மறந்த தந்தை — சிறுகதை


யாழ்ப்பாணத்தின் கடற்கரையோரம் நெய்தல் கிராமம். மாலை அலைகள் கரையை முத்தமிட, பறவைகள் தம் கூடுகளுக்குத் திரும்பின. சிவாசிதம்பரம் ஒரு பழைய நாற்காலியில் அமர்ந்து கடலை நோக்கினார். அவர் கண்களில் இருந்தது நடந்த சம்பவத்தின்  நினைவில்  ஆழ்ந்திருந்தார்..

அது.......

♧♧♧

அம்சமான அந்த வீட்டின் உள்ளே, விஜயனின்  மனைவி இவர்களுடன்  விஜயனின் தந்தை சிவாசிதம்பரமும்   வாழ்ந்து வந்தனர். இருந்தாலும்  அவரின் மருமகளுக்கு சிவாசிதம்பரமும் தங்களுடன் இருப்பது பிடிப்பே இல்லாதிருந்தது.

ஒருநாள்,

மாலா கைகளைக் கட்டிக் கொண்டு கோபத்துடன்  சோபாவில் உட்கார்ந்திருந்தாள்.

வேலையால்  வந்த விஜயனிடம் மாலா (எரிச்சலுடன்):
“என்னங்க , இப்படி எத்தனை நாளு? உன் அப்பா வீட்டிலே இருந்து நான் பணிவிடை செய்வது. அதுக்கா உங்களை எனக்கு அம்மா அப்பா கட்டி வைச்சாங்கள் . எனக்கு  நிம்மதியே கிடைக்கலே!”

என்று சினந்துகொண்டாள் .

விஜயன் (சந்தேகத்துடன்):
“அவங்க வயதானவர், என்ன பண்ணுறது? எங்கே போவேங்க அவர்?”

மாலா (கடுமையாக):
“ஏன் , இடமில்லை, ஒரு நல்ல முதியோர் இல்லம்னு இருக்கே!— அன்பு இல்லம். அங்கே எல்லா வசதியும் இருக்கு. அவருக்கும் நிம்மதி கிடைக்கும், நமக்கும் ஒய்வு கிடைக்கும்.”

அந்தச் சொற்கள் குத்தியபடி விஜயன் தூக்கம் இல்லாது புரண்டு ,புரண்டு அவனால் நிம்மதியாக  படுத்துக்க கொள்ள முடியவில்லை..

மறுநாள் காலையில், மகனின் வேண்டுகோளை ஏற்று சிவாசிதம்பரம் அமைதியாக கூடை ஒன்றில் தன் சில புத்தகங்களையும் பழைய புகைப்படத்தையும் வைத்துக்கொண்டார். அவரின் கண்களில் எதுவும் குற்றம் இல்லை— கேள்வி மட்டுமே.

மருமகளுடன் புறப்பட ஆயத்தமான மகனிடம் 

சிவாசிதம்பரம் (மெதுவாக):
“மகனே, எங்கே போறோம்?”

விஜயன் (தயக்கத்துடன்):
“உங்களுக்கு சிறிது ஓய்வா இருப்பதற்கு நல்ல இடம் ஒன்று  கிடைத்தது ,அப்பா. அங்கதான் போறோம்.”

வண்டி நகரத்தைத் தாண்டி அன்பு இல்லம் என்ற முதியோர் இல்லத்தை  அடைந்தது. அவ்விடத்தில் மலர்கள் அலங்கரித்து இருந்தன. பொறுப்பாளர் ஒருவன் புன்னகையுடன் வரவேற்றான்.

பொறுப்பாளர் (உற்சாகமாக):
“சிவாசிதம்பரம் அய்யா! உங்களை கண்டு கன காலம்., உங்கள் வருகை எங்களுக்குப் பெரிய மகிழ்ச்சி! உட்க்காருங்கள்!”

விஜயன் அதிர்ந்தான்.

விஜயன்:
“நீங்கள் என் அப்பாவை எப்படி இவ்வளவு நன்கு தெரிந்திருக்கிறீர்கள்?”

பொறுப்பாளர் (நெகிழ்ந்து):
“இருபத்தைந்து வருடம் முன்னாடி, என் மாமாவும் மாமியும்  ஒரு சாலை விபத்தில் இறந்தார்கள்.  அதில் கடுமையான காயங்களுடன் பிழைத்த அவர்களது ஒரே ஒரு மகனை வைத்தியசாலை எடுத்துச்சென்று தங்கள் செலவில் வைத்தியம்பார்த்துடன், அப்பிள்ளையை தங்கள் பிள்ளையாக வளர்ப்பதாகவும் தத்து எடுத்து அப்பிள்ளையை வளர்த்தனர். அதிலிருந்து அவர்மேல் எனக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. என்னுடைய அப்பா அம்மா செய்யாத கடமையை அவர்கள் இருவரும் இணைந்தே நிறைவேற்றினார்கள். உங்க அம்மாவை, அவர் வாழ்ந்த காலத்தில் நான் அவரை  வங்கியில் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவரது பொதுசேவை அறிவுரைகள்தான் என்னை இந்த முதியோர் இல்லத்தினை நடத்த வழிகோலியது. அதனால் அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.

சிவாசிதம்பரம் அமைதியாகவே  நின்றுகொண்டிருந்தார்.. விஜயன் சில நிமிடங்கள் உயிரே கேள்வியாக மாறியபடி இருந்தான். இதுவரை தான் பெற்றோர் என தான் எண்ணியவர்கள்  தன்னைக் காப்பாற்றிய தனது வளர்ப்பு தாய் தந்தையர் என்று உணர்ந்தான். தன்னை காப்பாற்றியதற்காக நன்றியுடன் நிற்கும் அவன் எங்கே! தன்னை  வளர்த்த தாய் ,தந்தையை மதியாத தான் எங்கே! என்று எண்ணியபோது அவன் மனம் கூசியது, நெஞ்சம் வெடித்தது, தாங்கமுடியாமல் ஓவென்று அலறியவண்ணம் வளர்த்த  தந்தையின் காலில் விழுந்தான். புலம்பினான். 

விஜயன் (உள்ளம் கலங்கி):
“அப்பா... மன்னிச்சிடுங்க. அப்பா! அது உங்க வீடு அப்பா! நாங்கதான் வெளியில போகவேணும்! நாங்க  உங்களுக்குத் தந்த வேதனைக்காக என்னை என்றும் மன்னிக்க முடியாது அப்பா!.”

மாலா(அழுதுகொன்டே): ஓம் மாமா! நானும் நிறைய உங்களுக்கு கஷ்டம் கொடுத்திட்டேன். எங்களை மன்னிச்சிடுங்க மாமா!

சிவாசிதம்பரம்: பிள்ளையள் அதை ஒண்டையும் நான் மனசில வைச்சிருக்கேல்லை. அதை அப்ப அப்பவே நான் மறந்திடுவன் 

மீண்டும் வீடு திரும்புகையில் இருவரினதும் புலம்பல்கள் சிவாசிதம்பரத்திற்கு அவர் நெஞ்சினை நன்றாகவே வருடிக்கொண்டன.

மருமகளின் பாயச விருந்துடன் அன்று மாலை ஒரு பெரும் நிம்மதி பெருமூச்சினை அவர்கள் விட்டதனை  சிவசிதம்பரம் கவனிக்காமலில்லை.

நடந்தவற்றை ஒருமுறை இரைபோட்டு தனக்குள் சுவைத்துக்கொள்ளவே முற்றத்தில் நாற்காலியில் அமர்ந்து கடலை நோக்கினார்.

'தான் தான் பரவாயில்லை, எத்தனை முதியோர்கள் பிள்ளைகளால் துரத்தப்பட்டு முதியோர் இல்லங்களில்......அவர்களின் கஷ்டங்களை அவர் எண்ணுகையில்... 

அவ்வேளையில் வானத்திலிருந்து பறந்து வந்த குருவி ஒன்று அவரருகே வந்து 'கீச் ,கீச் ,கீச் 'என்று கத்திச் சென்றது.

நினைவுகள்  கலைந்த அவர்  கை மணிக்கூடு பார்த்த அவர் நேரம் வந்ததை உணர்ந்து அமைதியாகவே படுக்கை நோக்கி சென்றார்.செல்லும்போது கடலையும் ஒருமுறை அவதானித்தார். ஆம்.அதுவும் அமைதியாகவே இருந்தது.

🔺🔺🔺🔺🔺🔺🔺 செ. மனுவேந்தன்🔺🔺🔺🔺🔺🔺🔺



0 comments:

Post a Comment