தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி :04‏

 [தொகுத்தது: கந்தையாதில்லைவிநாயகலிங்கம்]


60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஃப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் ஜெனடிகல்[genetical] ரேகைகளை விட்டுவிட்டு போயிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள், இதற்கு  ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட்[GP:Genographic Project] என்று பெயரிட்டு இருக்கிறார்கள். மனித உடல் ஜீன்களின் கட்டமைப் பாலானது.மனித உடலின், இயக்கத்தின் ஒட்டுமொத்த கட்டளைகள், திறவுகோல்கள் ஜீன்களில் இருக்கின்றன. பரம்பரையாக சிலருக்கு நோய் வருதலும் ஜீன்களை சார்ந்ததே."நான் ராஜபரம்பரை யிலிருந்து வந்தவன்'', "நாங்கள் கொடுத்து பழக்கப்பட்டவர்கள்; கை நீட்டிப் பழக்கப்படவர்கள் இல்லை!'' இவையெல்லாம் நாடக அரங்கில் அல்லது திரை அரங்கில் பேசுவதை கேட்டிருப்பீர்கள்.ஆனால் இவற்றிற்கும் அறிவியலுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை.நிறைய  நிறைய தொடர்பு உண்டு."அப்படியே இவன் அப்பனை உரிச்சு வச்சிருக்கான்''. இந்தப் பண்புகளையெல்லாம் பரம்பரை பரம்பரையாக கடத்தி வருவது இந்த ஜீன் எனப்படும் மரபணுதான். அதாவது  மரபணு(gene) என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை சந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும்.இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப்படுகின்றன.உயிரியல் இயல்புகளுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களிலேயே காணப்படுகின்றது.உயிரியல் இயல்புகள் என்னும்போது பார்த்தறியக் கூடிய இயல்புகளாகவோ (தோலின் நிறம்), பார்த்து அறிய முடியாத இயல்புகளாகவோ (குருதி வகை) இருக்கலாம்

ஒருமுறை குலோத்துங்க மன்னனின் குலகுருவான ஒட்டக்கூத்தர்,குலோத்துங்க மன்னனுக்கு பாண்டியர் மகளை பெண் கேட்க சென்றார்.அதற்கு பாண்டிய மன்னர் மறுப்பு கூற ஒட்டக்கூத்தர் பாண்டியர் சோழரை விட பரம்பரையில் தாழ்ந்தவர் என்ற அர்த்தத்தில் இப்படி பாடினார்.

"ஆருக்கு வேம்பு நிகராகுமா அம்மானே?
ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே?
வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே?
வெற்றிப் புலிக்கொடிக்கு மீனமோ அம்மானே?
ஊருக்குறந்தை நிகர் கொற்கையோ அம்மானே?
ஒக்குமோ சோனாட்டைப் பாண்டிநாடு அம்மானே?"

அதாவது சூர்ய வம்சத்துக்கு சந்திர வம்சம் ஈடாகாது[ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானே?] என்றும் மீனவனான பாண்டியன் வீரனாக முடியாது[வீரர்க்குள் வீரனொரு மீனவனோ அம்மானே?] என்றும் கூறியதின் அர்த்தம் இப்ப உங்களுக்கு புரிந்திருக்கும்

உலகிலுள்ள பல்வேறு இனத்தவர்களின் ஜீன் மாதிரிகளை சேகரித்து,
அவற்றினை ஆராய்ந்து, அந்த ஜீனுக்கு சொந்தக்காரரின் மூதாதையர்களின் வழியினைக் கண்டறிவது தான் இந்த திட்டம். மனிதர்களின் Y குரோமோசோம்களை அடிப்படையாக வைத்து இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப்படுத்தப்படுகிறது. M என்பது Macro-haplogroup என்பதின் சுருக்கம்.ஒவ்வொரு வழித்தடமும், ஆஃப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. உதாரணமாக, இந்தியாவின் முக்கியமாக தென்னிந்தியா, இலங்கையினை குறுக்காக கடந்து ஆஸ்திரேலியா வரை செல்லும் வழித்தடம் - M130. இது நடந்தது சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர். 30,000 ஆண்டுகளுக்கு முன்னர், இமயமலையின் கணவாய்களின்[a narrow-pass between hills] வழியாக வந்தேறிகள் வந்து குடியேறினார்கள் என்பதற்கு சான்றாக அமையும் வழித்தடம் M20 ஆகும் அப்படியே மற்றவையும் ஆகும்
பகுதி/PART :05 தொடரும்/WILL FOLLOW


1 comments:

  1. மிகவும் அருமையான தகவல்கள்.தொடரட்டும்.நன்றி.

    ReplyDelete