tag:blogger.com,1999:blog-3559326856048819077.post6546390353868721899..comments2024-03-23T18:48:01.129-04:00Comments on Theebam.com: நான் சொல்வதெல்லாம் உண்மையா?Adminhttp://www.blogger.com/profile/09727781325103467447noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3559326856048819077.post-10685703196173772752022-03-19T19:25:30.038-04:002022-03-19T19:25:30.038-04:00பொய் 5: ஆண்ட பரம்பரை:
"ஆண்ட பரம்பரை மீண்டும்...பொய் 5: ஆண்ட பரம்பரை:

"ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை?" இது ஒரு வீர வசனம்.

இங்கு கூறுவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாமே எம்மை பல பல ஆண்டுகளாக ஆண்டோம், அந்நியர் ஆட்சி தவிர. நாம் இன்னொரு தேசத்துக்கு அடிமையாக வில்லை என்பதே !!

இது வீர வசனம் என்பதை விட, மக்களுக்கு விளங்க படுத்தும் ஒரு வசனமும் கூட!!!

சேர சோழ பாண்டியர் ஆகிய மூவேந்தர்கள் தவிர, மற்றவர்களும் ஆண்டாளும், உதாரணமாக முத்தரையர் (களப்பிரர்களின் கிளைக்குடியினர், பல்லவர் [தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் எனும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு, எனினும் .வின்சென்ட் ஸ்மித் என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார்], நாயக்கர் [நாயக்கர் என்பவர்கள் ஆந்திரா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் வாழும் சில சமூகங்கள் பயன்படுத்தும் பட்டம் ஆகும். இவர்கள் தென்மாநிலங்களில் மக்கள் தொகையில் அதிகமாக காணப்படுகிறார்கள்.] போன்றோர்கள், ஆனால் அவர்கள் எல்லோரின் காலத்திலும் தமிழ், தமிழர் பண்பாட்டில் எந்த தொய்வும் ஏற்படவில்லை, உதாரணமாக களப்பிரர் காலத்தில் தமிழ் மொழியும் இலக்கியமும் நன்கு வளர்ந்தது ஒரு சான்றாகும். மேலும் வட நாட்டு அசோகன் கூட கைப்பற்ற முடியாமல் இருந்தது, தென் மாநிலங்களில் , தமிழகம் மட்டும் என்பது வரலாறு. [Considered by many to be one of India's greatest emperors, Ashoka expanded Chandragupta's empire to reign over territory stretching from present-day Afghanistan in the west to present-day Bangladesh in the east. It covered the entire Indian subcontinent except for parts of present-day Tamil Nadu]

மேலும் இவர்கள் எல்லோரும் தென் இந்தியர்கள், ஒரே திராவிட இனம், ஒரு மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள், அதில் தமிழ் முதன்மையாக இருந்தது. அத்துடன், அன்றைய சூழலில், அவர்கள் எல்லோரும் ஒரு இனமாக [திராவிடம்] கருதப்பட்டது. உதாரணமாக, கி மு இரண்டாம் நூற்றாண்டுக்கும் கி பி மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட [variously dated to be from the 2nd century BCE to 3rd century CE] மனுஸ்மிருதி [மனுதரும சாத்திரம்] 10ஆம் அத்தியாயம் 44 செய்யுளில் திராவிடம் என்ற சொல் காணப்படுகிறது.

“பௌண்டாம், ஔண்டரம், திராவிடம், காம்போசம், யவநம், சகம், ..... இந்தத் தேசங்களை ஆண்டவர்களனைவரும் மேற்சொன்னபடி சூத்திரனாய் விட்டார்கள்"

இங்கு எல்லா தென் இந்தியரையும் ஒரு இனமாக, ஒரே சொல்லில் தான் குறிக்கிறார்கள். மேலும் குமரிலப்பட்டர் (சமசுகிருதம்: कुमारिल भट्ट), கி. பி., ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அசாம் பகுதியை சேர்ந்த, வேத தத்துவ தரிசனங்களில் ஒன்றான மீமாம்சை தர்சன அறிஞர் ஆவார்] இவரும் தனது Tantravārttika வில் திராவிடர் [Dravida] என்றே குறிப்பிடுகிறார்.

தமிழ் இனம் என்பது ஒரு மாபெரும் இனம்....மிகப்பெரிய வரலாறு...பண்பாடு...நாகரீகம் ஆகியவற்றைக் கொண்டு விளங்கிய/விளங்கும் ஒரு இனம் அது. அத்தகைய நாகரீகத்தை வெறும் மன்னர்கள் மட்டுமா கட்டி இருப்பார்கள். இல்லை...!!! பல்வேறு அறிஞர்கள், ஞானிகள், வீரர்கள், கலைஞர்கள், சான்றோர்கள் போன்ற மேலும் பல சிறந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் தமிழ் நாகரீகம். அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கிய ஒரு இனம் தமிழ் இனம்.

குறிப்பாக மன்னர்கள் யாராக இருந்தாலும் அங்கு ஆண்டது தமிழ்! அது தான் முக்கியம். மற்றது அவர்களின் பண்பாடும் ஆகும்!!

அப்படிப்பட்ட ஒரு இனம் இன்று ஒன்றும் இல்லாது கிடக்கின்றது. அது கண்ட சிகரங்கள் வெறும் வரலாறாய் உறைந்துக் கிடக்கின்றது. இந்நிலையில் தான் தமிழ் இனத்திற்கு உரிமைக் கொண்டாடும் குரல்களை நாம் காண வேண்டி இருக்கின்றது. அவ்வளவுதான்.கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-42201285383273140252022-03-19T11:47:46.038-04:002022-03-19T11:47:46.038-04:00பொய் 4: தமிழ் மொழி.[தொடர்கிறது]
மேலும் உலகின் முத...பொய் 4: தமிழ் மொழி.[தொடர்கிறது]

மேலும் உலகின் முதல் எழுதப்பட்ட மொழியான சுமேரிய மொழியின் [இந்த மொழி ஏனோ இங்கு குறிப்பிடப்படவில்லை] மற்றும் சிந்து வெளி நாகரிக மொழியின் மூல வேர் சொற்கள் , இன்று நடைமுறையில் உள்ள தமிழில் கூடுதலாக இருப்பது மொழியியல் ஆய்வாளர்களால் சான்றுகளுடன் சுட்டிக் காட்டப்படுள்ளதும் குறிப்பிடத் தக்கது.

'தெலுங்கு, கன்னட மொழியினரும் தாங்கள் மகாபாரதத்தில் கூறப்பட்ட்டவர்கள் என்றும், சிந்துவெளி நாகரிக காலத்தவர்கள் (5000 வருடங்கள்) என்று கூறிக் கொள்வதும் வழக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமோ இல்லையோ!'

எல்லோருக்கும் தெரியும் , ஏன் என்றால், அவையும் தமிழும் ஒரே குடும்பம்

ஆனால் அவை சமஸ்கிரதம் அதிகமாக சேர்க்கப்பட்டவை. அவ்வளவுதான்!

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே மூத்த மொழி"

ஒன்று முழுமையாக பாடலை அறியவேண்டும். இரண்டாவது எந்த இலக்கியமும், புராணமும் சிலவேளை அழகுக்காக மற்றும் உணர்ச்சிக்காக பொய் சேர்ப்பது வழக்கம்

இந்த வரி இடம்பெற்றுள்ள முழு பாடலை பார்ப்போம்:

“பொய் அகல, நாளும் புகழ்விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் – கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!”

'புறப்பொருள் வெண்பா மாலை' இலக்கண நூல் கி.பி 9 ஆம் நூற்றாண்டு.

இப்பாடலின் விளக்கத்தை பார்ப்போம்:

கல் என்றால் 'மலை' என்ற பொருளும் உண்டு
மண் என்றால் 'வயல்' என்ற பொருளும் உண்டு!
எடுத்துக்காட்டு:
1) கல் உயர் தோள், கிள்ளி பரி = மலை போன்ற உயரமான தோள் உடைய கிள்ளிச் சோழன்
2) கல் இயங்கு கருங் குற மங்கையர் = மலையில் இயங்கும் கருப்பு நிறக் குறத்திப் பெண்கள்
3) மணிநீரும் “மண்ணும்” மலையும் அணிநீழற்
காடும் உடையது அரண் (குறள்)
அதாவது மண் வளம்
இப்போ, இவற்றை சேர்த்து பாருங்கள்
கல் தோன்றி = மலை தோன்றி
மண் தோன்றா = வயல் தோன்றா காலத்தே..
கையில் வேல்-வில்-வாளோடு, முன்பு இருந்த = ஆதி குடிகள்!

அவன் கையில் = கல்/ எஃகு/ இரும்பால் ஆன வேலும் வாளும் தானே இருந்தது (Natural Evolution Process!)
இதைதான் இப்பாடல் கூறுகிறது.
முல்லை/குறிஞ்சி தோன்றி,
மருதம் தோன்றாக் காலத்தே..
கையில் வாளோடு தோன்றிய ஆதி குடிகள் தமிழர்கள் என்று.

அவ்வளவுதான் !
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3559326856048819077.post-54406760264856592252022-03-19T11:46:33.412-04:002022-03-19T11:46:33.412-04:00பொய் 1: இந்தியா & பொய் 3: இந்து மதம் ----
வர...பொய் 1: இந்தியா & பொய் 3: இந்து மதம் ----

வரலாற்று மற்றும் சான்றுகள் மூலம் இவை பொய்தான்

இந்து[Hindu] எனும் சொற்பதம் முதலில் பாரசீகரால் ['பெர்ஷியன்'/ Persians] சிந்து[Sindu] நதியை குறிப்பதற்கு பாவிக்கப் பட்டது.அவர்களால்,"S" என்ற சொல் சரியாக உச்சரிக்க முடியாமல்,"S" க்கு பதிலாக "H" ஆக உச்சரிக்கப் பட்டு அது "இந்து"["Hindu "]வாக மாறியது என்கிறார்கள் மொழி அறிவியல் வல்லுநர்கள்.பாரசீகர்களின் ஆப்பு வடிவ கல்வெட்டும் மற்றும் புனித அவெத்தா[ஜெந்த் அவெஸ்தா/Zend Avesta] வும் ,"இந்து" என்ற சொல் புவியியல் பெயர் என்றே குறிப் பிடுகிறது,இது ஒரு மதம் சார்ந்த சொல் என்று அது குறிப்பிட வில்லை. கி.மு.546 ல், ஆசியாவில் ஆழமாக காலுன்றி இருந்த பாரசீக சாம்ராஜ்யம்[பேரரசு] இந்தியா உப கண்ட த்தின் எல்லை வரை நீடிக்கப் பட்டது .மற்றும் பாரசீக மன்னன் டரியஸ் [Darious 1] இன் படையிலும் இந்தியர்கள் பணி யாற்றினார்கள்.இந்த மக்களை பாரசீகர்கள் இந்து ["Hindus"] என குறிப் பிட்டதாக வரலாறு கூறுகிறது.அதே போல வேறு சில ஆதாரங்கள் மூலம் கிரேக்கர்கள் இலகுவாக உச்சரிக்கும் பொருட்டு, பேரரசர் அலெக்சாந்தர் [ Alexander the Great ] சிந்து நதியை இந்து நதி என "S" ஐ தவிர்த்து இந்து[Indus] நதி என குறிப்பிட்ட தாகவும் அறிகிறோம்.கி மு 325 இல் பேரரசர் அலெக்சாந்தர் இந்தியாவிற்குள் படை எடுத்த போது, அவருடைய மாசிடோனிய [Macedonian forces] படையினர் இந்து நதிக்கு கிழக்கே உள்ள பிரதேசத்தை,இதனால், இந்தியா என அழைத்தனர். அதற்கு முன்பு,வேத கால பெயர் பாரத்[பாரத/Bharat ] ஆகும்.

ஆகவே,இந்து என்ற மூல[வேர்] சொல்,சிந்து என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து பெறப் பட்ட ஒன்றே.சிந்து ஒரு பண்டைய நதியின் பெயர். அவ்வளவு தான்.மற்றும் படி ஒன்றும் இல்லை.என்றாலும் வேறு ஒரு பார்வையில்,இந்து [Hindu] என்ற சொல்லிற்கு வேறு சில பொருளும் உண்டு.

பொய் 4: தமிழ் மொழி.

இது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது.

ஏன் என்றால் இன்றைய அண்மைக்கால முக்கியமாக, கீழடி [Keezhadi], சிவகலை [Sivakalai in Thoothukudi district of Tamil Nadu] , மற்றும் இலங்கை பூநகரி ஆய்வுகள் பல உண்மைகளை கொண்டு வருகின்றன, உதாரணமாக A carbon dating analysis of rice with soil, found in a burial urn at Sivakalai in Thoothukudi district of Tamil Nadu, by the Miami-based Beta Analytic Testing Laboratory has yielded the date of 1155 BC, indicating that the Thamirabarani civilisation dates back to 3,200 years. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்noreply@blogger.com