"ஏனிந்தக் கோலம்"
"ஏனிந்தக் கோலம் வாலைக் குமரியே
ஏமாற்றமே வாழ்வென நினைத்தாயோ?
ஏராளம் வேடம் ஏன் உனக்கு
ஏக்கத்தில் இனியும் தவறு செய்யலாமா?"
"பெண்ணியம் சொல்லுவது எல்லோரும்
சமம்
கண்ணியம் காக்கும் செயல் பாடுகளே
மண்ணும் பெண்ணும் இயல்பில் ஒன்றே
எண்ணமும் கருத்தும் ஒன்றாய் இருக்கட்டும்!"
"அன்பும் நீதியும் ஒருங்கே
நின்றால்
அழகு பெண்ணும் மகிழ்ச்சி அடைவாள்
அடிமைச் சங்கிலியை உடைத்து எறிந்து
அச்சம் மடம் நாணம் ஒழியட்டும்!"
"உண்மையை உணர்ந்து உலகை அறிந்து
பண்பாட்டு நிலையில் சமநிலை போற்றி
கண்கள் போகும் வழிகளில் போகாமல்
பெண்ணே உங்கள் கைகள் சேரட்டும்!"
👧👧👧👧👧👧
"துடிக்கும் இதயங்கள்"
"துடிக்கும் இதயங்கள் தேடுது
அன்பு
அடிக்கும் கைகள் அணைக்குது பாசம்
இடிக்கும் வார்த்தைகள் வாட்டுது
நெஞ்சம்
குடிக்கும் மதுபானம் சிதைக்குது
உடலை
கெடுக்கும் செயல்கள் குறைக்குது
நற்பெயரை!"
"உள்ளம் மலர்ந்தால் மகிழ்வு
பிறக்கும்
கள்ள நட்பு மானம் கெடும்
பள்ளிப் படிப்பு அறிவை வளர்க்கும்
குள்ளப் புத்தி அநியாயம் செய்யும்
துள்ளும் ஆசை வெட்கம் அறியாது!"
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment