அறிவியல்=விஞ்ஞானம்
💊மறதி நோய்கள்
நாள்பட்ட துாக்க மின்மையால் அவதிப்படுபவர்களுக்கு முதுமையில் அல்சைமர்
முதலிய மறதி நோய்கள் ஏற்படு வதற்கான வாய்ப்பு மற்றவர் களை விட 40 சதவீதம் அதிகம் என்று
விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
⭐தோல் புற்றுநோய்
அமெரிக்காவில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலை 33,000 பேரை வைத்து மேற்கொண்ட
ஆய்வில், பி3 வைட்டமினை எடுத்துக்கொள்வதன் வாயிலாக, தோல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு
54 சதவீதம் குறைவதாக தெரியவந்துள்ளது.
🕴நியாண்டர்தால் மனிதர்
ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் 80,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நியாண்டர்தால்
மனிதர்களின் கால் தடத்தைத் தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதை மேலும் ஆராய்ந்தால்
இவர்களின் இடப்பெயர்ச்சி பற்றி அறிந்து கொள்ள முடியும்.
🌞ஓசோன் படலத்தில் துளை மறைகிறதா?
கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட உலக சுற்றுச்சூழல் ராஜதந்திரத்திற்கு
பலன் கிடைக்கத் துவங்கிவிட்டது. வியன்னா உச்சி மாநாடு, மாண்ட்ரியேல் உச்சி மாநாடு போன்றவற்றில்
எட்டப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களால், பல நாடுகள், ஓசோன் படலத்தை சிதைக்கும் வேதிப்பொருட்களின்
பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துள்ளன. உலக அளவில், இந்த அபாயகரமான பொருட்களில் 99 சதவீதம்
படிப்படியாக நீக்கப்பட்டுள்ளன.
அன்டார்டிக் பகுதியின் மேல், கடந்த 2020 முதல் 2023 வரை இருந்த ஓசோன்
துளையின் சராசரி அளவைவிட, 2024ல் இருந்த துளை சிறியதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் அளவிட்டுள்ளனர்.
ஒப்பந்தத்தில் ஒப்பமிட்ட நாடுகள், தங்கள் வாக்குறுதிகளை தொடர்ந்து கடைப்பிடித்தால்,
இந்த நுாற்றாண்டின் மத்தியில், பெரும்பாலான பகுதிகளில் ஓசோன் அடுக்கு 1980களில் இருந்த
நிலைக்குத் திரும்பிவிடும். இந்த வெற்றிக் கதை, சுற்றுச்சூழல் ஆர்வலர் களுக்கு அசாத்தியமான
நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
🐜கண்கவருமா, 'ஏ.ஆர்.ஸ்மார்ட் கிளாஸ்? '
மார்க் சக்கர்பர்க், ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் அதிதிறன் கண்ணாடிகளை
வெற்றி பெறச் செய்வது என்று கங்கணம் கட்டியிருக் கிறார். அண்மையில் அவரது மெட்டா நிறுவனம்,
'ரே-பான் டிஸ்ப்ளே' என்ற அதி திறன் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன், பல
வண்ண மேம்பட்ட மெய்நிகர் திரை (Augmented Reality colour screen) மற்றும் மணிக்கட்டில்
அணியக்கூடிய நரம்பியல் பட்டை (Neural Band) ஆகிய துணைக் கருவி களும் வருகின்றன.
இந்த பட்டையை அணிந்தவர், தன், கை அசைவுகளால் ஸ்மார்ட் கண்ணாடியை
இயக்கலாம். எனவே, மொபைல் இல்லாமலேயே, அருகில் இருப்பவர்களுக்கு தெரியாமல், எங்கோ இருப்பவருடன்
தொடர்பு கொள்ளலாம். இந்த வசதி, மேம்பட்ட மெய்நிகர் கருவிகளை எளிதாகப் பயன்படுத்த உதவும்.
🖼புராதன ஓவியங்கள்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த க்ரிபித் பல்கலை சவுதி அரேபிய பாலைவனத்தில்
12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 176 பாறை ஓவியங்களை கண்டறிந்துள்ளது. முற்காலத்தில் இங்கே
மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதை இது உணர்த்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
🥴சொரியாசிஸ் நோயை கட்டுப்படுத்தும் உணவு
சில நோய்கள் இன்றைய தேதி வரை குணப்படுத்த இயலாதவையாக உள்ளன. ஆனால்,
இவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அப்படியான ஒன்று தான் சொரியாசிஸ். உலகம் முழுக்க
12.5 கோடி மக்கள் சொரியாசிஸ் நோயால் அவதிப்படுகின்றனர்.
இதைக் கட்டுப்படுத்த எந்த வகையான உணவு முறை உதவும் என்று விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து வந்தனர்.
ஸ்பெயின் நாட்டின் ரமோன் ஒய் கஜல் பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மத்திய தரைக்கடல் உணவு முறை வாயிலாக இந்த நோயை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று கண்டறிந்திருக்கின்றனர்.
மத்திய தரைக்கடல் உணவு முறை என்பது பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய், கொட்டைகள், மற்றும் மீன் போன்றவற்றை முதன்மையாக உள்ளடக்கிய தாவர அடிப்படையிலான உணவு முறையாகும்.
இதில், பல்வேறு சத்துக்கள் உள்ளன, பலவித மான நோய்கள் வராமல் தடுக்கின்ற ஆற்றலும் உடையது. அதற்கு காரணம், இந்த உணவு முறையில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பாலி பீனால் முதலிய சத்துக்கள் இருப்பது தான். இவை தோலில் ஏற்படும் அழற்சியை கட்டுக்குள் வைத்திருக்கும்.
இந்த ஆய்வுக்கு மிதமான முதல் நடுத்தர சொரியாசிஸ் பாதிப்பு உள்ள 38 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் சராசரி வயது 46. இவர்களுக்கு 18 வாரம் தொடர்ந்து மத்திய தரைக்கடல் உணவுகளைக் கொடுத்தனர்.
பிறகு அவர்கள் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்தனர். அதில் பல பேருக்கு நல்ல முன்னேற்றம் இருந்தது.
சொரியாசிஸ் நோய் தாக்கம் குறைந்திருந்தது, அதேபோல இவர்களா ல் நன்றாக துாங்கவும் முடிந்தது.
இந்த ஆய்வின் வாயிலாக, சொரியாசிஸ் நோய் ஏற்பட்டவர்களுக்கு அவர்கள் சாப் பிடுகின்ற மருந்துடன் சேர்த்து மத்திய தரைக்கடல் உணவு முறையை மேற்கொண்டால் நோயின் பாதிப்பு குறையும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment