நாகரீக க்கோமாளிகள் :


ம்பதாயிரம் சம்பளம் என்பதால்
அம்மாவை மாற்ற தேவையில்லை
ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம்
ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.

காலை வணக்கம் வார்த்தை எல்லாம்
கடல் கடந்து சென்றது
Good Morning என்ற வார்த்தையில் தான்
பல குடும்பம் விழிக்குது .

Fu*k என்ற வார்த்தை கூட
பெருமை பொங்க சொல்வர்..
நாங்கள் ... என்று ஆரம்பித்தால் மட்டும்
ஒழுக்கம் இல்லாதவர் என்பர்.

ந்நிய உணவில் தனி ருசிதான்
அதில் ஒன்றும் தவறில்லை
ஆயின் வறண்ட ரொட்டியை
திண்ணக் கூட வறட்டு கவுரவம் என்ன?

த்து வரியை படிக்க சொன்னால்
பல்லை இளித்து காட்டுவார்
ஆயினும் ஆங்கில நாளிதழ் வாங்கி
வைத்து அறிவாளி வேடம் போடுவார்.

முறுக்கும் சீடையும் கையில் தந்தால்
அலட்சியம் செய்து போவார்.
ஒரு  Lay's வாங்கி  கொண்டு
கோமான் போல திரிவார்..

நாகரீக பெண்கள் நடக்கும் விதத்தில்
அலப்பறை அதிகமாய் மின்னும்
நாலு வரி பேச தெரிந்துவிட்டால்
மனதில்  சேக்சுபியர்  என்று எண்ணம்.

பாரதி கவிதை பைந்தமிழ் நூலை
புரியாதவர் போல படிப்பார்..
Harry Potter  வாங்கி வைத்து
மேதாவி போல நடிப்பார்..

ண்பா தோழா என்பதை
பழமை சாயம் பூசுவார்
Bro Dude என்பதை எல்லாம்
புரியாமலே பேசுவார்

ன்பெனும் அம்மா
Mummy  ஆனது
அழகிய தமிழ்மொழி
Dummyஆனது
ஆங்கிலம் என்பது
பெருமையானது.
நீங்கள் அலட்டிக்கொள்வது
மடமையானது.

ரசியலில் தான் விடுதலை பெற்றோம்
நம் அடிமை தனம் இன்னும் போகவில்லை
வளர்ச்சிக்கு தான் ஆங்கிலம்
அதை கவர்ச்சியாய் காட்டத் தேவையில்லை.

பெருமைக்கு பேசுவதை
குறைத்து கொள்ளுங்கள்
நம் பெருமை எல்லாம்
தமிழ்தான் உரைத்து சொல்லுங்கள் .


_ நன்றி:வை . நடராஜன்

இன்று சிரிக்க......

-பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?”
-“தெரியுமே…ஏன் அப்படி கேட்கறீங்க….. ­ ­?”
-“இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து
எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்க ளே…
அதான் கேட்டேன்.!”
அப்பா: ஏண்டா... பையில வச்சிருந்த நூறு ரூபாயக் காணோம்... பத்து ருபா தான் இருக்கு...
பையன்: நான் தான்ப்பா எடுத்தேன்...
அப்பா: ஏன்டா எடுத்த?
பையன்: நீங்க தானப்பா சொன்னீங்க..
நூத்துக்கு தொண்ணூறு எடுக்கச் சொல்லி....


-இந்த ஆஸ்பத்திரியிலதான் என் கணவரைப் பறிகொடுத்தேன்..!
-ஐயோ பாவம்..ஆபரேஷன்ல இறந்துட்டாரா?
-இல்ல…நர்ஸைக் கூட்டிட்டு ஓடிப்போயிட்டார்..!
Image result for phone vadiveluஅவனுக்கு புது நம்பரிலிருந்து ஒரு போன் வந்தது
GIRL;- ஹாய், ஹேப்பி வாலன்டைன்ஸ் டே,, உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ?
MAN ;- இல்ல, இல்ல, . . . . நீங்க யாரு ?
GIRL ;- உன் பொண்டாட்டிதான், வீட்டுக்கு வா மிதிக்குறேன்
(சில மணிநேரத்திற்கு பிறகு அதே போல ஒரு போன்கால் )
GIRL ;- ஹாய்! ஹலோ. . . ஹேப்பி வேலன்டைன்ஸ் டே. . .
உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?
MAN;- ஆகிடுச்சு. . . .நீங்க ?
GIRL :- அடப்பாவி. . . நான்தான் உன் கேர்ள்பிரண்டுடா. . . பிராடு , ஏமாத்துக்கார நாயே நாயே !
MAN ;- கோவிச்சுக்காத செல்லம், என் பொண்டாட்டின்னு நெனச்சுட்டேன். . . சாரிடா செல்லம்
GIRL :- நான் பொண்டாட்டிதான் . . வாடா, வீட்டுக்கு வா இருக்கு
MAN ;- ???????

""சாமி, நான்தான் ஆன்மீகத்துக்கு "ராஜா'னு டிவியில பேட்டி கொடுத்தீங்களா ?''
""ஆமாம்''
""போருக்குத் தயாரா'னு வடநாட்டு சாமியார் ஒருத்தர் ஓலை அனுப்பியிருக்கிறார் சாமி''!


Image result for kanavan manaivi jokesமனைவி: ""ஏங்க நம்ம வீட்டில் திருடன் நுழைந்துவிட்டான், எழுந்திருங்க!''
போலீஸ்காரக் கணவர்: ""நான் இப்போது டூட்டியிலே இல்லேடி''
மனைவி: ?!?!?!
இப்படியும் மனிதர்கள்

வஞ்சனை நிறைந்த உலகமடா _ நெஞ்சில்
வஞ்சனை என்றும் உலவுமடா
செய்தது ஆயிரம் நன்மைகள் -என்பினும்
சென்றபின் செருக்கிலே இகழுமடாகண்களில் நீரோ கரையுமடா -அவர்
கனிந்த சொல் நெஞ்சில் உரையுமடா
தொடுப்பது எல்லாம் பொய்மையடா-அவர்
நடப்பது எல்லாம் நடிப்பதடா

                       நெஞ்சமோ நஞ்சாய் இருக்குமடா - ஆனால்
     சொல்பவை மட்டும் இனிக்குமடா
வஞ்சனை ஆயிரம் பேசினும் -நீ
வந்தபின் வாயாலே புகழுமடா.

செல்வங்கள் வந்ததும் சேருவார்- அவை
செல்லும் என அறிந்ததும் மாறுவார்
உழைத்தது நீ என்று பேசுவார்- கொஞ்சம்
தாழ்ந்தால் அண்டிபிழைத்ததால் போனது
என்று ஏசுவார்   

               வாழ்வதை கண்டால் எரியுமடா- அவன்
வீழ்ந்ததும் நெஞ்சம் குளிருமடா
             தான் கோடிகள் கொட்டி வாழ்ந்தாலும்
                                      மற்றவன் கோவணம் வாங்கினும் பொறுக்காதடா.

போலியாய் வாழ்விலே இருப்பானடா- மற்றவர்
போற்றனும் என்று தான் நினைப்பானடா
உண்டது காஞ்சி தான் என்றாயினும்
கையில் நெய்யிட்டு காட்டுவானடா.

                                         ஊருக்கு ஆயிரம் உபதேசம்
                 உண்மையில் அகத்திலே பொய்வேஷம்
                     தான் கரமெல்லாம் கறையாக இருப்பீனும்
                மற்றவர் காலிலே கறை என்று உபதேசம்

பேருக்கு திருமணம் செல்வாரடா _ அங்கே
போய் வந்து ஆயிரம் சொல்வாரட _ பெண்ணுக்கு
மூக்கு என்று எடுபாரடா இறுதியில்
பாக்குதான் பத்தவில்லை என முடிபாரடா


பேரு வர படிப்பதை மறந்தாரடா _ சும்மா
         பேருக்கு படிபாதாய் இருந்தரடா _ வியற்றிலே
வறுமை தான் வாடும்போடும் _ வாயிலே
வசதியாய் காட்டுவாரடா

பொய் சொன்னால் பிடிகாது
என்பாரடா _ அதுவே அவர்
சொல்லும் பொய் என்று
உணரதவரடா

  சாதனையால் பெயர் எடுக்க
வேண்டாமடா _ இத்தனை
சாத்தானையும் சமாளித்து
வாழ்ந்தாலே போதுமடா  ..


நன்றி:V . Natarajan