📽→திரைப்படச் செய்திகள் 06-october-2019

 Cinema  Tamil news
நம்பினால் நம்புங்கள் -அஜித் 
🔻🔻🔻🔻🔻06/10/2019🔻🔻🔻🔻🔻


📽மீண்டும் ஜோடியான ப்ரியாபவானி சங்கர்!
எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்த ‘மான்ஸ்டர்’ படத்தில், அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்து இருந்தார்.
மான்ஸ்டர்’  படத்தின் வெற்றியை தொடர்ந்து ராதாமோகன் இயக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருக்கிறார்.
இது, ஒரு திகில் படம். படத்தை எஸ்.ஜே.சூர்யாவே தயாரிக்கிறார். கதாநாயகியை தேர்வு செய்யாமலே படப்பிடிப்பை தொடங்கினார்கள். இந்த நிலையில், கதாநாயகி யார் என்பது தெரியவந்துள்ளது. ‘மான்ஸ்டர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்த ப்ரியா பவானி சங்கரே ராதாமோகன் படத்திலும் ஜோடியாக நடிக்கிறார். இருவருக்கும் ஜோடி பொருத்தம் கச்சிதமாக இருப்பதாக படக்குழுவினர் கூறுகிறார்கள்!

📽மிரட்டலான வில்லன்!
சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய ‘களவாணி-2’ படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து இருந்தவர், துரை சுதாகர்.
அரசியல்வாதி வேடத்தில் நடித்த துரை சுதாகருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது.
‘‘எந்த வேடமாக இருந்தாலும் சரி, ரசிகர்கள் மனதில் நிற்கும் வேடமாக இருந்தால், நிச்சயம் நடிப்பேன்’’ என்று கூறும் துரை சுதாகர், அடுத்து வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்கும் ‘டேனி’ படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
எழில் இயக்கும் புதிய படத்திலும் இவர் நடித்து வருகிறார். தற்போது சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார், துரை சுதாகர்!

📽அசுரன் படக்குழுவினருக்கு தாணு தங்கக்காசு பரிசு
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அசுரன்’ படத்தின் குழுவினருக்கு தயாரிப்பாளர் தாணு தங்கக்காசு பரிசளித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘அசுரன்’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை தாணு தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து காலை சிறப்புக் காட்சிகளும் மற்றும் பல்வேறு ஊர்களில் திரையரங்குகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதனால், தயாரிப்பாளர் தாணு பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். இதனை தொடர்ந்து படத்தின் உதவி இயக்குநர்களுக்கும், உதவி ஒளிப்பதிவாளர்களுக்கும் பரிசுகள் வழங்கியுள்ளார். உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு தங்க காசுகள் வழங்கியுள்ளார். மேலும், உதவி இயக்குநர்கள் ஒவ்வொருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். இதனால் ‘அசுரன்’ படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

📽மீண்டும் இணைந்த மான்ஸ்டர் ஜோடி
ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்த ‘மான்ஸ்டர்’ படத்தில், அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து இருந்தார். ‘மான்ஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ராதாமோகன் இயக்கும் புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருக்கிறார். இது, ஒரு திகில் படம். இப்படத்தை எஸ்.ஜே.சூர்யாவே தயாரிக்கிறார்.
கதாநாயகியை தேர்வு செய்யாமலே படப்பிடிப்பை தொடங்கினார்கள். இந்த நிலையில், கதாநாயகி யார் என்பது தெரியவந்துள்ளது. ‘மான்ஸ்டர்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்த பிரியா பவானி சங்கரே ராதாமோகன் படத்திலும் ஜோடியாக நடிக்கிறார். இருவருக்கும் ஜோடி பொருத்தம் கச்சிதமாக இருப்பதாக படக்குழுவினர் கூறுகிறார்கள்.

📽தன் மகனை நாயகனாக களமிறக்கும் தங்கர் பச்சான்  
பல வெற்றி படங்களை இயக்கிய தங்கர் பச்சான், தற்போது தன் மகனை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
கிராமத்துப் பின்னணியையும் கிராமத்து வாழ்க்கையின் யதார்த்தையும் தனது திரைக்கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் தங்கர் பச்சான், சென்னை நகரத்தை மையமாகக் கொண்டு நகைச்சுவைப் படத்தை இயக்குகிறார். அப்படத்திற்கு 'டக்கு முக்கு டிக்கு தாளம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
பல முன்னணி கதாநாயகர்களை மாறுபட்ட பாத்திரத்தில் காண்பித்த தங்கர் பச்சான் இப்படத்தின் மூலம் தனது மகன் விஜித் பச்சானைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். முதல் படத்திலேயே தன் மகனை நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சென்னை நகரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படமென்பதால் சென்னை சுற்றிலுமுள்ள பல்வேறு பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. 70 நாட்கள் ஆன நிலையில் இன்றுடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது.
இப்படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் கூறியிருக்கிறார்கள். விஜித் பச்சான் நாயகனாக நடிக்க, மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகிராம் மூவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். இப்படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.🔻🔻🔻🔻🔻05/10/2019🔻🔻🔻🔻🔻


📽விஜய் படத்தில், சாந்தனு!
விஜய் நடிக்கும் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் அல்லவா? இந்த படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க சம்மதித்து இருக்கிறார். இன்னொரு முக்கிய வேடத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார். பாக்யராஜ் மகன் சாந்தனு, கல்லூரி மாணவராக வருகிறார்.

📽 தங்கர்பச்சானின் ‘டக்கு முக்கு சிக்கு தாளம்’
தங்கர்பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு, ‘டக்கு முக்கு சிக்கு தாளம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
இதில் கதாநாயகிகளாக அஸ்வினி, மிருணாளினி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்!

📽 நடிகர் சண்டை காட்சியில் நடித்தபோது காயம்
அருண் விஜய் இப்போது, ஜி.என்.ஆர்.குமரவேலன் டைரக்டு செய்யும் பெயர் சூட்டப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது, அவர் கையில் கண்ணாடி குத்தி காயம் அடைந்தார்.
இது, அருண் விஜய் நடிக்கும் 30-வது படம். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பொதுவாக, சண்டை காட்சிகளில் நடிக்கும்போது கதாநாயகன் காயம் அடைந்தால், அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கோடம்பாக்கத்தில் ஒரு நம்பிக்கை. அதன்படி, இந்த படமும் வெற்றி பெறும் என்கிறார்கள், படக்குழுவினர்!

📽 தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் இணையும் பிரபல இசையமைப்பாளர்
தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அசுரன்' தற்போது வெளியாகி உள்ளது. இதில் தனுஷ், மஞ்சு வாரியர், இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
'அசுரன்' படத்தை தொடர்ந்து, தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி படத்தை தயாரிக்க உள்ளார் தாணு. இந்த படத்துக்கான கதையை இறுதி செய்து, லண்டனில் பாடல் பதிவுகளை தொடங்கியுள்ளார் மாரி செல்வராஜ். இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்புக்காக தனுஷ் லண்டனில் இருப்பதால், அங்கு அவருடன் இணைந்து இந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து தாணு தயாரிப்பில் அடுத்ததாக செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணைகிறது. இதற்கு யுவன்தான் இசையமைப்பாளர் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால், தற்போது இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்து வருவதாக தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
இந்த படத்துக்கான பாடல்கள் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிட்டு, தனுஷ் சென்னை திரும்பியவுடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். இதனால், செல்வராகவன் படத்துக்கு தேதிகள் எப்போது ஒதுக்கவுள்ளார் என்பது விரைவில் தெரியவரும். 'அசுரன்' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அடுத்ததாக 'பட்டாஸ்' திரைக்கு வரவுள்ளது.

📽 முதல் பார்வை: 100% காதல்
ஈகோவால் காதலர்களுக்கு இடையே நிகழும் பிரச்சினைகள்தான் ‘100% காதல்’.
ஒழுங்காகப் படிப்பு வராததால் ஃபெயிலாகி விடுவேன் என ஷாலினி பாண்டே அழ, அவருக்கு சொல்லிக் கொடுக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அதைவைத்து ஜி.வி.பிரகாஷையும் தாண்டி முதல் மதிப்பெண் எடுத்து விடுகிறார் ஷாலினி பாண்டே. ஜி.வி.பிரகாஷுக்குள் ஈகோ தலைதூக்குகிறது. காதல் வெற்றி பெற்றதா? என்பதுதான் மீதிப்படம்.
ஏகப்பட்ட படங்களில் நடித்த முதிர்ச்சியான நடிகர்களான நாசர், ஜெயசித்ரா, தலைவாசல் விஜய், ரேகா ஆகியோர் கூட ஏனோதானோவென்று நடித்துள்ளனர். நடிகர்களிடம் டயலாக் பேப்பரை மட்டும் கொடுத்துவிட்டு, ‘உங்கள் இஷ்டத்துக்கு நடியுங்கள்’ என இயக்குநர் சொல்லிவிட்டார் போலும்.
பல விஷயங்கள் சரியாக இல்லாததால் ‘100% காதல்’ படத்தில் 1% கூட காதலை உணர முடியவில்லை என்பதுதான் உண்மை.


📽 வசூல் குவிக்கும் புதிய படங்கள்
சைரா நரசிம்ம ரெட்டி , நம்ம வீட்டு பிள்ளை, ஜோக்கர் - இந்தி படங்களுக்கு மட்டுமே இதுவரை உலகளாவிய மார்க்கெட் இருந்தது. சமீப காலமாக தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் வெளி மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் நல்ல வசூல் பார்க்கின்றன. அதுபோல் அவெஞ்சர்ஸ், ஸ்பைடர்மேன் உள்ளிட்ட ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் வசூல் வேட்டை நடத்தி உள்ளன.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து ஆயுதபூஜை விடுமுறை நாட்கள் வருவதால் இந்த படம் ரூ.65 கோடி வரை வசூல் குவிக்கும் என்கின்றனர். சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்போடு தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் சைரா நரசிம்ம ரெட்டி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
ரூ.200 கோடி செலவில் எடுத்த இந்த படத்துக்கு செலவிட்ட தொகை கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுப்பினர். ஆனால் இந்த படம் உலகம் முழுவதும் 2 நாட்களில் ரூ.82 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.45 கோடி வசூலித்துள்ளது.
ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராப், வாணிகபூர் நடித்து தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியான வார் படம் முதல் நாளிலேயே ரூ.53.35 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. ஹாலிவுட் ஜோக்கர் படத்துக்கு இந்தியா முழுவதும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஜோக்கர் திரைக்கு வந்த முதல் நாளிலேயே ரூ.7.5 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் ரூ.50 கோடி வரை வசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

📽 சரித்திர கதையில், மோகன்லால்
மோகன்லால் வித்தியாசமான கதைகள், கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சூர்யாவின் காப்பான் படத்தில் பிரதமர் வேடத்தில் வந்தார். மலையாளத்தில் அரபிக் கடலிண்டே சிம்ஹம் என்ற சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் நான்காவது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்தே அரபிக் கடலிண்டே சிம்ஹம் படம் தயாராகிறது.
இதில் மோகன்லால் கடற்படை தலைவராக நடிக்கிறார். இதுவரை அவர் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் இது மாறுபட்டு இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கிறார்கள். பிரியதர்ஷன் டைரக்டு செய்கிறார்.
ரூ.100 கோடி செலவில் இந்த படம் தயாராகிறது. மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான லூசிபர் படம் பெரிய வெற்றி பெற்றது. அரபிக்கலிண்டே சிம்ஹம் படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தமிழிலும் இதை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
இந்த படத்தில் நடிக்கும் தனது தோற்றத்தை மோகன்லால் டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அத்துடன் படம் 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி திரைக்கு வரும் என்றும் அறிவித்து உள்ளார்.

📽 தீபாவளிக்கு மோதும் தளபதி 64 படக்குழுவினர்
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
அதுபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கைதி’. இதில் கார்த்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘சங்கத் தமிழன்’ திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் தளபதி 64 படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், வில்லன் விஜய் சேதுபதி, இவர்கள் மூன்று பேரும் தற்போது இணைந்து பணியாற்றி வரும் நிலையில், தீபாவளிக்கு மோதுவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

📽 அந்த படத்தில் நான் ஹீரோ இல்லை - யோகி பாபு அதிரடி
"தர்மபிரபு, கூர்கா என இரண்டு படங்களில் தான் கதையின் நாயகனாக நான் நடித்துள்ளேன். அதன்பின் தொடர்ந்து காமெடியனாகத் தான் பல படங்களில் நடித்து வருகிறேன். ‘பட்லர் பாலு’ என்ற படத்தில் காமெடியனாக எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள் மட்டும் தான் நடித்திருந்தேன்.
ஆனால் தற்போது நான் தான் அப்படத்தின் ஹீரோ என்பது போல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் துளியும் உண்மை இல்லை. மேலும் எனக்கு நகைச்சுவை சம்பந்தப்பட்ட வசனங்கள் யாரும் எழுதித்தருவதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. இயக்குநர்கள் தரும் வசனங்களை என் ஸ்டைலுக்கு ஏற்றவாறு சிறிதாக மாற்றிக்கொள்கிறேன். அந்த வேலையை நானே செய்துகொள்கிறேன். நகைச்சுவை பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது தான் என் ஆசை’ என்றார்.

📽 அஜித்தின் புதிய தோற்றம்
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. யுவன் இசையமைத்த இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார். போனி கபூர் தயாரித்திருந்தார்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தைத் தொடர்ந்து, மீண்டும் அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி இணையவுள்ளது. இதையும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து போனி கபூரே தயாரிக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார் அஜித். ஏற்கனவே சில படங்களில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்திருப்பதால், இந்தப் படத்தில் அஜித்தின் லுக் எப்படியிருக்கும் என்று எதிர்பார்ப்பு உண்டானது. ஆனால், தனது கெட்டப்பிற்காக உடம்பைக் குறைத்து ஸ்லிம்மாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், விமான நிலையத்துக்கு அஜித் வந்த போது ரசிகர்கள் அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் மீசையைக் குறைத்து, முடியைக் குறைத்து கலரிங் செய்து புதிய கெட்டப்பில் இருக்கிறார் அஜித். சமீபத்திய படங்களில் இது போன்று அஜித், எந்தவொரு படத்திலுமே நடித்ததில்லை. இதனால், இந்த லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அஜித்துடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

                                               🔻🔻🔻🔻🔻04/10/2019🔻🔻🔻🔻🔻
📽 ஆக்சன் திரில்லர் கதை ரெடி..  புது ரூட்டை பிடிக்கும் அஜித்?
நடிகர் அஜித் பெரும்பாலும் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளது. நடிகர் அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் எச். வினோத்தான் இயக்குகிறார். எச். வினோத் இயக்கும் இந்த படத்தில் அஜித் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார். இந்த நிலையில் அஜித் தனது அடுத்த படத்திற்காக வேகமாக தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் அஜித் நான்கு இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் என்று நேற்று தகவல்கள் வந்தது. புஷ்கர் காயத்திரி, மாயா இயக்குனர் அஷ்வின், மகிழ் திருமேனி மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோரிடம் கதை கேட்டு இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. இதில் அஜித்திற்கு தற்போது கார்த்திக் நரேன் கதை பிடித்துவிட்டதாக செய்திகள் வருகிறது. ஆக்சன் திரில்லர் கதை இது என்று கூறுகிறார்கள். கிரைம் ஜானர் படமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தில் சென்டிமென்ட் தூக்கலாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள். இதற்கான திரைக் கதையை முழுமையாக எழுதும் பணியில் தற்போது கார்த்திக் நரேன் ஈடுபட்டு வருகிறார். கார்த்திக் நரேன் எடுத்துள்ள மாபியா படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வருகிறது. இவர் இயக்கிய நரகாசுரன் பட தயாரிப்பு பிரச்சனை காரணமாக பாதியில் நின்றது. கவுதம் மேனன் மற்றும் கார்த்திக் நரேன் இடையே இதனால் சண்டை கூட வந்தது. கடைசியில் இந்த படம் முழுமையாக எடுக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. இந்த நிலையில்தான் இவர் அஜித்துடன் இணைய உள்ளதாக தகவல்கள் வருகிறது.

📽 அசுரன் கொடுத்த கிரீடம் - இளைய சூப்பர் ஸ்டார் ஆனார் தனுஷ்
பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை என தமிழ் சினிமாவின்  மிகச்சிறந்த படங்களை இயக்கிய வெற்றிமாறன் தற்போது தனுஷை வைத்து வித்யாசமான படத்தை இயக்கி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஏங்க வைத்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள லேடி சூப்பர் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இரண்டு சிறந்த நடிப்பு ஜாம்பவான்களால் உருவாகியுள்ள அசுரன் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்று திரைக்கு வந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
அண்மையில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக், ட்ரைலர் , டீசர் , சிங்கிள் டிராக் என அனைத்தும் ரசிகர்களிடையே அமோக வரவேப்பை பெற்று படம் வெளியாவதற்கு முன்னதாகவே வெற்றியை நிலை நிறுத்தியது. தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணி இணைந்தால் தோல்வியே கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டது அசுரன். அசுரன் படத்தில் சிவ சாமியாக நடித்துள்ள தனுஷ் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால்அசுரன் படத்தில் தனுஷிற்கு இளைய சூப்பர் ஸ்டார் என்று பட்டம்  வழங்கப்பட்டுள்ளதை புகைப்படத்துடன் வெளியிட்டு  "கடின உழைப்பு ஒருபோதும் தவறுவதில்லை" என்று கூறி தனுஷ் ரசிகர்கள் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

📽 கவின் வந்த உடனேயே லொஸ்லியா அப்பாவை அனுப்பி வைத்த பிக்பாஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் மூன்று நாட்களில் முடிவடைய உள்ளது. தற்போது பழைய போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். சாண்டி , லொஸ்லியா , ஷெரின், சாண்டி உள்ளிட்ட 4 பேர் தான் ஃபைனலுக்கு செல்லவிருக்கின்றனர்.
இதில் அதிக ஓட்டுக்கள் வாங்கி முகின் முதலிடத்தில் இருக்கிறார். அதையடுத்து லொஸ்லியா , சாண்டி , ஷெரின் உள்ளிட்டோர் இருக்கின்றனர், இதில் ஷெரின் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடைசி நேரத்தில் யாருக்கு என்ன நடக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாது. ஷெரின் டைட்டில் வின்னர் என அறிவித்து விட்டு எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் என கமல் கூறிவிடுவாரோ என்ற குழப்பத்தில் மக்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் லொஸ்லியா தனது தந்தையிடம் வீடியோ காலில் பேசுகிறார்.  உடனே தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் என்ற பாடல் ஒலிக்கிறது. லொஸ்லியா வெற்றி பெறவேண்டும் என்பதில் லொஸ்லியா ஆர்மிஸ் முனைப்புடன் இருந்து வருகின்றனர்.

📽17 விருதுகளை வென்ற படம்!
இலங்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ‘ஒற்றை பனைமரம்’ என்ற படம் தயாராகி இருக்கிறது. 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி, 17 விருதுகளை வென்ற படம், இது. இதில், முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள்.
புதியவன் ராசையா இயக்கியிருக்கிறார். எஸ்.தணிகைவேல் தயாரித்துள்ளார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

📽சமையல்காரராக மாறிய யோகி பாபு!
தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களை தொடர்ந்து யோகி பாபு, ‘பட்லர் பாலு’ என்ற படத்தில் கதைநாயகனாக நடிக்கிறார். இதில், அவருக்கு கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையல்காரர் வேடம்.
சமையல் வேலைக்கு சென்ற ஒரு மண்டபத்தில், மணப்பெண்ணை யாரோ கடத்தி விடுகிறார்கள். அவரை யோகி பாபு எப்படி மீட்கிறார்? என்பது கதை. சுதிர் எம்.எல். டைரக்டு செய்ய, கிருத்திகா தயாரித்து இருக்கிறார்!

📽வெப் சீரியசில் சமந்தா
திரைப்படங்களைக் காட்டிலும், அதிரடியான, திரில்லரான, சஸ்பென்ஸ் நிறைந்த வெப் சீரியஸ்களில் நடிக்கவே பல நடிகர்களும், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பாலிவுட்டில் ஏற்கனவே பல வெப் சீரியஸ்கள் வெளிவந்திருக்கும் நிலையில், இந்த வெப் சீரியஸ் காய்ச்சல் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளிடையேயும் வேகமாக பரவி வருகிறது.
சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியான வெப் சீரியசான ‘தி பேமிலி மேன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான ‘அஞ்சான்’ படத்தில் வில்லனாக நடித்த மனோஜ் பாஜ்பயே, பிரியாமணி, ஷரீப் காஷ்மி, நீரஜ் மாதவ், பவன் சோப்ரா, கிஷோர் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த வெப் சீரியசில் இரண்டாம் பாகத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல் பாகத்தை தயாரித்த அமேசான் பிரேம் ஒரிஜினல் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது.
முதல் பாகத்தை இயக்கிய ராஜ் நிதிமோரு மற்றும் கிருஷ்ணா ஆகியோரே, இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்களாம். பல படங்களை கையில் வைத்திருக்கும் சமந்தா, இந்த வெப் சீரியஸ் தன்னை இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கும் என்று கூறி வருகிறாராம்.

📽ராமும், மைக்கேலும் சேர்ந்துட்டாங்க - வர்ஷா பொல்லம்மா
96 படத்தில் நடித்த ராமும், பிகில் படத்தில் நடித்த மைக்கேலும் ஒன்று சேர்ந்துட்டாங்க என்று நடிகை வர்ஷா பொல்லம்மா கூறியிருக்கிறார்.
 ‘மாநகரம்’ படம் மூலம் மிகவும் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் கார்த்தியை வைத்து இயக்கிய ‘கைதி’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இவர் விஜய்யை வைத்து ‘தளபதி 64’ திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
இதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.
தளபதி 64 படத்தின் பூஜை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைப் பார்த்த நடிகை வர்ஷா பொல்லம்மா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ராம் சார் மற்றும் மைக்கேல் சார். ரெண்டு Favourites-ம் சேந்திருக்காங்க..’ என கூறி ‘தளபதி 64’ படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த ‘96’ திரைப்படத்தில் ராமுவிடம் போட்டோகிராபி பயிலும் மாணவியாக வர்ஷா நடித்திருந்தார். அதேபோல், விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தில், மைக்கேலாக நடித்துள்ள விஜய்யிடம் புட்பால் பயிற்சி எடுக்கும் மாணவியாக நடித்திருக்கிறார்.

📽முன்னணி நடிகரை இயக்கும் குட்டிப்புலி சரவண சக்தி
தண்டாயுதபாணி, நாயகன் படத்தை இயக்கியவரும் குட்டிப்புலி படத்தில் நடித்தவருமான சரவண சக்தி, முன்னணி நடிகரை வைத்து இயக்க தயாராகி வருகிறார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகராக ஜொலித்தவர்கள் மணிவண்ணன், மனோபாலா, சிங்கம்புலி என நிறையபேர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது இயக்குனர் மற்றும் நடிகர் குட்டிப்புலி புகழ் சரவண சக்தியும் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தண்டாயுதபாணி படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் சரவண சக்தி. அதன் பின்பு ரித்தீஷ் உடன் இணைந்து இவர் இயக்கிய 'நாயகன்' படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது.
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சசிகுமாரின் நடிப்பில் வெளிவந்த குட்டிபுலி படத்தில் இயக்குனர் முத்தையா இவரை நடிகனாக அறிமுகம் செய்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர, அதைத் தொடர்ந்து மருது, சண்டக்கோழி 2, கொடிவீரன், தர்மதுரை போன்ற படங்களில் நடித்தார். தற்போது மாமனிதன், ரண சிங்கம், அடுத்த சாட்டை, வால்ட்டர் என 25 படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார்.

📽'அக்னிச் சிறகுகள்' அப்டேட்: முக்கிய கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன்
'அக்னிச் சிறகுகள்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க அக்‌ஷரா ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடித்து வரும் படம் 'அக்னிச் சிறகுகள்'. அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை 'மூடர் கூடம்' நவீன் இயக்கி வருகிறார். ஷாலினி பாண்டே, ரைமா சென், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.
இந்தப் படத்தில் இந்தியாவில் எடுக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்தது படக்குழு. அதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகளுக்கான முன் தயாரிப்பு பணிகளைத் தொடங்கியது. இதற்கு இடையே விஜய் ஆண்டனி, அருண் விஜய் இருவருமே தங்களது மற்ற படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள்.
தற்போது மாஸ்கோவில் 50 நாட்கள் படப்பிடிப்புக்காக 'அக்னிச் சிறகுகள்' படக்குழு கிளம்பியுள்ளது. இதில் படத்தின் பிரதான காட்சிகளுடன், பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றையும் படமாக்கவுள்ளனர். மேலும், இந்தப் படத்துக்காக தற்போது அக்‌ஷரா ஹாசனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரும் மாஸ்கோ படப்பிடிப்புக்காகப் படக்குழுவினருடன் சென்றுள்ளார்.
தமிழில் அஜித்துடன் 'விவேகம்' மற்றும் விக்ரமுடன் 'கடாரம் கொண்டான்' ஆகிய படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் தான் அக்‌ஷரா ஹாசன் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

🔻🔻🔻🔻🔻03/10/2019🔻🔻🔻🔻🔻


📽 எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் தேதியை அறிவித்த கெளதம் மேனன்
சென்னையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரிலீஸ் குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கெளதம் மேனன், நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் நவம்பர் 15ம் தேதி கட்டாயம் வெளியாகும். நானும் அதற்காகத்தான் காத்திருக்கிறேன் என கூறினார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.📽 11 வேடத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான யோகிபாபு 11  வேடங்களில் நடிக்கிறார்.
மனோன்  சினி கம்பைன்ஸ் சார்பில் ஆரூரான் தயாரிக்கும் திரைப்படத்தில் யோகி பாபு வுடன் தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமாம் அண்ணாச்சி என முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் ராம் சுந்தர், பிரியங்கா ஆகியோர் நாயகன், நாயகியாக அறிமுகமாகிறார்கள். தமிழ் திரையுலகின் மூத்த கதாசிரியர் விசி குகநாதன் கதை எழுத, திரைக்கதை அமைத்து வசனம் அமைத்து இயக்கியிருக்கிறார் புகழ்மணி. இந்தப் படத்திற்கு கணேசன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
📽 கே.ஜி.எப் ஹீரோவுக்கு வில்லனாக ஷாம்
கே.ஜி.எப் படம் மூலம் பிரபலமான யஷ் நடிப்பில் உருவாகியுள்ள சூர்யவம்சி படத்தில் ஷாம் வில்லனாக நடித்துள்ளார்.
கே.ஜி.எப் படம் மூலம் தென் இந்திய ரசிகர்களை கவர்ந்த யஷ் நடித்த சூர்யவம்சி படம் தமிழில் வெளியாக உள்ளது. மகேஷ்ராவ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக யஷ் நடிக்க, கதாநாயகியாக ராதிகா பண்டிட் மற்றும் வித்தியாசமான வில்லன் வேடத்தில் நடிகர் ஷாம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தேவராஜ், சுமித்ரா, சீதா, அவினாஷ், ரவிஷங்கர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். சூர்யவம்சி படம் வரும் நவம்பர் மாதம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. துணிச்சலான இளைஞன் யஷ், தன் மனதை கவர்ந்த ராதிகாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ராதிகா யஷ்சை விரும்பினாலும் அதை வெளியே சொல்ல தயக்கம் காட்டுகிறார்.
ராதிகாவின் பெற்றோர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பு தங்கள் உறவுக்கார பையன் ஷாமை திருமணம் செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கி இருப்பது யஷ்சிற்கு தெரிய வருகிறது. ஷாம் ஒரு மிகப்பெரிய டான். அதேசமயம் ராதிகாவுக்காக தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பவர். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை காதல், காமெடி, ஆக்ஷன் என கமர்ஷியல் பார்முலா கலந்து படமாக்கி இருக்கிறார்கள்.

📽 விஜய் படம்: கதாநாயகியாக நடிக்கும் மாளவிகா!
பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியானது.
தளபதி 64 என்று தற்போதைக்குக் குறிப்பிடப்படும் இந்தப் படத்துக்கு இசை - அனிருத். இந்தப் படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் 64-வது படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. விஜய் - விஜய் சேதுபதி என இரு பெரும் நடிகர்கள் நடிக்கும் படம் என்பதால் தளபதி 64 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. அங்கமாலி டைரீஸ் படத்தில் நடித்த இவருக்கு அதிகக் கவனம் கிடைத்தது. ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது.
இந்நிலையில் இன்று வெளியான அறிவிப்பில் மலையாள நடிகை மாளவிகா, நடிகர் சாந்தனு ஆகியோரும் இப்படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
📽 மீண்டும் நடிக்க வரும் தனுஸ்ரீதத்தா
கடந்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தவுடன் திரையுலகில் பாலியல் குற்றசாட்டை கூறி பரபரப்பை ஏற்படுத்திய தனுஸ்ரீ தத்தா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடுகிறார். கடந்த ஆண்டு நான் இந்தியா வந்தவுடன் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் அப்போது படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லாததால் ஒப்புக் கொள்ளவில்லை. தற்போது எனக்கு பிடித்தமான கதைகளில் நடிக்க விரும்புவதால் சிலர் வாய்ப்பளிக்க முன் வந்துள்ளனர். இதனால் என் வாழ்க்கையை புதுப்பித்துக் கொள்ளும் எண்ணம் ஏதுமில்லை. எல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கையும் எனக்கில்லை'' என்கிறார் தனுஸ்ரீதத்தா.

📽 ரெடி டேக் ஆக்ஷனுக்கு மீண்டும் தயாராகும் குட்டி புலி சரவண சக்தி
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் இயக்குநர் சரவண சக்தி, விரைவில் தனது அடுத்த படத்தை இயக்கும் வேலையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக ஒரு முன்னணி கதாநாயகருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி பின்பு நடிகராக ஜொலித்தவர்கள் மணிவண்ணன், மனோபாலா, சிங்கம்புலி என குறிப்பிட்ட சில பேர் உள்ளனர். அந்த வரிசையில் இப்போது இயக்குநர் மற்றும் நடிகர் குட்டிப்புலி புகழ் சரவண சக்தியும் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தண்டாயுதபாணி படத்தின் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் சரவண சக்தி. அந்த படம் இவருக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றத் தந்தது. அது மட்டுமில்லாமல் நல்ல இயக்குனர் என்ற பெயரையும் பெற்றுத் தந்தது. அதன் பின்பு மறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் உடன் இணைந்து இவர் இயக்கிய நாயகன் படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக் குவித்தது.
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சசிகுமாரின் நடிப்பில் வெளிவந்த குட்டிபுலி படத்தில் இயக்குனர் முத்தையா இவரை நடிகனாக அறிமுகம் செய்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து மருது, சண்டக்கோழி 2, கொடிவீரன், தர்மதுரை போன்ற படங்களில் நடித்து அசத்தியவர், தற்போது மாமனிதன், ரண சிங்கம், அடுத்த சாட்டை, வால்ட்டர் என 25 படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். எனினும் தனக்குள் உறங்கிக்கிடந்த இயக்குநர் என்ற படைப்பாளன், திடீரென முழித்துக்கொண்டு இவரை விடாது கருப்பாக துரத்தவே R.K.சுரேஷ் நடிப்பில் பில்லா பாண்டி படத்தை இயக்கினார் இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில் தற்போது முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் இவர், விரைவில் தனது அடுத்த படத்தை இயக்கும் வேலையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக ஒரு முன்னணி கதாநாயகருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இயக்குநராகி நடிப்பில் அசத்தியவர் மீண்டும் இயக்கத்தில் தடம் பதிக்க இருக்கிறார்.

📽 தளபதி 64’ படத்தின் பூஜை தேதி அறிவிப்பு!
தளபதி விஜய் நடிக்க உள்ள 64வது திரைப்படமான ’தளபதி 64’ இன்று  இந்த படத்தின் பூஜை நடை இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

🔻🔻🔻🔻🔻02/10/2019🔻🔻🔻🔻🔻
📽இந்தியன்-2வில் கமலுக்கு வில்லனாகும் பாலிவுட் பிரபலம்.
இந்தியன் படம் திரைக்கு வந்து 23 வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் படமாகி வருகிறது. காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார். சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், விவேக், சமுத்திரக்கனி, வித்யுத் ஜமால் ஆகியோரும் உள்ளனர். இந்த படம் ரூ.200 கோடி செலவில் தயாராகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நடந்தது.
சித்தார்த், ரகுல் பிரீத் சிங் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர் தியாகராய நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வயதான சேனாதிபதி தோற்றத்தில் நடிக்கும் கமல்ஹாசன் வருவதுபோன்ற காட்சியை எடுத்தனர். வளசரவாக்கத்தில் வில்லன்களை வயதான கமல்ஹாசன் வர்ம கலையால் தாக்கி சண்டை போடும் காட்சியும் படமாக்கப்பட்டது. இப்போது ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்குள்ள ஜெயிலில் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்துகிறார்கள்.
இப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர்கள் அக்‌ஷய்குமார், அஜய்தேவ்கான் ஆகியோரிடம் பேசி வந்தனர். தற்போது அனில்கபூர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அனில் கபூர் ஏற்கனவே முதல்வன் படத்தின் இந்தி ரீமேக்கான நாயக் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியன்-2 படப்பிடிப்பு அரங்கில் அனில்கபூர் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

📽வெப் தொடரில் பிக்பாஸ் அபிராமி
மாடல், நிகழ்ச்சி தொகுப்பாளர், குணச்சித்திர நடிகை என பன்முக கலைஞராக வலம் வந்துகொண்டிருப்பவர், அபிராமி. இவர் சமீபத்தில் வெளியான `நேர்கொண்ட பார்வை' படத்தில் பமீதா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார்.
போட்டியிலிருந்து வெளியேறிய அபிராமி, இயக்குநர் கௌதம் மேனன் எடுத்துக்கொண்டிருக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்தது. இந்நிலையில் சோனி லிவ் செயலியில் வெளியாகியுள்ள ’இரு துருவம்’ என்ற இணைய தொடரில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கிரைம் திரில்லராக இந்த தொடர் உருவாகி உள்ளது.

📽விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் முதல் தொடக்கம்!
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் அஜய் ஞானமுத்து.
விக்ரம் - அஜய் ஞானமுத்து கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் வெள்ளி முதல் தொடங்கவுள்ளது.
விஜய் நடிக்கும் பிகில், சிவகார்த்திகேயன் படம் ஆகிய இரு தமிழ்ப் படங்களுக்குத் தற்போது இசையமைத்து வரும் ஏ.ஆர். ரஹ்மான், விக்ரம் - அஜய் ஞானமுத்து நடிக்கும் படத்துக்கும் இசையமைக்கிறார். இதுதவிர மணி ரத்னம் இயக்கவுள்ள பொன்னியின் செல்வன், கமல் நடித்து இயக்கும் தலைவன் இருக்கின்றான் ஆகிய படங்களும் அவர் இசையமைக்கவுள்ளார்.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் இந்தப் படம் அடுத்த வருட ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

📽'ஹீரோ’ தலைப்பால் மீண்டும் சர்ச்சை: கே.ஜே.ஆர் நிறுவனத்துக்கு நோட்டீஸ்
சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ஹீரோ' படத்தின் தலைப்பால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கே.ஜே.ஆர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஹீரோ'. கே.ஜே.ஆர் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. டிசம்பர் 20-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் பூஜை போடப்பட்ட அன்றே, தலைப்புக்கான சர்ச்சை வெடித்தது. ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தத் தலைப்புக்கு, தயாரிப்பாளர் சங்கம் தங்களுக்கே உரிமை கொடுத்திருப்பதாக அறிவித்தது. ஆனால், கே.ஜே.ஆர் நிறுவனமோ தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடிதத்தையும் வெளியிட்டது. இதனால் தலைப்பு யாருக்கு என்பதில் சர்ச்சை நீடித்தது.
ஆனால், சிவகார்த்திகேயன் படம் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இதனால் தலைப்பு பிரச்சினை பேசி முடிக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. இந்நிலையில், ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் கே.ஜே.ஆர் நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "'ஹீரோ' என்ற எங்களது தலைப்பில் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பான செய்திகள் பத்திரிகை, தொலைக்காட்சி, மற்றும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.
இந்தச் சூழலில் சில மாதங்களாகத் தமிழ் மொழியில் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் 'ஹீரோ' என்ற தலைப்பில் வேறொரு கதாநாயகனை வைத்து படம் தயாரிப்பதாகச் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.
இதனைக் கண்டு தயாரிப்பாளர் சங்கத்தை நாங்கள் அணுகிய போது, அவர்கள் கடந்த 16 ஏப்ரல் 2019 அன்று எங்களது தலைப்பினைப் பயன்படுத்திவரும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு இப்படத்தின் தலைப்பினை பயன்படுத்தக் கூடாது என்று கெளரவச் செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்பி வைத்து, கடிதத்தின் நகலையும் எங்களுக்குக் கொடுத்து உறுதி அளித்தார்கள்.
ஆனால் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம், தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை மீறி (02.09.2019) அன்று பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மற்றும் அனைத்து ஊடகங்களிலும் 'ஹீரோ' என்ற தலைப்பில் போஸ்டர்களை வெளியிட்டனர். ஆகவே இந்தக் கடிதத்தின் வாயிலாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

இந்தத் தலைப்புப் பிரச்சினையில், தயாரிப்பாளர் சங்கமும் சம்பந்தப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கெளவரச் செயலாளராக இருந்த எஸ்.எஸ்.துரைராஜ், "இது முழுக்க எழுத்தர் செய்த தவறினால் நடந்துள்ளது. தலைப்பு ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கே சொந்தம்" எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தையும் ட்ரைபல் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

📽‘தளபதி 64’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!
தளபதி விஜய் நடித்த ’பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனை அடுத்து தளபதி விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்து நேற்று முதல் மூன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது
நேற்றைய முதல் அறிவிப்பாக இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று இரண்டாவது அறிவிப்பாக இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் என்பவர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அந்தோணி வர்கீஸ் இணைந்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளிவரும் என்பதும் இந்த அறிவிப்பில் இயக்குநர் கே பாக்யராஜ் மகன் சாந்தனு என்ற இணைய உள்ளார் என்ற அறிவிப்புதான் என்றும் கூறப்படுகிறது

📽’விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு எப்போது? அஜய்ஞானமுத்து தகவல்
நடிகர் விக்ரம் நடித்த ’கடாரம் கொண்டான்’ திரைப்படம் மட்டுமே இந்த ஆண்டு வெளியாகி உள்ள நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’துருவ நட்சத்திரம்’ மற்றும் விமல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மகாவீர் கர்ணன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் நிலை என்ன என்பது குறித்த செய்திகள் கடந்த சில மாதங்களாக வெளிவரவில்லை
இந்த நிலையில் ’டிமான்டி காலனி’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு இல்லாததால் விக்ரம் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்
இந்த நிலையில் சற்று முன்னர் அஜய்ஞானமுத்து, விக்ரமின் 58வது படமான விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு வரும் நான்காம் தேதி முதல் தொடங்கும் என்றும், அதனை அடுத்து விரைவில் இந்த படத்தின் அப்டேட்கள் கிடைக்கும் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்காக கூறியுள்ளார். இதனை அடுத்து விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்
இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவெளியின்றி தொடர்ந்து நடைபெறும் என்றும் ஒன்றரை மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்
ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் நடிக்கும் நாயகி தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கவுள்ளனர்.

🔻🔻🔻🔻🔻01/10/2019🔻🔻🔻🔻🔻


📽திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திட்டம் போட்டு திருடுற கூட்டம் படக்குழு 2 மூவி ஃபப்ஸ் சார்பில் ரகுநாதன் மற்றும் அக்ராஸ் பிலிம்ஸ் சார்பில் பிரபு வெங்கடாசலம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்‘. 
அறிமுக இயக்குனர் சுதர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்திரமௌலி சுப்ரமணியன், சாம்ஸ், டேனியல் அனி போப், பிரின்ஸ் நித்திக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஷ்வத் இசை அமைத்திருக்கிறார்.

📽 தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் அசுரன்
`வடசென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் `அசுரன்'. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் பசுபதி, கருணாஸ் மகன் கென், பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ராமர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜாக்கி கலை பணிகளை மேற்கொள்கிறார்.

📽 திருமணத்துக்கு பிறகும் நயன்தாரா நடிக்க முடிவு
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவுகிறது. இது உள்ளூர் திருமணமாக இல்லாமல் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார்.
நயன்தாரா தயாரிக்கும் படமொன்றை அவர் தயாரிக்கிறார். இதில் பார்வையாற்ற மாற்று திறனாளியாக நடிக்கிறார் நயன்தாரா. ஏற்கனவே விஜய்யுடன் நடித்துள்ள பிகில், சிரஞ்சீவியுடன் நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. திருமணம் ஆனபிறகு நயன்தாரா நடிப்புக்கு முழுக்குபோட்டுவிடு வாரா என்று பலரும் கேட்கும் நிலையில் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க நயன்தாரா முடிவு செய்திருப்பதாகவே அவரது தரப்பில் கூறப்படுகிறது.

📽 சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  தமிழுக்கு வரும் பிரியங்கா
கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன், தமிழில் முதல்முறையாக அறிமுகம் ஆகிறார். கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் நெல்சன். அவர் அடுத்து இயக்க உள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க உள்ளார்.
இப்பட ஷூட்டிங் ஜனவரியில் தொடங்குகிறது. இதில் நடிக்க தமிழ் பெண்ணுக்கான சாயலில் இருக்கும் புதுமுக நடிகையை தேடி வந்தனர். இந்நிலையில் படக்குழு சிபாரிசின் பேரில் பிரியங்கா அருள் மோகனை தேர்வு செய்துள்ளனர்.

📽 கமல்ஹாசனிடம் ஏமாந்த சேரன்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியே வந்த இயக்குனர் சேரன் ’கமல்ஹாசன் நடிக்கும் ’தேவர் மகன் 2 படத்திற்கான கதை தன்னிடம் இருப்பதாகவும், கமலஹாசன் ஒப்புதல் அளித்தால் அந்த படத்தை தானே இயக்க தயாராக இருப்பதாகவும் நேற்று சென்னையில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக கலந்து கொண்டதால் வெளியில் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் அவர் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் ’தலைவன் இருக்கின்றான்’ என்ற ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை யும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’தலைவன் இருக்கின்றான்’ என்ற படமே ’தேவர் மகன் 2’ படம் தான் என்பது கமல்ஹாசனின் வட்டாரங்கள் மட்டுமே அறிந்த உண்மை. தற்போது அரசியல் கட்சித் தலைவராகவும் கமல்ஹாசன் இருப்பதால் தேவர் மகன் என்ற ஜாதி பெயரின் டைட்டில் வேண்டாம் என்று அவர் முடிவு செய்திருப்பதாகவும் மேலும் அந்த டைட்டிலை வைத்தால் சிக்கல் ஏற்படும் என்பதற்காக தான் அவர் ’தலைவன் இருக்கின்றான்’ என்ற டைட்டிலை வைத்து அவரே அந்த படத்தை இயக்கவும் திட்டமிட்டுள்ளார்
இந்த விஷயம் தெரியாத சேரன், ’தேவர்மகன் 2’ படத்திற்கான கதை தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த உண்மை சேரனிடம் தெரிவிக்கப்பட்டதும் அவர் மிகுந்த தவறு ஏமாற்றம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது

📽 சூப்பர் சிங்கராக மாறிய முகின்: டைட்டிலை வென்றுவிடுவாரோ?
பிக்பாஸ் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் மற்றும் கவின் ஆகிய இருவரும் எதிர்பாராத வகையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதால் தற்போது மீதி இருக்கும் லாஸ்லியா, முகின், ஷெரின் மற்றும் சாண்டி ஆகிய நால்வரில் யார் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
கவினின் ஆதரவாளர்கள் அனைவரும் லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகிய இருவருக்கும் வாக்களித்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பதால் இருவரில் ஒருவர் டைட்டில் பட்டம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் முகினும் டைட்டிலை வெல்ல வாய்ப்பு வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இதனை அடுத்து இன்று வெளியான முதல் புரமோ வீடியோவில் சூப்பர் சிங்கர் பாடகராக மாறிய முகின் ஒரு அருமையான பாடலை பாடுகிறார். இந்த பாட்டுக்காகவே அவருக்கு ஓட்டுகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டைட்டில் வின்னர் போட்டியில் முகிலின் பெயரும் வலுவாக இருப்பதாக தெரிகிறது
இந்த நிலையில் பரிதாபத்துக்குரியவராக இருக்கும் ஷெரின் டைட்டிலை வெல்ல என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

📽 "ஃபைனலுக்கு போக துணி கொண்டுவாங்கன்னு சொன்னாங்க" - சதி செய்ததா விஜய் டிவி?
பிக்பாஸ் சீசன் 3ல் ஆரம்பத்திலிருந்து சக போட்டியாளர்களிடமும் , மக்களிடமும் நல்ல பெயரை சம்பாதித்து வந்தவர் தர்ஷன். பிக்பாஸ் கொடுத்த அத்தனை டாஸ்க்களையும் ஈடுபாட்டுடன் செய்தார். இவர் டைட்டில் வின்னர் என்று மக்கள் பரவலாக பேசிவந்த நிலையில் மலையை புரட்டி போடும் அளவிற்கு இந்த வார எவிக்ஷன் நடந்தது.
இதை மக்கள் யாராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை இந்நிலையில் தர்ஷனின் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில்  விஜய் டிவி பிக்பாஸ் குழு செப்டம்பர் 28ஆம் தேதிதர்ஷன் ஃபைனலுக்கு செல்ல துணி கொண்டு வாருங்கள் என்று தர்ஷன் குடும்பத்தாரிடம் கேட்டிருந்தனர். ஆனால், திடீரென்று சதி செய்து தர்ஷனை எலிமினேட் செய்தனர். காரணம் என்னவென்றே புரியவில்லை.. அப்போ யாரு வின்னரை தேர்வு செய்வார்? யார் வெளியே போகனும்விஜய் டிவி தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறார்களா? என மிகுந்த ஆதங்கத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 
இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கடைசி நிமிடத்தில் தர்ஷனுக்கு சதி செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்த மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

📽 சோலோவாக களமிறங்கிய தமன்னா! – பெட்ரோமாக்ஸ்
தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.
நயன்தாரா, த்ரிஷா, டாப்ஸி போன்ற நாயகிகள் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை தாண்டி பெண் மைய கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கியுள்ளனர். தற்போது நடிகை தமன்னாவும் ‘பெட்ரோமாக்ஸ்’ என்னும் திகில் படம் மூலம் அந்த பட்டியலில் இணைகிறார்.
ஏற்கனவே தேவி படத்தில் பேயாக நடித்து ரசிகர்களை ஈர்த்தவர் இந்த படத்தில் பேய்களை விரட்டும் சிங்க பெண்ணாக களம் இறங்கியிருக்கிறார். பேய் வீடு ஒன்றில் தன் குடும்பத்தோடு சென்று தங்குகிறார் தமன்னா. தமன்னா குடும்பத்தை காமெடி பேய்கள் துரத்தியடிக்கிறதா? அல்லது காமெடி பேய்களை தமன்னா குடும்பம் துரத்தியடிக்கிறதா? என்பதே படத்தின் சுவாரஸ்யமான ஒன்லைன்.
ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஈகிள் ஐ ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது.

📽 படப்பிடிப்புக்கு தயாராகும் விஜய், அஜித்தின் புதிய படங்கள்
பிகில்’ படத்தை முடித்து விட்டு புதிய படத்தில் நடிக்க விஜய் தயாராகி உள்ளார். இந்த படத்தை மாநகரம், கைதி படங்களை இயக்கி பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
இதில் நாயகியாக நடிக்க கியாரா அத்வானி, மாளவிகா மோகனன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. தற்போது படத்துக்கான லொகேஷன் பார்க்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படத்தின் முக்கிய காட்சிகளை ராமேசுவரத்தில் படமாக்குகின்றனர்.

📽தமன்னா படத்தில் விஜய்யின் குட்டிக் கதை
 ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தின் டிரைலர் நடிகர் விஜய், பட விழாவில் பேசிய குட்டிக் கதையில் இருந்து ஆரம்பிக்கிறது.
தமன்னா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பெட்ரோமாக்ஸ்’. ஈகிள் ஐ புரொடக்ஷன் தயாரித்திருக்கும் இப்படத்தை 'அதே கண்கள்' இயக்குநர் ரோஹின் வெங்கடேஷன் இயக்கியுள்ளார்.
யோகிபாபு, மன்சூர் அலிகான், பகவதி, காளி வெங்கட், சத்யன், முனீஸ் காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, டானி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

📽ராட்சசி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய மலேசிய கல்வி அமைச்சர்
ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தை பார்த்த மலேசிய கல்வி அமைச்சர் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டை தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளின் நிலையையும், அரசு ஆசிரியர்களின் நிலையையும் நடைமுறை மாறாமல் கூறிய படம் ‘ராட்சசி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், ஜோதிகா நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
இப்படத்தைப் மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக், ஒரு கல்வி அமைச்சராக இப்படத்தைப் பார்க்கும்போது எங்கள் நாட்டு சூழலோடு பொருத்திப் பார்க்கிறேன், நாம் செய்ய வேண்டிய பலவகையான திட்டங்களும், மாற்றங்களும் பற்றி இந்த படத்தில் கூறியிருக்கிறார்கள். ஒரு நாட்டில் கல்வியை வளர்ப்பதே அனைத்துக் கட்சியினருடைய இலக்காக இருக்க வேண்டும். அதைதான் நாங்கள் செய்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.
மேலும், இப்படக்குழுவினருக்கும், நாயகியாக நடித்த ஜோதிகாவிற்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார். இதற்கு ஜோதிகாவும், இந்திய படத்தைப் பார்த்து அதில் கூறியதுபோல், தங்கள் நாட்டில் மாற்றம் கொண்டுவர விரும்பும் தங்களுக்கு நன்றி என்று பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார் மலேசியா நாட்டின் கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக். இது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

📽’தளபதி 64’ படத்தின் அடுக்கடுக்கான ஆச்சரியங்கள்
விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 64’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்க உள்ளது. வெளிநாடு சென்ற விஜய் இன்று நாடு திரும்பி உள்ளதை அடுத்து இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் குறித்து விவரங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேலும் சில நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவற்றில் ஒருவர் இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சாந்தனு கல்லூரி மாணவராக நடிக்கவிருப்பதாகவும் விஜய் இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக நடிக்கவிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய்யின் கேரக்டர் கல்லூரி பேராசிரியராக இருந்தாலும் இரண்டாம் பாகத்தில் அவரது கேரக்டர் வேற லெவலில் மாறும் என்றும் கூறப்படுகிறது
மேலும் இந்த படத்திலும் யோகிபாபு, விவேக் ஆகிய இருவரும் நடிக்கவிருப்பதாகவும், விவேக் விஜய்யுடன் பணிபுரியும் கல்லூரி பேராசிரியராகவும், யோகிபாபு சாந்தனுவின் நண்பராக கல்லூரி மாணவராக நடிக்கவிருப்பதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்திற்காக அனிருத் எட்டு பாடல்களை கம்போஸ் செய்யவிருப்பதாகவும் அனைத்து பாடல்களும் சின்னச்சின்னதாக ஆங்காங்கே வரும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

🔻🔻🔻🔻🔻30/09/2019🔻🔻🔻🔻🔻
📽சும்மா இருப்பவர்களை அழைத்து வந்து இஷ்டப்பட்டவர்களுக்கு ஆதரவு சேர்க்கும் விஜய் டிவி!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டதை மக்கள் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்களின் ஓட்டுக்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்த தர்ஷன் எவிக்ட் செய்யப்பட்டது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் கடுப்பான தர்ஷன் ஆர்மிஸ் விஜய் டிவி ஒரு ஃபேக் இனி யாரும் பிக்பாஸ் பார்க்கமாட்டோம் என்றெல்லாம் கூறி வந்தனர்.  
மக்களின் அந்த மனநிலையை மாற்ற தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களை உள்ளே அழைத்து வந்துள்ளனர். அந்தவகையில் மோகன் வைத்யாரேஷ்மா, மீரா மிதுன் , ஃபாத்திமா பாபு உள்ளிட்டோர் வந்துள்ளனர்.  அவர்களை அனைவரும் உள்ளே இருக்கும் தங்கள் நண்பர்களுக்கு பிடித்த பல கிஃப்ட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியடைய வைத்துள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் தர்ஷன் வெளியேற்றத்தை மறந்து நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்கசும்மா இருப்பவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்து அவர்கள் விருப்பும் நபர்களை நல்லவர்களாக காண்பிக்க தான் இந்த டிராமா என கூறி வருகின்றனர்.

📽சரத்குமார், ராதிகா, வரலட்சுமி இணையும் 'பிறந்தாள் பராசக்தி’
சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி நடிப்பில் 'பிறந்தாள் பராசக்தி' என்ற படம் உருவாகவுள்ளது.
சரத்குமார், ராதிகா சரத்குமார் மற்றும் வரலட்சுமி மூவரும் இணைந்து எந்தவொரு படத்திலுமே நடித்ததில்லை. தற்போது இந்தக் கூட்டணி முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ளது. ராதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ராடன் மீடியா நிறுவனமே தயாரிக்கவுள்ளது.
இது தொடர்பான டீஸர் ஒன்றை வெளியிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது படக்குழு. முழுக்க மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ஓம் விஜய் இயக்கவுள்ள இந்தப் படத்துக்கு ரகுநந்தன் இசையமைக்கவுள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். இந்தப் படத்துக்கு 'பிறந்தாள் பராசக்தி' எனப் பெயரிடப்பட்டுள்ளது படக்குழு.
இந்தப் படத்துக்கு முன்னதாகவே சரத்குமார் - ராதிகா சரத்குமார் இணைந்து 'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்து வருகிறார்கள். மணிரத்னம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

📽வட சென்னை’ ஏற்படுத்திய ஏமாற்றம்!
சமீபகால டைரக்டர்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர், வெற்றிமாறன். இவருக்கென்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் பல வெற்றி படங்கள் கொடுத்திருந்தாலும், தனுசை வைத்து இயக்கிய ‘வட சென்னை’ படம் நிறைய பாராட்டுகளை வாங்கி குவித்தது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
வட சென்னை’ படம், ஆஸ்கார் போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும் பட்டியலில் இடம் பெற்று இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில், ‘கல்லீபாய்’ என்ற படம் ஆஸ்கார் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. இது, வடசென்னை படக்குழுவினருக்கு  பெரிய அளவில் ஏமாற்றத்தை அளித்தது.
தேசிய விருதுக்காவது, ‘வட சென்னை’ தேர்வு செய்யப்படும் என்று  எதிர்பார்த்தார்கள். அதுவும் ஏமாற்றத்தில் முடிந்தது. அதனால் வடசென்னைப் படக் குழுவினர் வருத்தத்தில் இருக்கிறார்கள்.

📽மீனாவுக்கு பட்டம்!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல முன்னணி கதாநாயகர்களின் ஜோடியாக நடித்து, தமிழ் சினிமாவின் ‘நம்பர்-1’ நாயகியாக இருந்தவர், மீனா.
மீனாவை தமிழ் ரசிகர்கள், ‘‘கண்ணழகி’’ என்று செல்லமாக அழைத்தார்கள். சமீபகாலமாக மீனா, ‘சின்னத்திரை’ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார்.
இப்போது அவர், ‘வெப்’ தொடரில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அந்த வெப் தொடரின் பெயர், ‘கரோலின் காமாட்சி.’ இந்த படக்குழு வினர் மீனாவை கவுரவிக்கும் வகையில், ‘எவர் கிரீன் ஸ்டார்’ என்று பட்டம் கொடுத்து இருக்கிறார்கள்! ‘‘பட்டம் எல்லாம் வேண்டாம்’’ என்று முதலில் அதை ஏற்க மறுத்த மீனா, பின்னர் அந்த பட்டத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்!

📽ஹாலிவுட் படத்தில், ஜீ.வி.பிரகாஷ்!
தமிழ் சினிமாவில் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக இருந்து நடிகர் ஆனவர். இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வெற்றி பெற்றவர்.
ஜீ.வி.பிரகாஷ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அடுத்து ஜீ.வி.பிரகாஷ் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்துக்கு, ‘ட்ராப் சிட்டி’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். டெல் கணேசன் தயாரிக்கிறார்.
இந்த தகவலை ஜீ.வி.பிரகாஷ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருக்கிறார்.

📽தர்ஷன் வெளியேற்றமா? சேரனின் அதிர்ச்சி டுவீட்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேற்றப்படுவார் யார்? என்பதை புரோமோ வீடியோவில் கமல்ஹாசன் நேரடியாகத் தெரிவிக்காமல் பில்டப் செய்து வருகிறார் என்றாலும் நேற்றே சமூக வலைதளங்களில் பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேறி விட்டதாகவும் மற்ற லாஸ்லியா, ஷெரின் ஆகிய இருவரும் தப்பித்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியது
தர்ஷனின் வெளியேற்றத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் பல சமூக வலைதள பயனாளர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் டைட்டில் வெல்ல தகுதியான நபர்களின் ஒருவர் என கருதப்பட்ட தர்ஷன், இறுதிப்போட்டிக்கு கூட செல்ல முடியாமல் வெளியேற்றப்படுவது தங்களை வருத்தப்படுத்தியதாக பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களின் ஒருவரான சேரன் தனது சமூக வலைத்தளத்தில் தர்ஷன் வெளியேற்றம் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: ஆகச்சிறந்த உழைப்பை கொடுத்து விளையாடிய தம்பி தர்சன் இன்று வெளியேற்றப்படுகிறார் என்றால் அது வருத்தத்திற்குரியது.. 100 சதவீதம் பிக்பாஸ் வின்னர் என்ற பட்டமும் பரிசும் பெற முழுத்தகுதியானவர். அவரின் முயற்சியும் முனைப்பும் அருகில் இருந்து பார்த்தவன் நான்.. அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை’ என்று கூறியுள்ளார்.

📽பிகில்’ டீசர் இணையத்தில் லீக்கா? அதிர்ச்சியில் படக்குழுவினர்
தளபதி விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீஸர் இணையத்தில் கசிந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிகில்’ படத்தின் டீசரை தான் பார்த்ததாகவும் டீசர் வெறித்தனமாக இருப்பதாகவும், அதிகாரப்பூர்வமாக வெளியாகும் டீசருக்கு தான் வெயிட்டிங் வேண்டும் ஒரு ரசிகர் டுவிட்டரில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்
இந்த டுவிட்டை அடுத்து இணையத்தில் தேடிய பலர் ’பிகில்’ டீசர் இணையத்தில் கசிந்துள்ளது உண்மைதான் என்றும் அதனை தாங்களும் பார்த்ததாகவும் பதிவு செய்துள்ளனர். இந்த தொடர் பதிவுகளால் திரைப்படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன ’பிகில்’ டீசர் எப்படி இணையத்தில் லீக் ஆனது? என்று புரியாமல் படக்குழுவினர் செய்வதறியாக திகைத்து, அதிர்ச்சியில் உள்ளனர் மேலும் இது குறித்த விசாரணைகள் படக்குழுவினர் உத்தரவிட்டது
ஏற்கனவே ’பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே’ மற்றும் வெறித்தனம் ஆகிய பாடல்கள் அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்னரே இணையத்தில் லீக் ஆனது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் ’பிகில்’ படத்தின் டீசரும் லீக் ஆகி வைரலாகி கொண்டிருப்பதால் அதிகாரபூர்வ டீசரை உடனடியாக வெளியிட்டு விடலாம் என படக்குழுவினர் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

🔻🔻🔻🔻🔻29/09/2019🔻🔻🔻🔻🔻
📽பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டது ஏன்? கொதிக்கும் தர்ஷன் ஆர்மி
பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அறிந்த தர்ஷன் ஆர்மியனரும், பார்வையாளர்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தர்ஷன் இன்று வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் தமிழ் 3-வது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இறுதியாக கவின் பிக்பாஸ் கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார்.
தற்போது தர்ஷன், ஷெரின், சாண்டி, லாஸ்லியா, முகென் ஆகிய 5 பேர் போட்டியாளர்களாக உள்ளனர். இதில், முகென் ஏற்கனவே இறுதிச் சுற்றுக்கு தேர்வாகிவிட்டார். மீதமுள்ள நான்கு பேரும் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் இருந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியின் போது சாண்டி இறுதிச் சுற்றுக்குச் செல்லும் இரண்டாவது போட்டியாளராக அறிவிக்கப்பட்டார்.

📽சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் கமல்ஹாசன் 
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் கமல்ஹாசனும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளதாக சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவி பேசும் போது, ”என் நண்பர் கமல்ஹாசன் சைரா படத்தின் தமிழ் பதிப்பிற்கு அறிமுக காட்சிக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். இந்த காட்சிக்கு தெலுங்கில் பவன் கல்யாண் குரல் கொடுத்துள்ளார். மலையாளத்தில் மோகன் லால் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ் பதிப்பிற்கு குரல் கொடுக்குமாறு நான் அணுகிய உடனே சம்மதம் தெரிவித்தார் கமல்ஹாசன். அவருக்கு நன்றி” எனக் கூறினார்.

📽சாஹோ படத்துக்காக ரூ.70 கோடி சம்பளம் வாங்கிய பிரபாஸ்?
 ‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய 2 பிரமாண்டமான படங்களில் கதாநாயகனாக நடித்தவர், தெலுங்கு நாயகன் பிரபாஸ். இந்த 2 படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் தெலுங்கு பட உலகில் பிரபாசின் அந்தஸ்து பல மடங்கு உயர்ந்தது. இந்த சூடு குறைவதற்குள் அவர், ‘சாஹோ’ என்ற மற்றொரு பிரமாண்டமான படத்தில் நடித்தார்.
சமீபத்தில் திரைக்கு வந்த ‘சாஹோ’  படம், தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் படுதோல்வி அடைந்தது. ஆனால், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ‘சாஹோ’ வெற்றி பெற்றது. ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. ‘சாஹோ’ படத்துக்காக கதாநாயகன் பிரபாஸ் ரூ.70 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது, மற்ற தெலுங்கு நாயகர்களுக்கு சவாலாக அமைந்து இருக்கிறது. பிரபாசை விட ஒரு ரூபாயாவது அதிக சம்பளம் வாங்கிவிட வேண்டும் என்று மனதுக்குள் சபதம் எடுத்து இருக்கிறார்களாம்.

📽பாரதிராஜா மற்றும் வசந்த்ரவி நடித்துள்ள ‘ராக்கி’ – மிரட்டும் டிரைலர் !
கடந்த 2016 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா, வசந்த் ரவி மற்றும் அழகம் பெருமாள் ஆகியோர் நடித்து வெளியாகி கவனத்தைப் பெற்ற படம் தரமணி. இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி தனது அடுத்த படமாக நடித்து வந்த ராக்கி படத்தின் டிரைலரை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இன்று வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தில் வசந்த்ரவியோடு பாரதிராஜா, ஜெயக்குமார், ரவினா ரவி மற்றும் அஷ்ரப் மல்லிசேரி எனும் மலையாள நடிகர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் வித்யாசமான டிரைலர் காலை 11.30 மணிக்கு வெளியாகி சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ராமு கலை இயக்குனராகவும் பொறுப்பேற்றுள்ளனர். இந்த படம் தீபாவளிக்குப் பின்னர் நவம்பர் மாதத்தில் வெளியாக உள்ளது.

📽பிகில் போஸ்டர் சர்ச்சை – கறிக்கடைக்காரர்களை சமாதானம் செய்த விஜய் ரசிகர்கள் !
பிகில் போஸ்டரில் கறிவெட்டும் மரக்கட்டையின் மீது செருப்புக் காலை விஜய் வைத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கறிவெட்டும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியான போது அது உருவாக்கப்பட்டிருந்த விதத்துக்காக கறிவெட்டும் தொழிலாளர்கள் அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. அந்த போஸ்டரில் இறைச்சி வெட்டுபவர் தோற்றத்தில் இருக்கும் ஒரு விஜய் இறைச்சியை வெட்டும் மரக்கட்டையின் மேல் தனது செருப்புக்காலை வைத்திருப்பது போல அமைக்கப்பட்டிருந்தது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து கோயம்புத்தூர் கறிக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சார்பில் ‘இறைச்சி வியாபாரிகள் கறி வெட்டும் கட்டையைத் தொட்டு வணங்கிவிட்டுதான்  வேலையைத் தொடங்குவோம். அப்படிப்பட்ட கட்டை மீது செருப்புக்காலை வைத்து போஸ்டர் வெளியிட்டு மொத்த வியாபாரிகளையும் அவமரியாதை செய்துவிட்டார்கள்.’ எனக் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக இறைச்சி வெட்டும் மரக்கட்டைகளை விஜய் ரசிகர்கள் வியாபாரிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக ‘ தளபதி விஜய் இறைச்சி வியாபாரிகளை அவமதிக்கும் வகையில் எப்போதும் நடந்து கொள்ள மாட்டார். படம் பார்த்தால் உங்களுக்கே இது புரியும்’ எனக் கூறியதை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

📽கிராமம் சார்ந்த படங்களில் வட இந்திய நாயகிகள் ஏன்? –
கிராமம் சார்ந்த படங்களின் நாயகியாக வட இந்திய நாயகியை நடிக்க வைப்பது ஏன் என்று இயக்குநர் பாண்டிராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’நம்ம வீட்டுப் பிள்ளை’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இமான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், தொடர்ச்சியாக வட இந்திய நாயகிகளையே உபயோகப்படுத்துவது ஏன் என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். இது தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "கிராமம் சார்ந்த படங்களில் வட இந்தியாவைச் சேர்ந்த நாயகிகளை நடிக்க வைப்பது தயாரிப்பாளர்களின் அழுத்தத்தால் தான்.
கடைக்குட்டி சிங்கத்தில் சாயிஷாவை நடிக்க வைத்தது தயாரிப்பளர் தந்த அழுத்தம். 'பசங்க' படத்தில் வேகாவை நடிக்க வைத்ததும் அப்படியே. அவர் அப்போதுதான் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்தார். ஆனால் தயாரிப்பாளர் அவரை நடிக்க வைக்க நிர்ப்பந்தித்தார். அவரை சோபிக்கண்ணு கதாபாத்திரமாக மாற்ற என்னால் இயன்றதைச் செய்தேன்.
ஆனால் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் அனு இம்மானுவேல் கிராமத்துப் பெண் அல்ல. நகரத்திலிருப்பவர் கிராமத்துக்கு வருகிறார் என்பது போலத்தான் கதை. அதனால் அவரை இதில் நடிக்க வைத்தது சரியே” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்.

📽ஹீரோவாக அவதாரம் எடுக்கும் லெஜண்டு சரவணா ஸ்டோர்ஸ் ஓனர்
கதாநாயகனாக அவதாரம் எடுக்கும் லெஜண்டு சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள், நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
லெஜண்டு சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள், அவரது கடை விளம்பரங்களில் அவரே நடித்து பிரபலமாகியவர். அவரது விளம்பரங்களில் தமன்னா, ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இவர் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இவரது விளம்பரங்களை இயக்கிய ஜேடி-ஜெர்ரி தான் அத்திரைப்படத்தையும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி முன்னதாக உல்லாசம், மற்றும் விசில் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தின் பட்ஜெட் 30 கோடிக்கு மேல் கூறப்படுகிறதாம்.

📽இந்தியன் 2 படத்தில் விவேக்கிற்கு சீரியஸ் ரோல்...?
இந்தியன் 2 படத்தில் விவேக் சிபிஐ அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது நடித்து வரும் படம் இந்தியன் 2. இதில் கமலுடன் இணைந்து சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், விவேக், வித்யுத் ஜம்வால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தில் விவேக் சிபிஐ அதிகாரியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது வரை பார்க்காத விவேக்கை இந்த படத்தில் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கிய பாய்ஸ், அந்நியன' மற்றும் சிவாஜி ஆகிய படங்களில் விவேக், கமலுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. இந்தியன் 2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை பிரசாத் லேபில் பிரத்யேக செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது.
தற்போது ஆந்திரா ராஜமுந்திரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் கமல்ஹாசன் முழு அளவில் இந்த படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.


📽பார்த்திபனுக்குக்கு விருது கொடுக்காவிட்டால் மத்திய அரசு மதிப்பை இழக்கும்
ஒத்த செருப்பு சைஸ் 7 திரைபடத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பார்த்திபனுக்கு தோன்றியதற்காகவே அவரை பாராட்ட வேண்டும். அதையும் மிக நேர்த்தியாக இயக்கிய அந்த மாமனிதரின் திறமை கடலினும் பெரிது. மேலும், பார்த்திபனின் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது கொடுக்கப்படவில்லை என்றால் அது மத்திய அரசு தன்னுடைய மதிப்பையே இழப்பதற்கு சமம் என்று இயக்குநர் எ.ஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். பார்த்திபனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் இதனை கூறியுள்ளார்.

📽விஜய் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம்?
அட்லி இயக்கத்தில் விஜய் தந்தை, மகனாக இரு வேடங்களில் நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இந்த படத்தில் வில்லனாக நடிக்க சில முன்னணி இந்தி நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டனர். அவர்களிடம் கால்ஷீட் இல்லாததால் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. அவருக்கு கதை பிடித்துள்ளதால் வில்லனாக நடிக்க சம்மதிப்பார் என்று படக்குழுவினர் நம்புகின்றனர். ஏற்கனவே ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது அவர் கதாநாயகனாக நடிப்பதற்கு இணையான சம்பளம் என்கின்றனர். ஆனாலும் படக்குழுவினர் தரப்பில் இதை உறுதிப்படுத்தவில்லை.

🔻🔻🔻🔻🔻
27/09/2019
🔻🔻🔻🔻🔻

📽'காமெடி டிக்‌ஷனரி’ நாகேஷ்! - நடிகர் நாகேஷ் பிறந்தநாள் இன்று
ஒரு நடிகனுக்குவசன உச்சரிப்பு அவசியம். முக பாவனைகள் மிக அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக பாடி லாங்வேஜ் எனப்படும் உடல்மொழி மிக மிக அவசியம். வசனம் பேசிமுகத்தில் உணர்ச்சியைக் காட்டிஉடல்மொழியிலும் அந்த உணர்வுகளை நமக்குக் கடத்துகிற நடிகர்கள்... கலைஞர்கள். மகா கலைஞர்கள். அப்படியான மகா கலைஞன்... நாகேஷ்.
ஒல்லியான தேகம்தான். ஆனால் குண்டுராவ் என்பதுதான் இயற்பெயர். வேலை பார்த்துக்கொண்டே நாடகம்நாடகத்தில் நடித்தபடியே சினிமாவில் வாய்ப்பு தேடி அலைதல் என தொடர்ந்த முயற்சிகளும் முயற்சிகளின் போது பட்ட அவமானங்களும் கொஞ்சநஞ்சமல்ல. ஆனாலும் அங்கே ஒன்று இங்கே ஒன்று என வாய்ப்புகள் வந்தன நாடகத்தில்.
கவிஞர் வாலியும் நாகேஷும் நண்பர்கள். ஓர் அறையில் இருவரும் தங்கியிருந்தார்கள். ‘டேய் ரங்கராஜா. உன் கைக்கு இந்த வாட்ச் நல்லா இல்லடா. கழட்டிரு’ என்பார் நாகேஷ். அவரும் கழற்றித் தருவார். பிறகு அந்த வாட்ச் அடகுக்கடைக்குச் சென்று பணமாகிஹோட்டலுக்கும் சினிமாவுக்குமாகப் பயன்படுத்தப்படும். நாகேஷ் பாக்கெட்டில் காசு இருந்தால்அது வாலிக்கானது. இப்படித்தான் இருந்தார்கள்.
சினிமா தேவதைநாகேஷை இருகரம் கொண்டு வரவேற்றாள். படங்கள் வரத்தொடங்கின. நாகேஷின் நடிப்புத் திறனைக் கண்டு வியந்த கே.பாலசந்தர்தன் முதல் படத்தை இயக்கும்போதுநாகேஷை நாயகனாக்கினார். ‘நீர்க்குமிழி’ படத்தில் நாகேஷின் பண்பட்ட நடிப்பைக் கண்டு பாராட்டாதவர்களே இல்லை.
இதைத் தொடர்ந்து பாலசந்தர் தன் படங்களில்விதம்விதமான பாத்திரங்களைக் கொடுத்தார் நாகேஷுக்கு. அது சின்ன கேரக்டரோ... பெரிய கேரக்டரோ... ஆனால் அங்கே அசத்தலான நடிப்பில் நம்மையெல்லாம் அசரடித்திருப்பார் நாகேஷ்.
எம்ஜிஆருக்கு நண்பன்சிவாஜிக்கு நண்பன்ஜெமினிக்கு நண்பன்முத்துராமனுக்கு நண்பன்பிறகு ஜெய்சங்கருக்கு நண்பன் என்றெல்லாம் நடித்து வந்த நாகேஷ், ‘தில்லுமுல்லு’ படத்தில் ரஜினிக்கு நண்பனாகவும் ‘பாமா ருக்மணி’ படத்தில் பாக்யராஜுக்கு நண்பனாகவும் கூட நடித்திருப்பார்.
அந்தக் காலத்தில்ஏவிஎம் படமாக இருந்தாலும் சரிதேவர் பிலிம்ஸ் கம்பெனியாக இருந்தாலும் சரிபத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.பந்துலுவாக இருந்தாலும் சரி... ஏபி.நாகராஜனாக இருந்தாலும் சரி... முதலில் நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள். பிறகுதான் நடிகர்களுக்கு கதை சொல்லுவார்கள். ‘நாகேஷ் கால்ஷீட்டை வாங்கிட்டீங்களா. அப்ப படத்தோட வெற்றிக்கு நாப்பது சதவிகிதம் கியாரண்டி’ என்று எம்ஜிஆரே சொல்லிப் புகழ்ந்த சம்பவங்கள்வேறு எந்த நகைச்சுவை நடிகருக்கும் இல்லாத புகழாரம்.
எங்க வீட்டு பிள்ளை’ படம் முழுக்கஒவ்வொரு முறை பேசும் போதும்வார்த்தையை மாற்றி மாற்றிப் பேசி காமெடி பண்ணுவார். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் வைத்தி எனும் கேரக்டரும் ‘திருவிளையாடல்’ படத்தின் தருமி எனும் கதாபாத்திரமும் சாதாரணன் மிகப்பெரிய நடிகனாகிற ‘சர்வர் சுந்தரம்’ படமும் சினிமாப் படமெடுக்கிற ஓஹோ புரொடக்‌ஷன்ஸ் ‘காதலிக்க நேரமில்லை’ செல்லப்பாவும் கற்பனையில் இருந்து நிஜமாகவே உருவெடுத்து உலவவிட்டதில் நாகேஷின் நடிப்புக்கும் உடல்மொழிக்கும் பெரும்பங்கு இருக்கிறது.
மாடிப்படி மாது (எதிர்நீச்சல்)வை எவராலும் மறக்கவே முடியாது. ’பாமா விஜயம்’, ‘கலாட்டா கல்யாணம்’, ‘நூற்றுக்கு நூறு’, ‘ஊட்டி வரை உறவு’ என நடித்த படங்களைப் பட்டியலிடுவது அசாதாரணம்.
ஒருகட்டத்துக்குப் பிறகுமீண்டும் எண்ட்ரியானார் நாகேஷ். அதுவும் எப்படி. நகைச்சுவை நடிகராககுணச்சித்திர நடிகராக நடித்தவர் வில்லனாக நடித்தார். அதிலும் வில்லன்களுக்கெல்லாம் பெரிய வில்லன் இவர்தான். அதுதான் ‘அபூர்வ சகோதரர்கள்’. இதைத் தொடர்ந்து, ‘இந்திரன் சந்திரன்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘நம்மவர்’, ‘அவ்வை சண்முகி’, ‘பஞ்ச தந்திரம்’ என அடுத்த ரவுண்டிலும் சிக்ஸர் சிக்ஸராக அடித்து வெளுத்து வாங்கினார் நாகேஷ்.
அதிலும் ‘நம்மவர்’ படத்தில் இவர் நடித்ததெல்லாம் வேற லெவல். அந்தப் பத்துநிமிடங்களும் நம்மை உலுக்கிப் போட்டுவிடுவார். ‘பீம்பாய் பீம்பாய்’ அதுவொரு ரகம் காமெடி. ‘மேகின்னா ஸ்டெப்னியா?’ என்று கேட்கும் ‘பஞ்ச தந்திரம்’ காமெடி வேறு வகை சரவெடி. ‘மகளிர் மட்டும்’ படத்தில் பிணமாக நடித்ததைப் பார்த்துபிணமே எழுந்து வாய்விட்டுச் சிரிக்கும்.

📽இலங்கையில் நடந்த உண்மை சம்பவம் படமாகிறது
இலங்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 'ஒற்றைப் பனைமரம்' என்கிற படம் உருவாகி இருக்கிறது.
திரைப்பட வெளியீட்டில் பிரபலமான ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் எஸ்.தணிகைவேல் முதல் முறையாக தயாரித்திருக்கும் படம் ஒற்றைப் பனைமரம். ஈழத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் ஒற்றைப் பனைமரம்  40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது.
விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரெய்லரை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார். அஷ்வமித்ரா இசையமைத்திருக்கும் மகிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புதியவன் ராசையா இயக்கி இருக்கிறார். புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

பொங்கலுக்கு மோதும் 3 படங்கள்
வருகிற தீபாவளி, பொங்கல் பண்டிகையில் எந்தெந்த படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தீபாவளிக்கு விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்கள் ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவித்து உள்ளனர்.
பொங்கல் பண்டிகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்-நயன்தாரா ஜோடியாக நடிக்கும் தர்பார் படம் ரிலீசாவதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

📽கார்த்தியின் சுல்தான் வரலாற்று படமில்லை - தயாரிப்பாளர் விளக்கம்
ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடைபெற்று வருகிறது. இதை அறிந்த இந்து அமைப்புகள் சில படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சுல்தான் படம் வரலாற்று பின்னணியைக் கொண்டு உருவாகவில்லை என்று படக்குழு விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திப்பு சுல்தான் வரலாற்று அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுவதாகவும், திண்டுக்கல் மலைக்கோட்டையில் எடுக்கக் கூடாது என்றும் கூறி இரு அமைப்பினர் 24.09.2019 அன்று படப்பிடிப்பு தளத்தின் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது அவர்கள் வெளியிட்ட கருத்துகளால் இருவேறு அமைப்புகளிடையே கருத்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருப்பது வருத்தத்துக்குரிய விஷயமாகும். இது வரலாற்றுப் பின்னணியோ அல்லது திப்பு சுல்தான் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட படமோ அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

📽பிக் பாஸ் வீட்டுக்குள் தாலியை கழற்றி வைத்தது ஏன்? - மதுமிதா விளக்கம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஜூன் மாதம் 23-ந்தேதி தொடங்கியது. 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார். ’டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார்.
அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார்’ என்று நிகழ்ச்சி குழு தெரிவித்தது.
தமிழ்ப்பெண் என்று அடையாளப்படுத்திக் கொண்ட மதுமிதா நிகழ்ச்சிக்காக தாலியை கழற்றிவிட்டு வீட்டுக்குள் போனது குறித்து சர்ச்சைகள் கிளம்பின. இந்த விவகாரம் குறித்து முதல்முறையாக ஒரு பேட்டியில் மனம் விட்டு பேசியுள்ளார் மதுமிதா.
அதில் அவர், ’பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் எனது பொருட்களை சோதனை செய்தார்கள். அப்போது தாலி போன்ற பெரிய நகைகளை அணிந்தால் அது மைக்கில் உரசும், தாலியை அணிய வேண்டாம் என்று கூறினார்கள். தொடர்ந்து தாலியை எப்படி கழற்ற முடியும் என கேட்க, டாஸ்க் பண்ணும்போது யாராவது உங்கள் தாலியை பிடித்து இழுத்து அறுந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்கள். இதுகுறித்து என் கணவரிடம் கேட்க அவரும் சரி என்ற பிறகே தாலியை கழற்றினேன்’ என கூறியுள்ளார்.

📽பிக்பாஸ் சீசன் 3ல் கவின் ஹீரோவா? வில்லனா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு மறக்க முடியாத நபர் இருப்பார்கள். முதல் சீசனில் ஓவியாவும் இரண்டாவது சீசனில் ரித்விகாவும் இருந்த நிலையில் தற்போது மூன்றாவது சீஸனில் அனைவரது மனதிலும் கவின் இருப்பார் என்பதில் சந்தேகம் இருக்காது
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் அதிகபட்ச புரோமோ வீடியோக்களில் வந்தவர் கவின் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது காதல் லீலைகள் ஆகட்டும், நட்பு கொடுக்கும் முக்கியத்துவம் ஆகட்டும், லாஸ்லியா உடன் ஏற்பட்ட நெருங்கிய நட்பு ஆகட்டும், சாண்டியுடன் அடித்த ஜாலி ஆகட்டும், 5 பேர் கொண்ட ஒரு குழுவை ஆரம்பித்தது ஆகட்டும், வனிதாவுடன் மற்றும் சாக்சியிடம் மோதியதுஆகட்டும் அனைத்திலும் கவின் பெயர்தான் அடிக்கடி சமூக வலைதளங்களில் எழுந்து கொண்டிருந்தது
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் 11 முறை நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அனைத்து முறையும் காப்பாற்றப்பட்டு இருக்கிறார் என்பது மட்டுமன்றி அனைத்து முறையும் அதிகபட்ச ஓட்டுகளை வாங்கி முதலிடத்தை பிடித்திருக்கிறார்.
மேலும் இந்த சீசனில் 90 நாட்களுக்கு மேல் இருந்தும் கேப்டனாக இல்லாத ஒரே போட்டியாளர் கவின் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமூக வலைதளங்களில் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் சம அளவில் கவினுக்கு இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
முதல் சீசனில் ஓவியாவுக்கு இணையாக கவின் இருப்பாரா என்றால் அது சந்தேகமே, இருப்பினும் இந்த சீசனின் ஹீரோவாக பெரும்பாலோர்களாலும் வில்லனாக ஒருசிலராலும் பார்க்கப்படுபவர்தான் கவின்

🔻🔻🔻🔻🔻26/09/2019🔻🔻🔻🔻🔻

📽தெலுங்கு படத்தில் நடிக்கும் சூர்யா?
சூர்யாவின் காப்பான் படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து சுதா கொங்காரா இயக்கும் சூரரை போற்று படத்தில் சூர்யா நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது. தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சூர்யா அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோகன் பாபு சூர்யாவின் சூரரை போற்று படத்தில் நடித்துள்ளார்.  அண்மையில் ஐதராபாத் சென்ற சூர்யா, பிரபல தெலுங்கு பட இயக்குனர் பி.வி.எஸ்.ரவி மற்றும் கதாசிரியர் கோபி மோகனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தயாரிப்பாளர் மோகன் பாபு வீட்டில் நடந்துள்ளது.

📽ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும்
பார்த்திபன் இயக்கத்தில் உருவான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் அவர் மட்டுமே நடித்துள்ளார். வித்தியாசமான கோணத்தில் இப்படத்தை அவர் இயக்கியுள்ளார். எனவே, இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. 
புதுப்படங்கள் தியேட்டர்களில் வெளியான சில மணி நேரங்களில் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி விடுகின்றன. இதனை தடுக்க அரசு தரப்பிலும், திரைத்துறை தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், இது குறைந்தபாடில்லை. அந்தவகையில் பார்த்திபன் நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 படமும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகியது.
பார்த்திபனின் டுவிட்டர் பதிவு
இது தொடர்பாக பார்த்திபன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ”இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல்! ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை! இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியான்னு! தியேட்டரில் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது”. என பதிவிட்டுள்ளார்.

📽மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் - நந்தினி மந்தாகினியாக ஐஸ்வர்யா ராய்
மணிரத்னம் இயக்கப்போகும் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, அமிதாப் பச்சன், விக்ரம், கார்த்தி, அனுஷ்கா ஷெட்டி, கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், நயன் தாரா, ஜெயம் ரவி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்க உள்ளனர் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. இயக்குநர் மணிரத்னம் செக்க சிவந்த வானம் திரைப்படத்தை தொடர்ந்து, புதிய திரைப்படத்தை இயக்கப் போகிறார், என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் தற்போது முற்றிலும் புதிய தகவல் ஒன்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய, தமிழ் வரலாற்று நாவல் பிரியர்களின் ஆல் டைம் ஃபேவரைட் தமிழ் இலக்கிய நாவலான பொன்னியின் செல்வன் கதையை தழுவி ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் மணிரத்தினம். இந்த நாவலை திரைப்படமாக எடுத்து தானே அதில் நடிக்க வேண்டும் என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திட்டமிட்டதும் உண்டு. ஆனால் அவர் முதலமைச்சராகிவிட்டதால் அந்த திட்டம் கைகூடாமல் போய்விட்டது.
அவர் மறைவிற்கு பின்பு பல இயக்குநர்களும் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கியே தீர வேண்டும் என்று லட்சிய வெறியோடு இருக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது இயக்குநர் மணிரத்னம் சேர்ந்துள்ளார். அவர் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📽மகிழ் திருமேனியின் ஆக்சன் திரில்லர் படம் - உதயநிதிக்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்
தடம் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் ஆக்சன் திரில்லர் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக பேட்டை, எனைநோக்கி பாயும் தோட்டா படத்தின் நாயகி மேகா ஆகாஷ் நடிக்கப் போவாதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தடையற தாக்க படத்தை இயக்கியவர் மகிழ் திருமேனி. அவரது இயக்கத்தில் அருண் விஜய், தன்யா ஹோப், வித்யா பிரதீப் நடித்து இந்த ஆண்டு வெளியான தடம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

📽கார்த்தி காட்டுல மழைதான்.. ரஜினிக்கு காத்திருக்கும் சிக்கல்!
நடிகர் கார்த்தி நடிக்கும் பெயர் இடப்படாத படத்தின் படப்பிடிப்பு வேகமாக முடிந்துள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. நடிகர் கார்த்தி காட்டில் தற்போது மழை என்றுதான் சொல்ல வேண்டும். ஆம் வரிசையாக நல்ல நல்ல கதை உள்ள படங்களில் அவர் நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி, நரேன் நடிப்பில் கைதி படம் இந்த தீபாவளிக்கு வெளியாகிறது. மாநகரம் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் எடுக்கும் இரண்டாவது படமாகும் இது.
இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. படத்தின் டீசர் பலரையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்த கைதி படம், விஜயின் பிகில் படத்துடன் போட்டி போடுகிறது. பிகில் படமும், கைதி படமும் தீபாவளி அன்று வெளியாகிறது.
இந்த நிலையில் தற்போது நடிகர் கார்த்தி நடிக்கும் பெயர் இடப்படாத படத்தின் படப்பிடிப்பு வேகமாக முடிந்துள்ளது. இந்த படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. யார் படம் இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். இவர்தான் திரிஷ்யம், பாபநாசம், ஊலம், மெமரிஸ் ஆகிய ஹிட் படங்களை இயக்கினார். இவர் திரில்லர் ஜானர் படங்களை எடுப்பதில் வல்லவர். செம திரில்லர் அதேபோல்தான் தற்போது கார்த்தி நடித்த படமும் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் கார்த்தி உடன் அவரின் அண்ணி, நடிகை ஜோதிகா நடிக்கிறார். இதில் இவர்கள் இருவரும் அக்கா தம்பி பாத்திரத்தில் நடித்து உள்ளனர். பல்வேறு பேர் அதேபோல் இதில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார். சத்யராஜ் இதில் கார்த்தியின் அப்பா பாத்திரத்தில் நடித்துள்ளார்.
 மேலும் சவுக்கார் ஜானகி, அம்மு அபிராமி, அன்சான் பால், நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ளனர். ரிலீஸ் இந்த படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. இதேபோல் பொங்கல் அன்று நடிகர் ரஜினிகாந்த் நடித்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய தர்பார் படமும் வெளியாக உள்ளது. ரஜினி படம் தனியாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கு போட்டியாக இன்னொரு பெரிய படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

📽எம்.ஜி.ஆர். மகனாக களமிறங்கும் சசிகுமார்
கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றிப் பெற்றவர் இயக்குநர் பொன்.ராம். அவரோடு இப்போது சசிகுமார் கைகோர்த்துள்ளார். இந்தக் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தேனியில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் மகன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய பணிகளைக் கவனிக்கிறார் இயக்குநர் பொன்.ராம். இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோனிதாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரியவுள்ளனர்.
இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

📽பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் கவின்
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில், நடிகர் கவின் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது கவின், சாண்டி, தர்ஷன், முகேன், ஷெரின், லாஸ்லியா ஆகிய 6 போட்டியாளர்கள் உள்ளனர். முகேன் நேரடியாக இறுதியாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள நிலையில், மற்ற 5 பேர்களுக்கிடையே கடுமையான போட்டி நடந்து வருகிறது.
இந்நிலையில், இறுதி போட்டியில் வென்றால் ரூ.50 லட்சம் பெறலாம். ஆனால், தற்போது ரூ. 5 லட்சம் எடுத்துக் கொண்டே தற்போதே வீட்டை விட்டு வெளியேறலாம் என்று பிக்பாஸ் கூறுகிறார். இதைக் கேட்ட கவின் பணத்தை எடுத்துக் கொண்டு செல்ல எழுந்து நிற்கும் புரமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அனேகமாக கவின் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே குடும்ப பிரச்சனையில் இருக்கும் கவின், தனக்கு தேவையான பணம் கிடைத்து விட்டால் வீட்டை விட்டு சென்று விடுவேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

📽அடுத்த படத்தில் அரசியல் பேசுவாரா விஜய்?
விஜய் நடித்த முந்தைய படங்களான ’மெர்சல்’, ’சர்க்கார்’ மற்றும் ’பிகில் ஆகிய மூன்று படங்களின் ஆடியோ விழாக்களிலும் விஜய் பேசிய அரசியல் குறித்த பேச்சுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த படத்திற்கு இலவச விளம்பரம் கிடைத்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தை வாங்குவதற்கு விநியோகிஸ்தர்கள் தயங்கி வருவதாக கூறப்படுகிறது.
ஆளும் கட்சியை பகைத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தால் பல விநியோகஸ்தர்கள் இந்த படத்தை வாங்க தயக்கம் காட்டுவதாகவும், இதனால் இந்த படத்தின் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது
இது ஒருபுறமிருக்க விஜய் படத்தை தயாரித்து பெரும் நஷ்டம் அடைந்த ஒரு தயாரிப்பாளர் இது குறித்து கூறுகையில் ’விஜய்யின் அடுத்த படம் கிட்டத்தட்ட அவரது சொந்த படம் என்றும், அந்த படத்தை அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் தயாரிக்கிறார் என்றும், எனவே அந்த படத்தின் ஆடியோ விழாவில் விஜய் நிச்சயம்அரசியல் பேச மாட்டார் என்றும் கூறுகின்றார். அதேபோல் அந்த படத்திலும் எந்தவிதமான சர்ச்சைக்குரிய வசனங்களும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
தன்னுடைய சொந்தப் படம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் விஜய், அதேபோல் மற்ற தயாரிப்பாளர் படங்களையும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். அதுமட்டுமன்றி விஜய்யின் கடந்த மூன்று படங்களுமே பெரிய பட்ஜெட் படங்கள் என்றும் கிட்டத்தட்ட ரூ.100 கோடியை நெருங்கிய பட்ஜெட் படங்கள் என்றும், ஆனால் அவருடைய அடுத்த படம் மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவாகிறது என்றும் அவர் மேலும் கூறியது பலரை யோசிக்க வைத்துள்ளது.

📽மணிரத்னத்திடம் வலிய சென்று வாய்ப்பு கேட்ட த்ரிஷா!
மணிரத்னம் இயக்கவுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் தேர்வு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்றே சொல்லலாம். கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், சத்யராஜ், நயன்தாரா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க படக்குழுவினர் அனுஷ்காவை அணுகியுள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்தில் தனது கேரக்டரின் முக்கியத்துவத்தையும் அதற்கு தேவைப்படும் கால்ஷீட் தேதிகளையும் கணக்கிட்டு ரூபாய் 4 கோடி சம்பளம் அனுஷ்கா கேட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அந்த சம்பளத்தை கொடுக்க மறுத்து விட்டதாகவும் அனுஷ்காவுக்கு பதில் வேறு நடிகையை தேர்வு செய்யலாம் என மணிரத்னம் அவர்களிடம் ஆலோசனை செய்ததாகவும் தெரிகிறது
இந்த நிலையில் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக யார் இருப்பார்கள் என்ற பரிசீலனை நடந்து கொண்டிருந்தபோது த்ரிஷா இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என்று பரிசீல்னை செய்யப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த த்ரிஷா உடனடியாக மணிரத்னம் அவர்களிடம் போன் செய்து உங்கள் படத்தில் நடிக்க நான் தயாராக இருக்கின்றேன் என்றும் சம்பளம் பற்றிப் பிறகு பேசிக் கொள்ளலாம் என்றும் கூறியது மட்டுமின்றி உடனடியாக மணிரத்னம் அலுவலகத்திற்கும் த்ரிஷா வந்துவிட்டார்.
மணிரத்னம் தனக்கான கேரக்டரை கேட்டவுடன் உற்சாகமான த்ர்ஷா, சம்பளம் பற்றி எதுவுமே பேசாமல் உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், இருப்பினும் அவருக்கு ரூபாய் ஒரு கோடி சம்பளம் கொடுக்க லைக்கா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடிக்கும் கேரக்டர் என்ன என்பது குறித்து இன்னும் ஓரிரு நாளில் தகவல் வெளியாகும்.

📽கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் குறித்து புதிய தகவல்
ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமான இயக்குனர் ஷங்கர் இயக்கும் 14வது படம் இது. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் தாயாருக்கும் இப்படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது
கமல், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் , ரகுல் ப்ரீத் சிங் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடிக்கவுள்ளதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தது. ஆனால், சமீபத்தில் பேட்டி ஒன்றில்  பேசியுள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தான் இந்திய 2 படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார்.
அதற்கான காரணத்தை கூறியுள்ள அவர், “ இந்தியன் 2 படத்தில் நடிக்க கடந்த டிசம்பர் மாதமே ஒப்பந்தமானேன். ஆனால்கடந்த ஆகஸ்ட் மாதம் தான் படப்பிடிப்பு ஆரம்பித்தது. அதனால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது மிகுந்த வருத்தமளிக்கிறது. பிரம்மாண்டமான வரலாற்று படத்தில் கமல் ஹாசன் ,ஷங்கர் என இரண்டு ஜாம்பவான்களுடன் நடிக்கமுடியாமல் போனதால் இரண்டு நாட்களாக தூக்கம்  வரவில்லை என கூறியுள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் " இப்போது கூலாக காரணத்தை சொல்லிடீங்க, ஆனால் பின்னாளில் நிச்சயம் மிகுந்த மன வருத்தப்படுவீர்கள் என கூறிவருகின்றனர்.

🔻🔻🔻🔻🔻25/09/2019🔻🔻🔻🔻🔻
📽கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் காப்பான்
என்.ஜி.கே.வை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள படம் ’காப்பான்’. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சூர்யாவை வைத்து அயன், மாற்றான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா சய்கல் நடித்துள்ளார். மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்துள்ளார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடித்துள்ளார்.
முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். தீவிரவாதத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.  ஒளிப்பதிவு எம்.எஸ். பிரபு.

📽இயக்குநர் பார்த்திபன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் 'ஒத்த செருப்பு சைஸ் 7'
இயக்குநர் பார்த்திபன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம்பெறும் படியாக 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

📽கோமாளி பட இயக்குனருடன் இணைந்த விக்ரம்
நடிகர் விக்ரம் அடுத்ததாக கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து அஜய் ஞானமுத்து இயக்கும் பெயரிடப்படாத படத்திலும், மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜய் ஞானமுத்து மற்றும் மணிரத்னம் ஆகியோரது படங்களுக்கு முன்னர் பிரதீப் ரங்கநாதனின் படத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தையும் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கோமாளி படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் அப்படக்குழு சார்பில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு அண்மையில் புதிய கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

📽பொன் ராம் - சசிகுமார் இணையும் எம்.ஜி.ஆர். மகன்
பொன் ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் படத்துக்கு 'எம்.ஜி.ஆர். மகன்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சீமராஜா'. 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் பொன் ராம்.
அந்தக் கதையில் நடிக்க சசிகுமார் சம்மதம் தெரிவித்தவுடன், முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் இன்று (செப்டம்பர் 25) படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 'எம்.ஜி.ஆர். மகன்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.
இதில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகியாக களமிறங்குகிறார் மிருணாளினி ரவி.
இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி தாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரியவுள்ளனர்.

📽'கத்தியோடு போஸ் கொடுக்கும் விஜய்;
'பிகில்' படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''நடிகர்கள் பேசுவதில் எங்களுக்கு என்ன பயம் இருக்கிறது? எல்லோராலும் எம்ஜிஆராகவோ, ஜெயலலிதாவாகவோ முடியாது. ஒரு கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில் அதை வளர்த்தவர் எம்ஜிஆர்.
ரத்தம் சிந்தி, உருவாக்கப்பட்ட கோட்டைதான் அதிமுக. மக்களின் கொள்கைகளே அதிமுகவின் கொள்கை. நல்ல கருத்துகளை எம்ஜிஆர் எப்படித் திரைப்படங்களில் கொண்டுவந்தாரோ, அதேபோல ஆட்சியிலும் கொண்டு வந்தார். இதன்மூலம் போற்றுதலுக்குரிய தலைவராக எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இருக்கின்றனர்.
எம்ஜிஆர் எந்தப் படத்திலாவது சிகரெட் பிடிப்பது போல, குடிப்பது போல, கத்தி வைத்திருப்பது போல நடித்திருக்கிறாரா? அண்மையில் 'பிகில்' பட போஸ்டரைப் பார்த்தேன். ஒரு கத்தியை வைத்து விஜய் போஸ் கொடுக்கிறார். பார்க்கும் ரசிகர்கள் என்ன செய்வார்கள்? அதையேதான் பின்பற்றுவார்கள். தலையைப் போலத்தான் வால் இருக்கும்.
ஊடகங்கள் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது கதாநாயகர்களுக்கு நன்றாகவே தெரியும். சினிமாவில் இருப்பவர்களுக்கும் தெரியும். இதனால் நல்ல கருத்துகளைப் பரப்பி. எம்ஜிஆரைப் போல வாருங்கள். உங்களுக்கு மாலை போட மக்கள் தயாராக இருப்பார்கள்.
நல்ல விஷயங்களைப் பார்க்காமல், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், ஒரு சமுதாயம் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களைத் திணிக்கக்கூடாது. அதைவிட மோசமான வேறு செயல் கிடையாது. வரலாறும் அவர்களை மன்னிக்காது.
படம் ஓட வேண்டும்; பிரபலமாக வேண்டும் என்பதற்குப் பல்வேறு வழிகள் இருக்கின்றன. கல்லூரி படிப்பதற்கான இடம். சட்டத்துக்கு உட்பட்டே இசை வெளியீட்டு விழா நடந்த கல்லூரிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கிறது''.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.


📽விஜய்யின் ‘பிகில்’ படத்திற்கு மறைமுக கண்டனம்  இயக்குனர்
பிகில்’ படத்தின் ஆடியோ விழாவில் விஜய் பேசியது கடந்த நான்கு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ரஜினிகாந்த் நடித்த ‘எஜமான்’, கமல்ஹாசன் நடித்த ‘சிங்காரவேலன்’, விஜயகாந்த நடித்த ‘சின்னக்கவுண்டர்’ உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், விஜய்யை மறைமுகமாக தாக்கியும் ‘பிகில்’ பட டைட்டிலுக்கு கண்டனம் தெரிவித்தும் சினிமா விழா ஒன்றில் பேசினார். அவர் பேசியதாவது:
தமிழில் தலைப்பு வைத்ததற்காகவே இந்தப் படத்தின் இயக்குநரைப் பாராட்ட வேண்டும். ‘தமிழைக் காப்பாற்றப் போகிறேன்’, ‘நான் தமிழன்’, ‘தமிழ்நாடு நல்லாருக்கணும்’ என்று சொல்கிறவர்கள் வைக்கும் படத்தின் தலைப்பு அசிங்கமாக இருக்கிறது. பெரிய படங்களுக்கு வைக்கிற தலைப்புகளைப் பார்த்தீங்கன்னா...
கலைஞர், ஜெயலலிதா காலத்தில் தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு அளித்தனர். வரிவிலக்குக்காக மட்டுமே தமிழை நேசிப்பவர்களாக நாம் இருக்கக்கூடாது. தமிழர்களுக்காகப் போராடுகிறவர்கள், தமிழைப் பற்றிப் பேசி புகழ்பெற வேண்டும் என்று நினைப்பவர்கள்...
பேசாத ஹீரோக்கள் எல்லாம் இன்றைக்கு மேடையில் அதிகமாகப் பேசத் தொடங்கிவிட்டனர். எனக்கு ஒண்ணும் புரியல. ரொம்ப அமைதியா இருப்பாரேப்பா... அவர் ஜாஸ்தி பேசுறாரே... எதுவும் விஷயம் இருக்குதா? என்று யோசித்தேன். படத்தின் தலைப்பை முதல்ல தமிழ்ல வைங்க. ‘அந்த’ப் படத்தின் தலைப்புக்கு அர்த்தம் என்ன என்று நேற்று முழுவதும் நிகண்டுவில் தேடினேன். அது தமிழ் வார்த்தையே இல்லை எனத் தெரிந்தது. நான் எந்தப் படத்தைச் சொல்கிறேன் எனக் குறிப்பிடவில்லை.
சினிமாவில் ஆயிரத்தெட்டு வசனங்கள் எழுதிக் கொடுக்கலாம். அதை ஒரு ஹீரோ பேசிவிடலாம். ஆனால், மேடைக்கு வரும்போது எதார்த்தமாக இருக்க வேண்டும். ரஜினி மேடையில் எதார்த்தமாகத்தான் பேசுவார். எனவே, நாம் எல்லோரும் மேடையில் எதார்த்தமாகவே இருக்க வேண்டும். மேடைகளில் பஞ்ச் டயலாக் தேவையில்லை” இவ்வாறு இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசினார்

📽பிக்பாஸ் வீட்டில் யாஷிகா-மகத்: போட்டியாளர்களுக்கு அறிவுரை
பிக்பாஸ் வீட்டில் தற்போது கவின், முகின், தர்ஷன், சாண்டி, லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகிய ஆறு போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த வார எவிக்சன் பட்டியலில் முகின் தவிர அனைவரும் இருக்கின்றனர் என்பதும் இவர்களின் இருவர் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு மூவர் மட்டுமே முகினுடன் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இன்று சிறப்பு விருந்தினர்களாக கடந்த சீசனில் போட்டியாளர்களாக மற்றும் யாஷிகா ஆனந்த், மகத் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.  இருவரையும் உற்சாகத்துடன் வரவேற்கும் போட்டியாளர்களுக்கும் யாஷிகாவு, மகத்தும் சில அறிவுரைகளை கூறி வருகின்றனர். குறிப்பாக டாஸ்குகளை நன்றாக செய்யுங்கள் என்றும், பிக்பாஸ் முடிந்து வெளியே வந்தவுடன் மிகப் பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது என்றும் அறிவுரை கூறுகின்றனர்
ஆனால் இருவரது அறிவுரைகளை போட்டியாளர்கள் சீரியசாக கவனித்த மாதிரி தெரியவில்லை. குறிப்பாக யாஷிகா மற்றும் மகத் ஆகிய இருவரையும் கவின் கண்டு கொள்ளாமலேயே இருந்தார். இன்று முழுவதும் பிக்பாஸ் வீட்டில் இருவரும் இருப்பார்கள் என்றும் நாளை முதல் இந்த வாரத்தின் வழக்கமான டாஸ்குகள் ஆரம்பமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

📽சூப்பர் ஸ்டார் ‘அமிதாப் பச்சனுக்கு’ திரைத்துறையின் ’உயரிய விருது’ : மத்திய அமைச்சர் அறிவிப்பு
திரைப்படத்துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே ஆகும்.  இன்று, மத்தியஅரசு பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய சினிமாத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது தாதா சாகேப் பால்கே விருது ஆகும். சினிமாத் துறையில் சாதனை செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
கடந்த 1996 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர்  திலகமாக போற்றப்பட்டும் சிவாஜிக்கு தாதா சாகேப் பல்கே விருது வழங்கப்பட்டது, அதேபோல் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குநர் சிகரம் என்றழைக்கபடும் இயக்குநர் பாலச்சந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று, பாஜகவின் மத்திய அரசு, திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஹிந்தி சூப்பர் ஸ்டார் மற்றும் பல நடிகர்களின் ரோல் மாடலாக இருக்கும் நடிகர் அபிதாப்பச்சனை ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.

📽பிக்பாஸ் வின்னர் ஆரவ்வின் முதல் படத்தின் டிரைலர்!
பிக்பாஸ் முதல் சீசன் வின்னரான ஆரவ் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் ’மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பிக்பாஸ் 3ஆம் சீசனே முடிவடையவுள்ள நிலையில் தற்போது தான் முதல் சீசனில் வெற்றி பெற்ற ஆரவ் நடித்த முதல் படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆரவ், காவியா தபார், ராதிகா, நாசர், ரோகினி, சாயாஜி ஷிண்டே, பிரதீப், ஹரிஷ் பாண்டே, ஆதித்யா மேனன், நிகிஷா பட்டேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் சரண் இயக்கியுள்ளார். இவர் அஜித் நடித்த அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. குகன் ஒளிப்பதிவில் சைமன்கிங் இசையில் கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரபி பிலிம்ஸ் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர்
இது ஒரு அதிரடி ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் திரைப்படம் என்றும் இந்தப் படத்திற்கு பின்னர் கோலிவுட் திரையுலகில் ஆரவ் வெற்றி நாயகனாக வலம் வருவார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

📽அதிர வைக்கும் ஜிகிரி தோஸ்த்து! – நம்ம வீட்டு பிள்ளை புதிய ப்ரோமோ
சிவகார்த்திகேயன் நடித்து வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் இரண்டாவது ப்ரோமோ இன்று வெளியானது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் நம்ம வீட்டு பிள்ளை. அண்ணன், தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அனு இமானுவேல் நாயகியாகவும், பரோட்டா சூரி வழக்கம்போல சி.காவின் நண்பனாகவும் நடித்துள்ளனர்.
இமான் இசையில் ”எங்கண்ணே” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த பாடலின் முழு வீடியோ நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. ட்ரைலரில் ஏற்கனவே பார்த்த காட்சிகளே இதிலும் இடம் பெற்றிருந்தாலும் “ஜிகிரி தோஸ்த்து” என்ற பாடல் கேட்டவுடன் ரசிகர்களுக்கு பிடித்து போயிருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஆடியோவாக வெளியாகி ஹிட் அடித்திருக்கின்றன.
தமிழ் சினிமாவில் அண்ணன் – தங்கை பாசத்தை மையப்படுத்தி வெளியான படங்கள் ஏறத்தாழ எல்லாமே வெற்றி பெற்றுள்ளதால், இந்த படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் சிவகார்த்திக்கேயன்.

🔻🔻🔻🔻🔻24/09/2019🔻🔻🔻🔻🔻
தலைவணங்கி நிற்கிறேன்.. எனது 91 நாட்கள் பிக்பாஸ் பயணம் - சேரன் உருக்கம் ...
தமிழ் சினிமாவில் உள்ள மிக மிக்கிய இயக்குநர்களில் சேரனும் ஒருவர். இதுவரை மூன்று தேசிய விருதுகளைத் தனக்குரியதாக்கியவர். சமூக அவலத்தைச் சுட்டிக்காட்டி இவர் எடுத்த திரைப்படங்கள் அத்துணையும் காலத்தின் கண்ணாடி ஆகும்.
இந்த நிலையில், ஸ்டார் விஜய் டிவியில் , கமலின் தொகுப்பாளராக உள்ள ’பிக் பாஸ் நிகழ்ச்சியில்’,பல முக்கிய பிரபலங்களுடன் இணைந்து பல தேசிய விருதுகளை வென்ற இயக்குநர் சேரனும் பங்கேற்றார். ஆரம்பம் முதலே அவருக்கு நேர்ந்த அவமானத்தைப் பொறுக்க மாட்டாமல் அவருக்கு நெருங்கிய ரசிகர்கள், இயக்குநர்கள் வெகுண்டெழுந்தனர்.
அதுகுறித்து சேரன் கூறியதாவது : நான் பட வாய்ப்புகள் இல்லாத போது, யாரும் எனக்குப் பண உதவியோ,பட இயக்கும் வாய்ப்புகளையோ, பொருளாதார உதவியோ செய்யவில்லை எனக் கூறி ஆதங்கப்பட்டார்.  மேலும், இந்த பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம்  கிடைக்கும் தினசரி பல  லட்சக் கணக்கான பணத்தைக் கொண்டு தனது தேவைகளை நிறைவு செய்து கொள்வேன் என சேரன்  கூறியதாக செய்திகள் வெளியானது.
இந்த சூழ்நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை, அன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ( வெளியேற்றம் )செய்யப்பட்டார். இந்நிலையில், சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,’தலைவணங்கி நிற்கிறேன்..
எனது 91நாட்கள் பிக்பாஸ் பயணத்தை சரியாக புரிந்துகொண்டு என்னை தாலாட்டி தட்டிக்கொடுத்து என் அன்பின்பக்கம் நின்ற நல்இதயங்களுக்கும் நன்றி..
நேர்மை,நற்பண்பு,உண்மையின் பக்கம் நிற்கும் நீங்களே தலைசிறந்த மனிதர்கள். மீண்டும் என்னை உங்களில் ஒருவனாக ஏற்றதில் மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார்.
தற்போது சேரன்  படம் இயக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும் கூட, அவர் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இயக்குநர்தான் என்பதில் சந்தேகமில்லை. இனி அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தன்னை சேரன் தயார் செய்து கொள்வாரா என்பதைப் பார்கலாம்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சேரன் வெளியேறியது, அந்த நிகழ்ச்சிக்கு நல்லதோ இல்லையே ஆனால் பல தேசிய விருதுகளை வென்ற சேரனின் இமேஜுக்கு இது ரொம்ம நல்லது என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ரூ.50 கோடி கேட்டு வழக்கு? விஜய்சேதுபதி, நயன்தாரா படத்துக்கு எதிர்ப்பு
ஆந்திராவை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் படமாகி உள்ளது. இதில் சிரஞ்சீவி-நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளனர்.
அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, அனுஷ்கா, தமன்னா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.ரூ.300 கோடி செலவில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா தயாரித்துள்ளார்.
டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தெலுங்கில் தியேட்டர் உரிமை ரூ.140 கோடிக்கு விற்பனையானதாக கூறப்பட்டது. அனைத்து மொழி சாட்டிலைட் உரிமையும் ரூ.125 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
படத்துக்கு செலவு செய்த தொகை அனைத்தும் ராம்சரணுக்கு கிடைத்து விட்டது என்கின்றனர். அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் குடும்பத்தினர் படத்துக்கு திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறும்போது, “நரசிம்ம ரெட்டி வாழ்க்கையை படமாக்குவதற்காக அவரது குடும்பத்தினரான எங்களுக்கு ரூ.50 கோடி தருவதாக ராம்சரண் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் சொன்னபடி பணம் தரவில்லை” என்றனர். படத்துக்கு எதிராக வழக்கு தொடரவும் தயாராகி வருகிறார்கள். பிரச்சினையை சுமுகமாக தீர்த்து திட்டமிட்ட தேதியில் படத்தை திரைக்கு கொண்டு வர பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு
கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கமல். இதன் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் உள்ள சிறைச்சாலையில் தற்போது நடைபெற்று வருகிறது. வார இறுதி நாட்களில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காக மட்டும் சென்னை வந்து செல்கிறார் கமல்.
காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், விவேக், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் கமலுடன் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தை முடித்துவிட்டு, மீண்டும் லைகா நிறுவனத்துக்கே தனது அடுத்த படத்துக்கான கால்ஷீட்டையும் கொடுத்துள்ளார் கமல்.
அந்தப் படத்தை கமலே இயக்கி, நடிக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். நீண்ட நாட்களாகத் தான் வைத்திருந்த 'தலைவன் இருக்கின்றான்' படத்தை இம்முறை மீண்டும் கையில் எடுத்துள்ளார் கமல். இந்தப் படத்தில் கமலுடன் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. 'சிங்காரவேலன்','தேவர் மகன்', 'காதலா காதலா' ஆகிய படங்களைத் தொடர்ந்து கமல் - வடிவேலு இணைந்து நடிக்கும் படமாக இது உருவாகவுள்ளது.
'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்துக்காக வடிவேலுவிடம் கொடுத்த அட்வான்ஸ் தொகை திரும்ப வாங்கவில்லை. இந்தப் படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்தது லைகா நிறுவனம். இதனால் அந்தத் தொகையை ஈடுகட்ட 'தலைவன் இருக்கின்றான்' படத்துக்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்திலிருந்து வடிவேலு விலகியுள்ளதால், இயக்குநர் சிம்புதேவன் வேறொரு நாயகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இணைய தொடரில் அறிமுகமாகும் பிகில் பட வில்லன்
விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் படத்தில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் தற்போது இணைய தொடரில் அறிமுகமாக உள்ளார்.
பல படங்களில் வில்லனாக மிரட்டியவர் டேனியல் பாலாஜி. குறிப்பாக வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், அச்சம் என்பது மடமையடா, பைரவா, வடசென்னை ஆகிய படங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது இவர் விஜய்யின் பிகில் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
இதுவரை படங்களில் நடித்து வந்தவர், தற்போது இணைய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ’காட் மேன்’ எனும் இணைய தொடரில் ஆன்மீக குருவாக நடிக்க உள்ளார். இந்த தொடரை ஜெயம் ரவி நடித்த தாஸ் படத்தை இயக்கிய பாபு யோகேஷ்வரன் இயக்க உள்ளார். விஜய் ஆண்டனியை வைத்து இவர் இயக்கியுள்ள தமிழரசன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரட்டை வேடங்களில் கமல்ஹாசன் 
கமல் இரண்டு ஆண்டு களுக்கு முன்பு ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தை அறிவித்திருந்தார். தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க இருக்கிறார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் மற்றும் இந்தியில் உருவாகும் இந்த படத்தில் இந்தி நடிகர் சயீப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அமீர் கானுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் இதில் கமல் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வந்தது.
படத்தின் கதாநாயகன், வில்லன் என 2 வேடங்களுமே கமல்ஹாசன் தான். அமைதிப்படை பாணியில் இந்த வேடங்கள் இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் தலைவன் இருக்கின்றான் படம் ஒரு சீரியசான அரசியல் கதை என்றும் சொல்கிறார்கள். கமலின் அரசியலுக்கு இந்த படத்தின் கதை பெரிதும் உதவும் என்பதால் தான் இந்த படத்தை தூசி தட்டி எடுத்துள்ளார்.

'ஆக்‌ஷன்' வெளியீட்டில் மாற்றம்
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆக்‌ஷன்' படத்தின் வெளியீட்டை நவம்பர் மாதத்துக்கு மாற்றியுள்ளது படக்குழு.
இதன் பணிகள் அனைத்தும் முடிவுற்று, அக்டோபர் 2-ம் வாரத்தில் வெளியிடலாம் என்று வெளியீட்டு ஆலோசனையில் முடிவெடுத்தனர்.
ஆனால், சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள 'இருட்டு' படமும் அக்டோபர் 11-ம் தேதி வெளியீடு என அறிவித்துள்ளனர். இதனால், ஒரே சமயத்தில் 2 சுந்தர்.சி படங்கள் வெளியாகும் சூழல் ஏற்பட்டன. மேலும், 'ஆக்‌ஷன்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடியச் சிறிது கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

வைரலாகும் மேக்கப் டெஸ்ட் புகைப்படம்: ஜெயலலிதாவாக மாறும் கங்கனா
ஜெயலலிதா வாழ்க்கை விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது.
கங்கனா ரணாவத் இதில் நடிக்க ரூ.20 கோடி சம்பளம் கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த வருடம் இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்கு விதமான தோற்றங்களில் வருகிறார் என்றும் அவரது தோற்றங்களை ஹங்கர் கேம்ஸ், கேப்டன் மார்வல், பிளேட் ரன்னர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஒப்பனை கலைஞர் ஜேசன் காலின்ஸ் வடிவமைக்கிறார் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கங்கனா ரணாவத்தை ஜெயலலிதாவாக மாற்றுவதற்கான ‘மேக்கப் டெஸ்ட்’ அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இதற்காக கங்கனா உள்ளிட்ட படக்குழுவினர் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளனர். அங்கு கங்கனாவை ஜெயலலிதா தோற்றத்துக்கு மாற்ற மேக்கப் போட்டனர்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கங்கனாவின் சகோதரி ரங்கோலி கூறும்போது, “இப்படி கஷ்டப்பட்டுத்தான் உருவத்தை மாற்றுவதற்காக மேக்கப் போடுகிறார். ஒரு நடிகைக்கு இது எளிதான காரியம் இல்லை. அவரை பார்க்க எங்களுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் கங்கனா அமைதியாகவே இருந்தார்” என்றார்.

ராமராக ஹிருத்திக் ரோஷன், சீதையாக தீபிகா: 3 மொழிகளில் படமாகும் ராமாயணம்
பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த், மது மஞ்சனா, நமித் மல்கோத்ரா ஆகியோர் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ராமாயணம் மீண்டும் படமாகிறது. பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் அதிக பொருட் செலவில் இந்த படத்தை எடுக்கின்றனர். மூன்று பாகங்களாக தயாராகிறது.
இந்த படத்தை தங்கல் படம் மூலம் பிரபலமான நிதிஷ் திவாரி, மாம் படத்தை இயக்கிய ரவி உடையார் ஆகிய இருவரும் இணைந்து டைரக்டு செய்ய உள்ளனர். படப்பிடிப்புக்கு முந்தைய வேலைகள் நடக்கின்றன. இந்த படத்தில் ராமன் கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார். சீதையாக நடிக்க சினேகாவிடம் பேசி வந்தனர். தற்போது அவருக்கு பதில் தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபாசிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ராவணன் வேடத்துக்கு பிரபாசின் தோற்றம் பொருத்தமாக இருக்கும் என்கின்றனர்.

🔻🔻🔻🔻🔻23/09/2019🔻🔻🔻🔻🔻
📽டப்பிங் தியேட்டர் கட்டும் அஜித்
புதிதாக டப்பிங் தியேட்டர் ஒன்றைக் கட்டி வருகிறார் அஜித். இனிமேல் தன் படங்களுக்கான டப்பிங் பணிகளை அங்கேயே மேற்கொள்வார் எனத் தெரிகிறது.
இதன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இனிவரும் படங்களுக்கான டப்பிங் பணிகள் அனைத்தும் இங்கேயே நடக்கும் எனத் தெரிகிறது. 'நேர்கொண்ட பார்வை' படத்துக்குப் பிறகு மீண்டும் ஹெச்.வினோத் இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். இதனையும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க போனி கபூர் தயாரிக்கவுள்ளார்.

📽மீண்டும் இணையும் சூர்யா-ஆர்யா?
சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ’காப்பான்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், சூர்யாவும் ஆர்யாவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பாலா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரமின் மகனான துருவை வைத்து இயக்குனர் பாலா இயக்கிய ’வர்மா’ படம் டிராப் ஆனது. இதையடுத்து பாலா அடுத்த படத்துக்கு தயாராகியுள்ளார்.
இந்த படத்தில் ஆர்யா மற்றும் அதர்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க இருப்பதாகவும், இப்படத்தில் சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பாலாவின் இயக்கத்தில் நான் கடவுள், அவன் இவன் போன்ற படத்தில் ஆர்யாவும், பிதாமகன், நந்தா ஆகிய படங்களில் சூர்யாவும் நடித்துள்ளனர். தற்போது இருவரும் இணைந்து பாலா இயக்கத்தில் நடிக்க உள்ளனர்

📽பாடகராக அவதாரம் எடுக்கும் ஆர்.ஜே.பாலாஜி
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அந்த படத்தில் இவருடைய காமெடி மிகப்பெரிய அளவில் எடுபடவே, தொடர்ந்து மிகப்பெரிய படங்கள் அவரைத் தேடி வந்தவண்ணம் உள்ளன. சமீபத்தில் இவர் ஹீரோவாக நடித்த ‘எல்.கே.ஜி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் அடுத்ததாக கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, பிரபுதேவாவின் யங் மங் சங், சிபிராஜின் வால்டர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் ‘பப்பி’ படம் மூலம் பாடகராக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ‘சோத்துமூட்டை’எனும் பாடலை இவர் பாடியுள்ளார்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்துள்ள இப்படத்தை நட்டு தேவ் இயக்கியுள்ளார். வருண் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 11-ந் தேதி ரிலீசாக உள்ளது.

📽அட்லீ இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்?
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ எனும் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், அட்லீ. இந்த படம் ரூ.50 கோடி வசூல் குவித்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்தார், அட்லீ. தற்போது விஜய்யை வைத்து பிகில் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் வருகிற தீபாவளி தினத்தன்று ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், அட்லீ அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ சந்தித்து அட்லீ கதை கூறியதாகவும், அது அவருக்கு பிடித்ததாகவும் கூறப்படுகிறது. இப்படம் தமிழ், தெலுங்கில் உருவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூனியர் என்.டி.ஆர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ எனும் வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📽புதிய கெட்டப்பில் அஜித்- வைரலாகும் புகைப்படம்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அஜித்தின் அடுத்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இது ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பூஜையுடன் தொடங்குகிறது.
படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கிறார்.
இந்நிலையில், நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் சென்னையில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியில் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவில் அஜித் "டை" அடித்து புதிய கெட்டப்பில் இருப்பதால், புதிய படத்தில் இதே போன்ற தோற்றத்தில் தான் அஜித் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

📽 கதாநாயகன் ஆனது ஏன்? -நடிகர் சூரி
கதாநாயகர்களாக மாறிய நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமனி, வடிவேல், விவேக், கருணாஸ், சின்னி ஜெயந்த், சந்தானம், ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு வரிசையில் இப்போது சூரியும் சேர்ந்து இருக்கிறார். வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சூரியை புரோட்டா காமெடி பிரபலமாக்கியது.
அதன்பிறகு காமெடி வேடங்கள் குவிந்தன. முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து மளமளவென உயர்ந்தார். இப்போது புதிய படமொன்றில் கதாநாயகனாக நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். கதாநாயகன் ஆனது குறித்து சூரி அளித்த பேட்டி வருமாறு:-
நான் சினிமாவில் அறிமுகமான போது பெயின்டர் வேலை செய்து கொண்டு இருந்தேன். அதன்பிறகு பல படங்களில் சிறுசிறு வேடங்களில் வந்தேன். இதுவரை 60 படங்களில் நடித்து விட்டேன். 3, 4 வருடங்களாக கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் வந்தன. நான் ஏற்கவில்லை.
இப்போது வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கதை நாயகனாக நடிக்கிறேன். இந்த படத்தின் கதை இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒன்று. இந்த படம் பற்றி சிவகார்த்திகேயன் என்னிடம் விசாரித்தார். என் நலனில் அவருக்கு அக்கறை உண்டு. நானும் அவர் மீது அதிக பாசம் வைத்து இருக்கிறேன். நாங்கள் இருவரும் அண்ணன் தம்பியாக நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.” இவ்வாறு நடிகர் சூரி கூறினார்.

📽தலை முடியை நீளமாக வளர்த்து பொன்னியின் செல்வன் படத்துக்கு தயாராகும் கதாநாயகர்கள்
பொன்னியின் செல்வன்’  இந்த படத்தில் நடிக்க அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது. வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்தில் சத்யராஜ் மற்றும் பார்த்திபன், ரகுமான், ஜெயராம், அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.
நயன்தாரா, திரிஷா ஆகியோரிடமும் பேசி வருகின்றனர். பூங்குழலி வேடத்தில் நயன்தாரா நடிப்பார் என்று தெரிகிறது. தாய்லாந்தில் உள்ள காடுகளில் 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
இதற்கிடையில் பொன்னியின் செல்வன் படத்துக்காக தலைமுடியை நீளமாக வளர்க்கும்படி கதாநாயகர்களிடம் மணிரத்னம் கேட்டுக்கொண்டு இருக்கிறார். சரித்திர காலத்து கதை என்பதால் மன்னர் உள்பட அனைத்து ஆண் கதாபாத்திரங்களுக்கும் தலை முடி நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவுரையை வழங்கி இருக்கிறார். அதன்படி நடிகர்கள் தலைமுடியை நீளமாக வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.

📽பார்வையற்ற இளைஞருக்கு வாய்ப்பு...... டி.இமானுக்கு குவியும் பாராட்டு
பார்வையற்ற இளைஞர் ஒருவர் விஸ்வாசம் திரைப்பட பாடலை பாடிய காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் சிலர் பதிவிட்டனர். அதை கண்ட இசை அமைப்பாளர் டி. இமான், வலைதளவாசிகளின் உதவியுடன் அந்த இளைஞரை தொடர்பு கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி என்ற அந்த இளைஞரை தமது அடுத்த படத்தில் பாட வைக்கப்போவதாக கூறியுள்ளார். திருமூர்த்தியின் தொலைபேசி எண் கிடைக்க காரணமான அனைத்து நெட்டிசன்களுக்கும் டி.இமான் நன்றி தெரிவித்து கொண்டார். டி.இமானின் இந்த செயலை பாராட்டி ஏராளமானோர் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

📽அஜித் பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்
அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷராஹாசன் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகிய படம் ‘விவேகம்’. இயக்குனர் சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டமில்லை என்றே கூறப்பட்டது.
இந்நிலையில் விவேகம் படத்தின் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசியா, தாய்லாந்து, புரூனே உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வெளியீட்டு உரிமையை, மலேசியாவைச் சேர்ந்த டி.எஸ்.ஆர். பட நிறுவனம், தியாகராஜனிடம் நான்கு கோடியே 25 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது.

📽பேட்ட படத்தின் வசூல் சாதனையை முறியடித்த காப்பான்
சூர்யா-கே.வி.ஆனந்த் 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த படம் ’காப்பான்’. இப்படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயீஷா, பொம்மன் இரானி போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீசாகி ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 20-ந் தேதி வெளியான காப்பான் படம் முதல் நாளில் 2.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன்மூலம் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் ரஜினியின் பேட்ட படம் முதல் நாளில் 2.1 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது. தற்போது காப்பான் படம் அதனை முறியடித்துள்ளது.

📽வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டேங்குறேன்: தன்னைத்தானே நொந்து கொண்ட கமல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சொல்ல சொன்னதை மட்டும் சொல்லிவிட்டு வராமல் தேவையில்லாமல் தான் பேசி வருவதாக தன்னை தானே நொந்து கொல்வது போல் கமல் செய்த காமெடி இன்றைய நிகழ்ச்சியை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது
இன்றைய நிகழ்ச்சியில் யாரை காப்பாற்றுவது, யாரை வெளியேற்றுவது என்று அறிவிக்கவிருப்பதாக கமல் நேற்றே கூறினார். அதற்கு முன் யாரை காப்பாற்றலாம் என்று போட்டியாளர்களின் கருத்தை கமல் கேட்க, அதற்கு லாஸ்லியா, சேரன் மற்றும் கவின் ஆகிய இருவரையும் கூறுகிறார்.
அப்போது கமல் கிண்டலுடன் ‘நான் பாட்டுக்கு யாரை காப்பாற்றுவது என்று சொல்ல சொன்னதை சொல்லியிருக்கலாம், தேவையில்லாமல் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்காமல் இவங்களிடம் அரட்டை அடிச்சேன். புரோக்ராம் டைமை மெயிண்டன் செய்ய யாரை காப்பாற்றுவது என்று சொல்லிவிட்டு நான் கிளம்பியிருக்கலாம்’ என்று லாஸ்லியாவை கலாயத்தது மட்டுமின்றி ஆடியன்ஸ்களையும் பார்த்து கமல் கண்ணடித்தார்.

 📽தமன்னாவின் திடீர் முடிவு
பெட்ரோமாக்ஸ்', 'ஆக்‌ஷன்', 'சைரா நரசிம்மா ரெட்டி என பல படங்களில் நடித்து வரும் தமன்னா, தற்போது திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
இந்தியில் தமன்னா நடிப்பில் வெளியான படம் 'காமோஷி'. இந்தப் படம் படுதோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தமிழில் 'பெட்ரோமாக்ஸ்', 'ஆக்‌ஷன்', தெலுங்கில் 'சைரா நரசிம்மா ரெட்டி' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, புதிதாக நடிக்கவுள்ள படங்களுக்காகக் கதைகளைக் கேட்டு வருகிறார்.
இதில் தமன்னாவிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகவுள்ளன. ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தைத் தொடர்ந்து, நாயகியை மையமாகக் கொண்ட இரண்டு, மூன்று கதைகளை தமன்னா கேட்டிருக்கிறார். கதை பிடித்திருந்தால் கணிசமாகத் தனது சம்பளத்தைக் குறைக்கவும் அவர் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
முக்கியத்துவம் இல்லாத காட்சிகள் கொண்ட கதைகள் என்றால், அது பெரிய நாயகர்கள் நடிக்கும் படமாக இருந்தாலும் ஆர்வம் செலுத்த வேண்டாம் என்ற முடிவிலும் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது. தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள 'பெட்ரோமாக்ஸ்' படம் தீபாவளி வெளியீடாகவும், 'ஆக்‌ஷன்' படம் நவம்பர் வெளியீடாகவும் திரைக்கு வரவுள்ளது.

 📽திரிஷாவின் பரமபதம் விளையாட்டு படத்தின் புதிய அப்டேட்
திரிஷா நடிப்பில் தற்போது `சதுரங்கவேட்டை 2', `கர்ஜனை' `பரமபதம் விளையாட்டு', ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதில் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து சென்சாருக்கு சென்றுள்ளது. படத்தை பார்த்த குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து அக்டோபர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் தீவிரம் காண்பித்து வருகின்றனர்.
திருஞானம் இயக்கியுள்ள இந்த படத்தில் திரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடித்துள்ளார். நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
24 Hrs நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் கணேஷ் இசையமைத்திருக்கிறார்.

 📽கல்லி பாய் திரைப்படம் : ஆஸ்கர் விருதுக்கு இந்தியா பரிந்துரை
ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் ஸோயா அக்தர் இயக்கிய படம் கல்லி பாய். இந்த வருடம் பிப்ரவரி 14 அன்று வெளியானது. ரூ. 230 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்தப் படம், இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த சர்வதேச படம் என்ற பிரிவுக்கு இந்தியா சார்பில் இப்படம் ஆஸ்கர் விருதுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதைப் பெறுவதற்கு  இந்தியப் படங்கள் போட்டியிட்டன. 28 படங்கள் அந்தப்பட்டியலில் இருந்த நிலையில், கல்லி பாய் பரிந்துரை செய்யலாம் என்று தேர்வுக்குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது. 9 தேசிய விருதுகள் பெற்ற வங்காள இயக்குநர் அபர்ணா சென், தேர்வுக்குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.

குறிப்பு:சில காரணங்களினால் புதிய செய்திகள் மட்டும் 10/11/2019 வரையில் வெளிவராது என அறியத் தருகிறோம்.

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
                    tags:-Aishwarya Rajesh Sanchita Shetty                    Samantha  Oviya          Kalavani     Amy Jackson                 Chandini Tamilarasan                  
                    Srushti Dange               Taapsee Pannu             Hansika Motwani         Janani Iyer Pranitha    Nithya Menen              Shruti Haasan               
                    Rakul Preet Singh         Radhika Apte                Nandita Swetha                                Gayathrie   Varalaxmi Sarathkumar                    Mahima Nambiar        
                    Nazriya Nazim               Sri Divya     Catherine Tresa            Nikki Galrani                 Keerthy Suresh            
Aari             Atharvaa Murali           Arulnithi    Harish Kalyan                Vidharth     Vijay Sethupathi           Ashwin       Sivakarthikeyan                    Sri              
                    Udhayanidhi Stalin      Dinesh        Attakathi    Vijay Antony                 Vikram Prabhu             Gautham Karthik                    Ashok Selvan               
Bobby Simha                 Kathir         Madha Yaanai Koottam                  Naveen Chandra          Bramman   Koottam Kalaiyarasan
                    G. V. Prakash Kumar surya vijay karththik kamalhasan rajanikanth Srikanth suri vavelu
தேடல் துணைகள்: thamizh, tamil, sampanthar, vadakilakku, vadakku, kizhakku, arasu, maiththiri, ranil, muslim, hindu, jesu, pothai, heroyin, val, jaffna, kilinochchi, maddakkalappu, butticola , ponnampalam, malaiyakam thondamaan, tiger, koddiya, ilankai ,ceylon, sinkalese , unp, slfp, suren  ragavan, vigginesvaran,tricomalai , vavuniya, mullaitivu, mannar , puththalam, kandy,achchuvely araly, ariyalai, allarai, allaippiddi, alvay, alaveddy, anailaithivu
aththiyadi,avarankal, anaikkoddai, edaikadu, enuvil, erupalai, elakkanavaththai,elavalai, echchankadu, echchamoddai, evinai, uduppiddi, udivil urumpirai, urelu, eluthumadduval, elalai, oddakappulam, kachchay, kaddudai, kadduvan, kantharmadam, kantharodai, kamparmalai, karanavay, karanthan, karampon, karaveddi, kalvayal, kalviyankadu, kalapumy, kankesanthurai, kks, karainagar, kirimalai, kuppilan, kurunakar, kurumpasiddi, kerudavil, kerpeli, kerudavil, kerpely, kaithadi, kokkuvil, kodikamam, kommanthurai, kollankaladdi, kolumpuththurai, kondavil, koppai koyirkudiyiruppu, sankaththanai, sankanai, sankuveli, sandilippay,sarasalai, savakachchery,singanagar.siththankeny, sinthupuram, sillalai, siruvilan,siruppiddi,sundikkuly, suthumalai,sunnakam, chulipiram, choliyapuram, thachchanthoppu, thanankilappu, thavady,thirunelvely, thunnalai, thellippalai, thevapuram,thaiyiddi, thondaimanaru, tholpuram, nainadivu, nallur, navakkiry, navaly, nagarkovil, nayanmarkkaddu, naranthanai, navanthurai, nilavarai, nirvely, niraviyady, nunavil, nelliyady, pandaththeruppu, pandaththarippu, pannagam, paththameny, pointpirro, paruththithurai, palaly ,pannalai, panippulm, pasaiyur, palavy, puththur
puloly, puliyankudal, punnalaikkadduvan, periyavilan, ponnalai, madduvil, mandaidivu, mandaithivu, maruthanarmadam, mallakam, maravanpulavu, masiyappiddi, mathakal, mavaliththurai, maviddapuram, manippay,mirusuvil, mesalai, mulai, vaddukkoddai, vadamarachchi, vadaliyadaippu, vannarpannai, vayavilan, varany, vallipuram, valveddiththurai, varuththalaipilan, viyaparimulai,velanai thevu, punkuduthevu,


5 comments:

 1. இனியா, பரமன்Wednesday, April 24, 2019

  This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 2. Anujan saravananWednesday, May 22, 2019

  This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. "கனடாவில் இரகசியமாகப் பெண்களை படம் பிடித்த இளைஞன் கைது"
  இதுவும் ஒரு மன நோயாளனாக இருக்குமோ?

  ReplyDelete
 4. news:விகாரைக்கு அருகில் அமைந்துள்ள பதுலு ஓயாவில் இருந்து சுமார் 2 கிலோ கிராம் நிறையுடைய மிதக்கும் கல் ஒன்று விகாரையின் தேரர்கள் சிலரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  கருத்து: அட நம்ம ஜனங்க இந்த கல்லை கண்டிருந்தா , அது கடவுளின் அற்புதம் என்று விளம்பரப்படுத்தி ,குறிகள் போட்டு ,அதுக்கு பூஜையே பண்ணி அசத்தியிருப்பாங்க

  ReplyDelete