சிரிக்க.... சில நிமிடம்

நகைச்சுவை=ஜோக்ஸ்



-01-

கணவன்: இப்படி ஒவ்வொரு நாளும் என்னை திட்டறே! உனக்கே சலிப்பு இல்லையா?

மனைவி: யோகா மாதிரி தான் இதுவும்ஒரு வித மன அமைதி கிடைக்குது!

 

-02-

மனைவி: என்கிட்ட பேசணும்னு உங்களுக்கு  தோன்றுவதில்லையா?

கணவன்: தோன்றும்ஆனா நீயே எல்லாம் பேசி பேசி முடிச்சுடுவியே!

 

-03-

மனைவி: (வீட்டுக்குள் வந்துகொண்டே) என்ன ஆச்சரியம் , வீடு ரொம்ப அமைதியாயிருக்கே?

கணவன்: அதுதான் நீ வந்திட்டியே! இனி எங்க ...?

 

-04-

காதலி: என்னைப் பார்க்கும் போதெல்லாம்  உன் மனசு என்ன சொல்லுது?

காதலன்: “போன் silent வைக்கணும், என்று சொல்லுது.

 

-05-

காதலன்: உன் வீட்டார் நம்ம காதல் தெரிஞ்சா என்ன செய்வாங்கனு நினைக்கிறே?

காதலி: Wi-Fi password மாதிரி மாற்றிடுவாங்க!

 

-06-

காதலி: காலேஜ்  முடிஞ்சு  நம்ம கல்யாணம் பண்ணிய பிறகு  வாழ்க்கை எப்படி இருக்கும்?

காதலன்: அங்கேயும் நான் மாணவன்தான்

காதலன்: அதெப்படி?

காதலி: கல்யாணம் பண்ணினா நீ எனக்குப்  ப்ரொவெஸ்ஸர் ஆயிடுவாயே!

 

-07-

மருமகள்: மாமி, மாமாவின் பிறந்தநாளுக்கு  gift வாங்கிட்டீங்களா?

மாமி: வாங்கலை, செய்யப்போறேன்.

மருமகள்: என்ன செய்யப்போறியள்?

மாமி:ஒன்றும் பேசாம வாயை மூடிக்கொண்டு இருக்கப்போறன்.

 

-08-

மருமகள்: மாமி, உங்கள் காலத்தில் காதல் கடிதம் எப்படி அனுப்புவீர்கள்?

மாமி: post அனுப்புவோம் டி!

மருமகள்: நாங்க screenshot எடுத்து forward பண்ணிடுவோம்!

 

-09-

மாமி: மருமகளே, நீங்க இன்று சமைச்சது ரொம்ப நல்லா இருக்கு!

மருமகள் (மகிழ்ச்சி): நன்றி மாமி!

மாமி: நம்ம வீட்டுக் பூனை கூட கிண்ணத்தில போட்டதை   மணந்திட்டு வெளியே போயி சாப்பிட்டது!  கொடுத்துவைச்ச சீவன் அது.

 

-10-

மருமகள்: மாமி, உங்களுக்கு ஒரு விருது கொடுக்கணும்!

மாமி: ஆச்சரியமா இருக்கு! எந்த விருது?

மருமகள்: “எதை செய்தாலும்  comment வைக்காமல் இருக்க முடியாத மாமி விருது!”

 

-11-

மாமி: நாங்க அந்த காலத்துல எல்லாம்பெரியவர்கள் சொன்னா கேட்போம்!”

மருமகள்: ஆமா மாமி, நாங்க இந்த காலத்துல “Google சொன்னா கேட்போம்!”

 

-12-

மாமி: நீங்க டயட்டிங் பண்ணுறீங்களாம்?

மருமகள்: ஆமா மாமி,டொக்டர் சொன்னபடி சோறு, கறி தொடுவதில்லை!

மாமி: அப்ப என்ன சாப்பிடுறீங்க?

மருமகள்: பிரியாணிதான் மாமி!

 

-13-

ஆசிரியர்: 10 வருடத்துக்கு பிறகு நீ என்னவாய் இருப்பாய்?

மாணவன்: 10 வயசு பெரியவனா இருப்பேன் சார்!!

 

-14-

ஆசிரியர்: ஏண்டா பரீட்சைக்கு ஒண்ணும் எழுதாம இருக்கிறாய்?

மாணவன்: நா exam எழுதலன்னா paper save ஆகுதே சார்… “Save Paper, Save Earth!”

 

-15-

ஆசிரியர்: உன் handwriting ரொம்ப மோசம்!

மாணவன்: பரவாயில்லை சார், நான் படிச்சு  doctor ஆகத்தானே வரப்போகிறேன்.

 

-16-

ஆசிரியர்: உனக்கு என்ன future plan?

மாணவன்: Result வந்த பிறகு தான் முடிவு  பண்ணுவேன் சார்

ஆசிரியர்: ஏன்?

மாணவன்: pass ஆனா engineer…, fail ஆனா சாமியார் !

 

-17-

ஆசிரியர்: நான் படிப்பித்த  இன்றைய ப்பாடத்தில  note எடுத்தியா?

மாணவன்: ஆமாம் சார் , voice note எடுத்தாச்சு!

 

-18-

ஆசிரியர்: உன் புத்தகம் எங்கே?

 மாணவன்: Google Drive டீச்சர் !

ஆசிரியர்: அப்போ நீயும் Drive போய் படிச்சிட்டு வா

 

-19-

மாணவன்:, டீச்சர் , நாளை test இருக்கா?

 ஆசிரியர்: ஆமாம்!

மாணவன்: அப்போ Wi-Fi password சொல்லுங்க டீச்சர்!

 

-20-

கண்டக்டர்: எங்கே போற?

பயணி: பொறுங்க , கூகிளை கேட்டுச் சொல்லுறன்.

கண்டக்டர்: அப்போ டிக்கட் எடுக்கவே இல்லையா?

பயணி: பொறுங்க , கூகிளை கேட்டுச் சொல்லுறன்.

கண்டக்டர்: ...!!!!

 

ஆக்கம்::செ . மனுவேந்தன்

No comments:

Post a Comment