ஒளிர்வு 85, தமிழ் இணைய சஞ்சிகை - கார்த்திகை மாத இதழ்[2017]

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நாடுவிட்டு நாடு வந்து இன்று எமது குடும்பங்களில் பிரிவுகள்  எனும் செய்திகள் கவலை தரக்கூடியதாகவே இருக்கின்றன.
அன்று கூட்டு வாழ்க்கையினை சந்தோசமாக கழித்த எமது சமுதாயம் இன்று ஒரு குடும்பமே ஒற்றுமையுடன் வாழ்வதென்பது அரிதாகிவிடட நிலையில் ஏன்  இந்த அவசரம் என்பது புரியாமேலே இருக்கிறது.
மனிதர்கள் பலவிதம்.அவர்கள் எவரும் கருத்துக்களில், குணத்தில் , விருப்பு, வெறுப்புக்கலில் ,அல்லது எதிர்பார்ப்புகளில் நூற்றுக்கு நூறு ஒத்துள்ளவராக ஒருநாளும் இருப்பார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது.
கணவன் மனைவியருக்கிடையே ஒருவருக்கொருவர்   கருத்துக்களை  செவிமடுத்தலும், ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதித்தலும் விட்டுக்கொடுப்புகளுக்கு வழிவகுப்பதுடன் அவர்களின் வாழ்க்கை மட்டுமல்ல பிள்ளைகளின் எதிர்காலமும் ஒளிமயமாகும்.
பிரிவு என்பது மிக,மிக எளிது.ஆனால் மீண்டும் சேர்வது என்பது கடிதிலும் கடித்து.
கூடி வாழ்வோம். கூடியே  வளர்வோம்.


எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:13

60,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்ரிக்காவில் தொடங்கிய மனித இனம் போன வழியெல்லாம் அவர்களின் மரபின [ஜெனடிகல் /genetical] ரேகைகளை விட்டு விட்டு போயிருக்கிறது. இங்கு,மரபணு (இலங்கை வழக்கு: பரம்பரை அலகு, ஆங்கிலம்: gene) என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை சந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும். ஒரு புரதத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ உருவாக்க உதவும் மரபுக்குறியீடுகளைக் கொண்டுள்ள ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் (Deoxyribonucleic acid அல்லது Deoxyribose nucleic acid – DNA) எந்த ஒரு துணுக்கையும் குறிக்கும் அலகே மரபணுவாகும். இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப்படுகின்றன.  உலகிலுள்ள பல்வேறு இனத்தவர்களின் மரபணு[ஜீன்] மாதிரிகளை சேகரித்து, அவற்றினை ஆராய்ந்து, அந்த மரபணுக்கு [ஜீனுக்கு] சொந்தக்காரரின் மூதாதையர்களின் வழியினைக் கண்டறிவது ஜெனொகிராபிக் ப்ரொஜெக்ட் அல்லது மரபியல் அடிப்படையில் காலப்போக்கில் மனித இடமாற்றம் பற்றிய ஆய்விற்கான திட்டம் [Genographic Project] எனப் படும். மனிதர்களின் ' Y' குரோமோசோம்களை அடிப்படையாக
வைத்து இந்த வழித் தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் M என்கிற அடைமொழியோடு பொருத்தமான எண்ணினைக் கொண்டு அடையாளப் படுத்தப் படுகிறது. M என்பது பெரும் ஒருமைப் பண்புக் குழு [Macro-haplogroup ] என்பதின் சுருக்கம் ஆகும். ஒவ்வொரு வழித்தடமும், ஆப்ரிக்காவிலிருந்து தொடங்கி, வெவ்வேறு கண்டங்களுக்கு பயணிக்கிறது. டிஎன்ஏ விஞ்ஞான ஆய்வின்படி இன்றைய மனித இனம் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றியது என்ற உண்மை இப்ப எமக்கு தெரியும். ஆகவே ஆப்பிரிக்க மக்களே உலகின் முதல் குடிமக்கள். மற்ற இன்றைய மக்கள் அனைவரும் தமது பரம்பரையின் சுவடுகளை தேட ஆப்பிரிக்காவிற்கு திரும்ப வேண்டும் என்பதே உண்மை. அந்த தொடக்க துணிகர இடம் பெயர்வு காலத் தில், வேட்டை மற்றும் உணவு சேகரிப்பதுமே அவர்களின் அன்றாட வாழ்க்கையாக இருந்தது. இந்த மனி தர்கள் சில நூறு தனிப்பட்டவர்களை கொண்ட சிறு சமுகமாக, அனேகமாக வாழ்ந்தார்கள். சமூகப் பிணைப்புகள் அங்கு அவர்களுக்கு இடையில் உண்டாகி, அது இந்த சிறிய மக்கள் கூட்டங்கள் தங்களுக்கு இடையில் உணவு வளங்களை பகிரவும் ஒன்றாக இணைந்து வேட்டையாடவும் உதவின. இந்த பிணைப்பு மலர்ந்து, இன்று நாம் அறிந்த சமூகம்
மற்றும் கலாச்சாரம் போன்ற ஒன்று அவர்களுக்கு இடையில் தோன்ற மொழி வளர்ச்சி உதவியது. இந்த மனிதன் தன் இனத்தவர்களுக்கு ஒரு செய்தியை வெளிப்படுத்த அவன் எழுப்பிய ஒலிக் குறிப்புகள் உதவின. அதுதான், நாளடைவில் மொழியாக உருமலர்ச்சி பெற்றது எனலாம். கி மு 14,000-9500 ஆண்டுகளுக்கு இடையில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. நாடோடிகளாக  வேட்டை யாடி உணவு சேர்ப்பதில் இருந்து அவர்கள் வாழ்வு மாற்றம் அடைந்தது. இந்த கால கட்டத்தில் மழை வீழ்ச்சி உச்ச நிலையை அடைந்து சஹாரா, வட ஆப்பிரிக்கா போன்ற பகுதிகள் பசுமையா மாறின. இந்நிலையில், வேளாண்மை அங்கு பிறந்தது; காட்டுப் பயிர்களாக இருந்த சில தானியங்களை, தன் இருப்பிடத்திற்கு வீட்டுப் பயிர்களாக வளர்க்கத் தெரிந்து கொண்டான். அவன் முதலில் பயிரிட்ட தானியம் கோதுமை என்கின்றனர். நைல் நதி,மற்றும் தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த
மெசொப்பொத்தேமியாவின் டைகிரிஸ்  யூப்ரதீஸ் நதிகளை உள்ளடக்கிய இளம் பிறை வடிவம் [Fertile Crescent lands] கொண்ட செழுமையான பகுதியில் முதல் விவசாயி பிறந்தான் என நம்பப்படுகிறது. முதலில்,உணவு தேடியாக இருந்த அவன் நாளடைவில் உணவு உற்பத்தியாளனாகவும் மாறினான். மெசொப்பொத்தேமியா நாகரிகம் கி மு 5000 ஆண்டில் இருந்து அடையாளம் காணக் கூடியதாக உள்ளது. எனினும் அவர்களால் எழுதப் பட்ட ஆவணங்கள் கி மு 3300 இல் இருந்தே எமக்கு கிடைத்துள்ளன. எனினும் இந்த நாகரிகம் கி மு 2000 ஆண்டளவில் ,வரலாற்றில் இருந்து மறைந்து விட்டது. சுமேரிய நாகரிகத்தின் இறுதி ஆண்டு அநேகமாக கி மு 1750 ஆக இருக்கலாம்? . சுமேரியாவின் அண்டை மக்கள் படை எடுத்து அவர்களை தோற்கடித்து, சுமேரியாவை ஆள தொடங்கியதும், சுமேரியர்களின் சிலர் அங்கேயே தங்கி அவர்களுடன் கலந்து இருக்கலாம்?, மற்றும் பலர் அங்கிருந்து வெளிக்கிட்டு வெளியே போய் இருக்கலாம். அப்படி போனவர்கள் அதிகமாக பலூசிஸ்தான் ஊடாக 
சிந்து சம வெளி வந்து, அங்கு இருந்து இறுதியாக விந்திய மலைத்தொடரின் [Vindhya Range] தெற்கு பகுதிக்கு சென்றார்கள் என நம்பப் படுகிறது. உதாரணமாக, முனைவர் கி.லோகநாதன், இவர்களை பற்றி குறிப்பிடுகையில்,
இவர்களைச் சூழ்ந்து வாழ்ந்த செமிட்டிய மக்கள் இவர்களை வென்று பாபிலோனிய நாகரிகத்தை வளர்த்தனர் என்றும், அதன் பின்  சுமேரு மொழியும் அக்காடிய மொழிக்கு இடந்தந்து மறைந்துவிட்டதாக அறிஞர்கள் கூறுகின்ற. போதிலும், உண்மையில் அது அழிந்துவிடவில்லை. பல இடங்கட்கு புலம் பெயர்ந்து சுமேரு மக்களில் பெரும் பான்மையோர்  தென்னிந்தியா வந்து இலங்கையிலும் தென்னகத்திலும் குடியேறி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருங்குடியினராய் சிறந்தனர் என்றும் கூறுகிறார். மேலும் சுமேரு மொழி பழந் தமிழே! என்று சுமேருத் தமிழைப் பற்றி எளிமையான பல கட்டுரைகளை படைத்தும் உள்ளார்.  
அங்கு தான் திராவிடர்கள் வாழும் இன்றைய நாலு தென் மாகாணங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் கவனிக்கத் தக்கது என்னவென்றால்,நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கிலும், யூப்ரடிஸ் டைகிரிஸ் ஆறுகளை அண்டியும்,இறுதியாக சிந்து நதி கரையிலும் அமைந்த முன் னைய நாகரிகத்தை அமைத்தவர்கள் அனைவருமே கருத்த தோல் மனித அடையாளத்தை கொண்டவர்கள் என்பது ஆகும். 

சிந்து சம வெளி நாகரிகம் சிறு குடியேற்றமாக கி மு 3500 ஆண்டளவில் ஆரம்பித்தாலும் அது 4,500-5,000 ஆண்டுகளிலேயே  சிறப்புற்று விளங்கியது எனலாம். அவர்கள் மெசொப்பொத்தேமியா வுடன் வர்த்தக உறவு வைத்திருந்தார்கள். கி மு 3000  இத்திற்கு பின் நேரடியான வர்க்கமாக காணப் படுகிறது. சிந்து வெளி கப்பல்கள் [ships from Meluhha (the Indus) ] மெசொப்பொத்தேமியா வின் துறைமுகங்க ளில் நிறுத்தப் பட்டன. சில சிந்து வெளி மக்கள் [Meluhhans] அங்கு குடியேறியும் உள்ளார்கள். இவர்களின் சில வர்த்தகத்திற்கு, இடைத் தரகராக டில்முன் [Dilmun] செயற் பட்டுள்ளது, குறிப்பாக ஊர் III  சரிந்ததும், அதன் பங்கு மேலும் அதிகரித்தது. கி மு 2000 ஆண்டின் தொடக்கத்தில், பஹரைன் [Bahrain / Dilmun] மட்டுமே அவர்களின் கப்பல்கள் சென்றன. பஹரைன் அவர்களின் பண்டகசாலை [entrepot] ஆக தொழிற் பட்டது. ஆகவே இங்கு இருமொழிகளில் எழுதப்பட்ட [bilingual] ஆவணங்கள் கிடைக்கலாம் என எவரும் எதிர் பார்க்கலாம் ? ஆனால் அப்படி ஒன்றும் இது வரை கிடைக்க வில்லை. என்றாலும் அங்கு ஹரப்பான் கல்வெட்டு களுடன் உள்ளூர் முத்திரைகள் கிடைத்துள்ளன. ஆனால் அவை இன்னும் மொழி பெயர்க்கப் பட வில்லை. ஹரப்பான் அழிந்து போகக்கூடிய பொருள்களில் பெரும்பாலும் எழுதி இருக்கலாம் என எண்ண தோன்றுகிறது. அப்படியே டில்முனிலும் தமது கொடுக்கல் வாங்கலை எழுதி இருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது? 

கி மு 1800  ஆண்டளவில்,சிந்து வெளி நாகரிகம் வீழ்ச்சி அடைய தொடங்கியது. எழுத்துக்கள் மறையத் தொடங்கின, தரப்படுத்தப்பட்ட எடைகள், நீட்டலளவைகள் போன்றவை பாவனையில் இருந்து மறைந்தன. மற்றும் அண்மைக் கிழக்கு நாடுகளுடனான தொடர்புகள் தடைப் பட்டு, நகரங்கள் படிப்படியாக கைவிடப்பட்டது. இதற்கான காரணங்கள் முழுமையாக அறியப் படாவிட்டாலும்  ,அவை சரஸ்வதி ஆறு வறண்டதாலும் மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து ஆரியரின் வருகையாலும்,அல்லது வெள்ள பெருக்காலும் இவை நிகழ்ந்து இருக்கலாம் என கருதப் படுகிறது. மேலே கூறப்பட்ட காரணங்களால், சிந்து வெளி மக்கள் தெற்கு நோக்கி தள்ளப் பட்டார்கள் என பொதுவாக கருதப் படுகிறது. இதனால், சிந்து வெளி நாகரிகம் கி மு 1700 ஆண்டளவில்  சிதைவுற்று, அதன் பின் ஆயிரம் ஆண்டுகள் வரை அவர்களுக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. அவர்கள் வரலாற்றில் இருந்து மறைந்து விடுகிறார்கள். அதன் பின்  கி.மு. ஏழாம்  நூற்றாண்டளவிலே மறைத்த வரலாற்றின் திரைவிலகும்போது, கடைசி தமிழ் சங்க காலத்தில், அவர்கள் திராவிட மக்களாக ஓரளவு நாகரிகம் பெற்றுத் தென்னிந்தியாவில் வாழ்வதனை நாம் காண்கிறோம். இவை எல்லாம் எமக்கு எடுத்துக் காட்டுவது, புரோட்டோ -திராவிட  [அல்லது ஆதிமுன்னோர் சார்ந்த திராவிட / Proto-Dravidian ] மொழி எழுத்துக்கள், குறைந்தது 5000 ஆண்டுகளாவது இந்தியாவில் தொடர்ந்து இருந்து இருக்கிறது என்பது ஆகும். ஆகவே தமிழ் எழுத்தின் மூலத்தை காண நாம் குறைந்தது சிந்து வெளி பக்கமாவது  கட்டாயம் போகவேண்டும்?

உதாரணமாக,சிந்து சம வெளி இடுபாடு களுக்கிடையில் கண்டு எடுக்கப்பட்ட சிவலிங்க த்தின் முந்தைய வடிவத்துடன் இன்னும் ஒரு முக்கி யமான தெய்வம் பொறிக்கப்பட்ட முத்திரையும் கண்டு எடுத்தார்கள். சொற்குறியிடு "ஆ,மு,வான்". இந்த பழமையான தெய்வத்தை வரையறுகிறது. இதனால், இந்த தெய்வத்தை "ஆமுவான்" என பரிந்து ரைத்தார்கள். சிந்து சம வெளி வில்லையில் இந்த இறைவனுக்கு நீண்ட மனிதவுரு கொடுக்க ப்பட்டு ள்ளதுடன் . அதன் தலையில் மூன்று கொம்பும் உள்ளது. இந்த கடவுள், "ஆமுவான் /Ahmuvan" ,தமிழர்களின் பெருமை மிக்க கடவுளான, முருகனை ஒத்த வடிவத்தையம் மேலும் கொண்டுள்ளார்.அது மட்டும் அல்ல,ஆ+மு+வானின் முதல் எழுத்து, டிராகன் விண்மீன் குழுவை [Draco constellation] குறிக்கும் சிந்து வெளி எழுத்தாகும். இதில் இருந்து தான் 'ஆ' குறிக்கும் முன்னைய தமிழ் வட்டெழுத்து உருவாகியது என அறிஞர்கள் இன்று கூறுகிறார்கள். மேலும் சிந்து வெளி எழுத்துக்கள் வலது பக்கம் இருந்து இடது பக்கமா எழுதப்பட்டவை என்பதையும் வனிக்க  ஆகவே இது தமிழ்-சிந்து வெளி தொடர்பை மேலும் உறுதி படுத்து கிறது எனலாம். மேலும் சில சிந்து சம வெளி ஓவிய எழுத்தின் [உரல், ஜாடி, உரலுக்குள் உலக்கை,ஈட்டி [வேல்], மீன், ஒரு கண் மீன், வெட்டிய [சீவிய] மீன், மூடிய மீன், கொம்பு மீன், கொழுத்த நண்டு ] விளக்கம் படம் இணைக்கப் பட்டு உள்ளது. அதே போல, தனியாக மீன் பட எழுத்து ஒன்றும் அதன் விளக்கமும் தரப் பட்டுள்ளது,

5500 ஆண்டுகளுக்கு முற்பட்ட,  செடிகள் போன்ற திரிசூல வடிவம் கொண்ட குறிகள் பதிந்த, பானை ஓடு ஹரப்பாவில் கண்டு எடுக்கப் பட்டது. அது இங்கு இணைக்கப் பட்டும் உள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழக டாக்டர் ரிச்சர்ட்  மேடோவின் [ Dr Richard Meadow of Harvard University] கூற்றின் படி, இந்த கண்டு பிடிப்பு, எமக்கு தெரிந்த எல்லா எழுத்துக்களுக்கும் முன், இந்த எழுத்தின் காலம் தேதி இடப்படும் என்கிறார் [pre-date all other known writing].எனவே இது அதிகமாக எமக்கு எடுத்து உரைப்பது, எகிப்து,மெசொப்பொத்தேமியா,ஹரப்பா [Egypt, Mesopotamia and Harappa] போன்ற இந்த மூன்று இடங்களில் ஆவது எழுத்து தன் பாட்டில் ,சுதந்திரமாக,கி மு 3500  இற்கும் கி மு 3100 இடையில் வளர்ந்து இருக்கும் என்பதே ஆகும். 

[கந்தையாதில்லைவிநாயகலிங்கம்]                                     பகுதி:14  தொடரும்


'Story or History of writing'/Part:13

Genographic project is a study that aims to map historical human migration patterns by collecting and analyzing DNA samples from hundreds of thousands of people from around the world. In truth we now know, based on recent scientific studies of DNA, that modern humanity originated in Africa, that African people are the world's original people, and that all modern humans can ultimately trace their ancestral roots back to Africa. Around the time that people were first venturing outside the continent, hunting and gathering was still the lifestyle of choice. Humans lived in
communities that rarely exceeded a couple of hundred individuals, and social bonds were formed to enable these small bands of people to share food resources and hunt cooperatively. With the evolution of language, these bonds blossomed into the beginnings of society and culture as we know it today. The first moves away from the nomadic hunter–gatherer way of life came between 14,000 BC and 9500 BC, a time when rainfall was high and the Sahara and North Africa became verdant. It was in these green and pleasant Fertile Crescent lands that stretching in a broad semicircle from the Nile to the Tigris and Euphrates, the first farmers were born, and mankind learned to cultivate crops rather than following prey animals from place to place. The
civilizations in Mesopotamia was Recognisable since 5000 BC, though the written records exist only from 3300 BC and this great civilisation fell around 2000 BC, The last year of the Sumerian civilization was 1750 B.C. when neighboring peoples invaded Sumer, carried away the king and established themselves in the land; the Sumerian people began moving , Some may be remain there and mixed with invaders and many others may be  migrated into the plain of the Indus valley probably through Baluchistan and thence ultimately passed down into the regions south of the Vindhya, where the four southern states lie. It is also worth to note that, early civilizations which arose in the valleys of the Nile, the Tigris and Euphrates,and lastly of the Indus, bore the marks of black men .                      

Harappa of the Indus valley civilization was originally a small settlement in 3500 BC but Indus valley civilization first developed fully some 4,500-5,000 years ago. They had trade relationship with Mesopotamia. During the later 3rd millennium was a direct one: ships from Meluhha (the Indus) docked in Mesopotamian ports; some Meluhhans settled in Sumer too. Dilmun operated as a middleman between Mesopotamia and the Indus in some of this trade, and after the Ur III state collapsed its role in this grew: in the early 2nd millennium BC both Harappan and Mesopotamian ships sailed only to Bahrain, which acted as an entrepot between them. This would be the place one might expect to find a bilingual, but it hasn't happened yet: There are local seals with Harappan inscriptions, but the local seals are otherwise uninscribed. It seems probable that the Harappans used perishable materials for their records, and presumably this would have applied to records of their transactions in Dilmun too. 

By 1800 BCE, the Indus Valley Civilization saw the beginning of their decline: Writing started to disappear, standardized weights and measures used for trade and taxation purposes fell out of use, the connection with the Near East was interrupted, and some cities were gradually abandoned. The reasons for this decline are not entirely clear, but it is believed that the drying up of the Saraswati River or a large group of nomadic cattle-herders, the Aryans, migrated into the region from central Asia or both were the main cause. Other experts speak of a great flood in the area. Either event would have had catastrophic effects on agricultural activity, making the economy no longer sustainable and breaking the civic order of the cities and all these pushed Dravidians or Indus valley people southward, and the Indus valley settlements were turned into ruins by around 1700 BC, and did not reappear for another 1,000 years or so, when they re appear ,they were sangam tamils of south India, where they remain ever since. All of these clearly indicate that Proto-Dravidian [or Tamil dravidian] speakers' writing were atleast for about 5000 years in India.Therefore to know the origin of tamil letters, we must analyze the indus valley script first?

As an example, Among the rubble of Indus Valley
excavations along with prototype of the Shiva lingam—phallic-shaped rocks,they also found another deity. The syllables AH, MU ,VAN defines the primordial God, who also functions as a "Cosmic Man".This deity, "Ahmuvan". is pictured on Indus Valley tablets as an elongated anthropomorphic figure with three protuberances in the head and it is now suggested to be associated with the Tamil god "Murugan".Not only that, The Tamil alphabet which is read as 'AH' metamorphosed from an earlier script, Tamil Vattezhuthu that is also read as 'AH' has its origin from this indus valley, Draco constellation, which read as 'AH' and the first letter of 'AH', 'MU' ,'VAN'. Here the direction of writing as right to left in Indus script, So written as 'VAN','MU','AH'. All of These links further confirm the the connection between Tamil & Indus Valley! More Indus Valley Scripts and its possible Interpretations are also attached.

So-called 'plant-like' and 'trident-shaped' markings have been  found on fragments of pottery dating back 5500 years at  Harappa is attached here. According to Dr Richard Meadow of Harvard University,the director of the Harappa Archaeological Research Project, these primitive inscriptions found on pottery may pre-date all other known writing. It probably suggests that writing developed independently in at least three places - Egypt, Mesopotamia and Harappa between 3500 BC and 3100 BC.

[Kandiah Thillaivinayagalingam]

Part:14 will follow

மூடநம்பிக்கையில் முடங்கும் முயற்சிகள்


வழுவழுப்பான பட்டு மெத்தையில் தூவியிருக்கும் கமகமவென்ற வாசனையுள்ள மலர்களின் இதழ்களுடைய பாதையில் பயணிக்கின்ற மனிதனுடைய வாழ்க்கைப் பாதங்கள், சுட்டெரிக்கும் பாலைவனத்து மணலின் மீது தானாகத் தோன்றிய முட்புதர்களைக் கொண்ட கள்ளிச் செடியையும் பாதையாக்கிக் கொள்கிறது. ஒரு காலகட்டத்தில் கரடுமுரடான பாதையைக் கடந்து செல்லுகிற மனிதனுடைய வாழ்க்கை இன்னொரு காலகட்டத்தில் தடுமாற்றம், தடைகளில்லாத பாதையிலும் பயணிக்க ஆசைப்படுகிறது. இந்த இருவகையான பாதையில் பயணிக்கும் மனிதனுடைய வாழ்க்கை அந்தந்த காலகட்டத்தின் தாக்கத்தை அனுபவிக்கிறது. ஒரு சமயம் வாழ்க்கையின் இனிப்பை சுவைக்கும் மனிதன் மறுகணம் அதனுடைய கசப்பையும் விழுங்குகிறான். இனிப்பும் கசப்பும் கலந்த சுவை மனிதனுடைய வாழ்க்கை பாடப்புத்தகத்தை சுவாரஸ்யமாக்குகிறது. அவ்வப்போது வாழ்க்கையில் பிரச்சனைகள் முளைக்கிறது. இது ஒரு சாதாரண மனிதனின் சாதாரண வாழ்க்கையாகும். பிரச்சனைகள் சூழ்ந்து கொள்ளும் போது, அவன் பல யுக்திகளைக் கையாளுகிறான். தைரியம், விடாமுயற்சி, உழைப்பு, கடவுள் நம்பிக்கை, தன்னம்பிக்கை ஆகிய வழிகளைக் கையாளுகிற மனிதன் மூடநம்பிக்கையையும் கைப்பற்றுகிறான். படிக்காதவர்கள், படித்தவர்கள் என்று வித்தியாசமில்லாமல் மூடநம்பிக்கையில் விழுகிறார்கள் என்ற செய்தி விசித்திரமாகதான் தோன்றுகிறது.
பெண் ஒருத்தி இள  வயதில் விதவையானாலும் கூட மரண வீட்டில் அவளை ஒரு சுமங்கலிக் கூ ட் டம் அவளை அமங்கலி ஆக்கும் கூத்து பார்ப்பவர்களுக்கே நெஞ்சை நெருடும் எனில் அவள் இதயம் கணவனை இழந்த கவலையல்ல மேலும் அவளை கொடுமைப்படுத்தல் என்பது சகிக்க முடியாததொன்று. எரியும் நெருப்பில் நெய் ஊற்றும் இச் செயல் அவளுக்கு மேலும் மன சோர்வினை அளித்து தனியே வாழ்வில் முன்னேறவிடாது தடுக்கிறது.
பெண் குழந்தையைப் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுப்பதோடு பெற்றோர்களின் கடமை முடிந்து விடுவதில்லை. இனிமேல் தான் அவர்களுடைய கடமைகள் தொடங்குகிறது. பெண்ணுடைய திருமண வாழ்க்கை எப்படி அமைகிறதென்று கண்காணிப்பதும் பெற்றோர்களின் தலையாய கடமையாகும். வயிற்றையும் வாயையும் ஒடுக்கி சேமித்தப் பணத்தில் திருமணம் செய்து கொடுக்கும் பெற்றோர்கள், மகளுடைய சந்தோஷத்தை உயிருக்கும் மேலாக கருதுகிறார்கள். தொன்றுதொட்டு நிலவிவரும் வரதட்சணையென்ற வியாபாரம் இன்றைய திருமணத்தில்பரிசுஎன்ற சொகுசான பெயரில் புழங்கி வருகிறது. குடும்பக் கௌரவத்தை மையமாகக் கருதும் பெற்றோர்கள், தகுதிக்கும், அந்தஸ்திற்கும் மீறி மணமகளோடு வீடு, உயர்தர வாகனம், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரொக்கப் பணம் போன்றவைகளைப் பரிசாகக் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள். இத்தனை பரிசுகளும் திடீரென்று கிடைத்தவுடன், சித்தம் பேதலித்த பிள்ளை வீட்டார்கள் வீட்டிற்கு வந்த மருமகளை ஒரு கற்பக விருட்சமாகப் பார்க்கிறார்கள். பல துன்பங்களுக்கு ஆளாகும் அந்தப் பெண் உடலாலும், உள்ளத்தாலும் வேதனையை அனுபவித்து, அதனுடைய வலியைத் தாங்க முடியாமல் மீண்டும் பிறந்த வீட்டிற்கு திரும்புகிறாள. வாழ வேண்டிய பெண் வாழாவெட்டியாக இருப்பதைப் பார்த்துக் கண்கலங்கிய வண்ணம், எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பெற்றோர்கள் செய்வதறியாமல் மூடநம்பிக்கை என்ற வலையில் விழுகிறார்கள்.

ஒரு அரவாணி (திருநங்கை) வாழாவெட்டியான பெண்களுக்கு வாழ்க்கையைக் கொடுப்பதாகவும், மேலும் அந்த அரவாணி மேற்கு தில்லியிலுள்ள நெரிசலான பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறாள். செங்குத்தான மாடிப்படிகளின் நடுவே தாழ்ந்த கூரையுடைய சின்ன அறையில் சக்தி படங்களுக்கு எதிரே எலுமிச்சைப் பழங்களோடு, நெற்றி முழுவதும் குங்குமத்தை பூசிக் கொண்டு குடுகுடுப்பையோடு சுலோகங்களை உச்சரித்த வண்ணம் தோற்றமளிக்கிறாள். செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமை ஆகிய இருநாட்களில் அரவாணியின் அருளைப் பெறுவதற்கு பாதிக்கப்பட்ட பெண்களோடு பெற்றோர்களின் கூட்டம் அலை மோதுகிறது. பெண்ணுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென்ற கவலையில் வசதிக்குத் தகுத்தாற் போல பணத்தை அவ்விடத்தில் கொட்டுகிறார்கள். படித்தவர்களும் இத்தகைய மூடநம்பிக்கையில் சிக்கிக் கொள்ளும் செய்தி அதிர்ச்சியை தருகிறது.

உத்திரப் பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் பெற்றோர்கள், இரண்டு பிள்ளைகளைக் கொண்ட சின்ன குடும்பமொன்று விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருந்தது. திடீரென்று அந்தக் குடும்பத்திலுள்ள இரண்டாவது மகன் பாம்பு கடித்து மரணமடைந்தான். சடலத்தை எரித்த அன்றைய இரவு விரிச்சோடிக் கிடந்த அவனுடைய கட்டிலில் பாம்பு படுத்துக் கொண்டிருந்தது. அடுத்த நாள் காலையில் அவனுடைய தாய் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்த பாம்பைத் தன்னுடைய மகன் திரும்பி விட்டான் என்ற புரளியைக் கிளப்பி, கிராம மக்களை நம்ப வைத்து, அதற்கு முட்டையும் பாலும் கொடுத்து வளர்க்கத் தொடங்கினாள். வீட்டில் பாம்பு காலடி எடுத்து வைத்தவுடன் அவர்களுடைய வாழ்க்கை தரமும் உயர்ந்தது. கிராமத்திலுள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்க மக்கள் ஒன்றுகூடி பாம்பைத் தெய்வமாகக் கொண்டாடத் தொடங்கினார்கள். முட்டையும் பாலும் கொடுத்து, காணிக்கை செலுத்தி, ஒரு பாம்பை தெய்வமாக கொண்டாடும் கிராமத்து மக்கள், தங்களுடைய வாழ்க்கைத் துடுப்பை அதனிடம் ஒப்படைத்து விட்டார்கள். ஏமாறுபவர்கள் இருப்பதால் தான் ஏமாற்றுகிறவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். பணத்தில் புழங்கிக் கிடக்கும் அந்தக் குடும்பம் விவசாயத்தை மறந்து விட்டு, உழைக்கும் கரங்கள் ஒய்வெடுத்துக் கொண்டும், மூடநம்பிக்கையில் வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

மூன்றுமாதக் குழந்தைகள், விஷஜுரம், வாந்தி, இடைவிடாது வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களால் பாதிக்கப்படாமலிருக்க, அதனுடைய இளகிய மேனியில் தகதகவென்று கொதிக்கும் பால் அல்லது பாயசத்தை ஊற்றும் காட்சி தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் வாரனாசியில் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. குழந்தையின் மேனியில் கொதிக்கும் பால் விழுந்தவுடன், குழந்தை சுருண்டு கொண்டு துடிக்கிறது, வீரிட்டுக் கொண்டு அழுகிறது. மூன்று ஆண்டுகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள், காவல்துறையைச் சார்ந்தவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தற்சமயம் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டதால் விழித்துக் கொண்டு, சாமியாரை சிறையில் அடைக்க முனைந்தது. இந்த சம்பவத்தை நிகழ்த்திய போலி வேடம் தரித்த கோபால் யாதவ் என்ற சாமியார் காவல்துறையின் கைகளில் சிக்காமல் தப்பித்து விட்டதாக செய்தியும் தெரிய வந்தது. மூடநம்பிக்கையின் பெயரில் பிறந்த குழந்தைகளை சாமியாரிடம் ஒப்படைத்து, பிஞ்சு உள்ளங்களோடு விளையாடுகிற இந்த நரிக்கூட்டத்தை விவரிக்க நம்முடைய அசையும் உதடுகளிலிருந்து வார்த்தைகள் வெளியேறத் தடுமாறுகிறது.

பரந்து கிடக்கும் இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் இப்படி அதிர்ச்சி தரும், மெய்சிலிர்க்க வைக்கும் மூடநம்பிக்கையான சம்பவங்கள் நம்முடைய கண்களுக்கு தெரியாமல் அதிக அளவில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மூடநம்பிக்கையில் நம்பிக்கையை வளர்க்கும் மக்களின் கூட்டம் பெருகப் பெருக, இத்தகைய சம்பவங்களும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் வளர்ந்து கொண்டு வருகிறது. பெண்ணுடைய வாழ்க்கையை ஒரு அரவாணியின் கையில் ஒப்படைத்த பெற்றோர்களின் துயரங்கள் தீர்ந்ததா? ஒரு பாம்பைத் தெய்வமாகக் கொண்டாடும் அந்த கிராமம் சொர்க்க லோகமாக மாறியதா? இதழ்களை மூடிக் கொண்டிருக்கும் மொட்டைப் போலுள்ள பிஞ்சு உயிரை நோய் நொடியில்லாமல் அந்த சாமியாரால் காப்பாற்ற முடிந்ததா? மூடநம்பிக்கை என்ற கதவுகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் போலியான செய்கைகளைத் தூக்கி வீசுங்கள். மூடநம்பிக்கையின் பின்னால் நம் முயற்சிகளைத் தொலைத்து ஏமாற்றத்தைத் தவிர்க்க அனைவரும் முன்வரவேண்டும்.
நன்றி -சந்தியா கிரிதர்

நெஞ்சில் ஒரு முள்

உன்னை பார்த்த 
நாள் முதல்  
வெட்கம் குடி புகுந்து
 உள்ளம் உமையாகி 
 ஒவ்வொரு நிமிடமும்
  இனம் புரியா   மகிழ்ச்சியில்  
மூழ்கி இருந்தேன்.
ஒரு இரு வார்த்தை
 உன்னுடன் பேசிட என்று
 என் மனம் துடிக்கும் போது   
உன்னை பற்றிய கனவுகள் 
 இதமாக  
  நெஞ்சில் வந்து மோதும்   
 இவ்வாறு  காதல் பூக்கள் 
பூக்கும் மலர் போல இருந்த நீ 
முள்ளு செடியாக 
மாறி க் குத்தியதால் 
 நோயாளி ஆனேன்!

-காலையடி,அகிலன் -

பிரபல புள்ளிகளுடன் சூர்யாவின் அடுத்த படம்


பொங்கலுக்கு `தானா சேர்ந்த கூட்டம்’ 

ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் வெளிநாட்டு உரிமையை டி.எஸ்.ஆர்.பிலிம்ஸ் அதிக தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.