நகைச்சுவை=ஜோக்ஸ்
-01-
காதலி: நீ எப்போதும் late ஆகிறாய்!
காதலன்: உன் படத்தை பார்த்துக்கொண்டு என்னை மறந்திடுகிறேன். அதனால் !
-02-
டாக்டர்: "தினமும் ஒரு வேளை கஞ்சிதான் குடிக்க வேண்டும்."
நோயாளி: "எத்தனை நாளைக்கு டாக்டர்?"
டாக்டர்: "என்னிடம் செய்துகொள்ளும் வைத்தியத்திற்குப் பணம் கொடுக்கும் வரை. அப்போதுதானே என் பில் தொகை கொடுக்க உங்களிடம் பணமிருக்கும்?"
-03-
மனைவி தன் கணவனிடம் கேட்டாள்: "எனக்கு வயதாகி, வெயிட் போட்டாலும் இதே மாதிரி அன்பாக இருப்பீர்களா?"
கணவன் சொன்னான்: "இப்போவே அதைத்தானே செய்துகொண்டிருக்கிறேன்!"
-04-
"உன் மாமியார் அடிக்கடி ஆஸ்பத்திரிக்குப் போய் எதுக்கு வாயில்
தையல் போட்டுக்கறாங்க?"
"அவங்கதான் வாய் கிழியப் பேசுவாங்களே!"
-05-
மனைவி : எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும் வாங்கியிருக்கீங்களே ஏன் ?
கணவன்: இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும் . ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான்!
-06
கணவன் ஆபிஸிலிருந்து போனில் மனைவியிடம் தொடர்பு கொண்டு
பங்கஜம், இன்னைக்கு முதன் முறையா சமையல் பண்ற... ஒத்துக்கறேன். அதுக்காக ஆபிஸ் டைமில் போன் பண்ணி வத்தக்குழம்பு எப்படி வைக்கிறதுன்னு கேட்டா எப்படி சொல்றது?
-07-
மனைவி = என் பிறந்த நாளைக்கு பால் பாயாசம் மட்டும் போதும் என்று கூறுகிறீர்களே ஏன்?
கணவன் = அன்றைக்கு மட்டுமாவது அதை நீ செய்யமாட்டாயா என்றுதான்.
-08-
கணவன் = என்ன விமலா திடீர்னு நீயே சமையல் பண்றேங்கற?
மனைவி = உங்க சமையல் கை பக்குவத்தை பார்த்தாங்கன்னா விருந்தாளிங்க இரண்டு நாள் கூட இருந்திடுவாங்க அதான்....
-09-
மனைவி கணவனிடம்
எத்தனை தடவை சொல்றது ... பையன் ஹோம் ஒர்க்கை ஆபிசில் தூங்கிக்கிட்டே செய்யாதீங்கன்னு... பாருங்க... டீச்சர் பையனோட டயரியில.. ''பார்த்து தூங்காம ஹோம் ஒர்க் பண்ணிட்டு வாடான்னு''' எழுதியிருக்காங்க..
-10-
கணவன் = எதுக்கு விமலா .... பத்து தேயிலைக் கரண்டியை கையில எடுக்கிறாய்?
மனைவி = சாம்பாருக்கு பத்துக் கரண்டி மிளகாய்தூள் போடனும்னு போட்டிருக்கே அதான்...
-11-
இன்ஸ்பெக்டர் ஏன் கவலையா இருக்கார்?
நம்ம கேடி கபாலி அவர் வீட்டிலேயே திருடிட்டு அவர்கிட்டயே மாமூல் கொடுத்தானாம். இவரும் பழக்க தோஷத்துல வாங்கிட்டாராம். இப்ப ஃபீல் பண்றார்.
-12-
போலிஸ் 1. என்ன அண்ணே ஒருத்தனை வாய ஊதச்சொல்லி பார்த்திட்டு அழுதிட்டு வர்றீங்க
போலிஸ் 2. எவனுமே கள்ளச்சாராயம் குடிக்க மாட்டேங்கறானுங்க பின்ன எப்படிய்யா மாமூல் வரும்.
-13-
இன்ஸ்பெக்டர் : யோவ் கான்ஸ்டபிள் 502 ன்னா என்னய்யா ஜெயிலுக்குள்ளயிருக்கிற கேடி உனக்கு சல்யூட் அடிக்கிறான்..
கான்ஸ்டபிள் : எனக்கும் அவனுக்கும் ஒரே நம்பர் சார்.. யூனிபார்ம் தான் வேற.... அதான் சார்.
-14-[ஊழல் தேசம்]
மேடையில் (தலைவர் தொண்டனை பார்த்து)
எத்தனை மாலைக்கு பணம் கொடுத்தே
தொண்டன் : பதினைந்து மாலைக்கு தலைவரே
தலைவர் : பின்ன எப்படிய்யா பத்து மாலைதான் எண்டு பில் வந்திருக்கு?
தொண்டன் :[புன்னகையுடன்]அது பில் ஐயா , ஆனால் வழமைபோல 5 மாலை தானே தேவையென்று 5 மாலை தான் வந்திருக்கு தலைவரே
-15-
அரசியல்வாதி மேடையில்
நான் மழைக்காக பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியது கிடையாது. உண்மைதான்.. காரணம் எப்பொழுதும் நான் குடையுடன்தான் செல்வேன் என்பதை மாற்றுக்கட்சி தோழருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.
-16-
ஒருவர் : கோயில் கட்ட 500 ரூபா போதுமா? எப்படி?
மற்றவர் : முதல்ல ஒரு உண்டியலும் , ஒரு சூலமும் வைத்தாலே போதுமுங்க. அப்புறம் உண்டியல் பணத்திலயே கோபுரமும் சிலைகளும் வந்துடுங்க.
-17-
மனைவி:என்னங்க என் பல் ரொம்ப வலிக்குது?
கணவன்:அப்படி என்ன வலுவா கடிச்ச அமலா?
மனைவி:உங்க அம்மாவைத்தான்.
-18-
பெண் 1 என்னது... உங்க மாமியார் கால்ல விழுந்ததுக்கு கோவிச்சுக்கிட்டாங்களா?
பெண் 2 ஆமா.... அவங்க கால்ல விழுந்தது, என் கையில இருந்த அம்மிக்குழவி!
-19-
பெண் 1. என் புருஷன் சாமியாராகப் போறார்ன்னு தோணுதுடி,
பெண்2. எப்படி சொல்றே?
பெண்1. சண்டைக்குப்பின்,' என் கால்ல உன்னை விழ வைக்கிறேன்டி' ன்னு கோவமா சொல்லிட்டு போயிட்டார்டீ.
-20-
பிச்சை 1 :
நேத்து ராத்திரி முழுக்க உன்னை காணாமே . . . எங்க போயிருந்த ?
பிச்சை 2 : அதுவா . .ராத்திரி நான் தாஜ்ஹோட்டலில டின்னர் சாப்பிட போயிருந்தேன். .
பிச்சை 1 : என்னது . . . . தாஜ்ஹோட்டல்ல டின்னரா! எப்புடி?
பிச்சை 2 : நேத்து ஒரு புண்ணியவான் 100 ரூபாய் கொடுத்தாரு. .நேரா ஹோட்டலுக்குப் போனேன் . 1000 ரூபாய்க்கு சாப்பாடு ஆர்டர் பண்ணினேன். சாப்பிட்டதும் பில் வந்துச்சா. . எங்கிட்ட பணம் இல்லேன்னு சொன்னேன் .
உடனே போலீசுக்கு போன் பண்ணி , போலீஸ்காரன்கிட்ட என்னை ஒப்படைச்சான் . ஹோட்டல விட்டு வெளிய வந்ததும் 50 ரூபாய அவன்கிட்ட கொடுத்தேன் . என்ன விட்டுட்டான் . எப்பூடீ ???
பிச்சை 1:………!!!!
தொகுப்பு::செ . மனுவேந்தன்
No comments:
Post a Comment