ஒளிர்வு-(14) மார்கழி த்திங்கள்


சிந்தனை ஒளி:
நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்
--------------------------------------------------------------------------------
பிரார்த்தனை என்பது
கடவுளிடம் ஏதாவது கேட்பதல்ல.
அது ஆன்மாவின் ஏக்கமாகும்.
--------------------------------------------------------------------------------
நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,
நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.
நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,
நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்
- ஆப்ரகாம் லிங்கன்
--------------------------------------------------------------------------------
முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே;
உலகம் உன்னை விழுங்கி விடும்.
-பாரசீகம்
--------------------------------------------------------------------------------
தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி
எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது
இழிவானது
-ஹென்றி போர்டு
--------------------------------------------------------------------------------
எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
-இங்கிலாந்து.
--------------------------------------------------------------------------------
உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்.
-யேசுநாதர்.

ஒரு வெள்ளாட்டை முன்னால் இருந்தும்
குதிரையை பின்னால் இருந்தும்
முட்டாளை எந்த பக்கத்திலிருந்தும் நெருங்க வேண்டாம்.
--------------------------------------------------------------------------------
எவ்வளவு தான் பந்த பாசமானாலும் இடையில் ஒரு வேலி மெலிசா இருந்துகிட்டே இருக்கணும்.
--------------------------------------------------------------------------------
எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
--------------------------------------------------------------------------------
அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.
--------------------------------------------------------------------------------
நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு குதியானது உங்களுக்கு ண்டிப்பாககிடைத்தே தீரும்.
--------------------------------------------------------------------------------
வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் மிகப் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும்.
--------------------------------------------------------------------------------
பெண்களின் ஏழு பருவங்கள்
* பேதை 1 முதல் 8 வயது வரை
* பெதும்பை 9 முதல் 10 வயது வரை
* மங்கை 11 முதல் 14 வயது வரை
* மடந்தை 15 முதல் 18 வயது வரை
* அரிவை 19 முதல் 24 வயது வரை
* தெரிவை 25 முதல் 29 வயது வரை
* பேரிளம் பெண் 30 வயது முதல்

கனடாவில்…முதியோர்

 
அவர்களுக்கான  நிதிமுறைத் திட்டங்கள்
வருவாய் பாதுகாப்புத் திட்டங்கள் (Income Security Programs)
சர்வீஸ் கனடா (Service Canada) [குறிப்பு: உங்கள் சமூகப் பாதுகாப்பு எண்ணை  (Social Insurance Number) தயாராக வைத்துக்கொள்ளவும்]
1-800-277-9914       TTY: 1-800-255-4786
முதியோர் பாதுகாப்பு (Old Age Security OAS) ஓய்வூதியம் என்பது, வயது, சட்டபூர்வ அந்தஸ்து மற்றும் 18 வயதுக்குப் பிறகு கனடாவில் வசித்த ஆண்டுகளின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்தது. இதில் இரண்டு வகைகள் உள்ளன - முழு ஓய்வூதியம் மற்றும் பகுதி ஓய்வூதியம். கனடாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல்  நீங்கள் வசித்திருந்தால், நீங்கள் பகுதி ஓய்வூதியத்துக்குத் தகுதிபெறலாம். OASக்கு வரி உண்டு. இதற்கு எழுத்து மூலம் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் OAS கனடாவுக்கு வெளியிலும் தரப்படலாம்.
http://findlink.at/oldagesecu
உறுதியளிக்கப்பட்ட வருவாய் ஆதரவு (Guaranteed Income Supplement GIS) என்பது, கனடாவில் வசிக்கும் குறைந்த வருவாய் உள்ள, முதியோர் பாதுகாப்பு ஓய்வூதியம் (OAS) பெறும் நபர்களுக்கு வரியற்ற மாதாந்திர சலுகையை வழங்குகிறது. (எனவே, பகுதி OAS எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும், பகுதி OASக்கு மட்டும் தகுதி பெறுவோருக்கு அவர்கள் கட்டாயம் ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது முக்கியமாகிறது.) உறுதியளிக்கப்பட்ட வருவாய் ஆதரவு என்பது, உங்கள் வருடாந்திர வருவாய், அல்லது உங்களுடைய மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது பொதுச்சட்டப்படியான கூட்டாளி ஆகிய இருவரின் மொத்த வருவாய் எவ்வளவு என்பதன் அடிப்படையில் தரப்படுகிறது. உங்கள் வருடாந்திர வருவாய் ஆண்டுக்கு ஆண்டு மாறக்கூடும் என்பதால், ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் GIS புதுப்பிக்க வேண்டும்.
http://findlink.at/scgis
ஈட்டுப்படி (Allowance) என்பது, OAS மற்றும் GIS பெறுகிற நபரின் வாழ்க்கைத் துணை/பொதுச்சட்டப்படியான கூட்டாளிகளில் (எதிர்பாலைச் சேர்ந்த அல்லது ஒரே பாலினத்தைச் சேர்ந்த) 60-64 வயதுக்கு இடைப்பட்ட, குறைந்த வருவாய் உள்ள நபர்களுக்குத் தரப்படும் சலுகை ஆகும். 65 வயதில் இது நிறுத்தப்படும், அப்போது அந்த நபர் OASக்கு விண்ணப்பிக்க வேண்டும். இச்சலுகைக்கு வரி கிடையாது, ஆயினும் எழுத்து வடிவில் விண்ணப்பிக்க வேண்டும்.
http://findlink.at/allowance

சர்வைவர் ஈட்டுப்படி (Allowance for the Survivor) என்பது, OAS மற்றும் GIS பெற்றுவந்த நபரின் இறப்பிற்குப் பிறகு அவரது வாழ்க்கைத் துணை/பொதுச்சட்டப்படியான கூட்டாளிகளில் (எதிர்பாலைச் சேர்ந்த அல்லது ஒரே பாலினத்தைச் சேர்ந்த) 60-64 வயதுக்கு இடைப்பட்ட, குறைந்த வருவாய் உள்ள நபர்களுக்குத் தரப்படும் சலுகை ஆகும். 65 வயதில் இது நிறுத்தப்படும், அப்போது அந்த நபர் OASக்கு விண்ணப்பிக்க வேண்டும். இச்சலுகைக்கு வரி கிடையாது, ஆயினும் எழுத்து வடிவில் விண்ணப்பிக்க வேண்டும்.
http://findlink.at/allowsurv
GIS, ஈட்டுப்படி மற்றும் சர்வைவர் ஈட்டுப்படி ஆகியவை, கனடாவிலிருந்து புறப்படும் மாதத்திற்கும் அதற்குப் பிந்தைய 6 மாதங்களுக்கும் மட்டுமே கனடாவுக்கு வெளியே வழங்கப்பட இயலும்.
ஸ்பான்சர் செய்யப்பட்ட மற்றும் ஸ்பான்சர் செய்யப்படாத குடியேறிகள், 18 வயதுக்குப் பிறகு 10 ஆண்டுகளுக்கும் குறைவாக வசிப்பவர்களாக இருந்தால் - ஸ்பான்சர் இறந்து போனது போன்ற சில அசாதாரணமான சூழ்நிலைகளில் தவிர - ஸ்பான்சர்ஷிப் காலத்தில் - GIS, ஈட்டுப்படி அல்லது சர்வைவர் ஈட்டுப்படிக்குத் தகுதி பெற மாட்டார்கள்.
கனடா ஓய்வூதியத் திட்டம் (Canada Pension Plan CPP) என்பது வேலைநியமன அடிப்படையிலான, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும். இது கனடாவுக்கு வெளியிலும் வழங்கப்படக்கூடியது. CPP வழங்கல்களில் அடங்குபவை : பணிமூப்பு ஓய்வூதியம்; ஊனத்துக்கான நிதியுதவி; சர்வைவர் நிதியுதவிகள் (உயிரிழப்பு நிதியுதவி, சர்வைவர் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளுக்கான நிதியுதவி உள்பட்டது). பணிமூப்பு ஓய்வூதியத்தை 60-64 வயதில் (சற்று குறைவான தொகை எனற விகிதத்தில்); அல்லது 65 வயதில் முழுத்தொகை; அல்லது 65-70 இடைப்பட்ட வயதில் சற்று கூடுதல் தொகை என அவரவர் விருப்பப்படி தேர்வு செய்யலாம். ஓய்வூதியத்துக்காக எழுத்து வடிவில் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும், இந்த சலுகைகளை எப்போது பெறத் திட்டமிட்டுள்ளார்களோ அதற்கு ஆறு மாதங்களுக்கு முன் விண்ணபிக்க வேண்டும்.
http://findlink.at/cpp
சமூக பாதுகாப்பு ஒப்பந்தங்கள் (Social Security Agreements) கனடாவில் அல்லது வேறொரு நாட்டில் வசித்தவர் அல்லது பணி புரிந்தவர் அந்த நாட்டிலிருந்து மற்றும் அல்லது கனடாவிலிருந்து நிதியுதவிச் சலுகைகள் பெற வழி செய்கின்றன. முதியோர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் கனடிய ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றின் கீழான நிதியுதவிகள், இந்த ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்ட கனடிய நிதியுதவிகள் ஆகும். ஒப்பந்தங்களில் சேர்க்கப்பட்ட மற்ற நாடுகளின் நிதியுதவிச் சலுகைகள், பணிமூப்பு, ஊனம் அல்லது உயிரிழப்பு என அந்த நாட்டின் ஓய்வூதியத் திட்டத்திற்கேற்ப மாறுபடும். கனடாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையிலான சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து மேலும் தகவல் பெற இந்த வலைதளத்தைப் பார்க்கவும் :
http://findlink.at/ssagreemen
Ministry of Revenue
1-866-668-8297       TTY: 1-800-263-7776
உறுதியளிக்கப்பட்ட வருடாந்திர வருவாய் முறை (Guaranteed Annual Income System, GAINS) என்பது, OAS மற்றும் GIS பெற்று வருகிற குறைந்த வருவாய் கொண்ட தகுதியுள்ள முதியோருக்கு ஒன்ராரியோ வருவாய்த் துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. GAINS நிதியுதவிச் சலுகை பெற விண்ணப்பம் தேவை இல்லை. நீங்கள் ஒருமுறை OAS மற்றும் GIS பெறத் துவங்கி விட்டீர்கள் என்றால், GAINS சலுகைக்கும் நீங்கள் தகுதி மதிப்பீடு செய்யப்படுவீர்கள். முந்தைய ஆண்டில் உங்கள் (மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணையின்) வருமான வரிப் படிவத்தில்(படிவங்களில்) உள்ள தகவல்களின் அடிப்படையில் இதற்கான தகுதி முடிவு செய்யப்படும்.
http://findlink.at/gains