சிரிப்பு வருது!
பெண்களை ஏழு வகைப்படுத்தலாம்…
(குறிப்பு – இப் பகுதி சிரிப்பதற்காக மட்டுமே என்பதை கருத்தில் கொள்க.)
01. HARD DISK – இவ் வகையான பெண்கள் எல்லாவற்றையும், எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.
02. RAM - இவ் வகையான பெண்கள் எல்லா விடயங்களையும் குறித்த இடத்தை விட்டு நீங்கியதுமே மறந்துவிடுவார்கள்.
03. SCREEN SAVER – இவ் வகையான பெண்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள், ஆனால் குடும்ப விடயங்களுக்கு பயன்படமாட்டார்கள்.
04. INTERNET – இவ் வகையான பெண்களின் உதவியை அவசியமான நேரத்தில் பெற்றுக்கொல்வது கடினமாக இருக்கும்.
05. SERVER - இவ் வகையான பெண்கள் தேவைப்படும் நேரத்தில் படு பிஸியாக இருப்பார்கள்.
06. MULTIMEDIA - இவ் வகையான பெண்கள், தம்மிடம் உள்ள அசிங்கங்களை கூட மறைத்து அழகாக வெ ளிப்படுத்துவார்கள்.
07. VIRUS - இவ் வகையான பெண்கள் பொதுவாக மனைவி என அழைக்கப்படுகிறார்கள். ஒருமுறை உங்கள் வாழ்வில் வந்துவிட்டால், உங்கள் வாழ்வே காலி தான்…!
"உன் கலயாணத்தைப் பத்தி விவசாய ஆராய்ச்சி
மையத்துல போயி விசாரிச்சியாமே, ஏன்டி?"
"கல்யாணம்ங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர்
இல்லயா, அதனாலதான்டி."
"என்னங்க இது மணப்பெண்ணுக்கு கை,
கழுத்து, நெற்றியிலலாம் பூவாலேயே
அலங்காரம் பண்ணியிருக்கீங்க?"
"பொன் வைக்கிற இடத்துல பூ வைக்கச்
சொல்லி நீங்கதானே சொன்னீங்க?"
"உங்க வீட்ல சிரிப்பு சத்தமாயிருக்கே, ஏன்?"
"எங்க வீட்டு டிவி ரிப்பேர், அதுதான்!"
"இன்னைக்கு
நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து
வேலை செஞ்சேன்"
"அவ்வளவு பிசி ஒர்க்கா?"
"இல்ல; சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும்
எழுப்பிவிடலை"
"வாழைப் பழம் ஒன்னு எத்தனை ரூபாய்ங்க?"
"ஒரு பழம் ரெண்டு ரூபாய்ங்க"
"ஒன்னரை ரூபாய்க்கு கொடுங்களேன்"
"ஒன்னரை ரூபாய்க்கு தோல் மட்டும்தான் கிடைக்கும்"
"அப்படின்னா ஐம்பது பைசாவுக்கு பழம் மட்டும் கொடுங்க"
"சுவரில்
எழுதாதே'ன்னு இருந்தது. நான் போயி..."
"என்ன செய்தே?"
" 'சரி எழுதலை'ன்னு எழுதிட்டு வந்திட்டேன்"
ஆசிரியை : "ஒரு ரூபாய்க்கு ஒரு ஆப்பிள், அப்படின்னா
பத்து ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள்?"
மாணவன்: "ஒரு ரூபாய்க்கு எந்த கடையில ஆப்பிள்
விற்குதுன்னு சொல்லுங்க, நான் போய் வாங்கி வறேன்"
கணவன்: "என்னடி
சாம்பார்ல ஒரே சில்லறைக்
காசா கிடக்குது?"
மனைவி: "நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம்
சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க!"
திருடன் 1: "ஒரு வீட்டுல திருடும்போது தூங்கிட்டு
இருந்தவர் காலை தெரியாமல் மிதிச்சிட்டேன்"
திருடன் 2: ''திருடன்-னு அலறியிருப்பாரே?''
திருடன் 1: " 'கால் வலிக்கு இதமா இருக்கு; ஒரு
அரை மணி நேரம் மிதிச்சிட்டு அப்புறம் திருடு'ன்னு
சொல்லிட்டார்"
திருமண விருந்தில்...
பந்தி பரிமறுபவர்: "ஏம்ப்பா, நீ போன பந்தியிலயும்
சாப்பிட்டியே! இந்த பந்தியில் மறுபடியும் சாப்பிடறியே?"
சாப்பிடுபவர்: "ஆமாங்க, உங்களுக்கு ஞாபக சக்தி
அதிகம். எனக்கு ஜீரண சக்தி அதிகம்"
விமலா: "ஏய் கலா, நான் உன் திருமணத்திற்கு
வரமுடியலடி. அந்த ஆண்கள் பக்கத்தில்
உட்கர்ந்திருக்கிறாங்கள்ல அவங்கள்ல
உன் கணவர் யாருன்னு காட்டேன்"
கலா: "அந்த மூனாவது வரிசையில, புளு பேண்ட் போட்டு
வெள்ளை சட்டையை இன் பண்ணிக்கிட்டு..."
விமலா: "ஆமாம்"
கலா: "கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு..."
விமலா: "ஆமாம்"
கலா: "நல்லா முரட்டு மீசை வெச்சிக்கிட்டு..."
விமலா: "ஆமாம்"
கலா: "தலையில் சுருள் முடியோட..."
விமலா: "ஆமாம்"
கலா: "கழுத்தில கோல்ட் செயின் போட்டுக்கிட்டு..."
விமலா: "ஆமாம்"
கலா: " ஷூ போட்டுக்கிட்டு, உட்கார்ந்திருக்காரே..."
விமலா: "ஆமாம்"
கலா: "நல்லா நடிகர் அஜீத் கலர்ல..."
விமலா: "ஆமாம்"
கலா: "அவருக்கு வலப்பக்கம் உட்கார்ந்திருக்கிறவருதான்
என் கணவர்!!!"
0 comments:
Post a comment