சிரிக்க...சில நிமிடம்...


சர்தார்ஜி ஜோக்ஸ்


📱மிஸ் கோல்

சர்தார்ஜி: மிஸ், நீங்கள் எனக்குக் கோல் பண்ணி இருந்திங்களா?

டீச்சர்: நானா? , இல்லையே ஏன்?

சர்தார்ஜி:நேற்று என்னுடைய மொபைல் போனிலை ''மிஸ் கோல்'' என்று இருந்ததே!!

 

பஞ்சாப்பின் தலைநகரம்

 சர்தார்ஜியின் மகன்:கடவுளே, எப்படியாவது நியூயார்க்கை பஞ்சாப்பின் தலைநகரமாக மாத்திவிடு!

அப்பா சர்தார்ஜி: ஏண்டா கடவுளிட்ட அப்பிடி வேண்டுறாய்?

சர்தார்ஜியின் மகன்: ஏன்னா, நான் அப்பிடித்தான் பரீட்ச்சையில எழுதியிருக்கேன்!

 

👶கடவுளே இது போதும்

அமைச்சருடைய குடும்பத்தில் நான்காவது பிள்ளை பிறந்தது.

 சர்தாரை அழைத்து குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

 

 முன்னாள் பிறந்த மூன்று பையன்களுடைய பெயர் என்ன? என்று கேட்டார் சர்தார்.

 

 ஒருவன் ரஹ்மத் இலாஹி (கடவுளின் அன்பு) அடுத்தவன் பர்கத் இலாஹி (கடவுளின் கருணை) மூன்றாம் அவன் ம்ஹ்பூப்  இலாஹி (கடவுளின் அன்புக்குரியவன்).

 

 சர்தார் சற்று நேரம் யோசித்து விட்டு சொன்னார், 'பாஸ்கர் இலாஹி (கடவுளே இது போதும்) என்று பெயரிடுங்கள்'

 

🐜எறும்புப்  பவுடர்

விற்பனையாளர்: சார் இந்தாங்க எறும்புப்  பவுடர்.

 சர்தார்ஜி: வேணாம், வேணாம். அதுகளுக்கு பவுடர் போட்டால், நாளைக்கு லிப்ஸ்டிக் கேட்கும்.

 

🏢ஜென்ம விரோதிகள்

சந்தா சிங்கும்  பந்தா சிங்கும் ஜென்ம  விரோதிகள்.

 

  சந்தா சிங் கட்டடத்தின் முதல் தளத்தில் வசிக்கிறார். பந்தா சிங் கட்டடத்தின் 7வது தளத்தில் வசிக்கிறார்.

 

 ஒருநாள் கட்டிடத்தில் லிப்ட்  ஏதோ கோளாறாகி வேலை செய்யவில்லை.

 

இது பழிவாங்க நல்ல சாக்கு என்று நினைத்த பந்தா சிங், சந்தா சிங்கை  தன் வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டாராம்.

 

  லிப்ட் வேலை செய்யாததால்  7 மாடி நொங்கு லொங்குன்னு, களைக்கக்  களைக்க 7 மாடிப்படி ஏறி வந்தாராம் சந்தா சிங்.  வந்து பார்த்தால் வீட்டில் ஒரு பெரிய போட்டு தொங்குதாம்.

 

 அதுக்கு பக்கத்தில் ஒரு பேப்பர்ல, ''நல்லா ஏமாந்தியா? ஹா..ஹாஹ்ஹா'' ன்னு எழுதி இருந்ததாம்.

 

 இதை பார்த்த சந்தா சிங்குக்குக்  கோவம் வருது, ஆனால் அவர் மட்டும் சளைச்சவரா  என்ன,

 

 அவரும் அதே பேப்பரில் எழுதிவைச்சாராம்  ''நான் இங்கே வரவே இல்லையே''

 

 

🚄பஞ்சாப் எக்ஸ்பிரஸ்

ஒரு நாள் திடீரென்று படியாலா  ரயில்வே நிலையத்தில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த 50 சர்தாஜிக்களும் ரயிலில் அடிபட்டு இறந்து விட்டனர்!

 

 அனைவருக்கும் ஒரே ஆச்சரியம்.... என்ன நடந்தது? எதனால் அந்த பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அனைத்து சர்தார்ஜிக்களும் இறந்துவிட்டனர் என்று!

 

 அந்த பிளாட்பாரத்தில் உயிர் பிழைத்து பரிதாபமாய் நின்று கொண்டிருந்த ஒரே ஒரு எஞ்சிய சர்தாரை எல்லா பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது? என்று ஆவலாகக்  கேட்டனர்.

 

 அதற்கு அந்த சர்தார்ஜி, 'ரயில் வருவதற்காக அறிவிப்பில் நடந்த பிழையினால் அனைத்து சர்தாஜிக்களும் இறந்துவிட்டனர்' என்றார்.

 

 அப்படி என்ன தவறு என்று நிருபர்கள் கேட்டதற்கு, சர்தார்ஜி சொன்னார். 'எல்லாரும் பஞ்சாப் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக மூன்றாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அறிவிப்பாளர் ''பஞ்சாப் எக்ஸ்பிரஸ் மூன்றாவது பிளாட்பாரத்தில் வந்து கொண்டிருக்கிறது'' என்று அறிவித்தார். உடனே அனைத்து சர்தார்ஜிக்களும் பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்தில் குதித்து விட்டனர்.ரயில் அனைவரையும் அடித்துவிட்டது.

 

 உடனே நிருபர்கள் 'என்ன முட்டாள்தனம்?! ஆனால் நீங்க மட்டுமாவது புத்திசாலித்தனமாக யோசித்து தண்டவாளத்தில் குதிக்காமல் தப்பித்தீர்களே?! எப்படி? என்றனர்.

 

 அதற்கு எந்த புத்திசாலி சர்தார், 'நான் தற்கொலை செய்து கொள்வதற்காக தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து இருந்தேன். அறிவிப்பை கேட்டுவிட்டு பிளாட்பாரத்தில் ஏறிப்  படுத்துக் கொண்டேன். ஆனால் ரயில் அறிவித்ததற்கு மாறாக, தாண்டவாளத்தில் வந்து விட்டது.'' என்று கூறினாரே பார்க்கலாம்.

..........................................................தொகுப்பு:செ. மனுவேந்தன்

"தமிழர் சமயமும் அதன் வரலாறும்’’- பகுதி: 11 [ஒரு அலசல்]

[தமிழிலும் ஆங்கிலத்திலும்]


சுமேரியர்கள் எண்ணிறந்த பல தெய்வங்களை வழிபட்டார்கள் எனினும், இந்த தெய்வங்கள், எந்த வகையிலும், மாறுதலில்லாத, ஒரே விதமான பெயரையோ, ஆற்றலையோபிறப்பிடத்தையோ அதிகாரப் படி நிலை தகுதியையோ [அ ந்தஸ்தையோ] அல்லது பண்புகளையோ கொண்டிருக்க வில்லை. எனவே மெசொப்பொத்தேமியாவின் பண்பாடு இடத்திற்கு  இடம், நகரத்திற்கு நகரம் வேறுபட்டன. அப்படி அவர்கள் வழிபட்ட தெய்வங்களில் முதன்மையாக, முன்பு கூறியவாறு என்லில், என்கி, ஈனன்னா, ..  போன்ற வற்றுடன்

மேலும் சூரிய கடவுள், உடு [Utu] அல்லது ஷமாஷ் [Shamash] மற்றும் சந்திர கடவுள் நன்னா [Nanna] அல்லது சின் [Sin] அடங்குவர்.  உதாரணமாக, சூரியனின் முக்கியத்துவத்தை 5,000 ~6000  ஆண்டுகளுக்கு முன்னரே, மெசொப்பொத்தேமியாவை சேர்ந்த மக்கள் நன்கு உணர்ந்திருந்ததால், அதை, நீயாயாதிபதி தெய்வம் அல்லது நீதிக்கும் பாதுகாப்புக்கு முரிய கடவுள் என அழைத்தனர். மேலும் சுமேரிய புராண கதைப் படி பபிலோனியன் அரசன் ஹம்முராபி, சட்ட விதித் தொகுப்பை சூரிய கடவுள் ஷமாஷ் இடம் இருந்து பெற்றதாக

அறிகிறோம். சூரியன் என்றால் இயக்குபவன் என்பது பொருள். சூரியனால் தான் ஒளியும் வெப்பமும் தோன்றுகின்றன. உலக உயிர்கள் அனைத்தையும் வாழவைப்பவன் சூரியன்.

ஆகவே, இப்பூவுலகில் சூரியன் தான் அதிகமாக முதல் கடவுளாக கருதப் பட்டு இருக்கலாம். மேலும் ஒரு சிறு தாவரம் உணவை உற்பத்தி செய்வது முதல், விவசாயம், துணி காயவைப்பது, வற்றல் போடுவது, போன்ற வைக்கும் அவை உதவி புரிந்தன. அது மட்டும் அல்ல, வானில் சூரியன் இருந்த நிலையைக் கொண்டே தான் அந்தக் கால மக்கள்,பாபிலோனியர்கள் உட்பட, நேரத்தைக் கணக் கிட்டனர். இதனால் தான், திராவிட  அல்லது தமிழ் விவசாயிகள், சூரியனுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர் எனலாம். சந்திரனையும் அவர்கள் வழிபட்டனர். இதை நன்னா [Nanna] என அழைத்தனர். இவர் பொதுவாக En-zu, என குறிப்பிடப் பட்டார். இதன் கருத்து  அறிவுத் தெய்வம் ஆகும். மேலும் இவரை இரவின் நீதிபதியாகவும் கருதப்பட்டது. இவர் “காரன்’’ [Harran] மற்றும் “ஊர்’’ [Ur] போன்ற நகர்களில் சிறப்பாக வழிபடப்பட்டார். ஒவ்வொரு

மாத முடிவிலும் சந்திரக் கடவுள் அவர்களுக்கு காட்சி கொடுத்து, அவர்களுக்காகத் தீர்மானம் எடுப்பார் என நம்பினர்.


எனினும் ஹம்முராபி பாபிலோனியா பேரரசை உருவாக்கிய போது நிப்பூர் நகரத்தில் இருந்து பாபிலோன் நகரத்திற்கு எல்லாவற்றையும் மாற்றினார். பல கட்டிட  வேலைப்பாடுகள்  எல்லாம் உருவாக்கி மர்டுக் [Marduk] எனும் கடவுளை பிராதனப் படுத்தி ஒரு சாதாரண நகரத்தை மாபெரும் நகரம் ஆக்கிய பெருமை இவருக்கு உண்டு. எப்படியாயினும்

பபிலோனியாவின் கடைசி அரசன் நபோனிடஸ் [Nabonidus] கி பி 556 –539, பதவி ஏற்றதும் மர்டுக் கடவுளை கௌரவப் படுத்தும் திருவிழாக்களை புறக்கணித்து, அதற்குப்பதிலாக 'சின்' என்ற சந்திர கடவுளிற்கு ஆலயம் கட்டி, அதற்கு தலைமை பெண் குருவாக தன் தாயையும் மகளையும் நியமித்தார்.  இதனால் இவர் சர்ச்சைக்கும் உள்ளானார் என்பதும் குறிப்பிடத் தக்கது. கடவுள் மகிழ்வற்று சினங்கொள்ளும் போது, மக்கள் துன்பமும், பாதிப்பும் அடைகிறார்கள் என சுமேரியர் நம்பினர். உதாரணமாக, டைகிரிசு ஆறு (Tigris) வெள்ளப் பெருக் கெடுத்து முழு கிராமமும் அழிவடைந்தால், அதை, தாம் கடவுளை மகிழ்ச்சியாக வைத்திருக்க தவறியதன் விளைவே இது என தம்மையே நொந்து கொள்கிறார்கள். எனவே கடவுள் எதை விரும்புகிறார், எதை வெறுக்கிறார் என்பதை நன்கு அறிந்த ஒருவர் தமக்கு கட்டாயம் தேவை, அப்ப தான் தமக்கும் தமது நகர மாநிலத்திற்கும் விமோசனம் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. இந்த தேவையின் அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலேயே மதகுரு உருவாக்கினார். மத குருக்கள் சடங்குகள் செய்வதில் விசேடத்துவம்

பெற்றார்கள். அத்துடன் அவர்கள் கடவுளின் விருப்பத்தை அறிந்து அதை முன் கூட்டியே தெரிவிக்கக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். மேலும் கடவுள் மகிழ்வற்று இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் எப்படி கடவுளின் ஆதரவை பெறலாம் என்பதையும் அறிந்து இருந்தார்கள். இது சுமேரியர்கள் மத்தியில் மத குருமாருக்கு மிகவும் முக்கியமான

இடத்தை கொடுத்தது. ஆகவே அவர்கள் சுமேரிய சமுதாயத்தில் மிகவும் வலிமையான மற்றும் முக்கியமான நிலையை பெற்றார்கள். இந்த மத குருமாரின் அந்தஸ்து,

சுமேரியர்களின் சமூகப் படிநிலையில் அவர்களை உயர் நிலையில் வைத்தது. உண்மையில் அவர்கள் அரசனுக்கு அடுத்த நிலையை பெற்றார்கள். சுமேரிய அரசர்கள், தாம்

கடவுளால் நாட்டையும் குடியையும் அரசாளத் தேர்ந் தெடுக்கப் பட்டவர்கள் என்று கூறினர். மத குருமார்களுக்கு கீழ், சிறப்பு கைத்தொழிலாளர்கள் [skilled craftspeople], வியாபாரிகள்,

மற்றும் வர்த்தகர்கள் இருந்தார்கள். இவர்களுக்கும் கீழ், விவசாயிகள் மற்றும் பொது தொழிலாளர்களும், ஆக அடியில் அடிமைகளும் இருந்தனர். அங்கு,பொதுமக்கள் பொதுவாக

தெய்வங்களை நேரடியாக அணுக முடியாதிருந்தது. இச் செயல்களை, அதிகாரம் வாய்ந்த, இந்த புரோகிதர்கள், குருக்கள் ஊடாக செய்தனர். கடவுளை மகிழ்வாக வைத்திருக்க எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பொது மக்களுக்கு மத குருக்கள் கூறி ஆலோசனையும் வழங்கினர். தெய்வங்கள் சில வேலை இரக்கமாக இருந்தார்கள், சில வேளை 

கொடூரமாக இருந்தார்கள். இதில் எதனிலும் கடவுள் செய்வதை தம்மால் கட்டுப் படுத்த முடியாது என சுமேரியர் நம்பினார்கள்.  உண்மையில் தாம் கடவுளின் அடிமைகள் என்று

சுமேரியர் நம்பினர். மேலும் தாம் பூமியில் பிறந்தது, கடவுளுக்கு பணி புரியவும் கடவுளை நன்றாக பார்த்துக் கொள்ளவும் என கருதினர்.  எனவே அவர்கள் தெய்வங்களுக்குப் படைப்பதிலும் பலியிடுவதிலும் மற்றும் அவரை இரந்து வேண்டுதலிலும் ஈடுபட்டனர்.


கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரான அப்பர் திருநாவுக்கரசு நாயனாரும்

"தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான், தன் கடன்னடி யேனையுந் தாங்குதல், என் கடன் பணி செய்து கிடப்பதே."

என்று கூறுகிறார். ஒருவர் திருநாவுக்கரசர் என்று கூறும் போது, எமது கண்களில் தானாகத் தோன்றும் காட்சி, அவர் உழவாரத்தை தோலில் சுமந்து  நிற்கும் காட்சியே ஆகும்.  இவர் இந்த "உழவாரம்' என்ற விவசாயக் கருவியின் மூலம் கோயில்களில் முளைத்திருந்த புல் பூண்டுகளை களைந்து கோயிலைத் தூய்மை யாக்கினார். அத்துடன், இது அடியவர்களின் வேலை. அது திருத் தொண்டு புரிவது என்கிறார். அது மட்டும் அல்ல, கடவுள் மகிழ்ச்சியாய் இருந்தால் எல்லாம் நல்ல படி அமையும் எனவும் நம்பினார்கள். அதாவது நிறைய உணவு உற்பத்தியும், ஆற்றின் வெள்ளப் பெருக்கு சீராகவும் முன் கூட்டியே அறியக் கூடியதாகவும், பூமி நடுக்கம் இன்றியும், கடும் மணல் புயல் இன்றியும், மற்றும் இயற்கை அனர்த்தங்கள் இன்றியும், வாழ்வு மிக இன்பகரமாக அமையும் எனவும் கருதினார்கள். சில நேரங்களில் வாழ்வு மிக மகிழ்ச்சியாகவும் மற்றும் சில நேரங்களில் துக்கமாகவும்

அமைகிறது என்று எமக்கு நன்றாக தெரியும். சுமேரியாவில் அப்படி வாழ்வு ஒரு நெருக்கடியை சந்திக்கும் போது, அவர்கள் தங்களை தாங்களே பழி சுமத்தி கொண்டார்கள்.

அதாவது தாமே கடவுளை எரிச்சலடைய வைத்ததாக தம் மேல் பழியை சுமத்து கிறார்கள். கடவுள்  மகிழ்ச்சியாக இல்லா விட்டால், அவர் இலகுவாக கோபம் அல்லது எரிச்சல் அடைகிறார் அதனால் அவர் அதை மக்களிடம் காட்டுகிறார் என நம்பினர். சுமேரியர்களின் படைத்தல் புராணம் இது ஏன் என விளக்கமாக சொல்கிறது. சுருக்கமாக, சுமேரிய சமுகத்தில் மதம் மிக முக்கிய பங்கு வகுத்தது. உண்மையில், சுமேரியர்களின் தனிப் பட்ட அல்லது பொது வாழ்க்கையின் ஒவ்வொரு  நிலையிலும் சமயம் ஆதிக்கம் செலுத்தியது. பல வழிகளில், சமயமே சுமேரிய சமுகத்தின் அடிப்படையாக இருந்தது மட்டும் அல்ல அதுவே சுமேரிய சமுகத்தை உரு அமைத்ததும் ஆகும்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

பகுதி 12 தொடரும்

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக /Click to read from the beginning

 *அடுத்த பகுதியினை வாசிக்க அழுத்துக/CLICK TO READ NEXT PART, 

[[[தென்னம்பாக்கம்  பெருமாள் ஆலயம், தமிழ் நாட்டில் எடுத்த படம்,  மக்கள் நேர்த்திக்கடன் அல்லது பிரார்த்தனையின் காரணமாய் அளிக்கப் பெற்ற தமது பிரார்த்தனை வடிவ சிலைகள்.] [Pictures taken at Thennampakkam Perumal temple in Tamil Nadu. These are the statues donated by villagers. Villagers vow to a god that if their wish comes true, they will make one of their own statues in a praying posture and will donate that to god.]]]

 

 

(இணைத்த படங்கள்:சுமேரியன் ஆலயம் சிகுரத், சூரிய கடவுள் உடு / ஷமாஷ், சந்திர கடவுள் நன்னா / சின், அப்பர் திருநாவுக்கரசு நாயனார், பொங்கல் பண்டிகை,நேர்த்திக்கடன் அல்லது பிரார்த்தனையின் காரணமாய் அளிக்கப் பெற்ற சுமேரிய சிலைகள் [கி மு 2900-2600)

 

 

Sumerian Temple, ziggurats

Sumerian sun god, Utu or Shamash

Sumerian moon god Nanna or Sin

Appar Thirunavukkarasar Nayanar

Pongal Festival

The statues donated to temple as a vow to a god [BC 2900-2600]

 

‘’An analysis of history of Tamil religion’’ – Part:11

[In English and Tamil]

 

The Sumerians practiced polytheism, the worship of many gods. These gods were by no means uniform in name, power, provenance or status in the hierarchy. Mesopotamian culture varied from region to region, from

city - state to city - state. So, Generally, Mesopotamian people worshipped many different gods, Among the gods they worshipped were Enlil, the lord of the air; Enki, god of wisdom; and Inanna, goddess of love and war. In addition, The sun and moon were represented by the gods Utu and Nanna. For example, one of the the main Sumerian deities, the sun god Utu or Shamash, as the solar deity, exercised the power of light over

darkness and evil. In this capacity he became known as the god of justice and equity and was the judge of both gods and men. According to legend, the Babylonian king Hammurabi received his code of laws from

Shamash. Also at night, Shamash became judge of the underworld. The sun has been given an extraordinary position in early human culture, possibly as it gives us light & heat and without it, no living things would exist in this world. So Sun may be the first god people worshipped and the concept of sun worship is one nearly as old as mankind itself. In societies, like Sumerians, that were primarily agricultural, and depended on the sun  for life and sustenance, it is no surprise that the sun became deified. Sun worship has also been found among Dravidians or Tamils and they celebrate Thai Pongal, mainly to convey their appreciation to the Sun God for providing the energy for agriculture. They worshipped moon too. The god of moon called Nanna or Sin. He is commonly designated as En - zu, which means "lord of wisdom" The two chief seats of Nanna's / Sin's

worship were 'Ur' in the south of Mesopotamia and 'Harran' in the north. The religious importance of these Sumerian gods changed with the political power of the associated city. For example, When Babylon became the political center in southern Mesopotamia in the time of Hammurabi (18th century BC), Marduk slowly rose from an obscure deity in the third millennium BC to become one of the most important gods and the head of the Mesopotamian pantheon in the first millennium BC and was elevated to the level of supreme god. However, When Nabonidus became king of Babylon in 555 BC, He neglected the festivities in honour of the god Marduk and Instead, he had a temple build for the cult of the moon god Sin, and his mother and daughter were its priestesses. This worship of the moon god in favour of the traditional Babylonian deity made Nabonidus' rule

disputed.

 

Sumerians believed that When the gods were displeased, humans suffered. For example, If the Tigris River flooded, and a whole village was destroyed, that meant humans had not been successful at keeping the gods happy. So, Sumerians believed it was essential for the survival of the city - state to have people who knew what the gods liked and disliked. A priestly class arose out of this need. Priests specialized in practicing rituals. They could divine (predict / understand) the will of the gods, what to do if the gods were displeased, and how to gain the gods’ favour. this made priests extremely important to the Sumerians, and they became some of  the most powerful and important people in society. Because of this status, priests occupied a high level in Sumer’s social hierarchy, the division of society by rank or class. In fact, priests were just below kings. The kings of Sumer claimed that they had been chosen by the gods to rule. Below the priests were Sumer’s skilled craftspeople, merchants, and traders. Trade had a great impact on Sumerian society. Traders traveled to faraway places and exchanged grain for gold, silver, copper, lumber, and precious stones. Below traders, farmers and laborers made up the large working class. Slaves were at the bottom of the social order. As common people could not generally approach god directly. This was done through this sumerian Priests, They also told and advice people how to behave to keep the gods happy. Sometimes gods were kind,  but sometimes gods  were cruel. Either way, the Sumerians believed that they had no control over what the gods did. In fact, the Sumerians believed that they were slaves of the gods & that they were put on earth to serve and take care  of the gods and they served their gods with sacrificial offerings and supplications. Even seventh century AD,  Appar, Thirunavukkarasu Nayanar too said: 

 

"It is God Siva duty is to support and  protect me and My duty is just to keep serving. ". That is  "en kadan pani cheydhu kidappadhe"

 

The moment one says Thirunavukkarasar automatically the image comes to the mind is that of a saint with the uzavaram [hand plow] on his shoulder, to clean the abode of the Lord removing the

plants that grow in disturbing fashion. In brief, the Sumerians believed that if the gods were happy, everything would be great. Food would be plentiful, the flooding of the rivers would be regular and predictable, there

would be no earthquakes, bad sand storms or other disasters, and life would be just great. We all know that there are periods when life is great. It always eventually takes a turn, However, and in Sumer, when life took  a turn, the people blamed themselves for doing something to upset the gods. They believed that If the gods weren’t happy, they became cranky and took it out on the people. "The Sumerians story of the creation  of people"   tells why. So, Religion was very important in Sumerian society. In fact, it played a role in nearly every aspect of public and private life.  In many ways, religion was the basis for all of Sumerian society,  and it Shapes Sumerian Society too.

[Kandiah Thillaivinayagalingam-/-Athiady, Jaffna]

Part 12 Will follow