"காற்றில் ஆடுது வெள்ளை ரோசா'

 

 


"காற்றில் ஆடுது வெள்ளை ரோசா

காதல் பேசுது பொன் வண்டு

கானம் பாடுது சுற்றி வருகுது

காமம் கொண்டு தேன் பருகுது!"

 

"இதயம் கவருது சிவப்பு ரோசா

இதழ்கள் தொட்டு வண்டு கொஞ்சுது

இச்சை கொண்டு துள்ளி குதிக்குது

இணக்கம் சொல்லி ரோசாவும் அணைக்குது!"

 

"அழகாய் மலருது ஊதா ரோசா

அருகே வருகுது கருத்த வண்டு

அங்கம் எல்லாம் தொட்டு ரசிக்குது

அடக்கமாய் ரோசாவும் விட்டுக் கொடுக்குது!"

 

"கண்ணை கவருது ஆரஞ்சு ரோசா

கதிரவன் அன்பில் தன்னை மறக்குது

கபடன் வண்டும் கொஞ்சி குலாவுது

கள் குடித்து மயங்கி படுக்குது!"   

 

"உள்ளம் பறிக்குது இளஞ்சிவப்பு ரோசா

உரிமை கொண்டாடுது சிவப்பு வண்டு

உறிஞ்சி குடித்து முத்தம் இட

உல்லாசம் அடைந்து ரோசா மகிழுது!"

 

"மரத்தில் தொங்குது மஞ்சள் ரோசா

மகிழ்ந்து கூடுது இளம் வண்டு

மது சொரிந்து இதழ் நெளித்து 

மஞ்சம் ஆகுது அழகு ரோசா!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment