‘’விழியற்ற தராசு"
"விழியற்ற தராசு நீதி தராது
அழிவுற்ற சமூகத்துக்கு விடை கொடுக்காது!
வலியற்ற வாழ்க்கை உண்மை அறியாது
நலிவுற்ற மக்கள் கவலை புரியாது!"
"உறவற்ற குடும்பம் நிம்மதி அடையாது
இரவற்ற உலகம் தூக்கம் கொள்ளாது!
திறனற்ற செயல் வெற்றி சூட்டாது
உரமற்ற பயிர் பலன் தராது!"
"ஈரமற்ற உள்ளம் கருணை காட்டாது
தரமற்ற செயல் நன்மை ஈட்டாது!
நிறைவற்ற நட்பு அன்பைக் கொட்டாது
சிறகற்ற பறவை காற்றில் பறக்காது!"
🙈🙉🙊
அன்பு செலவானால் ஆதரவு வரவு....!"
"அன்பு என்பது கடமை அல்ல
அக்கம் பக்கத்தாருக்கு நடிப்பதும் அல்ல
அற்பம் சொற்பம் தேடுவதும் அல்ல
அறிவுடன் உணர்ந்த பாசம் அதுவே!"
"பருவம் மலர காதல் நாடும்
படுத்து கிடக்கையில் பரிவு தேடும்
பரிவு பாசம் காதலும் அன்பே
பலபல வடிவில் எல்லாம் ஒன்றே!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No comments:
Post a Comment