நகைச்சுவை=ஜோக்ஸ்
-01-
அப்பா: “மகனே, படிப்பை கவனிக்காவிட்டால் வேலை கிடைக்காது.”
மகன்: “கவலை வேண்டாம் அப்பா, நான் உங்களைப் போலவே எப்போதும் குழந்தைகளைப் படிக்க சொல்லும் வேலை செய்கிறேன்!”
-02-
மனைவி: “நான் கோபப்படும்போது என்ன செய்வாய்?”
கணவன்: “அடுத்த வீட்டுக்குப் போய் உன் கோபம் அடங்கும் வரை காத்திருப்பேன்!”
-03-
ஒரு வீட்டில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, பேரன் எல்லோரும் சேர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
திடீரென டிவி ரிமோட் வேலை செய்யவில்லை.
பாட்டி சொன்னார்: “இது எல்லாம் பேட்டரி போயிருக்கும்!”
அப்பா சொன்னார்: “இல்லை, இது பழைய ரிமோட் தான் காரணம்.”
அம்மா சொன்னார்: “நீங்க யாரும் சரி செய்ய தெரியாது.”
தாத்தா சிரித்துக்கொண்டு: “நான் முயற்சி செய்கிறேன்” என்றார்.
பேரன் மட்டும் சின்ன சிரிப்புடன், “டிவி தான் ஆஃப் பண்ணப்பட்டிருக்கு, யாராவது ஸ்விட்ச் on ஆக்குங்க!” என்றான். அனைவரும் சிரித்தார்கள்.
-04-
மனைவி: “நான் அழகா இல்லையா?”
கணவன் சிரித்துக் கொண்டு: “நீ அழகாக இல்லையென்றால், உலகத்தில் வேறு யாரும் அழகாக இருக்க முடியாது.”
மனைவி மகிழ்ச்சி அடைந்து: “அதானே பார்ததேன்"
கணவன் தனக்குள் மெதுவாக: “இல்லைன்னா சாப்பாடு மேல கை வைக்கிறாய் , அதனால்தான் பாராட்ட வேண்டியிருக்கு..”
-05-
கடையில். மனைவி ஆடைகள்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கணவன்: (சலித்து) மூன்று மணி நேரமாச்சு… இன்னும் ஒரு உடை கூட தேர்வு செய்யலையே!
மனைவி: (அமைதியாக) நல்லா பார்ப்பேன்னா தான் சரியா வரும்.
கணவன்: (கோபமாக) ஒரு நாள் முழுக்க வீடு கூட வாங்கலாம், ஆனா நீங்க ஓரு உடை கூட வாங்க முடியல!
மனைவி: (சிரித்து) வீடு வாங்கினா அதுக்குள் வைக்க உடை தேவைப்படுதுதானே!
கணவன்: (தலையைக் கையில் அடித்து) ஐயோ!
-06-
சமையலறையில். பாத்திரங்கள் குவிந்து கிடக்கிறது.
மனைவி: (கோபமாக) கொஞ்சம் உதவி செய்ய முடியாதா? பாத்திரம் கழுவுங்க!
கணவன்: (சோம்பல்) அதெல்லாம் பெண்களின் வேலை…
மனைவி: (சருக்கி) அப்படியா? இனிமே சாப்பாடு கூட பெண்களுக்கே!
கணவன்: (அதிர்ச்சி) ஐயோ! சரி சரி… நாம இருவரும் சேர்ந்து கழுவுவோம்.
-07-
அரசியல்வாதி: (வாக்காளர் வீட்டில்) உங்களுக்கு வீடு, வேலை, சாலை எல்லாம் செய்து தருவேன்!
வாக்காளர்: (சிரித்து) சார், கடந்த தேர்தலிலும் இதே வாக்குறுதி சொன்னீங்க…
அரசியல்வாதி: (குழப்பமாக) ஆமாம்… அப்போ ப்ராக்டிஸ் பண்ணினேன், இப்போ ரியல் ஆக சொல்லி வருகிறேன்!
-08-
போலீஸ்: (கோபமாக) ஏன் திருட்டு பண்ணின?
திருடன்: (அழகாக) சார், உங்க சம்பளம் குறைஞ்சு இருக்கேன்னு அடிக்கடி கவலைப்படுறீங்க. அதனால நான் உங்களுக்காக வேலை பண்ணினேன்!
போலீஸ்: (திடுக்கிட்டு) எப்படி?
திருடன்: நீங்க என்னை பிடிச்சா உங்களுக்கு புரமோஷன் , சம்பளம் உயரும்., பிடிக்கலேன்னா எனக்கு சம்பளம்!
-09-
ஆசிரியர்: வீட்டுப்பாடம் செய்தாயா?
மாணவர்: செய்தேன் சார். அப்புறம் நாய் அதைச் சாப்பிட்டுடுச்சு!
ஆசிரியர்: சரி, அடுத்த தடவை நாய்க்கு ஒழுங்காய் சாப்பாடு போட்டுவிட்டு செய்!
-10-
ஆசிரியர் : மீன்கள் ஏன் பேசுவதில்லை?
மாணவன்: தண்ணிக்குள்ள உங்க தலையை அமிழ்த்தினால் உங்களால பேச முடியுமா சார்?
ஆசிரியர்:...!!
ஆக்கம்::செ . மனுவேந்தன்
No comments:
Post a Comment