மனிதர்கள் பலவிதம்,
அவர்கள் கருத்துகள் ,சிந்தனைகள், வாழும் வழிகள், எண்ணங்கள் , ஒரு கருத்தினை விளங்கிக்கொள்ளும் வகைகள் என்பன
ஒவ்வொருவருக்கு ஒருவர் வித்தியாசமானவை.
என்னவென்று சொல்வதம்மா தமிழம்மா உன் பெருமையை இன்னிதழாய் தீபம் தினம் தீயாது ஏற்றியெழும்
மண்ணினிலே மொழிவிளக்கு மங்காது காத்துநிற்க
கண்ணினிதாய் வாழும் தமிழ் காலம்தோறும் ஒளிர்.
என்ன? ஏன்? எப்படி?
மெய்நிகர் மூலம் தீபம் இணையத்தளத்தின் 15 ஆண்டு நிறைவுவிழாவினை காணொளியில் காண்பதற்கு அழுத்துக
தீபம் – 15 ஆண்டுகள் ஒளி பரப்பிக்கொண்டிருக்கும் ஒரு இலக்கியப் பயணம்
2010 ஆம் ஆண்டு, ஐப்பசி மாதம் முதலாம் திகதி.
அன்று வரை ஒரு நூல்வகை சஞ்சிகையில் ஆசிரியராக இயங்கிய நான், உள்ளார்ந்த திருப்தியின்மையும் சலிப்பும் சேர்ந்த ஒரு கட்டத்தில் நின்றிருந்தேன். அந்தச் சலிப்பின் விளிம்பில்தான், இணையவெளியில் “தீபம்” என்றொரு சிறிய ஒளிவிளக்கை ஏற்றினேன்.
ஆம்…
அன்று ஏற்றிய அந்த ஒளிவிளக்கு, இன்று 15 ஆண்டுகள் கடந்து இன்னும் அணையாமல் ஒளிர்கிறது என்பதே எமக்கான பெருமை, மகிழ்ச்சி, நன்றியின் உச்சம். 🎂
ஆரம்பித்த முதல் மாதமே, எதிர்பாராத அளவில் கிடைத்த வாசகர்களின் அன்பும், ஆதரவும்தான் தீபம் பயணத்தின் முதல் எரிபொருள்.
உலகின் பல மூலைகளிலும் வாழும் தமிழர் வாழ் தேசங்களிலிருந்து, தினசரி எம்மை ஊக்கப்படுத்தி வரும் 13000-க்கும் மேற்பட்ட வாசகர்கள், எம்மைத் தளர விடாமல், இன்றுவரை உற்சாகத்துடனும் வெற்றியுடனும் நடத்தி வந்திருக்கிறார்கள். 🎂
விளம்பர வருவாய், பொருளாதார இலாபம் என்ற நோக்கமின்றி,
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் சமூகத்தின் சிந்தனை விரிவுக்கும் என்ற ஒரே கனவுடன் ஆரம்பிக்கப்பட்ட பல இணையச் சஞ்சிகைகள், காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் நின்று போனதை நாம் கண்டிருக்கிறோம்.
அத்தகைய சூழலில், எண்ணற்ற நெருக்கடிகள், இழப்புகள், தடைகள் மத்தியிலும், வாசகர்கள் தரும் மனதாரான ஊக்கமே எங்களின் மூலதனம் என்ற நம்பிக்கையோடு, இன்று தீபம் தனது 15-ஆவது அகவையை அடைந்திருக்கிறது என்பதை நன்றியுடன் நினைவு கூர்கிறோம். 🎂
தீபம் மற்ற இணையத் தளங்களிலிருந்து தனித்துவமாக விளங்கும் முக்கிய காரணம் அதன் உள்ளடக்க ஒழுங்கமைப்பு.
ஒவ்வொரு நாளும்,
திரை – கவிதை – கதை – ஆன்மிகம் – உளவியல் – உடல்நலம் – வரலாறு – விஞ்ஞானம் – நகைச்சுவை
என தினசரி திட்டமிட்ட ஒரு கட்டமைப்புடன், இலாப நோக்கமின்றி தொடர்ந்து வெளிவரும் உலகின் ஒரே ஒரு தமிழ் இணையச் சஞ்சிகை என்பதனை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறோம்.
இந்த 15 ஆண்டு பயணத்தில், தீபம் என்ற தளத்திற்கு உயிரூட்டியவர்கள் எங்கள் எழுத்தாளர்கள்.
அவர்களின் சிந்தனை, உணர்வு, நேரம், உழைப்பு இல்லையென்றால் தீபம் இன்று இந்நிலைக்கு வந்திருக்க முடியாது.
அனைத்து தீபம் எழுத்தாளர்களுக்கும், எங்களின் மனமார்ந்த நன்றியும் மரியாதையும் என்றும் நிலைத்திருக்கும். 🎂
தீபம் குடும்பத்தின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில்,
உங்கள் அன்பான வாழ்த்துக்களையும், கருத்துகளையும் கீழே உள்ள கருத்துப் பெட்டியில் பதிவு செய்யலாம்.
கதை, கவிதை, கட்டுரை, படித்தவற்றில் பிடித்தவை, பாடல் , ஆரோக்கியமான குறிப்புகள் பகிர்ந்து மகிழ வாருங்கள், கனடா , ஐரோப்பிய நாடுகள், இந்தியா, இலங்கை , அவுஸ்திரேலியா சேர்ந்த தமிழ் உறவுகள் வரவேற்கப்படுகின்றனர். இணையுங்கள்,
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக்
கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கநாடுகள், தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என
தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள்
இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு
நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின்
விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில்
கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில்
கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு
மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர்
கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது.
கிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன்
பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர்.தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று
சர்க்கரைப் பொங்கலுடன் 16
வகைக்
காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று
வீட்டில் அசைவ உணவுகளை தவிர்க்கும் வழக்கமும் உள்ளது.
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது.
உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து
உழைத்த கால்நடைகளுக்கும்,
தமது நன்றியையும்
மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல்
உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின்
பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
மேலும் சிறப்புமிகு தைமாதம் படித்து அறிந்திட கீழே உள்ள லிங்க் குகளை அழுத்துக
Theebam.com: ��→ இன்றைய செய்திகள்- ஞாயிறு -திரை/ / பாடல் திங்கள்-கவிதை / கதை செவ்வாய்- ஆன்மீகம் புதன் - மீள்பதிவு /தொழிநுட்பம் வியாழன்- உடல் நலம் / நடனம் வெள்ளி - சமூகம் சனி-நகைச்சுவை/கடிதம்/அறிவியல்
மேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 10 வருடங்களுக்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.