சிரிக்க...சிரிக்க....சிரிப்பு!


""நம்ம தொகுதி எம்.எல்.. ஒரே கேள்வியிலேயே சட்டமன்றத்தையே திக்குமுக்காட வைச்சுட்டாராம்''

 ""அப்படியா? அப்படி என்ன கேட்டார்?''

 ""நான் எந்தத் தொகுதி எம்.எல்..ன்னு கேட்டாராம்''

 வந்தவர்: எதுக்கு என் பையனைக் கண்டிச்சீங்க?

 ஆசிரியர்: வெள்ளையர்களை எதிர்த்து உப்பு சத்தியாக்கிரகம் நடந்ததுன்னு சொன்னால், கல் உப்புக்கா, தூள் உப்புக்கான்னு கேட்கிறானே!

 ""அவர் போலி டாக்டர்தான்னு எப்பிடிக் கண்டுபிடிச்சே?''

 ""கால் பாதத்துல ஆணியிருக்குன்னு அவர்ட்ட போனா... கால் இன்ச் ஆணியா? அரை இன்ச் ஆணியான்னு கேக்கிறார்... அதை வச்சுத்தான்''


 (டிவி ஷோ ரூம் ஒன்றில்)

 ""இந்த டிவி 8500 ரூபாய். உள்ளூர் வரிகள் தனி''

 ""நான் வெளியூருங்க... வரி போடாம குடுங்க''
அப்பா 5 + 5 எவ்வளவு?
மடையா, அறிவு இல்லே, வெட்கமாக இல்லே உனக்கு, இது கூட தெரியாதா?
சரி, சரி அந்த கால்குலேட்டரை எடுத்து வா நான் பார்த்து சொல்றேன்.

0 comments:

Post a Comment