“தன்மானம்” & ''உயர்ந்த பண்பு'' -கவிதைகள்




“தன்மானம்

"தன்மானம் தழைக்க தற்சார்பு ஓங்கும்

ஓங்கிய எண்ணம் மனதில் பதியும்

பதிந்த பெருமிதம் துணிவு தரும்

தருவது எதையும் தெரிந்து எடுப்போம்

எடுத்த கொள்கையில் திடமாய் நிற்போம்!"

 

"நிற்கும் ஒன்றில் வளர்ச்சி இருக்கும்

இருக்கும் ஒன்றை பேசுதல் சிறக்கும்

சிறக்கும் கருத்து எதிலும் உதவும்

உதவும் வாய்ப்புக்கள் தூக்கி ஏற்றிடும்

ஏற்றிடும் ஏணியாய் நிற்பதே தன்மானம்!"

⇔↔⇔↔⇔↔⇔

''உயர்ந்த பண்பு''

பரந்த இதயத்தில் முயற்சியின் வலுவில்

உறுதியான அலையாக சக்தி பிறக்குமே!

உலகிற்கு உதவ கொடுக்கும் கையை

உன்னத பெருமையாக உலகம் போற்றுமே

வசதி செல்வம் மகத்துவம் அல்லவே!"

 

"உழைப்பில் இதயங்கள் என்றும் ஒளிருமே

மற்றவர்களையும் உயர்த்த உயரமாக நிற்குமே!

அடுத்தவரின் வலியை துடைக்க முயலுமே

ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு அழுத்தத்திலும் உதவிடும் மகிழ்வே உயர் பண்பாகுமே!"

 ⇔↔⇔↔⇔↔⇔

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

அத்தியடி, யாழ்ப்பாணம்]

''பெத்தவங்க'' - குறும்படம்


Short Film With English Subtitles 2025 | SriniVasan | Jeeva | Ammu

  ஒவ்வொரு பிள்ளைகளும், தனக்கும் வயதாகும் நமக்கும் இந்த  நிலைமை வரும் என்று உணர்வார்களா?

சிரிக்க... சில நிமிடம்

நகைச்சுவை=ஜோக்ஸ்



01.

அம்மா: அடுத்தவாரம் டாக்டரிடம் போகவேணும்..

அப்பா: ஏன், என்ன ஆகுது?

அம்மா: நான்  பொறுமையை  இழந்துவிட்டேன்!

 

02.

அம்மா: இந்தப் பையன் என்ன கேட்கிறான்னு பாருங்களேன்!

அப்பா: நானும் கேட்கல... நீயும் ஒன்னும் கேட்க்காம செஞ்சுடு!

 

03.

கணவன்: என்ன சாப்பாடு இப்பிடி அவிஞ்சதும் அவியாததுமாய்  இருக்கு?

மனைவி: YouTube- "உணவு செய்முறை" video-வை பார்த்து செய்யும்போது power cut  ஆச்சுது.

 

04.

மனைவி: என் அழகு குறைஞ்சிட்டா என்ன ஆகும்?

கணவன்: அப்போ நம்ம செலவு குறையும்!

 

05.

மனைவி: என்னை யாரும் புரியவே இல்ல!

கணவன்: என் வாழ்கையும் அதேதான்.

 

06.

மனைவி: நம்ம வாழ்க்கையை  ஒரு திரைபடமா எடுத்தா நல்லா இருக்கும்?

கணவன்: எடுப்பானேன், உன்னை கல்யாணம் செஞ்சதிலிருந்து நடிச்சுக்கிட்டுதானே இருக்கேன்!

 

07.

மாமி: பிரச்சனைகள் நிறைந்த உங்க கம்பெனியில மனேஜராய் எப்பிடி சமாளிக்கிறீங்க?

மருமகன்: உங்க மகளையே சமாளிச்சு பெற்ற அனுபவன்தான் மாமி.

 

08.

மாமி: நீ நெசமா என் பொண்ணு மாதிரி!
மருமகள்: அதனாலதான் உங்க பேச்சுக்கு Ignore பண்ணறேன்!

 

09.

வக்கீல்: நீதிபதி முன் நேர்மையாக இருங்கள்.

குற்றவாளி: நேர்மை இருந்தா இங்க வந்திருக்க மாட்டேனே சார்!

 

10.

வக்கீல்: சாட்சி இருக்கா?

குற்றவாளி: என் தங்கைஅவங்க எப்போமே என் பக்கம் தான் இருப்பாங்க!

 

11.

நீதிபதி: நீங்கள் நீதிமன்றத்தில் நன்றாகப் பொய் பேசினீர்கள்!

குற்றவாளி: அதான் lawyer ஆவதா இருக்கேன் சார்!

 

12.

போலீஸ்: ஏன் ATM-ல் திருடின?

திருடன்: ATM-ல் Balance இல்லைன்னு சொல்லிடுச்சு சார்அதான்!

 

13.

போலீஸ்: ஏன் அந்த வீட்டுக்கு மட்டும் மாசம் மாச திருடப் போனாய்?

திருடன்: அவங்க தான் மாசம் மாசம் gold offer ad முகநூலிலை போடுறாங்க சார்!

 

14. போலீஸ்: இப்பிடி டக்கென்று திருட  plan யார் உனக்குச் சொல்லித் தந்தாங்க?

திருடன்: Instagram reel தான் பாத்தேன் சார்அதில  "How to rob in 5 seconds!" எண்டு இருக்கு சார்.

 

15.

நீதிபதி: உங்க தப்பை ஏற்கிறீர்களா?

குற்றவாளி:  என் மனைவியோட கல்யாணம் பண்ணின  தப்பையே ஏற்றுக்கொண்ட எனக்கு,  இந்த தப்பை ஏற்கிறது சின்ன விஷயம் சார்!

 

16.

முதலாளி: உங்க dream என்ன?

தொழிலாளி: உங்க chair- நிம்மதியா தூங்குறதுதான்!

 

17.

எஜமானி: நா இல்லாத நேரம் தூங்கிட்டிருந்தியா?

வேலைக்காரி: இல்ல அம்மா,… கண் மூடினாலும்  கனவுல உங்க வீட்டையே துடைச்சுக்கிட்டுருந்தேன்!

 

18.

எஜமானி: வேலை நேரத்துல Mobile phone  பண்ணாதே!

வேலைக்காரி: சரி அம்மா.… “Silent mode” Instagram scroll பண்ணறேன்!

 

19

நண்பி 1: உன் boyfriend எப்பிடி இருக்காருடி?

நண்பி 2: mobile mute- வைச்சிருக்கிற அளவிற்கு நல்லா இருக்காராடி!

 

20.

நண்பன் 1: என் வாயில "I love you" வராம இருக்கப் பாத்துக்கிறேண்டா!

நண்பன் 2: அது நல்ல விஷயம் டாஉன்னால எந்தப் பொண்ணும்  பாதிக்கமாட்டாங்களடா!

 

தயாரிப்பு:செ. மனுவேந்தன்