"சர்வதேச சிறுவர் தினம் (ஆக்டோபர் 1)"
"கள்ளம் கபடம் அற்ற உள்ளம்
கருப்பு வெள்ளை பாரா மனம்
கயமை பகைமை அறியா நெஞ்சம்
கற்றுத் தேறி அறிஞன் ஆகவேண்டும்!
"ஆசை வேண்டும் ஒழுக்கம் வேண்டும்
ஆடிப் பாடி மகிழவும் வேண்டும்
ஆதிரனாக என்றும் ஒளிர வேண்டும்
ஆலமர நிழல்போல் வாழ வேண்டும்!"
"ஆச்சாரம் அறிந்து ஒழுக வேண்டும்
ஆசிரியரை மதித்து நடக்க வேண்டும்
ஆடை நேர்த்தியாக உடுக்க வேண்டும்
ஆதரித்து அனுசரித்து உதவ வேண்டும்!"
"ஆதிக்க வெறி தவிர்க்க வேண்டும்
ஆயுதம் தவிர்த்து அன்பால் இணையவேண்டும்
ஆசி பெற்று மனிதனாக வளரவேண்டும்
ஆக்டோபர் ஒன்று சிறுவர்தின வாழ்த்துக்கள்!!
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment