ஒளிர்வு-(27) தை த்திங்கள்-2013

தீபம் வாசகர்கள் அனைவருக்கும்
எமது தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம்.

தளத்தில்:சிந்தனைஒளி, பறுவதம் பாட்டி , தமிழ் மொழி, பண்டைய தமிழ் பாடல்களில்  "விஞ்ஞானம்,ஆன்மீகம், , குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம், ஆராய்ச்சியாளரின் செய்திகள், தொழில்நுட்பம், உணவின் புதினம் ,அறிவியல்,கணினிஉலகம் ,பாருக்குள்ஒருநாடு….ஒருபார்வை , உங்களுக்குதெரியுமா? ,சிரிக்க...!,சினிமா, விளையாட்டு.உங்கள் படைப்பை சமர்ப்பிக்க:manuventhan@hotmail.com

சிந்தனைஒளி
* நல்லவர்கள்உதவிசெய்தேன்என்றுசொல்லமாட்டார்கள்!
உதவிசெய்தேன்என்றுசொல்பவர்கள்நல்லவரல்ல!
       *கனிந்தகாதலிஇறந்தாலும்நினைப்பில்வாழலாம்!
முறிந்தகாதலியைநினைக்கவும்முடியாது!மறக்கவும்முடியாது!
       *அன்புசெலுத்துபவனைஅடக்கிஆழமுடியாது!
ஆனால், அடக்கிஆழ்பவனையும்அன்பினால்வெல்லலாம்!
       *பிராத்தனைஉங்கள்நம்பிக்கைக்குஉயிர்கொடுக்காது!
நம்பிக்கைதான்உங்கள்பிராத்தனைக்குஉயிர்கொடுக்கும்!
* மனிதன்வெட்டும்போதுஆட்டின்இதயம்துடிக்கிறது!
அதன்கொலோஸ்ரோலால்மனிதஇதயம்வலிக்கிறது


பறுவதம் பாட்டி


(உண்மைகளின் அலசல்)

அன்றுபாடசாலையின்விடுமுறைஎன்பதால்விடிந்துநெடுநேரமாகியும்புரண்டுபடுத்துக்கொண்டிருந்தேன்.மாமாவீட்டில்வாழும்அண்ணாமலைத்தாத்தாவின்தொலைபேசிஅழைப்பாகஇருக்கவேண்டும்.பாட்டிஅவசரமாக போனைஎடுத்துக்கொண்டு வீட்டின் வெளிப்பக்கமாக வந்ததிலிருந்து எனக்கு அது புரிந்தது. பாட்டி போனை ஸ்பீக்கரில்விட்டு பேசிக்கொண்டிருந்தது என் அறை ஜன்னலுடாக தெளிவாகக்கேட்டது.
அண்ணாமலைத்தாத்தாதான்பேசிக்கொண்டிருந்தார்.
“புதினம் படிச்சியே பறுவதம்?என்று தாத்தா ஆரம்பித்துக்கொண்டார்.
எந்தப் புதினத்தை சொல்லுறியள்?”
“இந்தியாவில டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தினமும் பெண்கள் கற்பழிக்கப்படும் தகவல்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெளியானபடி உள்ளது. ஒரு காலத்தில ஆன்மீகத்தில அமிழ்ந்திருந்த நாடு இந்தியா. இப்ப அங்க நடக்கிற கேவலங்களை கேட்க கேட்க காதே கூசுது. அண்மையில கிடைச்ச  புள்ளி விவரங்கலின்படி  கடந்த 40 ஆண்டுகளில் நாட்டில் பாலியல் வன்புணர்ச்சி 800 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது கவலையான சேதி.முன்பு எப்போதுமே இல்லாதவாறு, பெண்களுக்கு ஆபத்து நிறைந்த ஒரு நாடாக இந்தியா இப்போது விளங்குகிறது.” அப்பிடியெல்லொ பத்திரிகையிலை எழுதுறாங்கள்.
பாட்டி தொடர்ந்தாள்.
“இந்தியாவில சிலபிரசித்தி பெற்ற IAS,IPS அதிகாரிகள், அமைச்சர்கள், வழக்கறிஞர்கள்,மருத்துவர்கள் ,chartered accountants நிகழ்த்தும் ஊழல்கள்,கயவாளித்தனங்கள்,பாலியல் குற்றங்கள் இவற்றை அசட்டை
செய்வதன் மூலம் குற்றவாளிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
திரைப்படங்களில் வரும், பெண்களை இழிவு படுத்தும் காட்சிகளை,காவல் நிலையத்தில் நடைபெறும் கற்பழிப்பு காட்சிகளையும்
தொலைக்காட்சிச்சீரியல்களில் வரும்கணவன் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்தல்”,”ஒரு பெண், ஹிட்லரை விட மோசமான குணநலங்களுடன் தன் புகுந்த வீட்டில் அனைவரையும் பழிவாங்கி இரத்தம் பீச்சிட கொலை செய்தல்,கள்ளத் தொடர்புகள்,கடத்தல்கள்ஆகிய காட்சிகளை வருடக்கணக்கில்,குழந்தை குட்டிகளுடன் வரவேற்பறையில் இருந்து ரசித்துப்பார்ப்பதன் மூலம் அக்குற்றங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன, ஊக்குவிக்கப்படுகின்றன.
இதே சானல்களில், செய்திகள் என்ற போர்வையில் ஒரு போலி சாமியாரும் ஒரு  பெண்ணும் நிகழ்த்தும் லீலைகள் ஒளிபரப்பு செய்யப்பட்டால் சிரித்து மகிழ்வதுடன்,அவரை தேடிச்சென்று கடவுளாய் வணங்கி குற்றங்களை ஏற்றுக்கொள்கிறோம்.
முள்ளுச்செடி விதைகளை காலம் காலமாக விதைத்துக்கொண்டு அவை வளர்ந்து குத்துகிறது என இடும் முழக்கம் நியாயமானதா? இவற்றை எல்லாம் ஊக்குவித்து வளர்த்துக்கொண்டு அதன் பலன்களை கண்டு பொங்கி எழுவதில் என்ன பயன்?
"நல்லாச் சொன்னாய் பறுவதம்"பாட்டியின் கருத்தில் அண்ணாமலைத் தாத்தாவும் இணைந்துகொண்டார்.
நானும் பாட்டியின் கருத்துக்களைச் சிந்தித்தவாறு மறுபக்கம் புரண்டு படுத்துக் கொண்டேன்.
                               --செல்லத்துரை-மனுவேந்தன்

ஆராய்ச்சியாளரின் செய்திகள்


அண்டார்டிக்காவில் பெருகிவரும் இராட்சத நண்டு இனம்: 

புவி வெப்பமடைதல் தற்போது நாம் அனைவரும் எதிர்நோக்கியுள்ள ஒரு மிகப்பெரிய சவாலாகும். நம்மில் பலர் அதன் விளைவுகள் தொடர்பில் அக்கறை கொள்வதில்லை. எனினும் இதன் விளைவுகள் ஆங்காங்கே தெரிய ஆரம்பித்துள்ளன. குறிப்பாக அண்டார்டிக்காவின் வெப்பநிலை வெகுவாக அதிகரித்து வருவதனைக் குறிப்பிடலாம். இதனால் இப்பகுதியில் உருவாகி வரும் அபாயமொன்று தொடர்பில் பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆம், அண்டார்டிகாவின் ‘பார்மர் டீப்’ எனப்படும் பகுதியில் ‘கிங் கிரப்’ எனப்படும் இராட்சத நண்டினம் பெருகி வருவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்நண்டினமானது 1 முதல் 3 மீற்றர்கள் வரை வளரக்கூடியன. இவ்வகை நண்டுகள் வெப்பமான நீர்ப் பகுதிகளிலேயே குறிப்பாக 1.4 பாகை செல்சியஸிற்கும் குறைவான வெப்பநிலைப் பகுதியிலேயே வாழும் .எனினும் அவை தற்போது அண்டார்டிக் பகுதியில் வாழ்ந்துவருகின்றமையானது அப்பகுதியில் வெப்பநிலை அதிகரித்துவருவதனைக் காட்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவை சுமார் 30 – 40 வரையான ஆண்டுகளாக இப்பகுதியில் வாழ்ந்துவருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கடல் வாழ் தாவரங்கள், ஜெலி மற்றும் நட்சத்திர மீன்கள் உட்பட கடல் வளங்களை உண்பதுடன் அவற்றை வேகமாக அழித்துவருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவற்றின் பரம்பல் மேலும் அதிகரிப்பது அப்பகுதியில் உயிரினங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆழ் கடலுக்குள் ஓர் அதிசய பாதாள உலகம் : 

அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.  ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அண்டார்டிகா கடல் பரப்பிலிருந்து எட்டாயிரம் அடிக்குக் கீழே இதுவரை அறியப்படாத ஒரு பாதாள லோகத்தை கண்டுபிடித்திருப்பதாகவும், வெளியுலகம் அறியாத பல புதிரான உயிரினங்கள் இருப்பதாகவும் இங்கிலாந்து விஞ்ஞானிகள் கூறிகின்றனர்.

ஆக்ஸ்போர்டு, சவுத்தாம்டன் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஒரு குழு, பிரிட்டிஷ் அண்டார்டிகா ஆய்வு அமைப்புடன் இணைந்து ஒரு குறிப்பிட்ட ஆய்வில் ஈடுபட்டது. அப்போது தாங்கள் ஒரு புதிய உயிரினத் தொகுப்பைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் பலவகை நண்டுகள், புதியவகையான ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை, அறிவியல் உலகத்துக்கு முற்றிலும் புதியவை என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் 
தெரிவிக்கின்றனர்.

காதல் வந்தால் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கும்

லட்சம் பூக்கள் பூத்ததைப்போல உணர்வுகள் தோன்றுகிறாதா? வயிற்றுக்குள் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறதா? அப்படீன்னா, வடிவேலு சொல்றதைப் போல, உங்களுக்கும் லவ் மூடு ஸ்டார்ட் ஆயிடுச்சி என்கின்றனர் விஞ்ஞானிகள்.
காதல் என்பது காதலர்களுக்கு பலதரப்பட்ட உணர்வுகளை ஏற்படுத்தினாலும் காதல் உணர்வுகளை வலி நிவாரணியைப் போல வேலை செய்யும் என்றும், போதைப் பொருளுக்கு சமமானது என்றும் விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.
காதல் நிவாரணி
காதல் உணர்வுகள் மனத்திற்கான மகிழ்ச்சியைத் தருவதோடு உடல் வலிகளை நீக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் காதல் வயப்பட்ட 15 இளம் ஜோடிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அவர்கள் விரும்பும் நபர்களின் புகைப்படத்தை கொடுத்து அவர்களின் உணர்வுகளை கணினியில் அளவெடுத்தனர். அப்பொழுது அவர்களின் கைகளில் சிறிதளவு வலிநிவாரணி உட்கொண்ட உணர்வுகள் வெளிப்பட்டது.
அதே நேரத்தில் அவர்களின் மூளையையும் ஸ்கேன் செய்யட்டப்பட்டது. அப்பொழுது காதல் உணர்வுகள் முழுவதும் மூளையில் நிரம்பியிருந்தன. எனவே காதலிக்கும் நபரின் போட்டோவை பார்த்தாலே வலி நிவாரணி உட்கொண்ட உணர்வு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. அந்த அளவிற்கு காதல் சக்தி வாய்ந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
“கொக்கேய்ன்” போதை
காதலில் விழுந்தவன் போதையில் மிதப்பவனைப் போல உலக விசயங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பான் என்பார்கள் கவிஞர்கள். அதே கருத்தை இப்பொழுது விஞ்ஞானிகளும் ஒத்துக்கொண்டுள்ளனர்.
காதல் வயப்பட்டவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்த அமெரிக்க விஞ்ஞானிகள், “கொக்கேய்ன்” என்ற போதைப் பொருளை உட்கொண்டால் ஏற்படும் பாதிப்பிற்கு சமமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கண்டறிந்தனர்.
நியூயார்க் சிராகஸ் பல்கலைக்கழக பேராசிரியரும் தலைமை ஆய்வாளருமான பேராசிரியர் ஆர்டிக்கும் அவரின் குழுவினரும், மேற்கு வெர்ஜீனியா பல்கலைக்கழகம், மற்றும் சுவிட்ஸர்லாந்திலுள்ள பல்கலைக்கழக மருத்துவமனை ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்களுடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
பார்த்த முதல் நாளில்
கண்டதும் காதல் என்பது சாத்தியம் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முதன் முதலாக ஒருவரை கண்டவுடன் இவர் நமக்குரியவர்தான் என்பதை உணர்த்தும் வகையில் மூளையின் 12 இடங்களில் தூண்டல் நடைபெறுகிறதாம்.
அப்பொழுது ‘திடீரென சிறப்பாக உணரச்செய்யும்’ டோபைன், ஆக்ஸிடோஸின், அட்ரனலின் போன்ற இரசாயனங்கள் உடலில் சுரகின்றன என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொகேயின் போதைப் பொருளை உட்கொண்டாலும் இந்த இரசாயனங்கள் தூண்டப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள் மூலம் காதலுக்கு விஞ்ஞான அடிப்படை உள்ளது என்பது உறுதிப்படுத்துகின்றன என்கிறார் ஸ்டெபானி ஆர்டிக். இக்கண்டுபிடிப்புகளின் மூலம் நரம்பியல் விஞ்ஞானத்திலும் உளவியல் மருத்துவத்திலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என ஸ்டெபானி ஆர்டிக் கூறியுள்ளார்.
இதயமா மூளையா?
காதலில் விழுவது இதயமா அல்லது மூளையா என்ற பெரிய கேள்விக்கு பதிலளித்த விஞ்ஞானிகள், காதல் உணர்வு ஏற்படுவது மூளையில்தான் என்கின்றனர். இருப்பினும் இதயத்திற்கும் தொடர்புள்ளது. உதாரணமாக, மூளையின் சில பகுதிகள் செயற்படும்போது இதயத்தில் தூண்டுதல்கள் ஏற்பட
முடியும். வயிற்றில் வண்ணத்துப்பூச்சி பறக்கும் என்கிறார் பேராசிரியர் ஆர்டிக்.
என்ன உங்களுக்குள் பட்டர்பிளைஸ் பறக்க ஆரம்பிச்சிடுச்சா…??

தொழில்நுட்பம்


ஆப்பிள் கணினி வன்பொருள்கள் இனி அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும்

Foxxconn எனும் நிறுவனம் தான் Mac, iPhone, iPad, iPod ஆகியவற்றின் வன் பொருள்களை சீனாவில் இருந்து உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது. அங்கே வேலைசெய்யும் ஊழியர்கள் அதிக பணிச் சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர். மாததோறும் தற்கொலை செய்து சாகும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இது பற்றிய செய்திகள் வரும் போதெல்லாம் ஆப்பிள் நிறுவனம் பெரும் தர்மசங்கடதத்திற்கு ஆளாகும். தன் மீது படிந்த இந்தப் பழியைப் போக்கும் விதத்திலும் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் விதத்திலும் இனி Mac கனினிகள் அமெரிக்க மண்ணில் இயங்கும் தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் என ஆப்பிள் நிறுவன முதன்மை செயல் அலுவலர் Tim Cook தெரிவித்துள்ளார்.  இந்தப் பொருள்களில் எந்த விலை விதிதியாசாமும் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வளையக்கூடிய திரையுடைய ஸ்மார்ட் போன்கள் : 

CES Samsung Flexible screen 1
சம்சுங் நிறுவனமானது தமது புதிய தொழில்நுட்பமான வளையக் கூடிய திரைகளை உடைய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. வருடாந்த இலத்திரனியல் சாதனங்களுக்கான கண்காட்சியின் போதே சம்சுங் தமது புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்துள்ளது.
இக்கண்காட்சியின் போது காகிதத்தின் தடிப்புடன் கூடிய வர்ண மயமான திரையினை சம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்தது. எனினும் கடதாசியினை போன்று மடிக்கத் தகுந்த தன்மை இல்லாவிடினும் குழாயினைப் போன்று வளையக்கூடிய தன்மையினை கொண்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தமது எதிர்கால தயாரிப்பின் வீடியோவினை வெளியிட்டுள்ளது சம்சுங் நிறுவனம்.
எனினும் சந்தைக்கு எப்போது வரும் என்பதனை அறிவிக்காத சம்சுங் நிறுவனம் விரைவில் இது தொடர்பான அறிவிப்பினை வெளியிடும் என்று கூறியுள்ளது.

பேட்டரியின் சேமிப்புத்திறனை சேமிக்கும் வழிமுறைகள்

laptop
இலத்திரனியல் சாதனங்களை வாங்கும் பலரது கவலை பேட்டரி. இது ஒரு பெரிய விஷயமா? வாங்கும்போது நீடித்து உழைக்கும் பேட்டரியினை வாங்கினால் போதும் என்று தோன்றும். ஆனால் அதிக தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதால் எவ்வளவு சார்ஜ்செய்தாலும் போதவில்லை என்பது பலரது கவலையாக இருக்கிறது. இதனால் பேட்டரியின் ஆற்றலை சேமிக்க என்ன வசதி என்பதை பார்க்கலாம்.
வைபை மற்றும் ப்ளுடூத் போன்ற வசதிகளை பயன்படுத்தி முடித்த பின்பு, இதை ஆப் செய்து வைத்துக் கொள்வது மிக சிறந்த ஒன்று. அதிக அப்ளிகேஷன்களை டவுண்லோடு செய்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.  சில புதிய அப்ளிகேஷன்கள் டவுண்லோடு செய்யும் போது அதிகம் பயன்படுத்தாத சில அப்ளிகேஷன்களை அகற்றுவது நல்லது. பொழுதுபோக்கிற்காக விளையாட்டுகளை கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம். ஆனால் விளையாட்டு படங்கள் போன்றவற்றை பார்ப்பதற்காகவே அதிக நேரம் லேப்டாப்கள் பயன்படுத்துவதும் பேட்டரியை பாதிக்கும்.
எக்ஸ்டர்னல் மவுஸ் பயன்படுத்தாமல், லேப்டாப்பில் உள்ள மவுஸை பயன்படுத்துவது சிறந்தது. திரைக்கு அதிக வெளிச்சம் வைத்திருந்தால் அதை குறைக்கவும். இது பேட்டரிக்கும், கண்களுக்கும் சேர்த்து ஆபத்தை கொடுக்கும். தகவல்களை தெளிவாக பார்க்கக்கூடிய அளவு திரை வெளிச்சத்தினை சரியான அளவில் பயன்படுத்துவது கூட பேட்டரியின் ஆற்றலை அதிகப்படுத்த உதவும்.
லேப்டாப்பை ஆப் செய்யும் போது டர்ன் ஆப் ஆப்ஷனை பயன்படுத்துவது சிறந்தது. லேப்டாப் மானிட்டர் சரியாக ஆப் செய்யப்படாவிட்டால் இதன் மூலம் அதிக பேட்டரி வெளியேறும். ஸ்பீக்கர் வால்யூம் அதிகளவில் வைத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
எல்லோரும் செய்யும் முக்கியமான தவறு ஒன்றும் இருக்கிறது. லேப்டாப் சார்ஜரை ப்ளக்கில் போட்டுவிட்டு ஸ்விட்ச் ஆன் செய்த பிறகு அந்த சார்ஜர் ஒயரை லேப்டாப்பில் இணைப்பது மிகவும் தவறானது. இதனால் மின்சாரத்தின் நேரடி பாய்ச்சல் பேட்டரியை எளிதாக தாக்கும் ஆகவே லேப்டாப் சார்ஜரின் ஒயரை லேப்டாப்பிலும், ப்ளக்கிலும் இணைத்துவிட்டு அதன்பின் ஸ்விட்ச்சை ஆன் செய்வது சிறந்தது. இது போன்ற வழிமுறைகளை பயன்படுத்துவதால் லேப்டாப்பின் பேட்டரி ஆற்றலை எளிதாக சேமிக்க முடியும்.
உணவின் புதினம்


உணவு பொருட்களை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த கூடிய கால அளவுகள்
பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள்,பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதமாக கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப்பெட்டியான 'பிரிட்ஜ்' என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வாரத்திற்கு ஒரு முறை கடைக்கு சென்று உணவுப்பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது. பிரிட்ஜில் 4 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது அவசியம்.
பிரிட்ஜில் வைக்கும் உணவு பொருட்கள் பற்றி தகவல்:
பழங்கள்:
திராட்சை,ஏப்ரிகாட்,பேரிக்காய்,பிளம்ஸ் 3-5 நாட்கள்
ஆப்பிள் - ஒரு மாதம்
சிட்ரஸ் பழங்கள் - 2 வாரங்கள்
அன்னாசி - 1 வாரம்
காய்கறிகள்:
பிரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்
முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள்
வெள்ளரிக்காய் - ஒரு வாரம்
தக்காளி 1-2 நாட்கள்
காலிபிளவர், கத்தரிக்காய் - 1 வாரம்
காளான் 1-2 நாட்கள்
அசைவ உணவுகள்:
சமைத்த மீன் 3-4 நாட்கள்
பிரஷ் மீன் 1-2 நாட்கள்
ஓட்டுடன் கூடிய நண்டு - 2 நாட்கள்
பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள்
விஷமாகும் உணவு...
மாறிவரும் உணவுப்பழக்கத்தால் உலகம் முழுவதிலும் உள்ள ஆண்களின் வீரியம் குறைந்து வருவதாக பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாகவே குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
இன்றைய இளம் தலைமுறைகளில் பெரும்பாலோர் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிரமப்படுகின்றனர். இதற்குக் காரணம் தெரியாமல் பெரும்பாலோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உலகம் முழுவதும் குழந்தையில்லா தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
கடந்த 20 ஆண்டுகளாக, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களின் உயிரணுக்களை பரிசோதித்தனர். இதுகுறித்து இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலான ஆண்களுக்கு 7.36 கோடி உயிரணுக்கள் இருந்தன.ஆனால் தற்போதுள்ள ஆண்களில் 5 கோடிக்கும் குறைவான அணுக்களே உள்ளன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, முன்பிருந்ததை விட 32 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்து விட்டது. இதற்கு சுற்றுச்சூழலும் ஒரு காரணமாக கருதப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுமைப் புரட்சி என்ற பெயரில் கண்ட கண்ட பூச்சி மருந்துகளை அடித்து நிலத்தை மலடாக்கி வருவதைப்போல அந்த நிலத்தில் விளையும் சத்து குறைவான உணவுகளை உண்டு இன்றைய இளம் தலைமுறையும் மலடாகி வருகிறது என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கருத்தை உண்மை என்று நிரூபித்துள்ளது பிரெஞ்ச் விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு.