சினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்

நந்தலாலா –
நடிகர்கள் - மிஷ்கின், ஸ்னிக்தா, அஸ்வத் ராம், ரோஹினி, நாசர்
கதை-தன் தாயைத் தேடி மனநோயாளி ஒருவனும், எட்டு வயது சிறுவனும் செல்வது.
புள்ளிகள் -(50)


சிக்கு புக்கு-
நடிகர்கள் - ஆர்யா, ஸ்ரேயா, ப்ரீத்திகா, சந்தானம், ஜெகன், வையாபுரி, அனுப்குமார்
கதை- நகர்ப்புறத்தில் நடக்கும் யதார்த்தமான காதல் கதை இது.
புள்ளிகள்-(25)

ரத்த சரித்திரம் –
நடிகர்கள்-சூர்யா, விவேக் ஓபராய், ப்ரியாமணி, கிட்டி, கோட்டா சீனிவாசராவ், ஆஷிஷ் வித்யார்த்தி, சுபலேக சுதாகர், ராதிகா ஆப்டே, சத்ருஹன் சின்ஹா
கதை-ஓர் உண்மை சரித்திரம். வன்முறை நிறைந்து வழிகிறது.
புள்ளிகள்-(60)

கனிமொழி –
நடிகர்கள் - ஜெய், சஷான் பதம்ஸி.
கதை- புலம்பல்,சொதப்பல்,குதம்பல் எல்லாம் கலந்தது.
புள்ளிகள்-(15)

நகரம்-
நடிகர்கள்-சுந்தர் சி, அனுயா, வடிவேலு.
கதை-திருந்தி வாழ துடிக்கும் ஒரு ரவுடியின் கதை..
புள்ளிகள்-(70)

உத்தமபுத்திரன். -----
நடிகர்கள் -தனுஷ், ஜெனிலியா, விவேக்

கதை-புத்திரன் காதலுக்காகக் குடும்பமே ஒன்று சேர்ந்து போடும் நாடகமே.. குடும்பத்தோடு சிரித்து மகிழலாம்.
புள்ளிகள்-(75)

சீன முட்டைகள் ஜாக்கிரதை!

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய ‘கைத்திறமை’ யைக் காட்டி வந்த சீனா தற்போது கோழி முட்டை தயாரிப்பிலும் கைத்திறமையைக் காட்டி வருகிறது. சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர்.

போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயணங்கள் அடக்கம்.

ரசாயணங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சய் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது.

மஞ்சய் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயணங்கள் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது. சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதி தயார். பின்னர் இது ஒரு மணி நேரம் காய வைக்கப்படுகிறது.
பிறகு அதன்மேல் செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.

நிஜ கோழி முட்டையின் ஓட்டைவிட எளிதாக உடையக் கூடியது இந்த போலி முட்டை ஓடு. ஆனால் அதைப் பற்றிய கவலை சீன வாடிக்கையாளர்களுக்கு இல்லை.
போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள் உணவுத்துறை அறிஞர்கள்.

ஆனாலும் சீன போலி முட்டைத் தயாரிப்பாளர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. காரணம் காசு! ஒரு கிலோ கோழி முட்டை 60 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதுவே போலி முட்டை ஒரு கிலோ தயாரிக்க 6 ரூபாய் தான் செலவாகிறது. ஏன் தயாரிக்க மாட்டார்கள்.
உணவு கலப்படம் மற்றும் போலி உணவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சீனாவில் இறப்பவர்கள் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
கனடாவில் இவை தடை செய்யப்பட்டிருப்பது நமக்கு சற்று ஆறுதலை கொடுத்தாலும்,நாம் கவனமாக இருக்கவேண்டியவர்களே!
- சுட்டபழம்

ஆன்மீகம்:-நரேந்திரன் (சுவாமி விவேகானந்தர்)

ஒரு முறை நரேந்திரன் ஆல்வின் ராஜ்யத்துக்குச் சென்றார். அங்கு ஆண்ட ராஜா அவரை விருந்தினராக உபசரித்துத் தன துஅரண் மனையில் தங்கச் செய்தார். ஒருநாள் ராஜா நரேந்திரனிடம் சுவாமிஜி! எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. இதனால் என் நிலை என்னவாகும் என்றார்? இதைக் கேட்ட நரேந்திரன் அங்கு சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த ராஜாவின் தந்தை படத்தைக் கழற்றிவரச் செய்து அதன் மீது யாரேனும் ஒருவர் எச்சில் துப்புங்கள் என்றார்.இதைக் கேட்ட அனைவரும் அங்கு இருந்து விலகிச் சென்றனர்.

உடனே நரேந்திரன் ""ஏன் இதில் வெறும் காகிதமும், வர்ணக் கலவையும் தானே உள்ளது. பின் ஏன் எச்சில் துப்புவதற்கு மறுக்கிறீர்கள்? காரணம் இது உங்கள் மகாராஜாவின் உருவம், அதனால் மரியாதை கொடுக்கிறீர்கள். அது போலவே மக்கள் கடவுளை உருவத்தில் பார்க்கின்றார்கள். யாரும் கல்லே, மண்ணே செம்பே என்று கடவுள் வடிவத்தின் முன் நின்று வேண்டுவதில்லை என்று கூறினார்.இதைக் கேட்ட ராஜா நான் திருந்தினேன் எனக்கூறி நரேந்திரனிடம் மன்னிப்புக் கேட்டார்.