சிரிக்க.... சில நிமிடம்

                                    நகைச்சுவை=ஜோக்ஸ்



01-

தாய்: இன்றைய வரலாறு பாடம் எப்படி இருந்தது?

மகன்: ரொம்ப நல்லா இருந்தது அம்மா, ஆனா ரீச்சர் கோபமா போனாங்க!

தாய்: ஏன் டா?

மகன்: அவங்க சொன்னாங்கஅலெக்ஸாண்டர் உலகையே வென்றவன்!”ன்னு. நான் கேட்டேன்அம்மா, அவன் World Cupயும் வென்றானா?”ன்னு 😅

தாய்: (சிரித்து) உன் கேள்விக்கு பதில் சொல்லனும்னா வரலாறு புத்தகத்தைக் கூட புதுசா எழுதணும்!

 

02-

தாய்: பாடசாலையால வரேக்கை ஏண்டா அழுதுகொண்டு வாறே?

மகன்: அம்மாஆசிரியர் சொன்னாங்க — “மாணவர்களுக்கு ஆறு மணித்தியாலம் நித்திரை போதுமாம்என்று!

தாய்: அதுக்கென்னடா அழுகிறாய்?

மகன்: அதுக்காக அல்ல அம்மாஎனக்கொரு சந்தேகம் வந்தது!

தாய்: என்ன சந்தேகம்?

மகன்: “ஆறு மணித்தியால நித்திரை வகுப்பிலையா? இல்ல வீட்டிலையா?” என்று கேட்டேன்

தாய்: 😳😳

மகன்: அதுக்கே ரீச்சர் கோபமா வெழுவெழு என்று அடிச்சாங்க! 😢


03-

ஆசிரியர்: “எழுத்துஎன்றால் என்ன?

மாணவன்: பேனாவால் எழுதுறதுதான் எழுத்து, மாஸ்டர்!

ஆசிரியர்: சரி, “மொழிஎன்றால்?

மாணவன்: வாயால் எழுதுறது மாஸ்டர்! 😅

ஆசிரியர்: (சிரித்து) உன் வாயை ஓர் நாள்பேனானு விற்கலாம் போல இருக்கு! ️😂


04-

ஆசிரியர்: நீ 100 ரூபாய் வைத்திருக்கிறாய். அதில் 50 ரூபாய் உன் பக்கத்தில் உள்ள  நண்பனுக்கு கொடுத்தால் எத்தனை ரூபாய் உனக்கு மீறும்?

மாணவன்: பக்கத்தில  நண்பனே இருக்க மாட்டான் மாஸ்டர்! 😎

ஆசிரியர்: 😳 (சிரித்து) அப்போ உனக்கு இனி கணிதம் வேண்டாம்மனதில சமன்பாடு போதும்! 😂


05-

மனைவி: இனிமேல் டயட் ஆரம்பிக்கணும்!

கணவன்: நல்லது தான்! ஆனா உன் டயட் பட்டியலில் என்ன இருக்கு?

மனைவி: காலைஇட்லி, மதியம்சாம்பார் சாதம், இரவுபீட்சா!

கணவன்: அதுக்கு பெயர் டயட் இல்லதீயட்! 🍕😂


06-

மாணவி 1: கம்ப்யூட்டர் வகுப்பு  எப்படிப்  போச்சு?

மாணவி 2: ரொம்ப பயமா இருந்தது!

மாணவி 1: ஏன்?

மாணவி 2: சின்ன வயசிலிருந்தே மெளவுஸ் என்றால் எனக்குப் பயம்😂


07-

ரோகி: டாக்டர், எனக்கு காலையிலிருந்து  சரியான தலையிடியாயிருக்கு!

டாக்டர்: நீ இரவு நன்றாகத் தூங்கினாயா?

ரோகி: ஆம், ஆனா கனவிலே என் கணவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.


08-

மனைவி: இண்டைக்கு எனக்கு ஒரு நல்ல ஆச்சரியமான செய்தி சொல்லுவீங்களா ?

கணவன்: நீ இண்டைக்கு  என் மேல எரிஞ்சு விழவில்லை என்றால்  அதுதான் ஆச்சரியமான செய்தி!


09-

மனைவி: என்னை ஏன் காதலிச்சீங்க?

கணவன்: நான் என்ன பாவம் செய்தேனோ தெரியலையே!


10-

மனைவி: எனக்காக ஒருமுறை  யோசிக்க மாட்டேங்களா?

கணவன்: பலமுறை யோசிக்கிறேன்  எப்படி உங்களுக்குக்  கோபம் வராமல் நான் இருக்கனும் என்று!


11-

மனைவி: இந்த வீட்டுல யாரு Boss?

கணவன்: (அடக்கத்துடன்) இருவரும்

மனைவி: எதிர்காலத்தை யோசிச்சு சரியாய் சொல்லுங்க!

கணவன்: நீங்கநீங்கதான்…!


12-

மன்னர்: பக்கத்து நாட்டில படையெடுக்க  அமைதியான வேளை என்ன என்று கூற முடியுமா அமைச்சரே?

அமைச்சர்: ஒவ்வொரு வீட்டிலும் கணவன் மனைவி  தூங்கும் இரவு நேரம் தான் மன்னா!


13-

அமலா: பக்கத்து வீட்டுக்காரி ஜிம்முக்குப் போகத்தேவை இல்லை.

கமலா: ஏன் அப்பிடிச் சொல்லுறாய்?

அமலா: அவள்தானே  தன் புருஷனை தினமும் பந்தாடுறாள்.


14-

சர்தார்: Doctor, என்னை யாரோ பின்தொடருற மாதிரியாக இருக்கு!

டாக்டர்: பரவாயில்லைஅது உங்க மனைவி தான்.


15-

சர்தார் மனைவி: என்னப்பா , உங்களு மூளையே இல்லையே!

சர்தார்: அதை கலியாண நாளே நீ எடுத்துட்டியே!


16-

சர்தார் மனைவி: நான் கோபத்துல பேசுறேன்!

சர்தார்: பிரச்சனை இல்லைநான் பயத்துல கேக்கறேன்.


17-

சர்தார்: நம்மல பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு.

மனைவி: எப்படி?

சர்தார்: நீ பேசிக்கொண்டே இருக்கிறாய், நான் அதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறன்!


18-

சர்தார் நண்பனுக்கு :“நேற்று இரவு எங்க வீட்டு கெட்ட வானிலை!”

நண்பன்: ‘’ இடிமின்னல், மழை வந்துதா?”

சர்தார்: “இல்லதாய் வீட்டால மனைவி வந்துட்டாங்க!”


19-

கட்சித் தலைவர்: இனிமேல் zoom இலதான் அரசியல் கூட்டம் என்று மக்களுக்கு அறிவியுங்கள்

தொண்டர்; ஏனுங்க இந்த முடிவு?

கட்சித் தலைவர்: அவங்க எறியிற செருப்புகள்,  கற்கள் அவங்கட கொம்பியூட்டர்  இனை   உடைக்கட்டும்.


20-

அப்பா: என் மகனுக்கு ஏன் சார் அடிச்சீங்க?

ஆசிரியர்:ரயில் பாதையில் ஏன் இரண்டு தண்டவாளம் எண்டு கேட்டால் 'ஒண்ணு  ஊருக்குப் போக, இன்னொன்று திரும்பி வர' எண்டு சொல்லுறான்.

அப்பா: ...!!!!!

ஆக்கம்::செ . மனுவேந்தன்

No comments:

Post a Comment