சிரிக்க.... சில நிமிடம்

 நகைச்சுவை=ஜோக்ஸ்

-01-

மனைவி: உங்களை என்ன பண்ணுற எண்டு , எனக்கு ஒண்டும் புரியலை!

கணவன்: அதே கஷ்டம் தானடி எனக்கும்!

 

-02-

கணவன்: நீ இல்லாம நானே இல்லையடியம்மா!.

மனைவி: ! எனக்கு புரியுது.. வாடகை வீட்டுக்காரங்க இன்றைக்கு வாரேன்னு சொன்னதுக்குத்தான் இந்த டயலாக்ஆக்கும் !

 

-03-

மனைவி: என் make-up எப்படி இருக்கு?

கணவன்: அங்க பார்த்தியா? Mirror கூட உன் அழகைக் கண்டு மிரண்டு அசையாம நிக்குது!

 

-04-

மனைவி: நானும் திடீர்னு வேலைக்குப் போறேன்னு சொன்னா என்ன பண்ணுவே?

கணவன்: ஒரு கோவில் கெட்டிபம் வைத்து கொண்டாடுவேன்!

 

-05-

போலீஸ்: நீ திருட சென்ற  வீட்டில் யாரும் இல்லையா?

திருடன்: இருந்தாங்க  சார், நான் கதவைத்தட்டி bank யிலிருந்து வந்திருக்கேன் எண்டதும் , எடுத்த லோன் நினைச்சு எல்லாரும் பின்பக்கத்தால ஓடி போயிட்டாங்க சார்!

 

-06-

போலீஸ்: ஊர்ல எத்தனையோ வங்கிகள் இருக்க நீ ஏன் அரசியல் வாதி  வீட்ல திருடப் போனாய்?

திருடன்: வங்கியில இல்லாத பணம் அங்கை கிடைக்கும் எண்டுதான்!

 

-07-

போலீஸ்: ஏன் சாமி கோயிலில நகை திருடுனே?

திருடன்: உண்ணா சொத்து மண்ணாகிப் போகக் கூடாதே எண்டுதான்  சார்!

 

-08-

ஆசிரியர்: இந்த கவிதை யாரால் எழுதப்பட்டது?

மாணவன்: WhatsApp group- யாரோ Forward பண்ணிருந்தாங்க டீச்சர்!

 

-09-

ஆசிரியர்: Exam-க்கு என்ன தயார் பண்ணீங்க?

மாணவன்: மொபைல் , சார்ச்சர் எல்லாம் ரெடி சார்.

 

-10-

ஆசிரியர்: இந்த தவணை எப்பிடி போச்சுது?

மாணவன்: (அலுப்புடன்)எங்க சார்! வந்த சினிமாப் படங்கள் பார்த்து முடியலை, அதுக்கிடையில பரீட்சை வந்திட்டுது.

 

-11-

மாமி: அளவுக்கு மிஞ்சின makeup ஏன் பண்ணுறாய்?

மருமகள்: அப்பதான் பாக்கிறவங்க, இங்க  மாமியார் கொடுமை இல்லையென்று நம்புவாங்கள்.

மாமி:(இனியும் வாய் திறப்பாளா மாமி)

 

-12-

மாமி: உங்க அம்மா  உங்களை  நல்லாய் வளர்த்தாங்களா?

மருமகள்: ஆமாம் மாமிபெரிய ஆசையோட , அன்போட வளர்த்தாங்கஅப்புறமா வேள்விக்கிடாயை நேர்ந்து விட்டமாதிரி உங்க பையனுக்குத் தானம் பண்ணிட்டாங்க!

 

-13-

பாட்டி: உங்க உடுப்பு ரொம்ப  கம்மியா  இருக்கும்மா?

இளஞ்சிறுமி: இருக்குதா பாட்டிஅதுதான்  நிறைய likes வந்துச்சே!

 

-14-

பாட்டி: வீட்டில உள்ளவர்களோட  சிரிச்சுப் பேச   மாட்டியா?

பேத்தி: பாட்டி, ரீல் லை போய்ப்பாருங்க, வகை வகையான  என் சிரிப்புக்கெல்லாம் எப்பிடியெல்லாம் காமென்ஸ் வந்திருக்கென்னு!

 

-15-

பாட்டி: அடியே, உன்ர மேற்சட் டையில  கை இல்லையே!

பேத்தி: நான் ஒன்னும் கைவெளங்கதவளில்லை , என்கிட்ட இருக்கிற இரண்டு கையும் எனக்குப்  போதும்  பாட்டி.

 

-16-

முட்டாள்: வங்கியில  போய் பணம் எடுக்கப் போறேன்

நண்பன்: கணக்கு வைச்சுருக்கிறியா?

முட்டாள்: இல்லை, கண்(துப்பாக்கி) வைச்சிருக்கேன்!

 

-17-

முட்டாள்: நான் இன்னைக்கு காலையில பேய் பார்த்தேனேடி!

நண்பி: எங்கேயடி?

முட்டாள்: நம்ம கண்ணாடியில  தான்…!

 

-18-

நீதிபதி: நீ குற்றவாளியா?

குற்றவாளி: இல்ல சார், என்னை வீட்டில கூட என் மனைவி என்னை ஒரு  குற்றவாளி மாதிரி தான் நடத்துறாங்க!

 

-19-

நீதிபதி: நீதிமன்றத்துக்கு இன்றைக்கு  நீ  தாமதமாய்  வந்ததுக்கு காரணம் என்ன?

குற்றவாளி(வெட்கத்துடன்)அது சார்நான் காலையில் திருடப் போன  வீட்டுல காதலில வீழ்ந்திட்டன் சார்!

 

-20-

நீதிபதி: உனக்கு யார் வக்கீல்?

குற்றவாளி: ChatGPT தான் சார்.

 

ஆக்கம்::செ . மனுவேந்தன்

 

No comments:

Post a Comment