் விட்டு எண்ணி விடலாம். அவனது மனைவிக்குத் தெரிந்தவர்கள் ஒரு சிலரே. பெரும் பாலும் வீட்டில் தனியாகவே இருக்கவேண்டிய சூழல். மகான்  தினமும் இரவில் ´ ரெஸ் ரோரண்ட்´வேலைக்குப் போய், நடுச்சாமத்திலேயே வீடு திரும்புவான்.

 

வீட்டில் பெரும்பாலும் தனிமையிலிருந்த மனைவிக்குதவறான ஒரு குடும்பம் அறி முகமாகியது. அவர்களின் வழி காட்டலில் அவளுக்கு,´அலேலூயா´ சபையினருடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அவர்களுக்கு மதம் மாற்றுவதே முழு நேர பணி. அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டால்மீள்வதென்பது நடக்கவே நடக்காது.

 

அவனுக்கு தெரிந்தவர்கள் மூலம் இந்த சேதி தெரிந்தபோதுபூகம்பம் வெடித்தது. முத லில்அவனாகத்தான்மனைவியிடம் கேட்டான். நேரடியாக ஏற்றுக்கொள்ளாமல்அப்படி இப்படியென்று பொய் பிரட்டுகளைச் சொன்னாள். சைவக் கோயில்கள் அங்கு இல்லாத தால்எல்லாமே கடவுள் தானே என்று அங்கு போவதாகவும்அதில என்ன தவறு..?என்று அவனிடம் திருப்பிக்கேட்டு வாதிட்டாள்.

 

அவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் பிடிவாதமாகஒரே பிடியில் நின்றாள். பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துமுறுகல் முற்றி பேச்சுவார்த்தையே ஊமையாகியது. கையறு நிலையில் மகான் என்ன செய்வது எனத் தெரியாது தவித்தான். பிரச்சனையை சற்று ஆறப்போட்டால்அவள் வழிக்கு வருவாள் எனத்தவறாக எடை போட்டுவிட்டான். வீட்டில் அவள்அவனுக்குச் சமைப்பதேயில்லை. சமைத்த உணவுகளைசேர்ச்சுக்கு´ எடுத்துச் சென்றுஅங்குள்ளவர்களுடன் பகிர்ந்து சாப்பிட்டாள். மகான்´´ரெஸ்ரொரண்ட்´´ டில் வேலை செய்ததால்,அங்கேயே சாப்பிட்டுவிட்டு வருவான்.

 

எப்போதும்இரவு 12-மணிக்கே வேலை முடிந்து வரும் மகான் ,அன்று வேலை குறை வாக இருந்ததால், 9-மணியளவில் வீட்டுக்கு வந்துவிட்டான். வீட்டில் மகளும்மனைவி யும் இல்லை. மகன்கள் இருவர் மட்டுமே இருந்தனர். அவர்களைப் பற்றிக்கேட்ட போது, தயக்கத்துடனும்மிரட்சியுடனும்வழமைபோல் அவர்கள் ´ சேர்ச்சுக்குப் போய் விட்ட தாகச் சொன்னார்கள். அதைக்கேட்டதும்சர்வாங்கமும் கோபத்தில் குமுறிகுலுங்கியது. இவ்வளவு நாளும்தன்னை ஏமாற்றியதை நினைத்தபோதுகோபம் உச்சிக்கு ஏறியது; பொறுமை காணாமல் போனது. ´விஸ்க்கி´யை எடுத்து மள மளவென மண்டினான்.

 

அளவு மீறிக் குடிப்பவனல்ல மகான். ஆனால் இன்றுமதுவில் முழுகினான். போதை உச்சிக்கு ஏறிய வேளைதான்மனைவி-மகள் இருவரும் வீட்டுக்குள் நுழைந்தனர். மகானைக் கண்டதும்மனைவி கதி கலங்கி அதிர்ந்துவிட்டாள். "எங்கே...போய் கூத்தடிசிட்டு வாறீங்க...?" என கோபம் கொப்பளிக்க கேட்டபடி கன்னத்தைப் பதம் பார்த்தான்.

 

"அது..என்ர ..விருப்பம்..என்னை எதுவும் கேட்க முடியாது...எனக்கு என்ர சபைதான் முக்கியம்..." ஆணவத்துடனும்,அகங்காரத்துடனும் குரலை உயர்த்தி எதிர்த்துக் கேட்டாள்.

 

மகான் தன்னை மறந்தான். கண்-மூக்குத் தெரியாமல்வெளுத்து வாங்கினான். மகன்கள் குறுக்கே விழுந்து தடுக்கவுமே அமைதியானான்.

 

அடுத்த நாள்....ஒரு முக்கிய நிகழ்வுக்காக ´சுவிஸ்´ பயணமாகிவிட்டான். மீண்டும் வீடு திரும்பியபோது, மகன்கள் மட்டும் இருந்தனர். மகானைக் கண்டதும்பேந்தப் பேந்த முழித்தனர். மிகவும் கலவரத்துடன் காணப்பட்டனர். மெதுவாக, அமைதியாக விசாரித்த போதுதயக்கத்துடனும்பயத்துடனும்அவர்கள் இருவரும்´ சேர்ச்சைச்´ சேர்ந்தவர்களு டன்உடுப்புப் பெட்டிகளையும் எடுத்துக் கொண்டு போய்விட்டதாக கூறினர். மகான், சுவிஸ்க்கு கிளம்பிய அடுத்த நாளே போய் விட்டனர். அவர்களையும் தம்முடன் வரச் சொல்லி வற்புறுத்தினராம். ஆனால்அவர்கள் மறுத்துவிட்டனர்.

 

மகானுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. என்ன செய்வது என்று குழம்பினான். "ஏன் நீங்க போகவில்லையா..?" ஈனஸ்வரத்தில் கேட்டான்.

 

"அந்தப் பைத்தியங்களுடன் போக நாங்களும் என்ன விசரன்களா...?" என வெறுப்புடன் முணு முணுத்தனர்.

 

நாட்கள் நகர்ந்தன........

 

எந்தத் தகவலும் எட்டவில்லை. யாரிடமும் விசாரிக்கவும் இல்லை. ஒரு வாரம் கடந்த நிலையில்பதிவுத் தபால் ஒன்று, ஒரு வக்கீலிடமிருந்து வந்திருந்தது. அதன் சாராம்சம் ´மகான்மனைவியையும்- மகளையும் துன்புறுத்திவீட்டை விட்டுவேளியேற்றியதாக வும்இருவருக்கும் மேற்கொண்டு செலவுகளை தன் மூலம் மாதா மாதம் கட்டவேண்டும்´என்றிருந்தது.

 

மகான் தாமதிக்காமல்அவனுக்கு ஏற்கனவே தெரிந்த வக்கீலைத் தொடர்பு கொண்டு நடந்தவற்றை விபரித்தான். தான் வீட்டில் இல்லாத வேளையில்அவர்களாகவே வெளி யேறியதாகவும்மகன்கள் அதற்குச் சாட்சி என்பதையும் கூறினான்.

 

அதன் பின்னர் இரண்டு பகுதி வக்கீல்களும், வாத பரிமாற்றங்களாகக் கடிதப் பரிமாற்றங்கள் செய்து கொண்டனர். விரைவில், குடும்ப நீதி மன்றத்துக்கு வழக்குப் போனது. மகானை,எந்த வழியிலும் தண்டித்தேயாக வேண்டுமென்று ´அலேலூயா´பகுதியினர் மும்முரமாயிருந்தனர்.

 

பிரச்சனை தொடங்கியதிலிருந்துதினமும் இரவும் -பகலும், அநாமதேய தொலை பேசியழைப்புகள் மகானுக்கு வந்து கொண்டேயிருந்தன. அவனை கண்டமேனிக்கு மிரட்டினர். அவனும் தங்கள் சபைக்கு மதம் மாறிவந்து சேர்ந்தால்வழக்கைக் கைவிடுவதாக வலை வீசினர். தம்மை எதிர்த்தால்அவனை சும்மா விடப்போவதில்லை என சவால்விட்டனர். இவை அனைத்தையும்அவனது வக்கீலிடம்முறையிட்டான். அவர் அவனை அமைதியாயிருக்கும்படி, அறிவுறுத்தினார்.

 

கடிதங்கள் மூலமான தர்க்கத்தின் பின்னர், 6- மாதங்களளவில் ,முதல் முறையாக குடும்ப வழக்குமன்றுக்கு விசாரணைக்கு வந்தது. மகானது வக்கீல்மிகவும் திறமை சாலி. சர்வதேச சட்ட நுணுக்கங்களில் கில்லாடி.

 

மகானிடம்நீதிபதி கேட்டார்,"பிள்ளைகளின் எதிர்கால  நலன் கருதிஇணைந்து வாழ வேண்டும்" என்று.

"புதிதாக பின்பற்றும்,மதத்தை அறவே கைவிடவேண்டும்" இது மகானின் கோரிக்கை.... "உயிர் போனாலும் மீளவும் சைவ சமயத்துக்கு திரும்பமாட்டேன் "என்று அடித்துக்கூறி விட்டாள். பிரிவதே அவளது பிடிவாதமான முடிவு.

 

இந்த நாட்டுச் சட்டப்படி, குறைந்தது ஒரு ஆண்டாவது பிரிந்திருந்த பின்பே, மண முறிவு என்பது சாத்தியம்; நியதி. ஆனல் அவனது வக்கீல் வைத்த வாதமோ அபாரம்.

 

." எனது கட்சிக்காரர், ஈழத்தில் இந்துசமய சட்ட சம்பிரதாயப்படி மணம் புரிந்தவர். அங்குள்ளகண்டியன் திருமணச் சட்டம்´கூறுவதன்படிமனைவியானவள் தனாகவே வீட்டை விட்டு வேளியேறினால்மணமுறிவு கொடுத்தாகவே அர்த்தப்படும். எனவே, இப்போதே மணமுறிவு அளிக்கப்படவேண்டும். காத்திருக்கவேண்டியதில்லை" என தனது வாதத்தை முன் வைத்தார்.

 

மனைவி தரப்பினர், வாயடைத்து நின்றனர். ஆனால் எதிர்க்கவில்லை. இரு தரப்புச் சம்மததுடன் அன்றே தீர்ப்பு வழங்கப்பட்டது.


´பெண் பிள்ளை வயது குறைந்ததால் தாயுடனும், ஆண் பிள்ளைகள் வளர்ந்தவர்கள் ஆதலால்அவர்கள் விருப்பப்படி தகப்பனுடனும் இருக்கத் தீர்ப்பாகியது´


மகானைப் பொறுத்தமட்டில் ´சனி தோசம்´ நீங்கியது.

 ஆக்கம்:மயில்.மகாலிங்கம்....( யேர்மனி )


1 comments:

  1. மனுவேந்தன்,செMonday, September 27, 2021

    புதிய மொழி,புதிய சூழல்,புதிய கலாச்சாரம் இவற்றுக்குமத்தியில் சொந்த நிலத்தையும் உறவுகளையும் பிரிந்து வந்த வேதனை,கடன் சுமை , விரக்தி இவற்றால் எழுந்த புதிய பிரச்சனைகள் என பலகடந்தது புலம்பெயர் வாழ்வு. சொல்லமுடியாத துரோகங்களை சந்தித்தாலும் வாய் மூடி
    மெளனமாக வாழ்ந்துகொண்டிருப்போர் சிலர். ஆனால் உண்மைகள் நீண்ட காலம் உறங்குவதில்லை. சில இடங்களில் வெடித்துவிடுகிறது. கதையில் ஆசிரியர் அனுபவித்து எழுதியுள்ளார்.நகர்வு அருமை.

    ReplyDelete