தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:06‏

  • ஸ்பென்சர் வேல்ஸ்[Spencer Wells] இனதும் பிச்சப்பன்[Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்ளின் கவனத்தை இந்திய[குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை.பிரித்தானிய கடல்துறை தொல்பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக்[Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரை யிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார்.அங்குக் கடலடி நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று சொன்னார். அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே[Dr.Glen Milne/The Durham geologists] உறுதி செய்தார்.பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தைவிடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும்
  • ,அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கூறினார்.முன்பு பனி யுகம்[ICE AGE/பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து வந்திருக்கிறது.அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின.ஆகவே கடைசி பனி உருக்கு காலத்தில்,அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில்  பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்
    ஆய்வாளர்.
    [பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி/burial urn found
    at Poompuhar]தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது.அப்பொழுது அங்கே கண்டுபிடிக்கப்பட்டவை.   
    கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது.ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது.இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப்பட்டன.இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக்கூடியதாக உள்ளது. 
    இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது.2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228,256 முதுமக்கள் தாழி[burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.

    "கலம் செய்கோவே கலம் செய்கோவே
    அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
    சிறு வெண் பல்லி போலத் தன்னொடு
    சுரம் பல வந்த எமக்கும் அருளி
    வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி
    அகலிது ஆக வனைமோ
    நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே." [புறநானூறு 256]

    ஒருபெண் தன் கணவனுடன் சென்றுகொண்டிருந்தாள். அவர்கள் சென்றுகொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப்படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாகஎன்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.

    குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெருநிலப்பரப்பாகும்.இது இந்தியா கடலில்,இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது.இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது .இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது.அது தான் கடற் கோள்  ஆகும் .இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும் 
    தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப்[Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர்.இந்தக் கருவி கடலில் மிதக்கும்போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்குமிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும்.அது கோயிலாகவோ  அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும்.ஆகவே இந்த கட்டுமானம் மெசபடோமியா கட்டமைப்பை விட 5000-5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள்,புவியியல் சான்றுகள் ,முதலாவது தமிழ் சங்க காலத்தில் ,தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள்.அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன்,
    கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம்.சோழப்பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டுஅப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று என்கிறேன்.



  •  [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

3 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Friday, February 28, 2014

    "ஸ்பென்சர் வேல்ஸ்[Spencer Wells] இனதும் பிச்சப்பன்[Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்ளின் கவனத்தை இந்திய[குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை.பிரித்தானிய கடல்துறை தொல்பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக்[Graham Hancock] ......"இப்படி வாசிக்க வேண்டும் .இதில் "ஆய்வாளர்" தவறுதலாக விடுபட்டு கிழே "[பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி/burial urn found at Poompuhar]" மேல் போய்விட்டது.இதை திருத்தி வாசிக்கவும்

    ReplyDelete
  2. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, March 01, 2014

    ஸ்பென்சர் வேல்ஸ்[Spencer Wells] இனதும் பிச்சப்பன்[Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்ளின் கவனத்தை இந்திய[குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை.பிரித்தானிய கடல்துறை தொல்பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக்[Graham Hancock] ...இப்படி வாசிக்கவும்.

    "ஆய்வாளர்" என்ற சொல் தவறுதலாக விடுபட்டு,அது "[பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி/burial urn found at Poompuhar]" இற்கு மேல் தனியே நிற்கிறது.ஆகவே அதை தவிர்த்து தொடர்ந்து வாசிக்கவும்

    ReplyDelete
  3. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Sunday, March 02, 2014

    ஸ்பென்சர் வேல்ஸ்[Spencer Wells] இனதும் பிச்சப்பன்[Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்ளின் கவனத்தை இந்திய[குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை.பிரித்தானிய கடல்துறை தொல்பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக்[Graham Hancock] ...இப்படி வாசிக்கவும்.

    "ஆய்வாளர்" என்ற சொல் தவறுதலாக விடுபட்டு,அது "[பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி/burial urn found at Poompuhar]" இற்கு மேல் தனியே நிற்கிறது.ஆகவே அதை தவிர்த்து தொடர்ந்து வாசிக்கவும்

    நன்றி

    க.தில்லை

    ReplyDelete