இணைய வாசகர்கள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
ஆன்மீகம்:ஒரு கடிதம், ஒரு பதில்.
Saturday, April 16, 2011
2 comments
-ஆலயத்தில் திருட்டு, அது ஆண்டவனின் தவறா?
(மனுவேந்தனின் இ-மெயில் கடிதத்துக்கு குருதேவசித்தனன்தாஜி அவர்களின் பதில்)
அன்புடையீர்,
உமது கடிதம் கிடைத்தது.உமது இணையத்தளத்தில் எமது கருத்துக்களும் இடம்பெறுவது அறிந்து சந்தோசம்.
மேலும் சில கருத்துக்களை பெறுவதற்காக என்னிடம் பின்வருமாறு கேட்டிருந்தீர்.
"ஆலயங்கள் உடைக்கப்படுகின்ற போது, களவாடப்படுகின்ற போது,ஆண்டவன் ஏன் அவர்களை த்தடுக்கவில்லை?”
மகனே!
அறிவியலின் வாசனை அறவே அற்ற அந்தக் காலத்தில் அடியெடுத்து வைத்த மனிதன் மண்ணும், மலையும், மரமும்,செடியுமாய் காடே நாடாக காணக் கண்டான். குடும்பம் குடும்பமாய் வாழும் மனிதன், கூட்டம் கூடமாய் வாழ்ந்தான்.உண்பதும்,உறங்குவதும் மட்டுமே செய்துவந்தவன், உற்றுநோக்க ஆரம்பித்தான்.இடி-மழை-மின்னல் இவைதான், ஆறாம் அறிவிற்கு அப்பாற்ப்பட்டவற்றைக் கடவுள் என்றுக் காட்டியது.
அறிவுக்கு எட்டாதவற்றை அடுத்தவருக்கு எடுத்துச் சொல்வதற்காகக் கடவுளுக்கு வடிவம் கொடுக்கப்பட்டது.கடவுள் என்றக் கருவை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக மனிதர்கள் ஏற்படுத்திய எண்ணங்களின் வெளிப்பாடே மதங்கள் ஆயிற்று.
கடவுள் ஒருவன்.நிகரற்றவன்,எந்தவொரு தேவையுமற்றவன். மெய்ப்பொருள் ஒன்றுதான்.அதை மனிதர்கள் பலபெயரிட்டு அழைக்கின்றனர்.அவனுக்கு அரிதாரம் பூசி அவதாரம் என்று சொன்னவன் மனிதன்.ஒருவனை பல கடவுள் ஆக்கியவன் மனிதன்.விதம் விதமாய் பெயர்வைத்தவன் மனிதன்.அழகழகாய் ஆலயங்களை அமைத்தவன் மனிதன்.உருவமற்றவனை எண்ணி வணங்கிட மனிதனுக்கு உருவம் தேவைப்பட்டது.உருவாக்கினான். மேலும் அதனை வைத்து வணங்கிட அமைதியான (ஆனால் இக்காலத்தில் அமைதியான ஆலயங்களைக் காண்பது முயற் கொம்பாகிவிட்டது)இடம் தேவைப்பட்டது. ஆலயத்தை அமைத்தான்.இவை எல்லாம் மனிதன் தனது தேவைகளுக்காக உருவாக்கினான்.அவனே கட்டினான். அவனே உடைத்தான். அவனே திருடினான். மனிதனால் கடவுளை எதுவும் செய்து விட முடியாது. உலகில் பல பாகங்களில் பல கொள்ளைகள்,அழிவுகள் மனிதரால் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.அதேபோலவே இந்த மனிதர் அமைத்த மனிதரின் ஆலயங்களும் மனிதரால் தாக்கமடைவது (சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் தடுக்கப்படவேண்டிய விடயமாக இருந்தாலும்) அவை குறித்து வித்தியாசமாக நாம் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என நம்புவோம்.
.நன்றி.
சினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்
Saturday, April 16, 2011
No comments
2011-04-11 பொன்னர்-சங்கர்
நடிகர்கள்: பிரஷாந்த், திவ்யா பரமேஸ்வரன், பூஜா சோப்ரா, சினேகா,குஷ்பூ, விஜயகுமார், பிரபு, சீதா, டெல்லி கணேஷ்,பிரகாஷ்ராஜ், நெப்போலியன்.
கதை:ஒரு சரித்திரக்கதை.
கருத்து: கலைஞரின் கதையல்லவா!!
புள்ளிகள்:55
2011-04-11 அப்பாவி
நடிகர்கள்: கெளதம்,சுஹானி,கே.பாக்யராஜ், சூரி,மனோபாலா.
கதை: யார் யார் தங்களது சுயநலத்திற்காக மற்றவர்களை கஷ்டப்படுத்துகிறார்களோ அவர்களையெல்லாம் களையெடுக்கும் ஒரு அப்பாவியின் ஆக்ரோஷம்தான் படத்தின் கதை.
கருத்து: பரபரப்பான திரைக்கதை, பக்குவமான வசனங்கள்.
புள்ளிகள்:55
2011-04-07 நஞ்சுபுரம்
நடிகர்கள்: ராகவ், மோனிகா.
கதை: பாம்பு படையே இருக்கும் ஒரு ஊரில் நடக்கும் படபட சம்பவங்களே நஞ்சுபுரத்தின் கதை.
கருத்து: நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திரில்லர் படம்.
புள்ளிகள்:55
2011-04-04 சிங்கையில் குருஷேத்திரம்
நடிகர்கள்: விஷ்ணு, சிவகுமார், மதியழகன், விக்னேஷ்வரி, பிரகாஷ் அரசு
கதை: போலீஸில் சிக்கி தூக்கிலிடப்படும் ஒரு பெண்ணின் சிறு வயது மகன், மாமா மீது ஆத்திரம் கொண்டு பெரியவனாகி மாமாவை பழி வாங்குவது தான் கதை.
கருத்து: அதிரடி ஆக்ஷன் காட்சிகள், இயல்பான நடிப்பு, நேர்த்தியான திரைக்கதை.
புள்ளிகள்:50
2011-04-03 சட்டப்படி குற்றம்
நடிகர்கள்: : ஐஸ்வர்யா, பானு, ஜெயஸ்ரீ, சத்தியராஜ், சீமான், ராதாரவி.
கதை: அரசியல்வாதியின் இழுப்புக்கு இணங்காத ஒரு நேர்மையான போலீஸ் ஆஃபீசர் குடும்பத்தை பலி ஆக்கிய அரசியல்வாதியை அந்த ஆஃபீசர் பழி வாங்கறதுதான் கதை.
கருத்து: எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது கோபத்தைதான் படமாக எடுத்திருக்கிறார்.
புள்ளிகள்:55
2011-03-29 குள்ளநரி கூட்டம்
நடிகர்கள்: விஷ்ணு, ரம்யா நம்பீசன்,
கதை:படம் நெடுக இழையோடும் மெல்லிய காதல், நகைச்சுவை
கருத்து: மொத்தத்துல குடும்பத்தோட பார்க்க முடியற, எந்த வெட்டு குத்து கொலை இல்லாத, பஞ்ச் டயலாக், வில்லன், கார் சேசிங்னு எந்த தலைவலியும் இல்லாத கொஞ்சம் லாஜிக்கும் இல்லாத அருமையான திரைப்படம், கண்டிப்பா பாருங்க.
புள்ளிகள்:65
2011-03-23 முத்துக்கு முத்தாக
நடிகர்கள்: விக்ராந்த், மோனிகா,சரண்யா, இளவரசு.
கதை: பெற்றோரை பொக்கிஷமாக நினைத்து நல்லபடியாக பார்த்துகொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் படம்.
கருத்து: பலே மூவி !
புள்ளிகள்:60
2011-03-23 லத்திகா
நடிகர்கள்:டாக்டர் சீனிவாசன், மீனாட்சி கைலாஷ்,ரகுமான்,.
கதை: குழந்தையையும், மனைவியையும் யாரோ கடத்திவிட தலைவர் அவர்களை மீட்கிறாரா...? இல்லையா...? என்பதை வெண்திரையில் பார்த்து வெந்து சாவுங்கள்.
புள்ளிகள்:35
2011-03-22 அவர்களும் இவர்களும்
நடிகர்கள்: விமல்நடராஜன்,சுப்ரஜா,சதீஷ், ஐஸ்வர்யா, சார்லி.
கதை: பெரிய இடத்துப் பெண்ணும், தாழ்ந்த ஜாதி பையனும் காதலித்து ஓடிப்போனால் ஏற்படும் விளைவுகளை அவர்களது பக்கத்தில் இருந்தும், அவர்களை சார்ந்தவர்களது பக்கத்தில் இருந்தும் அணுகியிருக்கும் படம்தான் அவர்களும் இவர்களும்!
புள்ளிகள்:50
2011-03-20 ஐவர்
நடிகர்கள்: அதுல்யா,விஜய் ஆன்ந்த், இலா, பேரரசன்.
கதை: நல்ல நட்பிற்காகவும், அவனது குடும்பத்திற்காகவும் துரோகி பட்டத்தையும் சுமந்து ஒதுங்கி வாழும் ஒருத்தரை அவனது உயிர் நண்பனுடன் இணைக்க போராடும் நான்கு இளைஞர்களின் கதைதான்
புள்ளிகள்:45
2011-03-17 அய்யன்
நடிகர்கள்: வாசன் கார்த்திக், திவ்யா பத்மினி,கஞ்சா கருப்பு,சிங்கமுத்து.
கதை: நித்தம் நம் வாழ்க்கையில் ஒவ்வொருத்தருக்குள்ளேயும் நடக்கிற உயிரோட்டமான சம்பவம் தான் கதை.
புள்ளிகள்:40
2011-03-17 பவானி
நடிகர்கள்: சினேகா,சீனிவாசராவ்,விவேக்,சம்பத்.
கதை: பொலிட்டிக்கல் தாதா கோட்டாவின் கோட்டையை சீன்சியர் போலீஸ் ஆபீசரான சினேகா எப்படி தகர்க்கிறார்? அதற்காக பதவி உள்ளிட்ட எதையெல்லாம் இழக்கிறார்? என்பதுதான் பவானி படத்தின் மொத்த கதையும்!
கருத்து: சுமார், பரவாயில்லை.
புள்ளிகள்:50
2011-03-17 காதலர் குடியிருப்பு
நடிகர்கள்: அனீஷ், காயத்ரி, சரண்யா.
கதை: பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பெங்களூரில் நடந்த கலவரத்தில் காணாமல் போன ஒரு காதலனை பற்றிய கதை.
புள்ளிகள்:20
2011-03-17 வர்மம்
நடிகர்கள்: அகிலன்,அனகா,நிழல்கள்ரவி, மீரா கிருஷ்ணன்.
கதை:தங்கையை கற்பழித்து, அவரது சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் பாசக்கார அண்ணனின் கதைதான் "வர்மம்".
கருத்து: இந்தப்படம் பழம் பாடம்.
புள்ளிகள்:30
Subscribe to:
Posts (Atom)