நகைச்சுவை=ஜோக்ஸ்
-01-
போலீஸ்: சாமியார் மாதிரி ஏன் வேடமிட்டே?
திருடன்: சாமியார் பணம் எடுத்தா “தானம்”னு சொல்லுவாங்க சார்! யாருமே குற்றமாக நினைக்கவே மாட்டாங்க சார்!
-02-
மனைவி: தீபாவளிக்கு உங்களுக்கு என்ன வேண்டும்னு சொல்லுங்க!
கணவன்: சமாதானம்!
-03-
காதலி: என்னை நீங்க யாரோட ஒப்பிட்டுப் பார்ப்பியள்?
காதலன்: AI லேயே உன்னை யார் மாதிரியென்னு கேட்டேன், பயத்தில மறுமொழி வரல!
-03-
காதலி: என்னை நீங்க ஏன் நேசிக்கிறிங்க?
காதலன்: மற்றவரெல்லாம் busy, நீ மட்டும் free யாய் இருந்தே!
-04-
காதலி: நம்ம காதல் எப்போதாவது முறிந்திடுமா?
காதலன்: ஆமாம், Data plan முடிஞ்சதும்!
-05-
மாமி: நீ சமையல் பண்ணுறது ரொம்ப slow! ஆக இருக்கு.
மருமகள்: ஆமா மாமி, YouTube சரியான slow ஆக load ஆகுது!
-06-
எஜமானி: நீ என் வீட்ல வேலை பண்ணுறேனு யாரிடமும் சொல்லக்கூடாது!
வேலைக்காரி: சரி, Facebook story யும் போடக்கூடாதா?
-07-
போலீஸ்: நீ முதன் முதலில் செய்த திருட்டு என்ன?
திருடன்: என் மனைவியின் Facebook password தான் ஐயா!
-08-
நீதிபதி: உன் மனைவி கொலை செய்யப்படும்போது நீ எங்கே இருந்தாய்?
சாட்சி: WhatsApp groupல தான் ஐயா!
-09-
போலீஸ்: ஏன் வாங்கிக்குள்ளை புகுந்தாய்?
திருடன்: ATM முன்னால crowd அதிகமா இருந்துச்சு ஐயா!
-10-
முதலாளி: நீ வேலை செய்யற மாதிரி தெரியேல்லை!
தொழிலாளி: நீங்களும் சம்பளம் கொடுக்கற மாதிரி இல்லை ஐயா!
-11-
மனைவி: நீங்க எப்போ வீட்டுக்கு வந்து சேருவீங்க?
கணவன்: உங்கு டிவி நாடகம் ஆரம்பிச்சதும்!
-12-
மனைவி: என்னங்க! நான் அம்மா வீடு போய் 3 நாளிலை வந்திடுவேன். அதுவரைக்கும் உங்க போனிலை நான் அனுப்பியிருக்கிற வாய்ஸ் மசெஸ்ஸை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டு இருங்க!
கணவன்: என்ன அனுப்பியிருக்காய்?
மனைவி: உங்களுக்கு boring ஆய் இருக்குமெண்டு 3 நாளைக்கும் ஏச வேண்டியதெல்லாம் பேசியிருக்கேன். மறக்காமல் கேளுங்க! இல்லாவிடில் என் நெஞ்சே வெடிச்சிடும்!
-14-
போலீஸ்: ஏன் உன் காரினை இவ்வளவு வேகமா ஓடினாய்?
டிரைவர்: என் மனைவி காரிக்குள்ள இருந்து ஏச ஆரம்பிச்சுட்டாங்க சார்… அதிலிருந்து தப்பணும் போல இருந்துது. அதுதான்...!
-15-
நோயாளர்: டாக்டர், எனக்கு தூக்கம் வரமாட்டேங்குது!
டாக்டர்: YouTube-ல என் interview பாரு, உறங்கிடுவாய்!
-16-
தாதி: டாக்டர், அந்த நோயாளர் தூங்கிக்கொண்டே படுத்திருக்கிறார். விழிக்கவே மாட்டேங்கிறார்!
டாக்டர்: அப்போ, அவருடைய fees எவ்வளவு என்று நாம கதைச்சது அவர் காதில விழுந்திட்டு போல!
இந்த மாட்டு ஊசியை ஏற்றிவிடு!
-17-
டாக்டர்: உனக்கு stress அதிகம். Rest எடுக்கணும்!
நோயாளர்: தீபாவளி 3 நாள் வீட்டில தானே டொக்டர் நான் இருந்தேன்.
டொக்டர்:சரி, மருந்து தேவையில்லை. நாளையிலிருந்து வேலைக்கு போக எல்லாம் சரிவரும்.
-18-
நோயாளர்: டாக்டர், எனக்கு சாப்பிட மனசு வரல!
டாக்டர்: உங்க வீட்டில யாரு சமைப்பார்கள்?
நோயாளர்: என் கணவர் தானுங்க!
டொக்டர்: எதற்கும் உங்க அம்மா வீட்டில போய் நின்று பாருங்கள்!
-19-
நோயாளர்: டாக்டர், என்னுடைய blood குரூப் என்ன?
டாக்டர்: சற்றுப் பொறுங்கள்! AI ஐ கேட்டுச் சொல்லுறேன்
-20-
மனைவி: நான் இல்லாம, நீங்கள் வாழ முடியுமா?
கணவன்: நிச்சயமா முடியாது… ஏனென்றால் வீட்டுத் திறப்பு உன்னிடம் தானே இருக்கு!
ஆக்கம்::செ . மனுவேந்தன்
No comments:
Post a Comment