“நாட்டுப்புற பக்கம் வந்துப் பாருங்க”

 



நாட்டுப்புற பக்கம் வந்துப் பாருங்க


“நாட்டுப்புற பக்கம் வந்துப் பாருங்க
நாலா பக்கமும் தெரியும் வயல்வெளிகள் 
நாவூற குழைச்ச சாதகம் உண்ணலாம் 
நாணிக் கோணும் விறலியும் காணலாம்!"

"கற்றாழை முள்ளும் காலில் குத்தும்   
கருவாட்டு குழம்பும் மூக்கை இழுக்கும் 
கள்ளம் இல்லா வெள்ளந்தி அவர்கள் 
கருப்பு சாமியின் பக்தர்கள் இவர்கள்!"   

"விற கொடிக்கப் காட்டுக்கும் போவாள் 
விதைப்புக் காலத்தில் மண்ணையும் கிளறுவாள்
விரிச்ச நெற்றி இவள் வீராப்புக்காரி 
வித்தைகள் காட்டிடும் குறும்பு பொண்ணு!"

"கிராமம் எங்கும் பண்பாடு அழைக்கும்
கிணற்று நீரும் ஒற்றுமை காட்டும் 
கிளுகிளு தரும் தண்ணீர் குடங்கள் 
கிண்கிணி இசைக்கும் உலக்கை குத்து!" 

 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

அத்தியடி, யாழ்ப்பாணம்]

No comments:

Post a Comment