அழிந்து.. அழிந்து... மீண்டு வரும் பூமி

இந்த உலகம் உருவாகி சுமார் 454 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனுக்கும் இதே வயதுதான். இந்த கோளில் மட்டும்தான் உயிர்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளது. இங்கே ஆக்சிஜன் சுவாசிக்காத உயிரினங்களும் கூட உண்டு. அதே போல கொதிக்கும் நீரிலும், கரிக்கும் உப்பிலும், உறையும் பனியிலும் வாழும் உயிரினங்களும் இருக்கின்றன. நமது மனித இனம் வாழ்வதற் காகத்தான் இந்த உலகம் உருவானதா..! இல்லவே இல்லை. நாம் இந்த பூமியில் வழிப் போக்கர்கள்தான். ஆனாலும் கூட, நாம்தான் இந்த புவியின் இயற்கையை ஆட்டிப் படைக் கிறோம்.

 

புவியின் வெள்ளைத் தொப்பி.!

பூமியின் இரு துருவங்களும் ஒரு பனிக் குல்லாயை மாட்டிக் கொண்டு திரிகின்றன. ஆனால் இதன் உள்ளே, மையப்பகுதி இரும்பு நிக்கல் கலந்த குழம்பினால் கொதித்துக் கொண்டு இருக்கிறது. அதனால் பூமிக்கு காந்தப்புலனும் உள்ளது. பூமியின் வட துருவம் ஆர்க்டிக் என்றும், தென் துருவம் அண்டார்டிக் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் ஏராளமான தாது வளங்களும், அதன் விளைவாய் உருவான உயிரினங்களும், மனித சமுதாயத்துக்குப் பெரிதும் உதவுகின்றன.

 

முதல் உயிரி & பிராண வாயு பரிணாமம்.!

 

earth_370_copyபூமியின் ஆற்றல் மிகுந்த வேதியல் பரிணாமத்தால், சுமார் 400 கோடி ஆண்டுகளுக்கு முன், தானாகவே இரட்டிப்பான ஒரு மூலக்கூறின் மூலம் உலகின் பொது மூதாதையரான ஓர் உயிரி உருவானது. அதன் பின், உயிரினங்களின் துவக்க கால பரிணாமம், முதல் ஒளிச் சேர்க்கை உயிரி வந்த பின்னரே துவங்கியது. ஒளிச் சேர்க்கையின் வயது 350 கோடி ஆண்டுகள். அதற்கு முன் வாழ்ந்த உயிரிகள் எல்லாம் ஹைடிரஜன்/ ஹைடிரன் சல்பைடை பயன்படுத்தி உயிர் வாழ்ந் தன. சுமார் 30 கோடி ஆண்டுகளுக்கு முன் வந்த சயனோபாக்டீரியா (Cyanobacteria)என்ற நீலப் பச்சை பாசிதான், இந்த உலகை ஆக்சிஜன் நிறைந்த உலகாக, ஆக்சிஜன் உள்ள வளி மண்டலமாக என உலகின் முகவமைப்பையே மாற்றிய ஜாம்பவான். நாம் சுவாசிக்க ஆக்சிஜனை உருவாக்கிய பெருமை இந்த நீலப் பச்சை பாசிக்கு உண்டு. இதற்கு அப்புறம் உயிரின பரிணாமம் பெரும் வீச்சுடன் நடைபெற்றது. அது போல, 350 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் பூமியின் காந்தப் புலன்/பரப்பு உருவாயிற்று. அதன் ஈர்ப்பு விசையால்தான் வளிமண்டலம் ஓடிப்போகாமல் காப்பாற்றப்பட்டுள்ளது.

 

அழிந்து.. அழிந்து... மீண்டு வரும் பூமி.!

 

உலகம் உருவானதிலிருந்து ஏராளமான பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. அவை மூலம் ஒட்டுமொத்த உயிரின அழிவு நேரிட்டுள்ளான. இதுவரை உருவான உயிரினங்களில் சுமார் 98% இந்தப் பேரழிவுகளால் உலகத்தின் முகத்திலிருந்து துடைத்து எறியப்பட்டன. அதுவும் பெர்மியன்(பேர்மியன்) காலத்தில் நிகழ்ந்த அழிவுதான் பெரும் சாவு (Great Dying) நிறைந்த பேரழிவு என்று சொல்லப்படுகிறது. இந்த மகா அழிவு சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. அதில் 96% கடல் வாழ் உயிரிகளும் மற்றும் 70% நில ஜீவன்களும் ஒட்டு மொத்தமாய் இந்த உலகை விட்டு சென்றுவிட்டன. பூச்சிகளையும் இந்த ஆழிப்பேரலை/அழிவு விட்டு வைக்கவில்லை. அழிந்து போனவைகளில் முக்கியமானவை, பாலூட்டிகள் போலிருந்த ஊர்வன. இந்த அழிவுக்குப் பின் சுமார் 30 கோடி ஆண்டுகளுக்குப் பின்தான் முதுகெலும்பிகள் தங்களின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தன.

 

இன்றைய உயிரிகள்...!

 

இன்று உலகில், லைக்கன்ஸ் (Lichens), காளான்கள், பாக்டீரியா என அனைத்து தாவர, விலங்கினங்களை உள்ளடக்கி சுமார் 1.13 கோடி உயிரின வகைகள் இந்தப் புவியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் பூச்சிகள் மட்டுமே சுமார் 50,000,000 இனங்கள் உள்ளன. முதுகெலும்பில்லாதவை: 6,755,830 இனங்கள். முதுகெலும்பிகள்: 80,500 வகைகள், மொத்த தாவரங்கள்:390,700 வகைகள்

 

பேரா.சோ.மோகனா

3 comments:

  1. [இந்து தொன்மவியலில் புராணங்களில் உலக சமுதாயம் மேற்கொள்ளும் நான்கு வளர்ச்சிகாலங்களில், யுகங்களில், இருண்டகாலம் எனப்படும் கடைசி காலகட்டமாகும். மற்றவை கிருதயுகம் (அல்லது) சத்திய யுகம்,திரேதாயுகம், துவாபரயுகம். ... கலியுகம் - 4 லட்சத்து 32 ஆயிரம்]
    அப்படியாயின் புராணம் பொய்த்துவிட்டது.

    ReplyDelete
  2. ஒரு சதுர் யுகம் (நாலு யுகங்களின் கூட்டு) 4,320,000 வருடங்கள்.

    நம்ம பிரமாவின் விளையாட்டு, ஒவ்வொரு 1000 சதுர் யுக முடிவிலும் பிரபஞ்சத்தை அழித்து, இல்லாமை ஆக்கித் திரும்பவும் முதலில் இருந்து தன் படைத்தல் தொழிலை ஆரம்பிப்பார்.

    அதாவது, 4,320,000,000 வருடங்களில் எல்லாம் அழியும். இப்பொழுது கலியுகம் 5123, ஆக, படைக்கப்பட்டு 431.9573123 கோடி வருடங்கள் முடிந்து விட்டது. இது ஒரு தோராயமாகக் கணிக்கப்பட்ட 454 கோடியுடன் ஒத்துபோகிறதல்லவ்வா?

    இன்னும் 426,877 வருடங்களில் எல்லாமே ஒழிந்துவிடும்!

    ReplyDelete
  3. நம்ம பிரமாவுக்கு ஒரு விளையாட்டு; இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து ஒவ்வொரு 1000 சதுர் யுக முடிவிலும் முற்றாக அழித்து வெறுமை ஆக்கிய பின்னர், திரும்பவும் முதலில் இருந்து படைக்கத் தொடங்குவார்.

    கிருத யுகம் - 1,728,000
    திரேதா யுகம் - 1,296,000
    துவாபர யுகம் - 864,000
    கலியுகம் - 432,000 வருடங்கள்
    சதுர் யுகம் - நாலு யுகங்களின் கூட்டல் = 4,320,000
    1000 சதுர் யுகம் = 4,320,000,000 வருடங்கள். = 432 கோடி வருடங்கள்.

    கலியுக முடிவில் எல்லாம் அழிவதற்கு இன்னும் 432,000 - 5124 (தற்போதைய கலியுக ஆண்டு) = 426,876 வருடங்கள்.

    ஆகவே, பிரபஞ்சம் தொடங்கி இப்பொழுது 4,319,573,124 வருடங்கள், அதாவது 431.9573124 . கோடி வருடங்கள் ஆகின்றது.

    இது, ஒரு தோராயமாக கூறப்பட்டுள்ள 454 கோடி வருடங்களுடன் ஒத்துப் போகிறதல்லவா?

    ReplyDelete