எந்த ஊர் போனாலும் தமிழர் ஊர் [திருவள்ளூர் ]போலாகுமா?.

திருவள்ளூர் (Thiruvallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
இவ்வூரின் சிறப்பு  
இதன் திருத்தமான பெயர் திருவெவ்வுளூர் ( = திருஎவ்வுளூர் = திரு எவ்வுள் ஊர்) ஆகும். இதன் உண்மையான பழைய பெயர் வெறுமனே எவ்வுள் என்பதேயாகும். அப்படியேதான் ஆழ்வார் பாசுரங்களில் பாடுவதைக் காணலாம். இவ்வூரில் அமைந்துள்ள வீரராகவபெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும்.
விஷ்ணு கோவிலில் பாம்பில் தூங்கும் நாராயணன் 

உள் என்னும் சொல் மிக அரிதாக ஊர்ப் பெயரிலே காணப்படும். வைணவத் திருப்பதிகளில் ஒன்றாகிய இந்த எவ்வுள் என்னும் ஊரை அப்படியே திருமங்கையாழ்வாரும் திருமழிசையாழ்வாரும் பாடியுள்ளனர். பிறகு நாளடைவில் திருஎவ்வுள் என்றும், திருஎவ்வுளூர், திருவெவ்வுளூர் என்றும் அழைக்கப்பெற்ற அவ்வூர், இக்காலத்தில் திருவள்ளூர் எனச் சிதைந்து வழங்குகின்றது.
மக்கள் வகைப்பாடு
மாசி மாத தெப்ப திருவிழா 
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 45,517 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவள்ளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவள்ளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு?

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலுதெனாலிராமன்என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதன் பிறகுஎலிபடத்தில் நடித்தார். இப்படமும் எதிர்பார்த்த படி வெற்றியடையவில்லை. இதன்பின் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த வடிவேலு, மீண்டும் நடிக்க திட்டமிட்டு இயக்குனர்களிடம் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறாராம்.
இந்நிலையில், வடிவேலு அடுத்ததாக சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நலன் குமாரசாமி தற்போதுகாதலும் கடந்து போகும்என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படம் வெளியான பிறகு வடிவேலு நடிக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
                                                                                   

காதல் ஓவியம் வரைந்தேன்.,,,[ஆக்கம் :அகிலன் தமிழன்]



(அகிலன் தமிழன்)
www.theebam.com












*******************************************

மதுபானத்தை எந்த அளவு உட்கொள்ள வேண்டும்?

மதுபானம் அருந்துவது தொடர்பிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பிரிட்டன் வெளியிட்டுள்ளது.
அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் நோக்கில், இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எந்த அளவுக்கு மதுபானத்தை அருந்துவது, பெரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தாது எவ்வளவு  அருந்துவது என்பது குறித்து அந்த வழிகாட்டல் கையேடு கூறுகிறது.
மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு மதுபானத்தை அருந்துவது சிறந்தது என பிரிட்டிஷ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகளவில் மதுபானத்தை அருந்துவதனால், புற்றுநோய்க்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
மதுபானத்தை தொடர்ச்சியாக அருந்துபவர்கள், வாரத்திற்கு 14 யூனிட்களுக்கு அதிகமாக அதனை உட்கொள்ளக்கூடாது என்று அந்த ஆய்வு பரிந்துரை செய்துள்ளது.
அதாவது, ஒரு வாரத்திற்கு அதிகபட்சமாக ஆறு பைன்ட் அளவு பியர் அல்லது ஏழு கிளாஸ் வைன் ஆகியவற்றுக்கு மேலாக உட்கொள்வதை தவிர்க்குமாறு அந்த அறிவுறுத்தல் கூறுகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் மது அருந்துவதை முழுமையாக தவிர்க்க வேண்டும் எனவும் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன.
தினந்தோறும் மதுபானம் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், வாரத்தில் சில நாட்கள், அதனை அருந்துவதை தவிர்த்துக்கொள்வது சிறந்தது எனவும் புதிய ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மது அருந்துவதால் ஏற்படும் நோய்களுக்கு அப்பால், அதிக மது அருந்துபவர்கள் வீதி விபத்து மற்றும் காயங்களுக்குள்ளாவதும் அதிகம் நடைபெறுவதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
ஒரு யூனிட் என்றால் என்ன?
புதிய ஆய்வின் பரிந்துரையின்டி பியர் என்றால் ஒரு பைண்ட் அதாவது 576 மில்லி லிட்டர் அளவு, வைன் என்றால் 175 மில்லி லிட்டர் அளவு, விஸ்கி அல்லது ரம் போன்ற கூடுதல் ஆல்கஹால் கொண்ட மதுபானமாக இருந்தால் 50 மில்லி லிட்டர் அளவுகள் ஆகியவை சராசரியாக இரண்டு யூனிட் அளவுகளாக மதிப்பிடப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முந்தைய வழிகாட்டலின்படி, ஆணொருவர் நாளொன்று மூன்று முதல் நான்கு யூனிட் அளவும், பெண்கள் இரண்டு முதல் மூன்று யுனிட் அளவும் மதுபானம் அருந்தலாம் என பரிந்துரை செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய பரிந்துரை வாரத்திற்கே இருபாலாரும் அதிகபட்சமாக 14 யுனிட் மட்டுமே மதுபானம் அருந்துவதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளது.
பெண்கள் கர்ப்பிணியாக இருக்கும்போது, மது அருந்த வேண்டிய அளவு முன்னர் மட்டுப்படித்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் முழுமையாக மது அருந்தக் கூடாது என்று புதிய ஆய்வு பரிந்துரைக்கிறது.
குறைந்தளவில் மது அருந்துவது மாரடைப்பை தடுக்கும் என முந்தைய சில ஆய்வுகள் தெரிவித்திருந்தாலும், அது தொடர்ந்தும் கருத்திற்கொள்ளப்படாது என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

அத்தோடு, அதிக மது அருந்துவதனால் வாய், தொண்டை மற்றும் மார்பு ஆகிய பகுதிகளில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் ஆய்வு கண்டறிந்துள்ளது.