ஒளிர்வு-(28) மாசி த்திங்கள்-2013


உண்மைகள் உரைக்கப்படும் தளம்-தீபம்மூடநம்பிக்கைகளின் முடிவிடம்.

தளத்தில்:சிந்தனைஒளிகனடாவிலிருந்து ஒரு கடிதம்.., கம்பனின் அறிவியல் ஆழம், ஆன்மீகம், , ஆராய்ச்சியாளரின் செய்திகள்யாரோநான் யாரோதொழில்நுட்பம்உணவின் புதினம் அறிவியல்,கணினிஉலகம் ,பாருக்குள்ஒருநாடு….ஒருபார்வை , உங்களுக்கு தெரியுமா? ,சிரிக்க...!,சினிமாவிளையாட்டு.,நடிகையின் சதையை நம்பி…, !

உங்கள் படைப்பை சமர்ப்பிக்க: manuventhan@hotmail.com

சிந்தனைஒளி

தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளாத பெண்ணை
  வேறுயாரும் காப்பாற்றமுடியாது!
எளிதானதை சிக்கலாக்குவது எளிது.
  ஆனால் சிக்கலானதை எளிதாக்குவதோ சிக்கல்!
காதல் என்பது பரீட்சைமாதிரி இல்லை.
  ஒருதடவை  failஆனால் மறுதடவை எழுதி pass பண்ணுவதற்கு!
அன்னையை எவரோடும் ஒப்பிடக்கூடாது!
  அவள் ஈடற்றவள்!
நீ துணிந்தவனாக இருந்தால்
  தோல்விகூட உன்னைக்கண்டு அஞ்சும்!

ஆன்மீகம்-கர்மம்/ தர்மம் /வினை/அறம்


வேறு ஒரு கோணத்தில் :கர்மமும் தர்மமும்
[ முன் வினையும்  அற முறையும் ]
[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
By:Kandiah Thillaivinayagalingam]

"எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை
வீயாது, பின் சென்று, அடும்."-   திருக்குறள்

[ஒருவர் செய்த தீ வினைப் பகைமைப் பலனிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. அது அழியாது நின்று அவரைப் பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும்.]

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" -ஔவையார். கொன்றை வேந்தன்:

["இந்தப் பிறப்பில் நல்லது செய்தால், அதை யாரோ ஒருவர் வரவு செலவுக் கணக்குவைத்துக் கூட்டிக் கழித்து, நிகர வருமானத்தைத் தேர்ந்து உங்களோடு அடுத்த பிறவிக்கு "இருப்பு இவ்வளவு" என்று அனுப்பி விடுவதாகப் புரிந்து கொள்ளுவது ஊழ்வினை.முற்பிறப்பில் செய்த வினைகள் இந்தப் பிறப்பில் ஊழ்த்து வந்து நல்லது
கெட்டது செய்யும் என்ற கருத்தெல்லாம் வள்ளுவரில் கிடையாது.அது அவரை  இந்த பிறப்பிலேயே பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும் என்பதே அவர் கருத்து.அது மட்டும் அல்ல ஔவையார் கருதும் அதுவே.இது தான் எனது அபிப்பிராயமும் நம்பிக்கையும்.குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்]
என் செய லாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே
உன் செய லேயென்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே "- பட்டினத்தார்

[இந்த பாடல் அடிகளை கழுவேற்றும் பொது தன வினையை நொந்தது பாடிய பாடல்.அவர் முன் வினைப்  பயன் தான் தன்னை இப்படி வருத்திக் கொண்டு இருக்கிறது என நம்பினார் ] 


ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன்[விளைவு ] கிட்டும் என்பதை குறிப்பதற்கு 'கர்மா' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. கர்மா என்ற சொல், 'செய்' என்று பொருள்படும் 'க்ரு' என்ற வடமொழிச் சொல்லின் அடிப்படையில் உருவானது. அது போலவே தர்மம் என்பதை சமுதாயத்தில் ஒருவருடைய பங்கை வைத்து விளக்கமுடியும் அதாவது மனிதர்களைப் பொறுத்தவரை தர்மம் என்றால் சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது ஆகும்.தர்மம் என்று இந்து சமயத்தில் பொதுவாக சொல்லப்படுதலுக்கு, தமிழில் அறம் என்று வழங்கப்படுகிறது.

உதாரணமாக ,ஒரு பிச்சை காரனாக இருந்தாலும் வாழும் காலத்தில் நல்ல  கர்மாக்களை சேர்க்க வேண்டின்,நீ நல்லவனாக இருக்கவேண்டும் .நாம் செய்யும் கர்மாக்களே நம் தலை எழுத்தாக மாறுகின்றது.நம் செயல்களின் மூலம், நம்முடைய அதிர்ஷ்டம் / துரதிருஷ்டம் உருவாகிறது.நம் செயல்களுக்கு எப்பொழுதும் நாமே காரணம்.

ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்
என்கிறது யஜுர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.5

கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் ஆகும். அவரவர் கர்மா அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது.

கர்மா என்பது ஒரு சிறு காலத்தில் பலனளிக்காது ,அது அடுத்த பிறவிக்கும் தொடரும்.

நல்ல  வாழ்வு / வாய்ப்பு  வருமாயின் நீ நல்ல கர்மா வைத்திருக்கிறாய் எனவும் அது போல் ஒரு கூடாத   வாழ்வு / வாய்ப்பு  வருமாயின் நீ கூடாத  கர்மா வைத்திருக்கிறாய் எனவும்   பொருள்படும் .

ஒரு இந்திய பழ மொழி உண்டு .அது சொல்வது :-

" நீ வளர்ந்ததும் திருமணம் செய் .குடும்பத்தவனாக மாறியதும் பணம் சேர் .முதுமை அடைந்ததும் ஞானத்தை வளர்த்து அடுத்த பிறவிக்கான கர்மாவை சேர்த்துக்கொள்." 

இது ஒரு "நீண்ட கால வைப்பு" போல தோன்றவில்லையா ? 

"இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்" எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மையே."
(புறநானூறு : பாடல் : 134)

[ஆய் அண்டிரனின் கைவண்மை மறுமை நோக்கிச் செய்யப்பட்ட அறமன்று என்றும் அப்படி மறுமைநோக்கிச் செய்யப்படும் ஈகை அறம் அறத்தை விலைகூறி விற்கும் வணிகத்தை ஒத்தது என்றும்முடமோசியார் பாடுகிறார். ]

நமக்கு வேண்டியதெல்லாம், மனதில் உறுதி, வாக்கினிலே இனிமை, நினவு நல்லது. அவ்வளவே.இது தான் எனது கருத்து.உங்கள் கருத்து என்னவோ ?

எமது மக்கள் பொதுவாக கர்மாவில் மிக திவீர நம்பிக்கை உள்ளவர்கள் .அது மட்டும் அல்ல அதை வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் விபரிக்க பயன்படுத்துவார்கள் .உதாரணமாக :

நீ ஏழையாக இருந்தால்- அது உன் கர்மாவால்!
நீ நோயாளியாக இருந்தால்- அது உன் கர்மாவால்!!
நீ நஷ்டம் அடைந்தால் - அது உன் கர்மாவால்!!!

உன்னிடம் உள்ள சுக துக்கங்கள் உன்னைப் பந்தித்துள்ள வினை அல்லது கன்ம மலத்தின் அடையாளம் என்பதே அவர்களின் கருத்து.

ஒருவன் இன்று தீய விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பதைச் சிலர் 'எல்லாம் அவன் கர்மா' என்று சொல்வதுண்டு. நேற்றைய செயலின் விளைவை இன்று அனுபவிக்கிறான் என்பது பொருள்.  மேலும் தமக்கு ஒவ்வாத கர்மாவை செய்யும் பொழுது பிறர் அதை சுட்டிக்காட்டி எச்சரிக்க பயன்படுத்தும் வார்த்தை தான் “கர்மம் கர்மம்”. இவ்வார்த்தையை கேட்டதும் மனம் தெளிந்து அதிலிருந்து விடுபட்டு நற்கதியை அடைவார்கள் என நம்பியதால்

கர்மா என்பது  காரணமும்[வினையும்]   நிகழ்வும்  (விளைவும் )  சேர்ந்த ஒன்று .நீ "அ" செய்தால் "அ" வரும்.அதாவது நீ  தக்காளி  நட்டு  தண்ணீர்  ஊற்றி பராமரித்தால்   தக்காளி வளரும் .

"நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய்" 

"வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் "  

பொதுவாக கர்மாவை மூன்று வாயில் ஊடாக உண்டாக்கிறாய் .உடல்,   வாய், மனம் .இதைத்தான் நாம் செய்தல், சொல்லுதல், நினைத்தால் என்கிறோம்.கர்மா என்றால் என்ன என்று  தெரியுமா ? 

நியுட்டன்  விதி சொல்வது போல எந்த ஒரு தாக்குதலுக்கும் ஒரு எதிர் தாக்குதல் உண்டு.அதாவது  ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. ஆகவே விதியினால் வினை விளைகிறது.

ஆராய்ச்சியாளரின் செய்திகள்


 செயற்கை ரத்தம்: சென்னை ..டி.-யில் செயற்கை ரத்தம் கண்டுபிடித்து ஆராய்ச்சியாளர்கள்  சாதனை படைத்து உள்ளனர். டாக்டர் சோமா குஹதா குர்தா தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. அவர்கள்ஸ்டெம்செல்களில் இருந்து பல லட்சம் கோடி சிவப்பு ரத்த செல்களை சேகரித்தனர். இதில் இருந்து செயற்கை ரத்தம் தயாரித்தனர். இது ஆய்வகத்தில் 17 நாட்கள் வைத்து உருவாக்கப்பட்டது.
பின்னர், அதை விலங்குகள் உடலில் செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்தனர். இன்னும் 3 ஆண்டுகளில் இது மனித உடலுக்குள் செலுத்தப்பட உள்ளது. தற்போது இது ஆக்சிஜனை எடுத்து செல்லும் திறன் கொண்டதாக உள்ளது. மனித உடலில் செலுத்தும்போது ரத்த சிவப்பணுக்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டதாக அது இருக்கும். இந்த தகவலை செயற்கை ரத்தம் தயாரிக்கும் குழுவின் தலைவர் டாக்டர் சோமா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, ‘இந்த செயற்கை ரத்தம் முதலில் ரத்தசோகை நோய் பாதித்த எலிக்கு செலுத்தப்பட்டது. அதை அந்த எலியின் உடல் ஏற்றுக் கொண்டு உயிர் பிழைத்ததைத் தொடர்ந்து அடுத்த கட்ட பரிசோதனைக்கு சென்றோம்.
உலகம் முழுவதும் செயற்கை ரத்தம் தயாரிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர். பிரான்சில் மனிதர்கள் உடலில் செலுத்தி பரிசோதிக்க தொடங்கி விட்டனர். இங்கிலாந்தில் இதை பயன்படுத்தி வருகின்றனர்என்றார்.
செயற்கை தசைகளை உருவாக்கி சாதனை: உயிரினங்களில் காணப்படும் இயற்கையான தசைகள் சேதமடையும் போது, அவற்றிற்கு பதிலாக செயற்கையான மாற்றீட்டு தசைகளை பயன்படுத்துவது தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு வெற்றியளித்துள்ளது.
புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் David H. Koch Institute - இல் பணியாற்றும் MIT ஆய்வாளர்களே இந்த செயற்கை மாற்றீட்டு தசையினை உருவாக்கியுள்ளனர்.
இச்செயற்கைத் தசையானது இருவகையான பொலிமர் சேர்வைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது மீள்தன்மை உடை, கட்டமைப்பையும் வழங்குவதற்காக ஒருவகை பொலிமர் சேர்வையும், நீர் போன்ற ஈரலிப்பு தன்மையை உறுஞ்சும்பொருட்டு பிறிதொரு பொலிமர் சேர்வையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கீரையிலிருந்து மின்சாரம்: உணவாக மட்டும் கருதப்பட்ட கீரையிலிருந்து தற்போது உயிரியல் கலப்பு(Bio-Hybrid) சோலார் செல்கள் தயாரிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள வென்டர்பில்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், பசலைக் கீரையில் ஒளிச்சேர்க்கைக்கு உதவும் புரதம் சூரிய ஒளியை மின் வேதியியல் ஆற்றலாக மாற்றும் தன்மை கொண்டது
எனவும், இதை சிலிகானுடன் சேர்த்து சோலார் செல்களை தயாரிக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
புவியில் ஒக்சிஜனுக்கு அடுத்து அதிகம் காணப்படும் தனிமங்களில் சிலிக்கானும் ஒன்று. இது ஒரு அலோகம். குறை மின்கடத்தி கருவிகளில் இது பயன்படுகிறது.
போட்டோ சிஸ்டம் 1 என்ற சிறப்பு புரதம் பசலைக் கீரையில் உள்ளது. இதனை சிலிக்கானுடன் சேர்த்து பயோஹைப்ரிட் என்ற சோலார் செல்லை தயாரித்தனர்.
இது மற்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிப்பதை விட குறைந்த செலவே ஆகும்.
மேலும் சில தாவரங்கள் கீரைக்கு ஒப்பான புரதங்களை பெற்றுள்ளதால், பயோஹைப்ரிட் சோலார் செல்கள் தயாரிக்க தேவையான மூலப் பொருட்களையும் எளிதில் பெறலாம்.

தொழில்நுட்பம்சினிமா ப்ரொஜக்டர் இயங்கும் விதம் - Cinema Projector

தமிழர்களுக்கும் சினிமாவுக்கும் பிரிக்க முடியாத பந்தம் ஒன்று உண்டு. என்னதான் 'விசிடி', 'கேபிள்' என்று சினிமா வீட்டிற்குள்ளேயே வந்துவிட்டாலும், 'பெரிய திரை'க்கு தனி மதிப்பு உண்டு. அமெரிக்காவிலேயே (யு.எஸ்..) சுமார் 37,000 பெரிய திரையரங்குகள் இப்போதும் இருக்கின்றன. Simple Projector

இந்தப் பெரிய திரையரங்குகளில் படம் எப்படி திரையிடப்படுகிறது, செல்லுலாயிட் கனவுகள் எவ்வாறு விரிகிறது என்பதைப் பார்ப்போம். திரைப்படத் தொழில்நுட்பத்திற்கு முக்கிய வசதி நமது கண்களின் காட்சியை நிலைநிறுத்தும் தன்மை தான். பார்க்கின்ற ஒரு காட்சி, பார்த்த பின்னும் சில கணங்கள் (ஒரு வினாடியில் 20ல் 1 பங்கு நேரம் 1/20th of a second) நம் விழியில் நிற்கிறது என்ற அறிவியல் உண்மையே திரைப்படத்திற்கு அடிப்படை ஆதாரம்.

ஒரு வரைபடத்தை காட்டிக் கொண்டிருக்கும் போது, வினாடியில் 1/20 பகுதி நேரத்திற்குள் அதே போன்ற மற்றொரு படத்தை அதே இடத்தில் காட்டினால் படம் மாறியது கண்களுக்குத் தெரியாது என்ற அடிப்படையில் 1834ம் ஆண்டு வில்லியம் ஜார்ஜ் ஹார்னர் பேப்பரில் வரைந்த படங்களை ஒரு டிரம்மில் உள்பக்கமாக ஒட்டி, படங்களுக்கிடையில் நீள் வடிவில் துளையிட்டு, டிரம்மை சுழல விட்டு வெளியிலிருந்து அந்த துளைகள் வழியாகப் பார்த்தால் அந்த படங்கள் இடைவெளியில்லாமல் தொடர்ந்து வருவது போல் ஒரு கருவி செய்தார். இதுவே முதல் ப்ரொஜக்டர் என்று சொல்லலாம். இதற்கு ஜோட்ரோஃப் என்று பெயரிடப்பட்டது. ஆனால் 1891ல் தாமஸ் ஆல்வா எடிசன் கைனடோஸ்கோப் என்ற கருவியை உருவாக்கிய பின் எல்லாமே மாறிவிட்டது. அதில் படச்சுருளை சிறிய மோட்டார் மூலமாக ஒரு விளக்கின் முன் ஓட வைத்தார். இன்றைய ப்ரொஜக்டர்கள் இதே நுட்பத்தை தான் பயன்படுத்துகின்றன. Old Projector

ப்ரொஜக்டரில் படங்கள் வினாடியில் ஒரு பகுதி நேரத்திற்கு விளக்கு வெளிச்சத்தின் முன் நிறுத்தப்படுகிறது. மிக பிரகாசமான வெளிச்சம் அந்த படத்தை லென்ஸ் வழியாக திரையில் பெரிதாகக் காட்டுகிறது.

ஒரு அடி நீள பிலிமில் 16 படங்கள் வரும். ஒரு வினாடி நேரத்திற்குள் 24 படங்கள் ப்ரொஜக்டரில் ஓடுகிறது. ஆக திரையில் நாம் பார்க்கும் ஒவ்வொரு வினாடிக்கும் ஒன்றரை அடி படச்சுருள் தேவைப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு 90 அடி, ஒரு மணி நேரத்திற்கு 5,400 அடி (கிட்டதட்ட 1.8 கிலோமீட்டர்! )

இரு படங்களுக்கு இடையிலான கருப்பு பட்டை ஓடும் போது ப்ரொஜக்டரில் விளக்கிற்கு முன் ஒரு இறக்கை (ஷட்டர்) வெளிச்சத்தை மூடி திறக்கிறது. இதுவும் ஒரு வினாடிக்கு 24 முறை இயங்கும். இது இல்லாவிட்டால் படம் குதிப்பது போல இருக்கும்.