பண்டைய தமிழரின் சமயம்-பகுதி 03:

[The religion of the ancient Tamils]
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
Compiled by: Kandiah Thillaivinayagalingam]
 கி .பி  600 ஆண்டுகளுக்கு பின்...கிறிஸ்திற்கு பின் 300 ஆண்டுவரை நீடித்த சங்க காலம் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு பொன் காலம்.இதற்கு பின் சில நூற்றாண்டுகளிற்கு,களப்பிரர் ஆட்சியில் இலக்கிய ஆரவாரமில்லாமல் ஒரு அமைதி நிலைவியது.கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழ் மன்னர்களின் ஆட்சி வீழ்ந்தது. களப்பிறர் எனப்படும் கன்னடர், தெலுங்கர், உள்ளிட்ட,வேற்றுமொழி இனத்தவர் கி.பி. 250 முதல் 575 வரை முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தின் பெரும்பகுதிகளைக் ஆட்சி செய்தனர்.மேலும் களப்பிரர்கள் சமண சமயத்தையும், பௌத்த சமயத்தையும் சார்ந்தவர்கள். தமிழ் வீசியெறியப்பட்டது. இதனால் ,இதை இருண்ட காலம்[கறுப்பு வரலாறு] என அழைப்பார். அதன் பின் வந்த நாலு நுற்றாண்டுகளை கொண்ட பக்தி காலத்தில்(கி  பி600-கி  பி1000/6- 10th C.AD),பக்தி இலக்கியங்கள்  பெருமளவில் தோன்றியது.வேறு எம்மொழியிலும்  தமிழில் தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை.பல முக்கிய,அறுபத்தி மூன்று நாயன்மார்கள் அருளிய,சைவ இலக்கியங்களும் பன்னிரு ஆழ்வார்கள் அருளிய வைஷ்ணவ இலக்கியங்களும் இந்த காலத்தில் தோன்றின. அவை நம்பி ஆண்டார் நம்பியாலும் நாதமுனிகளாலும் முறையே பன்னிரெண்டு திருமுறையாகவும்[தேவாரம்] நாலாயிரம் திவ்விய பிரபந்தமாகவும்[பாசுரம்] தொகுக்கப்பட்டன.மேலும்  கிறிஸ்திற்கு பின் 1700 ஆண்டுவரை "மதம்" என்ற சொல் இருக்கவில்லை.

சைவ சித்தாந்தம் தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும்.டாக்டர் போப்"சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக,சைவம் தென் இந்தியாவில் இருந்து,தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக இருந்தது "என்று கூறியுள்ளார்.ஏறக்குறைய கி.மு. 3000 ஆண்டு தொடங்கி கி.மு. 1500 வரை, இன்று ஈராக் எனப்படும் நாட்டுப் பகுதியில் சுமேரு மொழி பேசிய மக்கள் வாழ்ந்தனர். கடந்த 150 ஆண்டுகளாக பற்பல ஆகழ்வாய்வுகள் செய்து அறிஞர்கள் பலர் அந்த சுமேரு மக்களின் இலக்கியங்களை வெளிக்கொணர்ந்து

வாசித்து பொருளும் கண்டு அச்சிட்டு வெளியிட்டுள்ளனர்.அவற்றில் ஒன்றே" ஏண் உடு அன்னா"[[Enheduanna] ] எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய பாடலாகும்.கொற்றவையே இங்கு 'ஈனன்னா'[Inanna] எனப்படுகின்றார் என முனைவர் கி.லோகநாதன், அறிவியல் பல்கலைக்கழகம், பினாங்கு பல சான்றுகளுடன் கூறுகிறார். கொற்றவை ஒரு சுயாதீனமான தெய்வம் என்றும் ,பின்னர் சிவாவுடன்  இணைந்தார் /விவாகம் செய்யப்பட்டார் என்றும் கற்றறிவாளர்கள்  கூறுவார்கள்  பிராமண வேதத்தில் சிறந்த/பெரிய   பெண் தெய்வம் என்ற பொதுக் கருத்து அங்கு இல்லை ,ஆனால் இந்து சம வெளி நாகரிகத்திலும் ,பின்னைய இந்து சமயத்திலும் உண்டு.அஸ்கோ பர்போலா[Asco Parpola.]  என்ற அறிஞர்  தமது புத்தாகத்தில் துர்காவிற்கும் ஈனன்னாவிற்கும் தொடர்பு இருப்பதை எடுத்து காட்டியுள்ளார் .மேற் கூறிய பாடலின் மூலத்தை வெளியிட்டவர் William W.Halloவும் J.J.A. Van Dijk என்பாரும் ஆகும். 'The Exaltation of Inanna' என்பதே இங்கு சுமேருத்தமிழில் 'ஈனன்னை சீர்பியம்' எனப்படுகின்றது.18 பாடல்களை கொண்டது இது . பிற்காலத்தில் சைவசித்தாந்தமாக வளர்ந்துள்ள சைவத்தின் நல்லவோர் வளர்ந்த நிலையை இப்பாடல்கள் காட்டுகின்றது. இதின் முதல் பாட்டை மட்டும் தமிழில் கிழே தருகிறேன்."அனைத்து சக்தி அன்னை, தெள்ளிய ஒளி வடிவினள்

மிகப் பிரகாச ஒளியையே ஆடையாக தரித்துள்ள அழகிய மாது;

விண்ணிலும் புவியிலும் இருக்கும் அனைத்தாலும் விரும்பப்படுகின்றவன்.

ஆண் எனப்படும் மகாதேவனின் நங்கை; சிகையில் பெரும் பெரும் அணிகளை  சூட்டியவள்.

மெய்யான அழகோடு விளங்குபவள்; உயர்ந்த பதவிக்கு தகுந்தவள்.


ஏழுவகை மெய்களை கைகளில் (வளையல்களாக) அணிபவள்;[மெய்: சக்தி)]

என் அன்னையே, பெரும் பெரும் மெய்களை சிரசில் கட்டுபவள் நீயேதான்
அனைத்து மெய்களையும் எடுத்து உடம்பில் அணிகளாய் அணிகின்றாய்:

மெய்களை திரட்டி மெய்யான உன் கவசாக நெஞ்சில் தைத்துக் கொள்கின்றாய்"


[[Curiously both Sumerians and Hindu ever depicted their "gods" taming lions.]]
சைவ சித்தாந்தம் என்னும் தத்துவப் பிரிவு சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுகின்ற சமய நெறி. இது சைவ சமயத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது. சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப் பொருள்படும். (அந்தம் – முடிவு). அதாவது ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப்பட்டது சைவசித்தாந்தம்

தொடரும்....
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள் →
Theebam.com: பண்டைய தமிழரின் சமயம் /பகுதி 01

1 comments:

  1. உருத்திரசிங்கம் நாகேஸ்வரிTuesday, May 19, 2020


    மதம் என்றால் என்ன? சைவசமயம், இந்து சமயம் இவை இரண்டுக்கும் உள்ள வேறு பாடுகள் என்ன? சைவ சமயத்தின் மூல நூல் பகவற் கீதை எனப்படுகிறது. ஆனால் அந்த நூலில் மகாபாரதப் போரில் கண்ணன் அர்ச்சுனனுக்கு சொல்லிய உபதேசம் தானே இருக்கிறது? மகா பாரதப் போரே பல யுத்த தர்மங்களை மீறியுள்ளது. ஒன்றும் புரியவில்லை. நன்றி

    ReplyDelete