சிரிக்க.... சில நிமிடம்

 

நகைச்சுவை=ஜோக்ஸ்



-01-


மனைவி: இந்த வீட்டுல யாருக்கும் வேலைசெய்யத்  தெரியாதுநான்தான் பண்ணனும்!!

கணவன்: அதான் உன்னை கல்யாணம் நான் பண்ணிக்கிட்டேனே

 

-02-

மனைவி: காதலிச்சபோது பிடிச்ச என்னுட குரல் இப்ப மட்டும் உங்களுக்கு  ஏன் பிடிக்கல?

கணவன்: காதலிச்சபோது பேசின  மெல்லிய volume  இலிலை இப்ப கூட பேசினால் பிடியாமலா போகும்?


-03-

கணவன்: நீ எப்ப பார்த்தாலும் கூகிள் - தான்!

மனைவி: உன்கிட்ட பேசறத விட கூகிள்- லை பேசினா  ஒழுங்கா உடன  பதில்  குடுக்குது!

 

-04-

மனைவி: இந்த புடவை  வாங்கலன்னா நான் சாப்பாடு உண்ணமாட்டேன்!

கணவன்:  உனக்குத்தான் fasting தேவை என்று டாக்டர் சொன்னா கேட்க மாட்டாயே! இனியாவது இரு.

 

-05-

மனைவி: என் சமையல்  எப்படி இருக்கு?

கணவன்: .......!!!

மனைவி: லைவ்  insurance வைச்சுருக்கிறியள்  தானே. பயப்பிடாமல் சாப்பிடுங்கோ!!

 

-06-

காதலி: நீ என்னை எதுக்காக காதலிக்கிற காதலிக்கிற எண்டு சொல்லி பின்னால திரியுறாய்?

காதலன்: என்னால உன்னை  விட முடியல!

காதலி: ரொமான்டிக்?

காதலன்: இல்லை, நீ என்கிட்ட  10,000 ரூபாய்  கடன் வாங்கிருக்காய்!

 

-07-

காதலி: நாளைக்கு என் Birthday! என்ன Surprise?

காதலன்: நான் நாளைக்கு Phone Switch Off பண்ணுறேன்அதுதான் Surprise!-

 

-08-

மாமி: காபி கொஞ்சம் கசக்குது

மருமகள்: உங்கள் பையன் மாதிரி தான் மாமிகொஞ்சம் Strong தான்!

 

-09-

மாமி: நா சமைச்சத தான் நம்ம வீட்டில் சிறந்த சாப்பாடு!

மருமகள்: அதான் மாமி, உங்க பையன் Hotel-லதான் Order பண்டுறாரு!

 

-10-

நண்பர் 1: நீ ஏன்  எப்பவும் எனக்கு இவ்வளவு ஜோக் சொல்றே?

நண்பர் 2: நீ சிரியாத போதெல்லாம் உன்ர முகத்தை பார்க்கச் சகிக்க முடியலை.!

 

-11-

ஆசிரியர்: என்னுடைய கேள்விக்கு டக்கு டக்கு என்று  பதில் சொல்!

மாணவன்: Teacher, Google மாதிரியெல்லாம் என்னால சொல்ல முடியாது!

 

-12-

ஆசிரியர்: ஏன் என்னுடைய  பாடம் கவனமாகக் கேட்கவில்லை?

மாணவன்: Teacher, அதெல்லாம் போனில வொய்ஸ் ரெகார்டிங் இல இருக்கு. வசதியான நேரம் போட்டுக் கேட்கிறேன் டீச்சர்.

 

-13-

போலீஸ்: நீ ஏன் இப்படி? அடிக்கொருக்கா கைது செய்யவேண்டி உள்ளதே! திருந்த மாட் டாயா ?

திருடன்:  ஐயா! நாம திருந்தினால் உங்க வேலை போயிரும்? 

 

-14-

நீதிபதி: சொல்லு, நீ குற்றவாளியா? சுற்றவாளியா?

குற்றவாளி: அது உங்கட தீர்ப்பிலதான் இருக்கு ஐயா!

 

-15-

நீதிபதி: நீ ஏன் அப்படி சிரிக்கிறாய்?

குற்றவாளி: நீதிமன்றம் காமெடியா இருக்குதுன்னு தான்!

 

-16-

அயல் வீட்டு பெண்:நீ நேற்று தந்த சோறு கறி  ருசி இல்லையே!

அயல் வீட்டு பெண் 2: அதனாலதான் புண்ணியமா போகட்டும் என்று உனக்கு தந்துதவி செயதேன்!

 

-17-

அயல் வீட்டு பெண்: நீ எப்பவும் சிரிச்சுப் பேசுறாய்!

அயல் வீட்டு பெண் 2: உன்கிட்ட கடன்பட அது தான் என் ஆயுதம்!

 

-18-

வண்டியில் அமர்ந்தவர்: ஐயா, உங்களிடம் GPS இருக்கா?

டிரைவர்: இல்ல, நானே வழி தவறி, வந்த வழியில தானே திரும்பிப் போய்க்கொண்டு இருக்கிறன்!

 

-19-

விமானத்தில் பயணி: சார், இந்த சில்லறை change ஆகுமா?

ஏர்ஹோஸ்டஸ்: காசை தருக.அடுத்த ஸ்டாப் வந்ததும் மாற்றித் தருகிறேன்.

 

-20-

ஆசிரியர்: "நீங்க எல்லாம் ஆம்பிள்ளைங்களா பொண்ணுங்களா?"

மாணவிகள்: “''ஓடவிட்டுப் பாருங்கள் சார், எங்களை யாரென்று புரியும்''”

 😂😂😂😂😂😂 

ஆக்கம்::செ . மனுவேந்தன்

No comments:

Post a Comment