தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி:25‏

 [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]
  
ஆற்றில் நீர் மட்டம்இயல்பாக[சாதாரணமாக]இருக்கும் போது தான்  மதகுகதவு திறமையாகஇயங்குகிறது.அந்ததருணத்தில்  நீர் மட்டம்கதவிற்கு கீழ்வரும்போது.கால்வாயிற்கான நீர் ஓட்டம்நின்றுவிடுகிறது.அப்படியானவேளையில் இந்த  சிக்கலை தீர்க்க பெயர்தெரியாதசுமேரியனோ அல்லது அதற்கு முதல் அங்கு வாழ்ந்தஉபைடியனோ[ancient Ubaidian] ஒருகருவிக்கான[பொறிக்கானயோசனையைபெற்றிருக்க வேண்டும்இதை பின் அரேபிய மக்கள்"shaduf" /துலா என அழைத்தனர்.இதுஒருநீளமானதும்நேரானதுமான ஒரு மரத் தண்டுஆகும்.இதன் ஒரு முனையில் நீளமான கயிறுஒன்றின் ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒருபாத்திரம் கட்டப்பட்டும்.அதன் மறு முனையில்பாரமான கல் அல்லது  ஒரு பாரம் கட்டப்படும்.இம்மரத்துக்குக் குறுக்கேஅதனூடு இன்னொரு தண்டுசெலுத்தப்பட்டு இருக்கும்இத்தண்டின் இருமுனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடியவாறுதாங்கப்பட்டும்.இத்தண்டு அச்சாகச் செயற்பட,முதலில் குறிப்பிட்ட நீளமான மரம்அந்த அச்சைப்பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாகஇருக்கும்.இதன் அளவை பொறுத்து ஒன்று அல்லதுஅதற்கு மேற்பட்டோர் இதை மேலும் கீழும்இயக்குவர்.நீர்
எடுப்பதற்கு கயிற்றை இழுத்துஅதன் முனையில் இருக்கும்பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்திஅதனுள் நீரை நிரப்புவர்துலாவின்மறுமுனையில் சுமை இருப்பதால்குறைந்த விசையைப்பயன்படுத்திக் கயிற்றை மேலேஇழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டுவருவர்.பின் நீரை கால்வாயில் விடுவர்.இந்த முறைஆற்றில் வெள்ளம் இல்லாத நேரத்திலும் நீர்பாசனம்செய்ய உதவியது.அதுமட்டும் அல்ல உயரமானஇடத்திற்கும் நீர்பாசனம் செய்யக்கூடியதாகஇருந்தது.இதனால் அப்படியான உயரமானஇடங்களிலும் விவசாயம் செய்யக்கூடியதாகவும் இருந்தது.மேலும் இந்த துலாவால் ஒரு கால்வாயில்இருந்து மற்ற கால்வாயிற்கு அல்லது  வாய்காலிற்குநீரை மாற்றி விடக்கூடியதாகவும்  இருந்தது.இந்ததுலா முறை கி மு 1700 ஆண்டு அளவில் பொதுவாகபாவனையில் இருந்துள்ளது.இந்த பொறியைபபிலோனியாவில் கி மு 500 ஆண்டளவில் கண்டகிரேக்க வரலாற்றாசிரியரான  ஹெராடோடஸ்[The Greek historian Herodotus] "மழை பெய்கிறது....சிறியஅளவாக" [“The rainfall … is slight,”]எனகுறிப்பிடுகிறார்

பண்டையமெசொப்பொத்தேமியாவில்மனிதன் தோண்டிய கிணறுகள்இன்னும் ஒரு நன்னீர் வழங்கும்முக்கிய இடமாககுறிப்பாக வட சமவெளியில் இருந்ததுஅங்குடைக்ரிஸ் நதியைகட்டுப்படுத்துவது கடினமாகவும்மண்  அடர்ந்தும் இருந்தது.தொடக்கத்தில்மாதிரியான கிணறுகள் நிலத்தில் ஒரு செங்குத்தானகுழியாக இருந்தது.இங்கு ஒருவர் கயிறு ஒன்றில்வாளியை நீருக்குள் குழியின் அடியில் இறக்குவார்.பின் அது நீரை எடுத்ததும் மேலே இழுப்பார்.இந்தசெய்முறை கி மு 1500 ஆண்டளவில் கப்பியின்அறிமுகத்தால் எளிதாக்கப்பட்டது.

மேலும் இன்றைய  பாகிஸ்தான்,வட இந்தியாவில்அமைந்த பண்டைய நாகரிகமான சிந்து சமவெளியும் அதிநவீன .நீர்பாசனத்தையும் சேமிப்புமுறையையும் மேம்படுத்தியது.உதாரணமாக கி மு3000 ஆண்டளவில் கிர்னாரில்[Girnar]நீர்த்தேக்கங்களையும் கி மு 2600 ஆண்டளவில்கால்வாய் நீர்பாசனத்தையும் கொண்டிருந்தது.

மேலும் "Month for raising the Water Wheels" என்ற சுமேரியன் குறிப்பில்இருந்து அது ஒரு தொடக்க காலநீராலைச் சக்கரமாக[Water Wheels]இருக்கலாம் என ஊகிக்க இடம்உண்டு.என்றாலும்  வேறு ஒருசான்றும் நீராலைச் சக்கரம்பண்டையமெசொப்பொத்தேமியாவில் இருந்ததைஉறுதிப்படுத்தவில்லை.அதே போல சிந்து சம வெளிநகரங்களான  மொகெஞ்சதாரோ.ஹரப்பா போன்றஇடங்களில் செய்த அகழ்வு ஆராச்சியின் போதுமண்ணுக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டபழமைச் சின்னங்கள் பண்டைய இந்தியாவில் நீர்தூக்கும் சாதனங்களுக்கு சான்றாகஉள்ளன.மொகெஞ்சதாரோ மட்பாண்டங்களைமேலும் ஆய்வு செய்த சார்  ஜான்  மார்ஷல்[Sir John Marshall], நீராலைச் சக்கரத்திற்கு இவைபாவித்திருக்கலாம் என தனது கருத்தை தெரிவித்துஉள்ளார்.பிரமாண வேதத்திலும்கிணறு,கால்வாய்,அணை குறிக்கப்பட்டுள்ளனரிக்வேதம் "KULYA" என்ற சொல்லை குறிக்கிறது.இதன்நேரடி கருத்து மனிதனால் செய்யப்பட்ட ஆறு-அதாவது கால்வாய்.அதேபோல "AVAR"  என்றசொல்லையும் அடிக்கடி குறிக்கிறது.இதன் கருத்துகிணறு ஆகும்.மேலும் அதே வேதத்தில்  ஒருஆழமான,நேர்த்தியான கிணற்றில் இருந்து ஒருபொறி அமைவு மூலம் நீர் எடுப்பதையும் எடுத்துஉரைக்கிறது.வேதங்கள் சிந்து சம வெளி மக்களைவென்ற பின் எழுதப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.

மேலே குறிப்பிட்டவைகள் எல்லாம் எமக்கு எடுத்துகாட்டுவது என்னவென்றால் நாகரிகத்தின்தொடக்கத்தில் இருந்தே நீர்பாசனம் நன்றாகஅடையாளங் கண்டுகொள்ளப்பட்டுள்ளதுஎன்பதே.இந்த  மெசொப்பொத்தேமியா சுமேரியர்மற்றும் ,சிந்து சம வெளி மக்கள் தமிழர்களின்மூதாதையார் என கருதப்படுகிறது.கி மு 1700-1500ஆண்டு அளவில் சிந்து சம வெளி நாகரிகம் .முற்றாகநிலைகுலைந்த பின்,அங்கு இருந்து தென் இந்தியாகுடியேறிய பொழுது அந்த மக்கள் தங்களுடன்நீர்பாசனம் பற்றிய அறிவையும் அதன்முக்கியத்தையும் எடுத்து சென்று இருக்கலாம் எனநாம் கருதலாம்.என்றாலும் சங்க இலக்கியம் நீராலைச் சக்கரம் போன்ற சாதனங்களின்பாவனைகளின் ஆரம்ப  இடத்தைப் பற்றி தெளிவாகஒன்றும் கூறவில்லை.எப்படி ஆயினும் நீரை தூக்கும்கருவிகள்அது போன்ற மற்றும் எளிமையானகருவிகளை தெளிவாக அகநானுறு,மதுரைகாஞ்சி,சிலப்பதிகாரம்,மணிமேகலை,பெரியபுராணம் போன்றவற்றில் குறிப்பிட்டு உள்ளது.இதைத் தவிர தமிழ் கல்வெட்டுகளிலும் துலாவை பற்றியும் பனை ஓலைகூடை/வாளி பற்றியும் குறிக்கப்பட்டு உள்ளது

இளங்கோவடிகள் புகார்க்காண்டத்தில் பத்தாம்[10]காதையில் காவேரியை  பற்றிய சிறப்புகளைவிவரமாக தரும் போது,அங்கு ஒருவகை நீரிறைக்குங்கருவிவகை,நீர் இறைக்கும் கூடை[இறைகூடை],தண்ணீர் இறைக்கும் ஏற்றமரம்[துலா]போன்ற முறையையும்  அல்லது கருவியையும்கூறுகிறார்.சிலப்பதிகாரம் கிபிஇரண்டாம்நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர்.இனி அந்தகுறிப்பிட்ட பாடல் வரிகளை பார்ப்போம்:

"சூன்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓவிறந் தொலிக்கு மொலியேயல்லது

ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேத்தமும்
ஓங்குநீர்ப் பிழாவு மொலித்தல் செல்லாக"
[சிலப்பதிகாரம்/நாடுகாண் காதை 105-111]

அதாவது,"கடிய குரலையுடைய சிறந்த இடியுடன் கருமுற்றிய  மேகங்களின் கூட்டம் மழைபொழிதலால்,அக் குட மலையில் தோன்றிய ஆற்றுவெள்ளம்,கொழுவிய பல பண்டங்களோடு கடல் தன்வளங்களொடு எதிரும் வண்ணம் புகாரைக்குத்தியிடிக்கும் கடுகி[விரைவாகவருதலையுடையகாவிரியின் புதுநீர் வாய்க்காலின்தலைப்பில்[தொடங்குமிடத்தில்உள்ளகதவின்[வாய்த்தலைக்கண் கதவின்மீதெழுந்துவிழும் ஒலியல்லாது,பன்றிப்பத்தரும்ஒருவகை நீர்இறைக்கும் கூடையும்/இறை கூடையும்பூட்டைப்பொறியும் [நீரிறைக்குங் கருவிவகையும்]ஒலி மிகுந்த ஏற்றமும்[கிணற்றில் தண்ணீர்இறைக்கும் ஏற்றமரமும்நீர்மிகும்இறைகூடையுமென இவை ஒலித்தல் இல்லாத;"என்கிறது.

மேலும் பல  பருவக்காற்று குறைபாடுகள்,சரிசமமற்ற மழை வீழ்ச்சி,சிலவேளை நீரின் பற்றாக்குறையும் சிலவேளை நீரின்  மிகுதியும்போன்ற தடங்கல்கள் பண்டைய தமிழக தமிழர்களைமுன்னைய மெசொப்பொத்தேமியா குடியிருப்பாளர்கள் போலவேசெயற்கைநீர்த்தேக்கம் அல்லது கால்வாய் மூலம் நீர்பாசனம்செய்ய தூண்டியது.அது மட்டும் அல்ல மன்னன் ஹம்முராபி[Babylonian King Hammurabi] போலவேவரலாற்று ரீதியாக,சங்க கால மன்னன் கரிகாலன்இதில் முன்னோடியாக உள்ளான்.இவன்  மண்மேடுஎழுப்புதல்[அணை கட்டுதல்],குளம் வெட்ட காடுகளைஅகற்றுதல்,கால்வாய் தோண்டுதல் போன்ற திட்டங்களை செயலில் வகுத்தான்.கரிகாலனின்இந்த வழிகாட்டலை பின் எல்லா மன்னர்களும்பின்பற்றி நீர்த்தேக்கம் மூலம் நீரை சேமித்துநீர்பாசனத்திற்கு பாவித்தார்கள்