இவ்வாரம் வந்த திரைப்படங்கள் எப்படி?

 சுருக்கமான பார்வை 



படம்:''டி எஸ் பி'' விமர்சனம்  (Cinema Tamil Movie 'D.S.P ' Review)

-பொன்ராம் இயக்கத்தில்  விஜய் சேதுபதி, அனுகீர்த்தி வாஸ், புகழ், பிரபாகர் எனப்பலர் நடித்த நகைச்சுவை & அதிரடி திரைப்படம். கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்க,  டி இமான் இசையமைத்துள்ளார்.

 

கதை:வெட்டியாக திரியும்  விஜய்சேதுபதிக்கும் ,கல்லூரி மாணவி அனுகீர்த்திக்கும் காதல்  மலர்கிறது. இந்த நிலையில்  தாதா பிரபாகருக்கும் விஜய்சேதுபதிக்கும் மோதல் வருகிறது. . இதனால் தலைமறைவாக இருக்கும் விஜய்சேதுபதியும் வில்லனை பழிதீர்க்க துடிக்கிறார்.   போலீஸ் அதிகாரியாகிவரும் விஜய்சேதுபதிக்கும்  எம்.எல்.ஏ.வாகி உயர்ந்து நிற்கும்  வில்லனை பழிவாங்க முடிந்ததா, இல்லையா என்பது மீதிக் கதை.

முடிவு: வழக்கமான சீண்டல்[2.25/5]

 

படம்:''கோல்டு'' விமர்சனம்  (Cinema Tamil Movie 'Gold ' Review) –

 அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ப்ரித்விராஜ், நயன்தாரா, அஜ்மல் அமிர் எனப்  பலர் நடித்திருக்கும் திரைப்படம். சுப்ரியா மேனன் தயாரிக்க,  ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.

 

கதை:பிருத்விராஜ் புதிய கார் ஒன்றை ஆர்டர் செய்கிறார். அந்த கார் டெலிவரிக்கு வருவதற்கு முன்பே  அவர் வீட்டு வாசலில் பொலேரோ வாகனம் வந்து நின்றதால்  காவல் நிலையத்திற்கு சென்று புகாரளிக்கிறார்.இதனிடையே அந்த காரில் இருந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் ஒன்றை எடுத்து பயன்படுத்துகிறார். அப்போது எதிர்பாராத சம்பவம் நிகழ்கிறது. அதை பிருத்விராஜ் எப்படி கையாள்கிறார்? அந்த வண்டியை அங்கே நிறுத்தியது யார்? என்பதுதான் படத்தின் கதை.

முடிவு:  ஈர்க்கவில்லை.[2.5/5]

 

படம்: ''கட்டா குஸ்தி''விமர்சனம்  (Cinema Tamil Movie 'Gatta Kusthi ' Review) –

 செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ் எனப்பலர்  நடித்திருக்கும் இப்படத்தினை தயாரிப்பாளரும், இப்படத்தின் நாயகனுமான விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா இணைந்து தயாரிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

 

கதை: வீரா (விஷ்ணு விஷால்), நீளமான கூந்தலுடன் இருக்கும் படிக்காத பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார். பட்டதாரியான கீர்த்திக்கு சவுரி முடி வைத்து, படிக்காதவர் என பொய் சொல்லி வீராவுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருக்க, வீராவைக் கொல்ல வரும் எதிரிகளை, குஸ்தியால் வீழ்த்தி கீர்த்தி காப்பாற்ற, அவர் குறித்த உண்மைகள் தெரியவருகிறது. இதனால், அவரை பிறந்தவீட்டுக்கு அனுப்பி விடுகிறார் வீரா. அதோடு, குஸ்தி போட்டியில் கீர்த்தியை வெல்லவும் ஆயத்தமாகிறார். இறுதியில் வெல்வது யார்? வீராவும், கீர்த்தியும் இணைந்தார்களா? கட்டா குஸ்தியில் சாதிக்கும் கீர்த்தியின் கனவு என்ன ஆனது என்கிற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது மீதிக் கதை.

 

முடிவு: ஆண் - பெண் சமத்துவத்தை அழகாகவும், அழுத்தமாகவும் பேசியிருக்கும் ‘கட்டா குஸ்தி’யை குறைகள் மறந்து வரவேற்கலாம் [3.5/5]

 

படம்: ''நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்''விமர்சனம்  (Cinema Tamil Movie 'Naai Sekar Returns' Review)

-சுராஜ் இயக்கத்தில் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். சுபாஸ்கரன் தனது 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

 

கதை:நாய்களைக் கடத்தி உரிமையாளர்களிடம் பணம் பறிக்கும் நாய் கடத்தல் காரனாக இருக்கிறார் நாய் சேகரான வடிவேலு. ஒரு நாள் 'நாய் மாற்றி', தாதாவான ஆனந்த் ராஜின் நாயை வடிவேலு கடத்துகிறார். வடிவேலுவைக் கொலை செய்யக் கிளம்புகிறார் ஆனந்த்ராஜ். ஆனந்தராஜிடமிருந்து தப்பித்தாரா, திருடப்பட்ட தெய்வ நாய் என்ன ஆனது, அந்த நாயை வடிவேலு மீட்டாரா என்ற கதையைச் சிரிக்கச் சிரிக்க சொல்ல முயன்றிருக்கிறது வடிவேலு - சுராஜ் கூட்டணி.

 

முடிவு: பார்வையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றமே!![2.5/5]

 

தொகுப்பு:செமனுவேந்தன்

0 comments:

Post a Comment