சிரிக்க... சில நிமிடம்

நகைச்சுவை=ஜோக்ஸ்



01.

ஆசிரியர்: ஓவியத்தில் எது மிகச் சிறந்த படம்?

மாணவன்: சினிமா படம் ஐயா!

 

02.

ஆசிரியர்: நீ ரொம்ப சும்மா இருக்கியே, ஏன்?

மாணவன்: ஐயா, நீங்கள்சும்மா இருன்னு தானே சொன்னீர்கள்!

 

03.

ஆசிரியர்: நிலவின் ஒளி எப்படி வரும்?

மாணவன்: கூரை உடைந்து விட்டால் தான் வரும் ஐயா!

 

04.

ஆசிரியர்: நீ இதுவரையில் என்ன கற்றுக்கிட்டா?

மாணவன்: நீங்கள் கற்றுத்தந்ததையே மறக்க கற்றுக்கொண்டேன் ஐயா!

 

05.

ஆசிரியை: உங்க வகுப்புக்கு  இன்னும் போகலையா?

ஆசிரியர்: Wi-Fi  தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை. அதுவரை காத்திருக்கேன்.

 

06.

ஆசிரியை: கம்ப்யூட்டர் பாடத்தை  ஏன் ரத்து பண்ணீங்க?

ஆசிரியர்: மாணவர்களே Wi-Fi password கேட்டுட்டாங்க! தெரியாதுன்னு எப்படி சொல்வது.

 

07.

தங்கை: அண்ணா கண்ணாடியில பார்த்தா என் அழகு தெரியுமா?

அண்ணன்: நல்லா தூங்குகனவில் தான் அப்படியெல்லாம்தெரியும்!


08.

தங்கை: அண்ணா, நான் அழகா இருக்கேனு எல்லாரும் சொல்றாங்க!

அண்ணன்: அது உன் முகத்தைப் பாக்காம சொல்லிட்டாங்க போல!

 

09.

அம்மா: (ஆத்திரத்துடன்)ஏண்டி! இவ்வளவும் ஏசினேன். காதில ஏறலையோ? திரும்ப ,திரும்ப ஏசுறதோ நான்

மகள்: அம்மா! Replay தேவையில்லை. எல்லாம்  Voice Record பண்ணி வைச்சுருக்கேன்!

 

10.

அப்பா: Exam எப்படி எழுதின?

மகன்: பேனா மை முடியும் வரைக்கும் எழுதினேனே அப்பா

 

11.

மருமகன் : மாமா, நான் ரொம்ப அப்பாவி!

மாமா: உன் Chat History காட்டு, அப்புறம் நம்புறேன்.

 

12.

தாத்தா: டிவி remote எங்கே?

பாட்டி: அதை என் பூரண கட்டுப்பாட்டிலை கொண்டுவந்துவிட்டேன்.

 

13.

பாட்டி: நீங்க கல்யாணம் ஆனபோதே இப்படிதான் இருந்தீங்களா?

தாத்தா: இல்ல, அப்போ கொஞ்சம் தலைமயிர் இருந்துச்சு!

 

14.

தாத்தா: WiFi ஏன்னா என்னது தெரியுமா?

பாட்டி: அதுவும் உன்ன மாதிரி தான் – connection இருக்கும் ,  ஆனா இருக்காது.

 

15.

மருமகள்: அம்மா, இன்றைக்கு நான் ஓய்வா இருக்கலாமா?

மாமியார்: நம்ம வீட்டுல "Rest"ன்னு word dictionaryலயே இல்ல!

 

16.

அணந்தி: நீங்க  என்னை முதல் தடவை சந்திச்சப்போ உங்களுக்கு எப்படி இருந்தது?

அத்தான்: என்னை மட்டுமல்ல என்னுடைய  எ டி எம் கார்ட்  பின் நம்பரையும் மறந்தேன்.

 

17.

அத்தான்: நீ என்னால சந்தோஷமா இருக்கியா?

அணந்தி: ஆம்… Especially நீங்க  வேலைக்கு  போறப்ப!

 

18.

அணந்தி: நீங்க  என்னை ரொம்ப miss பண்ணுறீங்களா?

அத்தான்: ஆமாநாடகம்  பாக்கும்போது தான்!

 

19.

போலீஸ்: ஒழுங்கா போயிரு இல்ல Arrest பண்ணுவேன்!

திருடன்: என் வீட்டு முகவரி சொல்லட்டா சார்?

 

20.

போலீஸ்: இந்த வீடு எதுக்கா வந்த?

திருடன்: Google Maps தப்பான வழி  தந்துச்சு சார்!

 

தயாரிப்பு:செ. மனுவேந்தன்

0 comments:

Post a Comment