“தன்மானம்” & ''உயர்ந்த பண்பு'' -கவிதைகள்




“தன்மானம்

"தன்மானம் தழைக்க தற்சார்பு ஓங்கும்

ஓங்கிய எண்ணம் மனதில் பதியும்

பதிந்த பெருமிதம் துணிவு தரும்

தருவது எதையும் தெரிந்து எடுப்போம்

எடுத்த கொள்கையில் திடமாய் நிற்போம்!"

 

"நிற்கும் ஒன்றில் வளர்ச்சி இருக்கும்

இருக்கும் ஒன்றை பேசுதல் சிறக்கும்

சிறக்கும் கருத்து எதிலும் உதவும்

உதவும் வாய்ப்புக்கள் தூக்கி ஏற்றிடும்

ஏற்றிடும் ஏணியாய் நிற்பதே தன்மானம்!"

⇔↔⇔↔⇔↔⇔

''உயர்ந்த பண்பு''

பரந்த இதயத்தில் முயற்சியின் வலுவில்

உறுதியான அலையாக சக்தி பிறக்குமே!

உலகிற்கு உதவ கொடுக்கும் கையை

உன்னத பெருமையாக உலகம் போற்றுமே

வசதி செல்வம் மகத்துவம் அல்லவே!"

 

"உழைப்பில் இதயங்கள் என்றும் ஒளிருமே

மற்றவர்களையும் உயர்த்த உயரமாக நிற்குமே!

அடுத்தவரின் வலியை துடைக்க முயலுமே

ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு அழுத்தத்திலும் உதவிடும் மகிழ்வே உயர் பண்பாகுமே!"

 ⇔↔⇔↔⇔↔⇔

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment