"அறிவியல் நோக்கில்....பெளத்தம் ஒரு அலசல் . " :பகுதி:15

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]

 


[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்த பதிப்பாகும்.]

 

பகுதி: 15 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'உலகின் முதல் பேனா நண்பர் யார்?'

 


இரண்டாவது மகன் திஸ்ஸ, முத்தசிவாவின் மரணத்திற்குப் பிறகு தேவநம்பியதிஸ்ஸ என்ற அடைமொழியுடன் அரியணை ஏறினார். ‘கடவுளுக்குப் பிரியமானவர்’ என்ற அடைமொழி கொண்ட தேவநம்பிய மன்னன் வேறு யாரும் இலங்கையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தேவநம்பியதிஸ்ஸ, முத்தசிவாவின் அகவை இருபதுக்கும் முப்பதுக்கும் இடையில் பிறந்து இருந்தால், திஸ்ஸ [தேவநம்பிய திசா] குறைந்தது அகவை 147 க்கும் 157 க்கும் இடையில் [between 137 - 30 + 40 & 137 - 20 + 40] வாழ்ந்திருப்பான். தொடர்ச்சியாக மூன்று மன்னர்களின், மிக நீண்ட வாழ்க்கை நம்பமுடியாதவையாக இருக்கின்றன. மூத்த மகன் அபயாவுக்கு என்ன நடந்தது என்பது எந்த இலங்கை வரலாற்றிலும் இல்லை. அது ஏன் என்று புரியவில்லை. மேலும் பொதுவாக அரச வழக்கத்தின் படி, மூத்தமகன் தந்தைக்கு பின் அரசனாவான், ஆனால் இங்கு இரண்டாவது மகனே அரனாகிறான். எனவே இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. இதற்கு எதாவது காரணம் இருக்கலாம்? அதை தேடித் பார்க்கும் பொழுது, அசோகனும் இரண்டாவது மகன் என்பதை அறிந்தேன். அதாவது, அசோகர் பேரரசர் பிந்துசாரரின் இரண்டாவது மகன், அவர் முதல் மகன் அல்ல. அவரது மூத்த சகோதரர் சுசிமா [Susima] தான் அரசுக்கு வாரிசாக இருந்தார். என்றாலும் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, சுசிமாக்கு பதிலாக இரண்டாவது மகன் அசோகன் பேரரசரானார் என்பது வரலாறு ஆகும்.

 

மேலும் அசோகச் சக்கரவர்த்தியின் கல்வெட்டுக்கள் மூலம் அவர் 'தேவாநம்பிய' என்ற அடைமொழியைக் கொண்டிருந்தார் என்பதும் தெரிய வருகிறது அல்லது உறுதிப்படுத்தப் படுகிறது. அப்படி என்றால், அசோகரும் அதே போல் திஸ்ஸவும் [தீசனும்] இரண்டாவது மகன். இருவருக்கும் ஒரே அடைமொழி. அது மட்டும் அல்ல, அவர்கள் என்றுமே ஒருவரை ஒருவர் பார்க்காமல், ஆயிரத்து ஐநூறு மைல்களுக்கு அப்பால் வாழ்ந்து, இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே, நட்பைப் பேணி வந்தனர் என்று இலங்கை நாளிதழ் கூறுகிறது. இவைகள் தான் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறது? திஸ்ஸனை அசோகனுடன் இணைத்து புகழ் சேர்ப்பதற்காக புனையப்பட்ட, ஒரே மாதிரியான தகவல்களா அல்லது ஒற்றுமையா,  என்று ஒரு சந்தேகம் வலுக்கிறது. வரலாற்று ஆய்வாளர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்? மேலும் தேவநம்பியதிஸ்ஸ அசோக மன்னரின் நெருங்கிய நண்பராக இருந்தார், இருப்பினும் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்ததில்லை என்பதால், மறைந்த திரு.எஸ்.யு.குணசேகரம் அவர்கள், இவர்கள் இருவரையும், உலகின் முதல் 'பேனா நண்பர்கள்' என்று ஊகிக்கிறார்;  'S. J. Gunasekaram – Selected Writings, Evelyn Rutnam Institute Publication 1985.' என்ற குறிப்பில், பக்கம் 56 ஐப் பார்க்கவும். மேலும் தீபவம்சத்தின் நாயகன் தேவநம்பியதிஸ்ஸ ஆகும்.

 

 

Part: 15 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Who is the first pen friend in the world?'

 


Tissa, the second son, ascended the throne with the epithet Devanampiyatissa after the death of Mutasiva. It is very important to note that there is no other king in Lanka with epithet Devanampiya, ‘beloved of the god’.  If Mutasiva had his second son at the age of fifty, then Devanampiyatissa too must have lived greater than one hundred years. Three consecutive succession of very long life is quite unbelievable. There is no record of what happened to the eldest son Abhaya in any of the chronicles. This is very significant. Devanampiyatissa was very intimate friend of the King Asoka, though both never met each other as per all the chronicles. Strangely, the Emperor Asoka too had the epithet’ Devanampiya’ they lived more than one thousand five hundred miles apart along the travel way, and they maintained the friendship two thousand three hundred years ago. That is why Late Mr. S. U. Gunasegaram speculated them as the first pen friends in the world; see the page 56 of the Reference 'S. J. Gunasekaram – Selected Writings,  Evelyn Rutnam Institute Publication 1985.' Devanampiyatissa is the hero of the Dipavamsa.

 

நன்றி 

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 16 தொடரும் / Will Follow

 

 


0 comments:

Post a Comment