அறிவியல்=விஞ்ஞானம்
🕸சிலந்திஇழை
.
நீண்டகாலம்
உழைக்கும் துணிகள், காயங்களுக்கான தையல் நுால், குறைந்த எடை கவசங்கள் தயாரிக்கச் சிலந்தியின்
வலை நார் இழைகள் பயன் படுகின்றன. ஆனால், இவற்றைப் பட்டுநுால் போல் பெரிய அளவில் உற்பத்தி
செய்ய இயலாது. அமெரிக்காவைச் சேர்ந்த மிச்சிகன் பயோடெக் கம்பெனி எனும் நிறுவனம், பட்டுப்
புழுக்கள் உடலில் சிலந்தி மரபணுவைச் செலுத்தி வெற்றிகரமாக இழைகளை உற்பத்தி செய்துள்ளது.
🥫காபி- ஆன்டிபயாட்டிக்
நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை
அழிக்க, நாம் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உண்கிறோம். ஆனால், காபி குடிப்பது சில விதமான
ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் வீரியத்தைக் குறைத்துவிடும் என்று ஜெர்மனியின் டூபிங்கன்
பல்கலை மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
👔மது- கல்லீரல்
மது குடிப்பது குடலில் உள்ள தீய பாக்டீரியாக்களைக்
கல்லீரலுக்குள் தள்ளி, கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த
கலிபோர்னியா பல்கலை ஆய்வு வாயிலாக நிரூபித்துள்ளது.
🤖சுவையை அறிய ரோபோ
ரோபோக்களால் காட்சி, ஒலி ஆகியவற்றை உணர முடியும்.
ஆனால், சுவையை அறிய இயலாது. சீனாவைச் சேர்ந்த பெய்ஜிங் தேசிய நானோ தொழில்நுட்ப மையம்
கிராஃபீன் ஆக்ஸைட் அயனிகளைப் பயன்படுத்தி, சுவை அறியும் தன்மையை ரோபோக்களுக்குக் கொடுத்துள்ளது.
🩸ரத்த சர்க்கரை அளவை அறிய
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், உடலில்
அசிடோன் அளவு அதிகரிக்கும். வாயால் ஊதினால் வரும் காற்றில் அசிடோனைக் கண்டறியும் கருவியை
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலை கண்டறிந்துள்ளது. இதன் வாயிலாக ரத்த மாதிரி எடுக்காமலேயே
ரத்த சர்க்கரை அளவை அறிய முடியும்.
上கூரை மேல் நுண் காற்றாலை
வீ டுகளுக்கு காற்று மின்னாலை என்பது இப்போதுதான்
பரவலாகத் துவங்கியிருக்கிறது. ஜெர்மனியின் 'ஸ்கைவிண்ட்', தனது மைக்ரோ நுண் மின் காற்றாலையான
'என்.ஜி.,'யை, அமெரிக்க இல்லக் கூரைகளில் நிறுவுவதற்கு ஏற்றது என்ற சான்றிதழை, இரண்டாண்டு
சோதனைக்குப்பின் பெற்றுள்ளது.
சரியாக 1.5 மீட்டர் அகலமே உள்ள இந்தக் காற்றாலை, ஆண்டுக்கு கிட்டத்தட்ட, 615 கிலோவாட் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இது ஒரு சராசரி அமெரிக்கக் குடும்பத்தின் மின் தேவையில் ஆறு சதவீதத்தை நிறைவு செய்கிறது.
தேவைக்கேற்ப பல நுண்காற்றாலைகளை ஒரே வீட்டில் நிறுவும்படி, இதன் வடிவமைப்பு இருக்கிறது. ஒருவர் தன் வீட்டு மின் தேவை முழுதையும் இதிலிருந்தே பெறலாம். ஒரு என்.ஜி., காற்றாலையை மட்டும் நிறுவி கார் பார்க்கிங், முன் வாசல் விளக்குகளுக்கு மட்டும் மின்சாரத்தை பெறலாம்.
இந்த 'என்.ஜி.,' காற்றாலை , சூரிய ஒளி இல்லாத நேரங்களிலும், புயலில் காற்றடிக்கும் போதும் சிறப்பாகச் செயல்படுகிறது.
இது சூரியசக்திக்கும், காற்றாலைக்கும் உள்ள முரண்பாடுகளை இட்டு நிரப்புகிறது. சூரிய ஒளிப் பலகைகள், பகல் வெளிச்சம் இல்லாதபோது செயல்படாது. ஆனால், காற்றாலைகள் இரவிலும், மேகமூட்டமான நாட்களிலும் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
இதனால், சூரிய மின் பலகைகளுடன் இவற்றை சேர்ந்து பயன்படுத்தும்போது, இது முழுமையான ஆற்றல் தீர்வை வழங்குகிறது. ஒரு ஸ்கைவிண்ட் என்.ஜி.,
🧴அறிமுகமாகும் புது சானிடைசர்
கொரோனோ பரவிய காலங்களில் இருந்து நம்மிடையே
சானிடைசர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தற்போது சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான
சானிடைசர்கள் எத்தனால் கொண்டு தயாரிக்கப்படுபவை. இவை உடனடியாகக் கிருமிகளைக் கொல்லும்.
ஆனால் இவை நமது கைகளில் வெகுநேரம் தங்காது, ஆவியாகி விடும்.
அதிகபட்சமாக 1 மணி நேரம் மட்டும் இவற்றின் ஆற்றல் இருக்கும். 1 மணி நேரத்திற்கு ஒருமுறை சானிடைசர் பயன்படுத்துவது என்பது இயலாத காரியம். அதனால் தான் நீண்ட நேரம் நமது தோலில் தங்கியிருக்கும் சானிடைசர்களை உருவாக்க விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
நமது உடலில் ஏற்படும் நோய்களுக்குக் காரணமான கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டவை நைட்ரிக் ஆக்ஸைட் மூலக்கூறுகள்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment