ஒளிர்வு:47 -தமிழ் இணைய இதழ் :புரட்டாதி,2014:-எமது கருத்து


 வணக்கம்,
மீண்டும் புதிய இடுகைகளுடன் தீபம் வாசகர்களை சந்திப்பதில் மகிழ்வடைகிறோம்.தாய் நாட்டின் சுற்றுலா தந்த அனுபவங்கள் மேலும் பல பயனுள்ள கட்டுரைகளை தர வல்லமையினை தீபம் பெற்றுள்ளமை வாசகர்கள் தந்த உற்சாகத்தின் பிரதிபலிபென்றே கூறவேண்டும்.   இலக்கிய உலகில் உங்களுடன் எமது பயணம் தொடர உங்கள் நட்பு வளர வாழ்த்துகிறோம்.

நான் தாண்டா….நல்லசாதி

இந்த இரண்டு சொற்களை சொல்லவோ அல்லது மனதார நினைக்வோ மனிதன் பல முயற்சிகளை செய்து வருகிறான். அதன் முதல் மற்றும் ஒரே வழி… “நான் உன்னை விட உயர்ந்தவன்எனச் சொல்லி அடுத்தவன் அனைவரையும் மட்டப்படுத்துவது.

இது இல்லாத இடம் இல்லவே இல்லை

இந்தியாவில் இருக்கும் ஒரு உயர்ந்த சாதி மனிதனையும், கீழ் சாதி என நீங்கள் சொல்லும் ஒருவனையும் அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றால்உங்கள் இருவரின் ஒரே பெயர் “Indians”.  உங்களுக்கு மரியாதை கொஞ்சம் மட்டமாகத்தான் இருக்கும்.

அதே அமெரிக்கன்.. இங்கிலாந்து சென்றால்….. அங்கே உள்ள வெள்ளையன் அமெரிக்கனை மதிப்பதில்லை.

வெள்ளையன் சீனா சென்றால் சீனர்கள் அவர்களை மதிப்பதில்லைசீனன் ஜப்பான் சென்றால் சப்பான் நாடுக்காரன் சீன மனிதனை மதிக்க மறுக்கிறான்.

கறுப்பன் வெள்ளையனை மதிப்பதில்லை, வெள்ளையன் எவரையும் மதிப்பதில்லை.

அடஅவன் அவன் சாதிக்குள் பெண்களை மதிப்பதில்லைவீட்டு வேளையில் கூடபூஜை செய்வதை அளபபறையாகச் செய்யும் குடும்பத் தலைவர் எவரும் வீடு பெருக்கவோ துணி துவைக்கவோ உதவுவதில்லை.

ஏன் என்றால் அதெல்லாம் பொம்பள செய்யுற வேலையாம்….

ஏதாவது ஒரு காரணம் வேண்டும்.. நான் உன்னை விடப் பெரியவன் என காட்ட….  பிறப்பது முதல் இறக்கும் வரை இந்த ஒரே லெட்சிய வெறி கொண்டு மனிதனாக வாழாமல் அனைவரும் மடிந்து போகிறோம்.

இது போன்ற பாகுப்பாடுகளை பார்க்கும் போது தெருவில் அலையும் நாய் கூட இந்த மனித இனத்தை விட மேலாகத் தெரிகிறது.

இந்த பிரபஞ்சத்தின் வாழ் நாள் கால அளவு முன்.. நாம் மனித வாழ்க்கை என்பது வெறும் தூசி போன்றதுஆனால் இந்த 60 வருடத்தில் நாம் என்னவெல்லாமோ செய்யத் துடிக்கிறோம்.

அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இந்த நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கிறதுஒருவர் தன் நிதானத்தை இழப்பதால் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்படும் ஆபாயம் அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஒருவருக்கு பெருங்கோபம் வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதாகவும், பக்கவாதம் ஏற்ப்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகரிப்பதாகவும் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொது சுகாதார
பிரிவின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.ஆயிரக்கணக்கான நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஒருவர் தன் வாழ்நாளில் எந்த அளவு இந்த மாதிரி அதிகம் கோபப்படுகிறாரோ, அந்த அளவுக்கு அவர் அவர் பாதிக்கப்படுவார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இந்த நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதியாகுவதற்கு உதவும் வகையில் மருந்துகளோடு சேர்த்து, உளவியல் சிகிச்சைகளும் அளிப்பது இவ்வகையான தாக்குதல்களை குறைப்பதற்கான ஒரு சிறந்த முயற்சியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எதற்காக கண் துடிக்கிறது?


சிலருக்கு ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது, ஒருசில மூடநம்பிக்கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித்தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற்படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப் போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர். உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒரு மூடநம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும். ஆம், நல்லது கெட்டது நடப்பதற்கும், கண்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்காமல், குருட்டுத்தனமாக பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த மாதிரி கண்கள் துடிப்பதற்கு, உடலில் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். அதுமட்டுமல்லாமல், கண்கள் துடிப்பதற்கு ம்யோகிமியா (myokymia) என்று பெயர்.
இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, அதிகமாக காப்ஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் பல காரணங்களாகும். சிலருக்கு கண் துடிப்பானது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட இருக்கலாம். சரி, இப்போது இந்த கண் துடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, கண்கள் துடித்தால் என்ன செய்ய வேண்டுமோ, அதை செய்து கண் துடிப்பில் இருந்து விடுபடுங்கள்.

மன அழுத்தம்
மன அழுத்தமானது அதிகம் இருந்தாலும் கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். எனவே மன அழுத்ததைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட்டால், அடிக்கடி கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம்.

தூக்கமின்மை
மன அழுத்தம் அதிகம் இருந்தால், தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்க நேரிடும். இவ்வாறு சரியான தூக்கம் இல்லாவிட்டால், கண்களானது துடிக்கும்.

கண்களுக்கு சிரமம்
கண்களுக்கு அதிகப்படியான சிரமத்தைக் கொடுத்தாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். உதாரணமாக, படிக்கும் போது சரியாக தெரியாவிட்டால், அப்போது கண்களை பரிசோதித்து, அதற்கு கண்ணாடிகளை போடாமல், சிரமப்படுத்தி அப்படியே படித்து கண்களுக்கு சிரமம் கொடுத்தாலும், கண்கள் துடிக்கும். மேலும் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்களை பார்த்துக் கொண்டே இருந்தால், கண்கள் களைப்படைந்துவிடும். இதனால் கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு துடிக்க ஆரம்பிக்கும். ஆகவே கம்ப்யூட்டர் அல்லது மொபைல் பயன்படுத்தும் போது, சரியான கண்ணாடிகளை அணிந்து கொண்டு பயன்படுத்தினால், கண் துடிப்பில் இருந்து விடுபடலாம்.

காப்ஃபைன்
அதிகமாக காப்ஃபைன் உள்ள பொருட்களான காபி, டீ போன்றவற்றை அருந்தினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். எனவே இத்தகைய பொருட்களை அதிகம் பருகுவதை தவிர்ப்பது நல்லது.

ஆல்கஹால்
ஆல்கஹாலை அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கண்கள் துடிக்கும். ஆகவே ஆல்கஹாலை அதிகம் பருகாமல், மருந்து போன்று எடுத்துக் கொள்வது நல்லது.

கண் வறட்சி
கண் வறட்சியினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். போதிய தண்ணீர் பருகாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருப்பது, காப்ஃபைன் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வது, மன அழுத்தம், சோர்வு போன்றவற்றால் கண்களானது வறட்சியடைகிறது. ஆகவே இத்தகைய செயல்களை தவிர்த்தால், கண் வறட்சியில் இருந்து விடுபடலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு
சில ஆய்வுகள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் கண்களில் உள்ள தசைகள் துடிக்க ஆரம்பிக்கும் என்று சொல்கிறது. அதிலும் மக்னீசியம் குறைபாடு இருந்தால், கண்கள் துடிக்கும் என்று கூறுகிறது. ஆகவே சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுமுறைகளை மேற்கொண்டால், கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம்.

அலர்ஜி
சிலருக்கு கண் அலர்ஜிகள் ஏற்படும். கண் அலர்ஜிகளான கண்களில் அரிப்பு, வீக்கம், கண்கள் சிவப்பாகி கண்ணீர் வடிதல் போன்றவற்றின் போது, கண்களை தேய்த்தால் வெளிவரும் ஹிஸ்டமைன் கண் திசுக்களில் நுழைந்து, கண்களை துடிக்க வைக்கும். ஆகவே கண் அலர்ஜி இருந்தால், அப்போது தேய்க்காமல், கண் மருத்துவரை அணுகி, சரியான மருந்துகளை எடுத்துக் கொண்டால், கண் துடிப்பில் இருந்து விடுபடலாம்.