சிரிக்க.... சில நிமிடம்

                                      நகைச்சுவை=ஜோக்ஸ்


-01-

மனைவி: இன்றைக்கு நீங்க  என்னை 'அழகே'ன்னு கூப்பிடலையே?

கணவன்: ஆமா,அப்படி உன்னை கூப்பிடும்போது அயலவங்களுக்கு ரொம்ப தலையிடியாம். அதுதான் நிறுத்தி விட்டேன்.

 

-02-

மனைவி: உங்களுக்கு  என்ன சாப்பிடக் கொண்டுவரணும்?

கணவன்: எது இருந்தாலும்  நீ சமைக்காதது இருந்தா கொண்டுவா!!

 

-03-

மனைவி: நான் சமைத்த சாம்பார் எப்படி?

கணவன்: ரொம்ப நல்லா இருக்குயாராவது விருந்தாளி வந்தா அவனை கெதியாய் கலைக்கணும் எண்டால் அவனுக்குக்  கொடுக்கலாம்.

 

-04-

மனைவி: நான் சமைத்த காபி குடிச்சுக்கொண்டு  என்னோட முகத்தை  கண்ணாடியில பார்த்துட்டே இருந்தேனுங்க!

கணவன்: கடைசியாக ஒருமுறை உன்ர முகத்தை நீ பார்க்க்கணுமேன்னு ஒரு ஆசை வந்திருக்கலாம்.!!

 

-05-

மனைவி: உங்களுக்கு இன்றைக்கு என்ன surprise இருக்கு என்று சொல்லுங்கோ பார்ப்போம்?

கணவன்: இன்று எனக்கு, நீ சமைக்காத சாப்பாடு தரப்போகின்றாய்.

 

-06-

காதலி: எப்பவும் late வர்றே?

காதலன்: நிமிசத்துக்கு நிமிஷம் ரீல்ஸ்  இலை  உன் மூஞ்சிய பார்த்துப்   பார்த்து time waste ஆயிடுது..

 

-07-

மருமகள்: மாமி, நாம் உண்ட மிச்சங்களை உண்ண  நமக்கு ஒரு நாய்  வாங்கலாமா?

மாமி: அதுக்குத்தான் உன் மாமனாரே இருக்காரே!.

 

-08-

வாணி: உன் கணவர் உன் பிறந்தநாளுக்கு என்ன gift தந்தார்டி?

கோமதி: வாட்ஸப்பிலை ஒரு தங்க செயின் அனுப்பினாரடி.

 

-09-

போலீஸ்: பணம் திருடாத நீ ஏன் பொருட்களை மட்டும் திருடுறாய்?

கைதி:பணத்திற்கு இன்கம் ரக்ஸ் கட்டிடவேண்டி வரும் சார்!

 

-10-

நீதிபதி: உன் பக்கத்து வீடு எரியும்போது  நீ அங்கே என்ன பண்ணிட்டிருந்தே?

சாட்சி: Selfie எடுத்து Instagram upload பண்ணிக்கிட்டிருந்தேன் சார்!.

 

-11-

நீதிபதி: உன் பெயர் என்ன?

சாட்சி: அப்பா சொல்வது தண்டச்சோறு , அம்மா சொல்வது ஊர்சுற்றிஎது officialன்னு தெரியல சார்!

 

-12-

நீதிபதி: நீ உன்னுடைய  story சொல்லு.

சாட்சி: சரி சார்ஆனா என்னுடைய facebook இல போனா என்னுடைய story  நிறைய  இருக்கு சார்!

 

-13-

நீதிபதி: நீ அந்த மனிதரை அடித்தாயா?

குற்றவாளி: இல்லை சார்.

சாட்சி: அடிச்சாரு சார்ஆனா நான் video எடுக்கும்போது pose கொடுத்தார்.

 

-14-

நீதிபதி: நீ அந்த மனிதரை துரத்தினியா?

குற்றவாளி: jogging சார்.

சாட்சி: Joggingனா அவங்க பாக்கெட்டுல எதுக்கு கை போட்டே?

குற்றவாளி: அது யோகா  சார்!

நீதிபதி:!!!

 

-15-

வாடகை: என் roomக்கு fan இருக்கென்று வாடகைக்கு தந்தீர்கள், ஆனால் fan க்கு சுவிட்சை காணவில்லையே?

வீட்டுக்காரன்: ஆமாஆனா switch  இருக்கு எண்டு  நீங்க கேட்கவுமில்லை, நான் சொல்லவுமில்லையே!!

 

-16-

மனிதன்: “கடவுளே, என் பிரச்சினைகளை தீர்க்க முடியுமா?”

கடவுள்: “பிரச்சனையே நீதானே! தீர்த்துவிடுகிறேன்!

 

-17-

மனிதன்: “கடவுளே, நான் அதிகமாக நோய்வாய்ப்பட்டுள்ளேன்., சுகம் வர செய்துவிடு

கடவுள்: “அதுக்கு நீ போகவேண்டிய இடம் இதுவல்ல, மருத்துவமனை!”

 

-18-

மனிதன்: “கடவுளே, நான் என் கடினமான இந்த  வாழ்க்கையை மாற்ற வரம் கொடு

கடவுள்: 'முதல்ல இந்த இடத்தைவிட்டு மாறு'

 

-19-

அரசன்: “நாடு முழுக்க கல்வி முக்கியம்.”

மந்திரி: “அரசே , முதலில் பள்ளிகளை திறக்கலாமா?”

அரசன்: “சரி, ஆனால் மாணவர்கள் வர மறுக்கிறார்களே!”

மந்திரி: “அப்போ நாமே படிப்போமே!”

 

-20-

காதலன்: “நான் உன் பேச்சில் lost ஆகிறேன்.”

காதலி: “அப்போ திரும்பிவர GPS தேவை என்கிறாய்?”

 

 

ஆக்கம்::செ . மனுவேந்தன்

No comments:

Post a Comment