ஒளிர்வு-(19) ஆனி த்திங்கள்-2012தளத்தில்:சிந்தனை ஒளி,/ கனடாவிலிருந்து.....ஒரு கடிதம் / காக்க காக்க../ஆன்மீகம்/இளங்கண்ணனின்.....இதயராகம்/ஆண்களிடம் இல்லாதது..// கனடாவில்....,/உணவின்புதினம்,/கணிணிஉலகம்,/பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை/ உங்களுக்குதெரியுமா?/ அறிவியல்/சிரிக்க..!,/சினிமா/.தமிழில்நீங்களும்எழுதலாம்.
தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com
சிந்தனை ஒளி:
மனைவி, உனக்காக எதையும் இழப்பாள்!
  எதற்காகவும் உன்னை இழக்க மாட்டாள்!
இளமையும் அன்பும் வசந்தகாலப் பரிசு!
  அவற்றை நீயே எடுத்து அனுபவித்துக் கொள்!
மறுமணம் என்பது வாழ்க்கையை இழந்தவருக்கே!
   வாழ்க்கையை துறந்தவருக்கல்ல!
பிரச்சனையை சந்தோசமாகக் கதைத்துத் தீர்க்க மறுத்து
   சட்டத்தை நாடுபவர் மடையர்!
திருமணத்தின் பின் தனிக்குடித்தனம் மணம் வீசும்!
  அதற்கு முதலெனில் நாறி விடும்!

இளங்கண்ணனின்.............இதயராகம்இறைவன் இருக்கின்றானா?
மனிதன் கேட்கிறான்.இருந்தால் உலகத்திலே அவன் எங்கே வாழ்கிறான்?
மதமாற்றம் என்னும் மயக்கம் தீர சிறுமுயர்ச்சிஇம்முயற்சி வெற்றிபெற எல்லாம்வல்லஎம்பெருமானை வேண்டி நின்று வணங்கிஆரம்பிக்கிறேன்.
ஆண்டவன் இருப்பது ஆலயத்திலா?அல்லது காவி,கதர்,மற்றும் வேறுகலர் ஆடைகளுக்குள்ளா?
சிறுவதில் கற்றது ஞாபகம் வருகிறது.கடவுள் ஒருவர் இருக்கிறார் அவர்எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று.அதாவது தூணிலும் இருப்பார்துரும்பிலும் இருப்பார் என்றும்.ஆண்டவனைப் பற்றி அபிராமிப்பட்டர்புவனம் 14 ங்கிலும் பூத்தவளே
என்று பாடியிருக்கிறார்.கிருபானந்தவாரியார் கூறும்போது பசுவின்உடம்பு பூராவும் இரத்தம் ஓடினாலும் அவ்விரத்தத்தைப் பாலாக்கித்தரக்கூடிய இடம் மடிதான் ஆகவே மடியைப் பிடித்துக் கறந்தால்தான்பால்வரும்.அதைவிட்டு செவியையோ அல்லது வாலையையோபிடித்துக் கறந்தால் பாலுக்குப் பதிலாய் இரத்தம்தான்வரும்.அதுமாதிரித்தான் ஆண்டவன் உலகின் எல்லா இடங்களிலும்நீக்கமறக் பரந்திருந்தாலும் ஆன்மாக்களுக்கு அருள்பாலிக்கு முகமாகஎழுந்தருளி இருக்குமிடம் கோவில்தான் என்று.இதேமாதிரிஎன்னுமொரு உதாரணமும் சொல்லியிருக்கிறார் சூரியனில்இருந்துவரும் வெய்யில் எல்லாஇடத்திலும்
சம அளவில் பரவியிருந்தாலும் அதிலிருக்கும் வெப்பம் அங்கிருக்கும்வைக்கோலையோ பஞ்சையோ அல்லது கடதாசியையோஎரிப்பதில்லை. ஆனால் சூரியகாந்தக் கண்ணாடிக்கூடாக வரும்அதேவெப்பத்தால்தான் மேல்குறிப்பிட்டவையை எரிக்கமுடியும்.
சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை எப்படி சூரியகாந்தக் கண்ணாடிஓரிடத்தில் குவித்து வெப்பமூட்டி எரியூட்டுகிறதோ அதேமாதிரித்தான்ஆண்டவனின் அருளெங்கும் பரவி இருந்தாலும் கோவிலுக்குள் தான்அவனருள் குவிந்திருக்கிறது என்றார்.ஆகவே ஆண்டவன்கோவிலுக்குள் தான் இருக்கிறார் என்றுமுடிவாகிறது.
ஆனால் நான்தான் கடவுள் என்றுசொல்லி வாயால்  லிங்கம் எடுத்தும்விரலிலிருந்து  விபூதி தீர்த்தம் கொடுத்தும், கைக்குள் இருந்து தங்கம்வைரம் வைடூரியம் போன்ற பெறுமதிமிக்க பொருள்களை எடுத்தும்,வேறுபல அற்புதங்கள் என்றுசொல்லி எதை எதையோ செய்து தான்தான்கடவுள் என்றுசிலர் தம்மை அறிமுகப் படுத்துகிறார்கள்.அதைநம்பி பலர்அவர்களை ஆண்டவன் ஸ்தா
னத்தில் வைத்து வணங்குகிறார்கள்.ஏன் தமக்கிருக்கும் குறை குற்றங்களை க் கூறி அதற்க்கு பரிகாரமும் கேக்கிறார்கள்.அதற்க்குசாமிமாரும் அதை இதை செய்யவேணும் ,அதையும் தாமேசெய்துதருவதாகக் கூறி பெரும்தொகைச் செல்வத்தைக் கேக்கிறார்கள்பக்தர்களும்கொடுத்து விடுகிறார்கள்.அதுமட்டுமல்ல அந்தச்சாமியார்தம்மிடம்  நீண்ட காலமாக தீர்க்கமுடியாமல் குறைகள் குற்றங்களைஎல்லாம் தீத்துவைத்தார் என்று சாட்சி சொல்லி அந்தச் சாமியின்புகழைப் பரப்பிவருகிரார்க்ளே.இதை கல்லாதவர் முதல் கொண்டுபட்டப்படிப்பு படித்தவர்கள்வரை செய்கிறார்களே! அதுமட்டுமல்ல,அவர்களுக்கு ஆகம முறைப்படி கோவில்கட்டி மூலஸ்தானத்தில்இருத்தி நெய்வேத்தியம் முதலியன படைத்து தீபம் கற்பூரதீபம்முதலியனகாட்டி  பூசைகள்பல செய்து பல்லக்கிலேற்றி ஊர்வலம்சுற்றிவந்து வழிபடுகிறார்களே.அப்போ ஆண்டவன் காவி மற்றும் கதர்ஆடைகளுக்குள்தானே இருக்கிறான்.இதுமட்டும் அல்லகறுப்புவெள்ளை மற்றும் பலவர்ணக் கலர் ஆடைகளுக்குள்ளும்இருப்பவர்கள் தாங்கள்தான் உண்மையான கடவுளின் பிரதிநிதிகள்,மற்றவர்கள் எல்லாம் கடவுள் என்றுநினைத்து சாத்தானை,பசாசைமற்றும் கெட்ட இச்சை கொண்ட தேவதைகளை வழிபடுகிறார்கள்என்றும் அதனால் துன்பப்பட்டு துவழ்கிறார்கள் என்றும்இவர்கள்தம்மிடம் வந்தால் தாங்கள் அந்தச் சாத்தானிடமிருந்தோஅல்லது அந்தப்பிசாசிடமிருந்தோ ,கேட்டதேவதைகளிடமிருந்தோஅவர்களைக் காப்பாற்றி விடுதலை அளித்து சுபீட்சம் அளிப்போம்என்கிறார்கள்.இச்செய்தியை ஒவ்வொரு
சிறைச்சாலைகளிலும் சென்று அறிவிக்கிறார்கள்மேலும்வயித்தியசாலைகளுக்குச் சென்று நொண்டிகளைநடக்கவைப்போம் ஊமைகளைப்பேசவைப்போம் குருடர்களைப்பார்க்கவைப்போம் செவிடர்களைக் கேட்கவைப்போம் என்னும்என்னென்ன தீராத வியாதிகள் இருக்கோ அத்தனையையும்தீர்த்துவைபோம் என்கிறார்களே! இவையத்தனையும் உண்மையெனவேறுசிலர் சாட்சியும் சொல்கிறார்களே! அப்படியானால் அக்கலர்ஆடைக்குள் இருப்பவர்களும் ஆண்டவர்கள்தானே.
நன்றி வணக்கம்.
உங்களிலொருவன் .இளங்கண்ணன்.
அமரத்துவமடைந்த எமது நண்பர் ந.இளங்கண்ணன் அவர்களின் நினைவாக ஏற்கனவே தீபத்தில் வெளிவந்த அவரது கட்டுரை மீண்டும் இம்மாத வெளியீட்டில்  இடப்படுகிறது.அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

கனடாவில்....


கனடாவுக்கு வருவதற்கு வருகையாளர் நுழைவுரிமை (விஸா) எனக்குத் தேவையா? அப்படியாயின் ஒன்றினைப் பெறுவதற்கு நான் எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?
ஒரு வருகையாளர் (visitor) எனப்படுபவர் தற்காலிக அல்லது குறுகியகால அடிப்படையில் கனடாவுக்கு வருகை தரும் யாராவது ஒருவர் ஆகும். ஒரு வருகையாளர் எனப்படுகிறவர் .கனேடிய பிரஜை, நிரந்தர வதிவாளர் அல்லது மந்திரியின் அனுமதிப்பத்திரத்தை வைத்திருக்கும் ஒருவர் அல்ல.
வருகையாளர் என்போரில் பின்வருவோர் அடங்குவர்:
உல்லாசப் பயணிகள் (Tourists)
கனடாவில் உள்ள தம் குடும்பத்தினரைப் பார்க்க வருவோர் (People visiting family in Canada)
வர்த்தகப் பிரயாணிகள் (Business travelers)
வெளிநாட்டு மாணவர்கள் (Foreign students), மற்றும்
தற்காலிக தொழிலாளர்கள் (Temporary workers)
குறிப்பிட்ட சில நாட்டுப் பிரஜைகள் கனடாவுக்கு வருகை தர முன்னர் வருகையாளர் விஸாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கனடாவுக்கு வருவதற்கு வதிவாளர்கள் விஸா பெற்றுக் கொள்ள வேண்டிய நாடுகளின் பட்டியல் ஒன்றுக்கு குடியுரிமை மற்றும் குடிவரவு கனடா நிறுவனத்துடன் (Citizenship and Immigration Canada (CIC) (1)தொடர்பு கொள்ளுங்கள்:
கட்டணம் இல்லாமல்: 1-888-242-2100 (கனடாவுக்கு உள்ளே)
கனடாவுக்கு வெளியே: உங்கள் பிரதேசத்திற்குப் பொறுப்பாயுள்ள கனேடிய விஸா அலுவலகத்தினை தொலைபேசியில் அழையுங்கள்.
வருகையாளர் விஸாவுக்கு விண்ணப்பிப்பதாய் இருந்தால் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில அடிப்படை விதிமுறைகள் உள்ளன. குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டவாக்கம் மற்றும் விதிமுறைகளுக்கு - Immigration and Refugee Protection Act and Regulations (2)நீங்கள் கட்டுப்படுகிறீர்கள் என்பதனையும் கனடாவில் தற்காலிகமாகவே நீங்கள் தங்கியிருப்பீர்கள் என்பதையும் விஸா அலுவலர் திருப்திகரமாக நம்பும்படி செய்ய வேண்டும். மேலும் நீங்கள் பின்வரும் தகைமைகளையும் கொண்டிருக்க வேண்டும்:
உங்களையும் உங்களில் தங்கியிருப்போரையும் (உதாரணமாக பிள்ளைகள்) கனடாவில் பராமரித்துக் கொள்வதற்கும், நீங்கள் மீண்டும் வீடு செல்வதற்குமான போதியளவு பணத்தினைக் கொண்டிருக்க வேண்டும்
நல்ல உடலாரோக்கியம் கொண்டவராக இருக்க வேண்டும்.
சட்டத்திற்கு அமைய நடப்பவராக இருப்பதுடன் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பதிவுகள் எதனையும் கொண்டிருக்கக் கூடாது
உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலன்றி கனடாவில் வேலை செய்வதற்கான அல்லது படிப்பதற்கான நோக்கத்தினைக் கொண்டிருக்கக் கூடாது.
கனடாவின் பாதுகாப்பிற்கு எந்தவிதத்திலும் ஆபத்து விளைவிப்பவராக இருத்தல் கூடாது.
நீங்கள் கனடாவுக்கு வருகை தந்த பின்னர் உங்களது சொந்த நாட்டிற்கு செல்வீர்கள் அல்லது அல்லது வேறுநாட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவீர்கள் என்பதை விஸா அலுவலர் திருப்திப்திகரமாக நம்பும்படி செய்ய வேண்டும்
உங்களை ஒரு வருகையாளராகக் கனடாவுக்குள் அனுமதிப்பதற்கு உதவி ஆதரவளிக்கும் விதத்தில் விஸா அலுவலர் கேட்கும் மேலதிக ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மீளத்தரப்படாத கட்டணம் ஒன்றை நீங்கள் செலுத்த வேண்டும்.
வைத்தியசாலை மற்றும் மருத்துவ சேவைகளுக்கான செலவினங்களை வருகையாளருக்காக கனடா செலுத்துவதில்லை. கனடாவுக்குச் செல்லுமுன்னர் உங்கள் மருத்துவ செலவினங்களுக்கான கட்டணங்களைச் செலுத்தவென மருத்துவ காப்புறுதி உங்களுக்கு இருப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளுங்கள்.
விருத்தினர் விஸா ஒன்றுக்கு நான் எவ்வாறு விண்ணப்பிக்க முடியும்?
நீங்கள் CIC நிறுவனத்தின் இணையத்தளத்திற்குச் சென்று வருகையாளர் விஸாவுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றிய அறிவுறுத்தல்களைப் பின்பற்ற முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினைத் தபால் மூலமாக அல்லது நேரில் சென்று ஒரு கனேடிய தூதரகம், உயர் ஸ்தானிகர் இல்லம் அல்லது அரச பிரதிநிதி அலுவலகத்தில் சமர்ப்பிக்க முடியும்.
உங்கள் விண்ணப்பத்துடன் எவ்வாறான ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது பற்றிய குறிப்பான உள்ளூர் அறிவுறுத்தல்களை பல விஸா அலுவலகங்கள் கொண்டுள்ளன. நீங்கள் இவ்வாறான ஆவணங்கள் எவை என்பதைத் தெரிந்து கொள்வதுடன் சரியான எல்லா ஆவணங்களையும் சேர்த்து அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும். உங்கள் நாட்டுக்குப் பொறுப்பாயிருக்கும் விஸா அலுவலகத்தின் தொடர்புத் தகவலை நீங்கள் கண்டறிந்து கொள்வதற்கு CIC நிறுவன இணையத்தளத்திற்குச் சென்று வெளிநாடுகளிலுள்ள கனேடிய விஸா அலுவலகங்களின் பட்டியல் ஒன்றினைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
மேலதிக தகவலுக்கு:
(1) Citizenship and Immigration Canada:
http://findlink.at/trv
(2) Immigration and Refugee Protection Act and Regulations:
http://findlink.at/IRPA