பிறக்கும் ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள்

தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை. எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது. தமிழில் அறுபது ஆண்டு வட்டங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான "அறுபது வருட வெண்பா" இடைக்காடரால் பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு.  விவேக சிந்தாமணியிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.


2008இல் புத்தாண்டுக் குழப்பம் உச்சமடைந்தபோது, அதில் பயன்படும் அறுபதாண்டுப் பட்டியல் தமிழ் அல்ல என்ற வாதம் கிளம்பியது. தமிழ்ப்புத்தாண்டு என்று கூறி அவை ஒவ்வொன்றுக்கும் வடமொழியில் பெயரிட்டுள்ளது ஏன் என்ற குற்றச்சாட்டு தைப்புத்தாண்டு ஆதரவாளர்களால் முன்வைக்கப்பட்டது. எவ்வாறெனினும், அறுபது ஆண்டுப்பட்டியல் தமிழர் காலக்கணக்கைப் பொறுத்தவரை வடமொழியில்  இடைச்செருகல் என்பதில் ஐயமில்லை. எனினும், சமயம்சார்ந்த தேவைகளில் தற்போதும் அறுபதாண்டுப் பட்டியல் பயன்படுவதால், தமிழ்ப்பற்றாளர்கள் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பரிந்துரைத்த அறுபது தமிழ்ப்பெயர் பட்டியலை பயன்படுத்தி வருகின்றனர்.
அவை பின்வருமாறு:
மேற்குறிப்பிட்டவாறு தற்போதய  நிகழ் வருடம் ''எழில்மாறல்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment