தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி-10


[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

மதுரை ஆதீனத்தின்[ஆதினத்தின்] அதிகாரப் பூர்வமான ஆங்கில கணினி இணையத்தில், ஆதீனத்திற்கு [ஆதினத்திற்கு] இன்னும் ஒரு முக்கிய கருத்தை சுட்டிக்காட்டுகிறார்கள்.அது எமக்கு ஒரு வியப்பையே கொடுக்கிறது.மேலும் Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary யில்,அதீனம் என்பதற்கு: s. [commonly ஆதினம்.] Propriety, the relation which property bears to the owner, right of possession, உரித்து. (p.) 2. Dependence, சார்பு.என்று கொடுக்கப்பட்டுள்ளது அதாவது அதீனம் என்பதை ஆதினம் எனவும் பொதுவாக குறிக்கலாம் என பொருள் படுகிறது.இந்த அடிப்படையில் ஆதினம் என்பதை மேலும் ஆதி+இனம் என பிரித்து பார்த்து இந்த கணினி இணையம்  நாகரிகம் முதல் முறையாக குடியேறிய இடம் ஆதினம் என்கிறது.அதாவது ஆதினம் என்னும் சொல் பண்டைய சமூகம் அல்லது குடியேற்றத்தை குறிக்கிறது என்கிறது.அது மதுரையில் உள்ளது.ஆகவே அந்த பண்டைய குடியேற்றம் முதல் முறையாக அங்கு நடைபெற்றது என்கிறது.அதாவது மதுரை ஆதினம் ஒரு
பண்டைக்காலத்திய புராதன[மூல] நாகரிகம் என்கிறது.ஆகவே மதுரை ஆதினம் ஒரு மறுக்கமுடியாத மிக பண்டைய மனித நாகரிகத்தின் குடியேற்றம் என்கிறது.இதன் தோற்றுவாயும் காலமும் பதியப்பட்ட எல்லா சரித்திர காலத்தையும் அதற்கு முந்திய பதியப்படாத காலத்தையும் கடந்தது என்கிறது.அதாவது  இதன் சரித்திரம் இரண்டாக உள்ளது.ஒன்று பதியப்பட்ட வரலாறு .இது கி பி 700 அளவில் திருஞானசம்பந்தருடன் தொடங்குகிறது.மற்றது அதற்கு முந்தியது.


நாம் முன்பு எடுத்து காட்டியவாறு,சங்க காலப் பாண்டிய அரசின் தலை நகரமாக இருந்த கொற்கையில் இருந்து 15 கி,மீட்டார் தூரத்தில் அமைந்த ஆதிச்சநல்லூரில் மேற்கொண்ட அகழ்வு ஆராச்சியில் குறைந்தது கி மு 2000 ஆண்டுகளில் இருந்து அங்கு ஒரு பண்டைய தமிழர் நாகரிகம் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.மேலும் பாண்டிய என்ற சொல் ஒரு பண்டைய அல்லது பழைய நாட்டை குறிப்பதாக அறிகிறோம்.கலித்தொகை என்ற சங்க பாடல் பாண்டிய சேர மன்னர்கள் 10,000 ஆண்டுகள் ஆண்ட  குமரி கண்டம் என்ற ஒரு நிலப்பரப்பை குறிக்கிறது.அது கடலில் மூழ்க,இன்றைய தமிழகத்தில் முதலில் கொற்கையையும் பின்பு மதுரையையும் தலை நகராக
கொண்டு அவர்கள் குறைந்தது கி மு 600 ஆண்டுகளில் இருந்து கி பி 1700 ஆண்டுவரை ஆண்டார்கள் என இலக்கிய ஆதாரங்களை முன் வைத்து ஒரு கருத்தும் பொதுவாக உண்டு.அது மட்டும் அல்ல பாண்டிய மன்னர்களின் ஆதரவுடன் தமிழ் சங்கம் மூன்று கால கட்டத்தில் செழிப்பாக வளர்ந்தது என அறிகிறோம். முதலாவது [தலைச்சங்கம்] பழைய மதுரையிலும்[கடல் கொண்ட தென்மதுரையிலும்] இரண்டாவது[இடைச்சங்கம்] கபாடபுரத்திலும் மூன்றாவது தற்கால மதுரையிலும் இருந்ததாக இலக்கிய குறிப்புகள் உண்டு.ஆனால் மூன்றாவது அல்லது கடைச் சங்கத்திற்கு மட்டுமே வரலாற்று குறிப்புகளும் உண்டு.அதாவது,இதில் முதல் இரண்டும் கடலால் மூழ்கடிக்கப்பட்டது என நம்பப்படும் குமரி கண்டத்தில் இருந்ததாக இலக்கிய குறிப்புகள் மட்டுமே உண்டு.மேலும் இன்னும் ஒரு குறிப்பு சிந்து சம வெளி நாகரிகம் அழிவிற்கு உட்பட்ட போது,அங்கு இருந்த தமிழர்/திராவிடர் அதன் பின் அங்கிருந்து புலம் பெயர்ந்து  தென் இந்தியா வந்து குடியேறியதாக சொல்கிறது .அது மட்டும் அல்ல இன்னும் ஒரு சாரார்,சுமேரியாவில் இருந்து சிந்து சம வெளிக்கு இடம் பெயர்ந்த சுமேரிய தமிழரே இவர்கள் என்கிறார்கள். எப்படியாயினும் அவர்கள் அங்கு மதுரையில்  ஆதி காலத்திலேயே 3000/4000 ஆண்டுகளுக்கு முன்பே குடியேறினவர்கள் என்பது மட்டும் உண்மை. மேலும் மகாவம்ச என்ற பாளி மொழி  தொடர் கதை கி மு 543 அளவில் இலங்கை தீவின் அரசனான விஜயன் தென் மதுரை பாண்டிய மன்னனின் மகளை கல்யாணம் செய்தான் எனவும் அதன் பின் ஒவ்வொரு வருடமும் பாண்டிய மன்னனுக்கு உயர்தரமான பரிசுகள் அனுப்பினான் எனவும் குறிக்கிறது. அது மட்டும் அல்ல,கிரேக்கப் பயணியும், புவியியலாளருமான மெகஸ்தெனஸ் (கிமு 350 - கிமு 290) பாண்டிய பேரரசை குறிப்பிட்டுள்ளார்.

பண்டைய மதுரை நகரத்தின் பெருமையை புகழ் பாடும் 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்க பாடல்கள் சில கிழே தரப்பட்டுள்ளன
"வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகஎன
மாட மதுரையும் தருகுவன்;"
[புறநானுறு 32]
வண்ணக் கலவை பூசிய வளைந்த முன்கையும், மூங்கில் போன்ற தோளும், ஒளிபொருந்திய நெற்றியுமுடைய விறலியர் விற்கும் பூவிற்கு விலையாக மாடங்கள் நிறைந்த மதுரையையும் தருவான் என்கிறார்.

"தத்துநீர் வரைப்பின் கொற்கைக் கோமான்
தென் புலம் காவலர் மருமான் ஒன்னார்
மண் மாறு கொண்ட மாலை வெண் குடை
கண்ணார் கண்ணி கடுந்தேர்ச் செழியன்
தமிழ் நிலை பெற்ற தாங்குஅரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று
[சிறுபாணாற்றுப்படை:62-67]

அலைகடலை எல்லையாகக் கொண்ட கொற்கை நகருக்கு அரசனாகிய
பாண்டியன், தெற்கிலுள்ள பாண்டிய நாடு முழுமையும் பாதுகாப்பவன். பாண்டியர்கள் மரபில் வந்தவன். பகைவரை வென்று அவர் நாட்டைத் தனதாக்கி முத்துமாலை சூட்டப்பெற்ற வெண்கொற்றக் குடையும், கண்ணுக்கினிய வேப்பம்பூ மாலையும் அணிந்தவன். விரைந்து செல்லும் தேர்ப்படையினை உடையவன். அப்பாண்டிய மன்னனின், தமிழ்மொழி நிலைபெற்ற பெருமையினையும், மகிழ்ச்சியான தெருக்களையும் உடைய மதுரையில் நீ பெறுகின்ற பரிசிலும் குறைவானதாகவே இருக்கும், அதாஅன்றுஅது மட்டும் இல்லை என்கிறார்.

மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது
கரைபொருது இரங்கும் முந்நீர் போல,
கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது.
[மதுரைக் காஞ்சி/Mathuraikkanci ]


சங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார்
மூலம் அறிய முடிகிறது. பகல் நேரக் கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவு நேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்றியும் விளக்குகிறார். கடல் நீர் ஆவியாகி மேகமாவதால் கடல் வற்றிவிடுவதில்லை. ஆறுகள் பல கடலில் வந்து கலப்பதால் கடல் பொங்கி வழிவதுமில்லை. அது போல் மக்கள் திரளாக வந்து பொருட்களை வாங்குவதால் பொருட்கள் தீர்ந்து விடுவதும் இல்லை; பல இடத்திலிருந்தும் வணிகர்கள் விற்பனைக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் பொருட்கள் மிகுந்து விடுவதும் இல்லை என்கிறார்.

0 comments:

Post a Comment