நகைச்சுவை=ஜோக்ஸ்
01.
மாணவன்: இந்தப்
பாடசாலைக்கு ஏன் வந்தாய்?
புதிய மாணவி: Uniform வடிவாய் இருக்குனு தான்!
02.
ஆசிரியர் : மாணவர்களே! ஏன் எல்லோரும் மெளனமாய் இருக்கீங்க?
மாணவர்கள்: Whatsapp-ல நாங்க எல்லாம் இணைந்து Group chat நடக்குது சார்!
03.
ஆசிரியர்: அமெரிக்காவை கண்டுபிடித்தவர் யார் சொல்லு?
மாணவன்: கூகுளை கேட்டால் தெரியும் சார்.
04.
ஆசிரியர்: இன்றைக்கு நான் படிப்பித்ததெல்லாம் நோட் புத்தகத்தில எழுதிவிட்டிர்களா?
மாணவர்: எல்லாம் Voice Recording இல பதிஞ்சிருக்கு சார்!
05.
அம்மா: உங்க வீட்டில அடிக்கடி சண்டை நடக்குது. டிவி நாடகம் மாதிரி முடிவே இல்லையா?
மாமா: எப்பிடித் தெரியும்?
அம்மா: அந்த காட்சியினைத்தானே தினசரி
CCTV-ல பார்க்கிறன்.
06.
மாமா: படிச்சு முடிச்ச உங்க பையன் இப்ப என்ன பண்ணுறாரு?
அம்மா: என்ன பண்ணறதுனு, கூகிளை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு இருக்கிறான்.
07.
பொன்னம்மா: உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தீர்களே! என்ன ஆச்சு?
சின்னம்மா: கூகிளின்ர சொல்லை கேட்டு, மேள் அந்த பெடியனை வேணாம் எண்டு சொல்லுறாள்.
09.
அம்மா: ஏன் பிள்ளைகள் ரொம்ப சத்தம் போடறாங்க?
அப்பா: ஒண்ணுமில்லை! உன் கத்தலை voice recording பண்ணி replay போட்டுக் கேட்டு ரசிக்கிறாங்க!
10.
காதலன்: உன் makeup இல்லாத முகத்தை போன வாரம் பார்த்தேன்…
காதலி: ஓ! அந்த
அதிர்ச்சியிலதான், ஒரு வாரமாய் என்கூட நீ
பேசலையா?
11.
போலீஸ்: திருடுறதுக்கு நம்ம வீட்டில ஏன் நுழைஞ்சாய்?
திருடன்: நம்ம
வீட்டில WiFi இல்லை சார்…
12.
பிச்சைக்காரன்: சார், ரூபாய் 10 குடுங்க.
ஆளு: ஏன்?
பிச்சைக்காரன்: என்னோட ஐ போன்
balance 0ல இருக்கு!
13.
பிச்சைக்காரன்: அம்மா, சாப்பாட்டுக்காக ஏதாவது குடுங்க.
பெண்: கொஞ்சம்
பொறுத்துக்கொள்ளுங்க , online order பண்றேன்…
பிச்சைக்காரன்: அதுவரை WiFi password குடுங்க, புண்ணியமா போகும்!
14.
பிச்சைக்காரன்: நான் MBA படிச்சவன்!
ஆளு: அப்போ ஏன் பிச்சையெடுக்கிறாய்?
பிச்சைக்காரன்: படிக்க எடுத்த Loan கட்டுதுக்காக இப்போ “Marketing” தான் பண்றேன்!
15.
வேலு: டேய்! ராமு! என்னடா இது ரெயிலிலை பிச்சைக்கார வேஷம்?
ராமு: உஷ்! உளறாத! இப்பிடியே
ஒவ்வொரு ஸ்டேசனிலையும் இறங்கி இறங்கி ஏறி, டிக்கற் இல்லாம டில்லிக்கே போயிடுவன்டா! அத்தோட பணமும் சேருமடா!
16.
போலீஸ்: படிச்ச உங்க பையன் என்ன பண்ணுறான்?
பிச்சைக்காரன்: பிச்சைக்காரர் சங்கம், பிச்சைக்காரர் app . பிச்சைக்காரர் facebook , பிச்சைக்காரர் இன்ஸ்டாகிராம் எல்லாவற்றிற்கும் பொறுப்பாய் இருக்கான் சார்.
17.
நீதிபதி: உங்களுக்காக வாதாட, உங்கள் வக்கீல்
எங்கே?
குற்றவாளி: அவர் Zoom-ல இணைகிறார் சார். ஆனால் உங்க
WiFi தான் slow-ஆ இருக்கு!
18.
நீதிபதி: இந்த case-ல எல்லாரும் பொய் சொல்றீங்க!
அனைவரும்: சார், எங்க lawyer தான் எங்களை training பண்ணார்!
19.
தாய்: நான் பேசறதைக் கவனிக்கிறயா?
மகள்: ஆமாஅம்மா, நான்
background music மெல்ல போடுறன். நீங்க பேசுங்க !
20.
பெண்(ஆலயத்தில்): அவரு Wi-Fi password கூட சொல்ல மாட்டேன் என்கிறார் சாமி. அதுக்கு என்ன செய்யலாம்?
பூசாரி: அதுக்கு ஒரு நவக்கிரக சாந்தி பூசை செய்தா எல்லாமே சரியாயிடுமம்மா!
0 comments:
Post a Comment