சிரிக்க.... சில நிமிடம்

நகைச்சுவை=ஜோக்ஸ்



-01-

காதலி: என்னவாம் ரொம்ப கவலையாய் இருக்கிறாய்? 

காதலன்: உண்மை சொன்னா, battery 3% தான் இருக்கு!

 

-02-

காதலன்: நீ அழகா இருந்தால் நிமிஷம் தோறும் என் இதயம் நடனம்   ஆடும்!

காதலி: அது என்னவோகேக்கிறதுக்கு, உதெல்லாம்  யூடியூப் பில இடையில வாற  ad மாதிரி தான் இருக்கு!

 

-03-

மனைவி: என்னைக் கல்யாணம் பண்ணதுக்கு உங்களு  வருத்தமா?

கணவன்: இல்லடி...  யாரும் வருத்தப்படக்கூடாதுனு நானே முந்திக்கொண்டு  பண்ணிட்டேன்!

 

-04-

மனைவி: ஏங்க!  நேற்றைக்கு என்னுடைய பிறந்தநாள். என்ன gift கொடுத்தேள்?

கணவன்: நான் வாய் மூடிப் பேசல இல்ல... அதுவே peace gift டி!

 

-05-

கணவன்: வீட்டுக்கு விருந்தாளிகள்  வந்தாங்களேகாபி , சாப்பாடு குடுத்தியா?

 மனைவி: நான் WI-FI  குடுத்தேனுங்க!… அவங்க போனை, அவங்களே நோண்டிக்கொண்டு இருந்திட்டு, போய்வாறோம் என்று வாட்சப் இலை மெசேஜ் எனக்கு அனுப்பியிற்று போயிட்டாங்க!

 

-06-

போலீஸ்: ராத்திரி மட்டும் ஏன் திருடுற?

திருடன்: பகலில் online order கொண்டுசென்று வீடுகளுக்கு கொடுத்தால் , அந்த முகவரி அடிப்படையில் அவற்றை இரவில திருட ரொம்ப வசதி  சார்!

 

-07-

நீதிபதி: உன் தவறினை  ஒத்துக்கொள்!

குற்றவாளி: நான் ஏற்கனவே  வீட்டில மனைவியிட்ட ஒத்துக்கிட்ட அனுபவம் நிறைய இருக்கு சார்.

 

-08-

முட்டாள்: Raincoat போட்டுட்டு swimming பண்ணனும்னு தோணுது!

நண்பன்: ஏன்?

முட்டாள்: உடம்பு  நனைக்கவே கூடாதுன்னு doctor சொன்னாரு !

 

-09-

காதலி: இந்த chocolate உனக்கு   கொடுத்தேன்அது என் “love” மாதிரி!

காதலன்: நாலு மணி நேரத்துக்குள்ள melt ஆயிடுச்சே டி!

 

-10-

காதலி: நம்ம எதிர்கால குழந்தைக்குப் பேரை plan பண்ணலாமா?

காதலன்: Exam-க்கு இப்பிடி நீ பிளான் பண்ணியிருந்தா fail பண்ணியிருக்கமாட்டாய்!

 

-11-

காதலி: நீ ஏன் என் வீட்டுக்குள்ள வந்தே?

காதலன்: நீயேஎன் வீடுதான் உன் வீடுனு சொன்னாய்!

காதலி: அது WhatsApp status டா!

 

-12-

காதலி: நம்ம காதல் Titanic மாதிரி

காதலன்: பின் என்னடா, எங்க முடிவும் கடலில் மூழ்கிடுமா?

 

-13-

எஜமானி: எல்லாம் பளபளன்னு இருந்தா தான் எனக்கு சந்தோஷம்!

வேலைக்காரி: அதான் நானும் நெல்லு அவிக்கிற  பாத்திரத்தில இருந்து குளிச்சேன்!

 

-14-

எஜமானி: இந்த கிழமை மட்டும்  மூன்றாவது cup உடைஞ்சுது!

வேலைக்காரி: நானும் count பண்ணிக்கிட்டே தான் சமைக்கிறேன் அம்மா!

 

-15-

எஜமானி: உன்னுடைய வேலைகளை பார்க்கப் பார்க்க   ஒரே தலைவலியாய்  இருக்கு!

வேலைக்காரி: ஓமம்மா! உங்க மூஞ்சிய பார்க்க எனக்கும் அதே feeling தான் வருக்குதம்மா!

 

-16-

எஜமானி: இப்ப தான் கழுவின பாத்திரம். அதை  எதுக்கு கழுவலேன்னு சொல்றே?

வேலைக்காரி: கழுவினது என்று சொன்னால் இன்னும் 4 பாத்திரத்தை கழுவ சொல்லுவீங்க.அதுதான்.

 

-17-

மாமி: உங்க வீட்டுல இட்லி இப்படி தான் பண்ணுவியா?

மருமகள்: இல்ல மாமிஎப்படிப்  பண்ணினாலும்  இப்படி கேள்வி கேட்க மாட்டாங்க! பாராட்டுவாங்க!

 

-18-

மாமி: என் காலத்துல பொண்ணுங்க நான்கு மணிக்கே எழுந்து வேலை பண்ணுவாங்க!

மருமகள்: இப்ப Amazon நால மொத்த வேலை online தான் மாமி!

 

-19-

அயல் வீட்டு பொண்ணு: அக்கா உங்க வீட்டுல சண்டை நடக்குதா?

நம்ம பொண்ணு : இல்லை டிநம்ம பொண்ணு  tiktok க்கு practice  பண்ணுறாங்க!

 

-20-

அயல் வீட்டு மாமி: உங்க பூனை எங்க வீட்டுக்கு வந்து படுத்திருக்கு.

நம்ம அம்மா: கொடுத்துவைத்தது . நம்ம மாமியார்  பேச்சை தாங்க முடியாம தப்பிச்சு டா! 

ஆக்கம்::செ . மனுவேந்தன்

0 comments:

Post a Comment