அறிவியல்=விஞ்ஞானம்
🌀மூளை ஆரோக்கியம்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மொனாஷ் பல்கலை, சராசரியாக
64 வயதுடைய 107 பேரை வைத்து மேற்கொண்ட ஆய்வில், பக்கவாதம் ஏற்பட்ட பிறகும் கூட ஏரோபிக்
பயிற்சிகள் தொடர்ந்து செய்பவர்களுக்கு மூளை ஆரோக்கியம் மேம்படும் என்று கண்டறிந்துள்ளது.
ஏரோபிக் பயிற்சி என்பது நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், நடைப்பயிற்சி என இதயத்தின் செயல்பாட்டை
அதிகப்படுத்தும் பயிற்சிகளின் பொதுப் பெயர்.
🦋குறைந்து வரும் பூச்சி
பசிபிக் பெருங்கடல் மேற்பரப்பில் வெப்பம் அதிகரித்து
வருவதால், வெப்ப மண்டல காடுகளில் வாழும் பிரிக்காமலேயே மறுசுழற்சி உள்ளிட்ட பல்வேறு
பூச்சி இனங்களின் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக மிக வேகமாகக் குறைந்து வருவதாக ஹாங்காங்
பல்கலை தெரிவித்துள்ளது.
🚮பிரிக்காமலேயே மறுசுழற்சி
அன்றாடம் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் கழிவுகளில்
மிகக் குறைந்த சதவீதம் தான் மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதற்குக் காரணம், கழிவுகளில்
பல்வகை பிளாஸ்டிக்குகளும் கலந்திருப்பது தான். இவற்றைப் பிரிக்காமல் மறுசுழற்சி செய்வதில்
பல சிக்கல்கள் உள்ளன. இதை மனதில் வைத்து, கழிவுகளைப் பிரிக்காமலேயே மறுசுழற்சி செய்யும்
முறையை அமெரிக்காவின் இல்லினாய்ஸ் நார்த் வெஸ்ட் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
🚰நன்னீர்
அமெரிக் காவைச் சேர்ந்த கொலம்பியா பல்கலை ஆய்வாளர்கள்
அட்லான்டிக் பெருங்கடலுக்குக் கீழே 2,792.68 கன கிலோமீட்டர் உப்பு இல்லாத நன்னீர் இருப்பதைக்
கண்டுபிடித்துள்ளனர். வருங்காலத்தில் உலகின் குடிநீர்த் தேவையை இது தீர்த்து வைக்கும்
என்று கூறுகின்றனர்.
🥩தோல் காக்கும் தோல்
சூரியனிலிருந்து வரும் ஆபத்தான புற ஊதாக் கதிர்கள்
மனிதர்களுக்கு தீங்கு செய்பவை. இவற்றிலிருந்து காத்துக்கொள்ள தோல் மீது 'சன் ஸ்க்ரீன்'
பயன்படுத்துகிறோம். இவற்றில் சேர்க்கப்படும் டைட்டானியம் டை ஆக்சைட், ஜின்க் ஆக்சைட்
ஆகியவை சுற்றுச் சூழலுக்குக் கேடானவை.
அதாவது மனிதர்கள் குளிக்கும்போது கழுவப்படும்
சன்ஸ்க்ரீனில் உள்ள சில ஆபத்தான வேதிப் பொருட்கள் கழிவுநீரில் கலந்து கடலை அடைகின்றன.
கடல் வாழ் உயிரினங்களுக்கு இவை கேடு விளைவிக்கின்றன. எனவே சுற்றுச்சூழலுக்குத் தீங்கு
விளைவிக்காத சன்ஸ்க்ரீனை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர்.
சிங்கப்பூரில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலை ஆய்வாளர்கள் பூக்களில் உள்ள மகரந்தங்களைப் பயன்படுத்தி சன்ஸ்க்ரீன் தயாரித்துள்ளனர். ஒரு சிலருக்கு மகரந்தங்களைச் சுவாசித்தால் ஒவ்வாமை ஏற்படும். அதை மனதில் வைத்தே அவ்வளவாக ஒவ்வாமை ஏற்படுத்தாத சூரியகாந்தி, கேமல்லியா பூக்களின் மகரந்தங்களை இதற்கு உபயோகித்தனர். அதிலும் கேமல்லியா மகரந்தங்கள் ஏற்கனவே சத்துணவாகப் பரிந்துரைக்கப்படுகின்றன என்பது கூடுதல் சிறப்பு.
எனவே மகரந்தங்களில் உள்ள நுண் பொருட்களை நீக்கி, மேற்தோலை மட்டும் பிரித்து 'ஜெல்' தயாரித்தனர். விலங்குகள் மீது இவற்றைப் பரிசோதித்தனர். இந்த ஜெல் 97 சதவீத புற ஊதாக் கதிர்களைத் தடுத்து நிறுத்தியது. அதுமட்டுமில்லாமல் தோலின் வெப்பநிலையை 5 டிகிரி வரை குறைத்தது. இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment