ஆராய்ச்சியாளரின்செய்திகள்


கைபேசி:
தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் கைப்பேசியை உபயோகிப்பது அவர்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு உணர்வு, மனநிலை ரீதியான பல இன்னல்களை உருவாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 13,000 பெண்களை உட்படுத்தி நடத்தப்பட்ட இந்த சோதனை, கைப்பேசியை தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் உபயோகித்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் நன்னடத்தை இல்லாமலும், மற்ற குழந்தைகளோடு உறவாடுவதிலும், நட்பு கொள்வதிலும், இணைந்து வாழ்வதிலும் பல உறவு மற்றும் உணர்வு வகையிலான சிக்கல்களுக்கு ஆளாகும் எனவும் அதிர்ச்சி முடிவுகளை அள்ளி வீசியிருக்கிறது ரஷ்யாவின் கதிரியக்க ஆராய்ச்சிக் குழுவினரின் அறிக்கை ஒன்று,
குழந்தைகள் கையில் கைப்பேசியைக் கொடுப்பதும் மது புட்டியோ, சிகரெட்டோ கொடுப்பதும் ஒன்றே என கூறி அலற வைக்கிறது.
 மனிதன் வசிப்பதற்கு ஏற்ற கிரகங்கள் கண்டுபிடிப்பு
லண்டன்: பால் மண்டலத்தில் பூமியைப் போல மிதமான வெப்பநிலையுடன் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற கிரகங்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாக வானவியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து, பிரான்சின் கிரனோபில் நகரில் உள்ள கிரகங்கள் மற்றும் வானியல் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சேவியர் போன்பில்ஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் கூறியதாவது: பால் மண்டலத்தில் சுமார் 16,000 கோடி கிரகங்கள் (ரெட் ட்வார்ப்) உள்ளன. இதில் 40 சதவீதம் பூமியைப் போலவே (சூப்பர் எர்த்) உள்ளன.

அவற்றின் மேற்பரப்பு தண்ணீர் ஓடுவதற்கேற்ப உள்ளதுடன், உயிரினங்கள் வசிப்பதற்கேற்ற மிதமான வெப்பநிலையும் உள்ளன. இவை ஒவ்வொ ன்றும் பூமியைப் போல 1 முதல் 10 மடங்கு பெரியதாக உள்ளன. எனினும், நட்சத்திரங்களின் அளவோடு ஒப்பிடும்போது 80 சதவீதம் மட்டுமே இருக்கும். இவை சூரியனோடு ஒப்பிடும்போது, மங்கலாகவும், குளிர்ச்சியாகவும் உள்ளன. ஜூபிடர் மற்றும் சனி கிரகங்களைப் போல மிகமிக தொலைவில் இவை அமைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

A \ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை

A \C  காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C  இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C  இயக்கவேண்டும் .
இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD  ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .
சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50  மில்லி கிராம் .

வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400  முதல் 800  மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும் .

அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 4000  மில்லி கிராம் வரையில் இருக்கும் .இது மனித உடல் ஏற்றுக்கொள்ளும் அளவை விட 40  மடங்கு அதிகம் .

இதன் காரணமாக கேன்சர் ,லுக்கூமியா ,சிறு நீராக பாதிப்பு கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .

கார்களிலுள்ள ஜன்னல்களை சிறிது நேரம் திறந்து வைப்பதனால் அதிகப்படியான பென்சீன் வெளியேறிவிடும் .

இதன் மூலமா நான் சொல்லிக்கிறது என்னண்ணா A \C  காருல உக்காந்து போயி என்ஜாய் பண்ண விரும்புறவுங்க கொஞ்ச நேரம் ஜன்னல திறந்து காத்து வாங்கிட்டு  அப்புறமா A \C    ஆண் பண்ணி என்ஜாய் பண்ணுங்க.
மனித மூளையின் முழுத்திறன் இவ்வளவுதான் :
மனிதனின் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவும் வியப்பின் விளிம்பிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன .இதற்கு  காரணம் மனித மூளையின் சக்திதான் .
இதற்கு முன் மனித மூளை பற்றி ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் பலர் திறமையற்ற  மனிதர்கள் தனது மூளையின் சக்தியில் குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்துவதாகவும் திறமையானவர்கள் (விஞ்ஞானிகள் போன்றோர்தங்கள் மூளையின் ஆற்றலை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருந்தார்கள் .
ஆனால் சமீபத்திய ஆராய்சிகள் மனித மூளை பற்றி ஓர் அதிச்சி கலந்த உண்மையை கூறுகிறது .
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஒவ்வொரு மனிதனும் தனது மூளையை 100 % பயன்படுத்துகிறான் எனவும் மனித மூளையின் சக்தி இவ்வளவுதான் எனவும் கூறியுள்ளார்கள் .
நரம்பு உயிரியல் பேராசிரியர்" சைமன் லாலின்மூளை சிறப்பான வடிவத்தை பெறுவதற்கும் திறமையாக செயல் படுத்துவதற்கும் தகுந்த ஆற்றல் தேவை என்றும்  மனிதனால் தனது மூளையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் செயல் படுத்த முடியாது என்றும் கூறுகிறார் .
மூளையின் வெவ்வேறு பகுதிகள் இழைகளால் இணைக்கப் பட்டுள்ளதாகவும் மிகுந்த அறிவாளிகள்  மூளையில்  இந்த இணைப்புகள் சிறப்பாக உள்ளதாகவும் குறைவான அறிவுடையவர்களுக்கு இந்த இணைப்பு சிறப்பாக இல்லாமல் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் .
 கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் உளவியல் துறை  பேராசிரியர் "எட் புல்மோர்" கூறுகையில் மிகுந்த அறிவாளிகளுக்கு மூளையில் இழைகள் சிறப்பான இணைப்பை கொண்டிருப்பதால்  கட்டளைகள் உடனடியாக மூளையின் பிற பகுதிகளுக்கு அனுப்பப் படுவதாகவும் இந்த இணைப்பு சிறப்பாக அமையப் பெறாதவர்கள் மூளையில் கட்டளைகள் மிக மெதுவாக  பரிமாற்றம் செய்யப் படுவதாகவும் கூறுகிறார் .

சிறந்த மூளைத் தொகுப்பிற்கும் சிறந்த நுண்ணறிவு திறனுக்கும்  (IQ ) நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார் இவர் .
இவர்கள் ஆராய்ச்சியில் ஆறுதல் தரும் விஷயம் உடலின் சக்தியை அதிகரிப்பதன் மூலம் மூளையின் ஆற்றலும் அதிகரிக்கும் என்பதுதான் .
இதைத்தான்  நம்மவர்கள் "சுவரில்லாமல் சித்திரம் இல்லை" என்று சொல்லியிருப்பார்களோ .

0 comments:

Post a Comment